மகன்றில் பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மகன்றில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மகன்றில் King penguin என்பது ஒரு வகை நீர்ப்பறவை.

உருவம்

இந்தப் பறவை பறவை அன்றில் பறவை போல் இணைபிரியாமல் வாழும் பாங்கினை உடையது. இதற்கு நீண்ட சிறகும், குறுகிய கால்களும் உண்டு. [1]

மகன்றில் புணர்ச்சி

மகன்றில் பறவை நீரில் வாழும். ஆணும் பெண்ணும் இணைந்தே வாழும். 'பூ' என்னும் ஒலிக்குறி அற்பமான ஒன்றைக் குறிக்கப் பயன்படுத்தப்படும். பூ என்பது பூ என்னும் எழுத்து ஒலிக்கும் இரண்டு மாத்திரைக் கால அளவு. தலைவன் தன்னைத் தழுவும்போது பூ(அற்ப) அளவுக்கால இடைவெளி தோன்றினாலும் அதனை ஓராண்டு இடைவெளி போலத் தலைவி கருதுவாளாம். இப்படித் தழுவுவதுதான் மகன்றில் போன்ற புணர்ச்சியாம். [2]

மகன்றில் இணைந்தே பறக்கும்

திருபரங்குன்றம் சென்ற அடியார்கள் மகன்றில் பறவை போல மைந்தரும் மகளிரும் இணை பிரியாது சென்று முருகனை வழிபட்டனாம்.[3]
துணையைப் பிரிந்த மகன்றில் போல விசயை தன் கணவனைப் பிரிந்து பிணக்காட்டில் கிடந்தாள் என்று சீவகசிந்தாமணி குறிப்பிடுகிறது. [4]


அடிக்குறிப்பு[தொகு]

  1. வார்சிறைக் குறுங்கால் மகன்றில் அன்ன உடன் புணர் கொள்கைக் காதலோரே – ஐங்குறுநூறு 381
  2. பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
    நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப்
    பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு,
    உடன் உயிர் போகுகதில்ல - குறுந்தொகை 57
  3. வடு வகிர் வென்ற கண், மாந் தளிர் மேனி,
    நெடு மென் பணைத் தோள், குறுந் தொடி, மகளிர்
    ஆராக் காமம், ஆர் பொழிற் பாயல்,
    வரையகத்து, இயைக்கும் வரையா நுகர்ச்சி;
    முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்,
    அடியோர் மைந்தர் அகலத்து அகலா
    அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி,
    புலரா மகிழ்; மறப்பு அறியாது நல்கும்
    சிறப்பிற்றே தண் பரங்குன்று.' - பரிபாடல் 8-44
  4. வார் தரு தடம் கண் நீர் தன் வன முலை நனைப்ப ஏல் பெற்று
    ஊர் கடல் அனைய காட்டுள் அச்சம் ஒன்றானும் உள்ளாள்
    ஏர் தரு மயில் அம் சாயல் இறைவனுக்கு இரங்கி ஏங்கிச்
    சோர் துகில் திருத்தல் தேற்றாள் துணை பிரி மகன்றில் ஒத்தாள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகன்றில்_பறவை&oldid=2801522" இலிருந்து மீள்விக்கப்பட்டது