போர்த்துகல் தேசிய நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Biblioteca Nacional de Portugal
தமிழ் போர்த்துகல் தேசிய நூலகம்
Biblioteca Nacional de Portugal - logo.png
Biblioteca Nacional de Portugal, Lisboa.jpg
போர்த்துகல் தேசிய நூலகத்தின் வெளித்தோற்றம்
நாடு  போர்த்துக்கல்
வகை தேசிய நூலகம்
நிறுவப்பட்டது 29 பெப்ரவரி 1796[1]
சட்ட ஆணை Lei Orgânica da BNP
அமைவிடம் லிசுபன்
ஆள்கூறுகள் 38°45′4.17″N 9°9′7.89″W / 38.7511583°N 9.1521917°W / 38.7511583; -9.1521917ஆள்கூறுகள்: 38°45′4.17″N 9°9′7.89″W / 38.7511583°N 9.1521917°W / 38.7511583; -9.1521917
சேகரிப்பு
அளவு 3 மில்லியன்[2]
சட்டமுறைச் சேகரிப்பு ஆம் [3]
அணுக்கமும் பயன்பாடும்
அணுக்கத்துக்கான தேவைகள் பயனர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பதுடன் வாசகர் அட்டையும் வைத்திருக்க வேண்டும். [4]
சேவைபெறுவோர் 564 657 (லிசுபன்)[5]
வேறு தகவல்கள்
நெறியாளர் Inês Cordeiro
இணையதளம் www.bnportugal.pt
தொலைபேசி எண் (351) 21 798 20 00

போர்த்துகல் தேசிய நூலகம் (போர்த்துக்கேயம்: Biblioteca Nacional de Portugal) போர்த்துகலின் தலைநகரமான லிசுபன் நகரில், லிசுபன் நகரப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது. இது போர்த்துகலின், நூல் மற்றும் ஆவண மரபுகளின் வைப்பிடமாக உள்ளது.

வரலாறு[தொகு]

இது 1796 ஆம் ஆண்டின் பெப்ரவரி 29ம் தேதியிட்ட அரசாணையின்படி நிறுவப்பட்டது. ஐரோப்பியக் கல்வியாளருக்கும், குருமாருக்கும் மட்டுமே நூலக வசதிகள் வழங்கப்பட்ட அக்காலப் போக்குக்கு மாறாக, இந்நூலகம் பொதுமக்களின் பயன்பாட்டை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இதன் முன்னைய இருப்பிடமான லிசுபனில் உள்ள சான் பிரான்சிசுக்கோ குருமடம் சிறியதாக இருந்ததால், இதை "காம்போ கிரான்டே"க்கு மாற்றுவதற்கு 1956 ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கம் அனுமதி வழங்கியது. கட்டிட வேலைகள் முடிந்து 1965ல் முதல் இடமாற்றம் நிகழ்ந்தது. 1969ல், தற்போதைய நகரப் பல்கலைக்கழகத்தில் புதிய வசதிகள் தொடக்கப்பட்டன.

செயற்பாடுகள்[தொகு]

30 இலட்சத்துக்கு மேற்பட்ட உருப்படிகளைக் கொண்ட இந்நூலகத்தின் தற்போதைய செயற்பாடுகள், அதன் படிவளர்ச்சியின் பெறுபேறாகவும், சமகாலச் சமுதாயத்தின் தகவல் மற்றும் தொடர்பியத் தன்மைகளுக்கு ஏற்பத் தகவமைவு பெற்றதன் விளைவாகவும் உருவானது. போர்த்துக்கேயரின் ஆவண மரபுகளைச் சேகரித்தலும், பேணலும், அவற்றைப் பரவச் செய்தலும் இந்நூலகத்தின் முக்கிய செயற்பாடுகள். கடந்த 200 ஆண்டுகளில், சட்டமுறைச் சேகரிப்பின் மூலமாகவும், பெறுமதி வாய்ந்த நூல்களை விலகொடுத்துப் பெற்றுக்கொண்டதன் மூலமாகவும், இந்த நூலகத்தின் சேகரிப்புகள் பெறுமதி மிக்கனவாகி உள்ளன.

குறிப்புகள்[தொகு]

  1. As Real Biblioteca Pública da Corte (Royal Public Library of the Court)
  2. "Fundo geral". www.bnportugal.pt. பார்த்த நாள் 12 February 2011.
  3. "Depósito legal". www.bnportugal.pt. பார்த்த நாள் 12 February 2011.
  4. "Regulamento Geral de Acesso às Colecções e Serviços da BNP". www.bnportugal.pt. பார்த்த நாள் 12 February 2011.
  5. "UMA POPULAÇÃO QUE SE URBANIZA, Uma avaliação recente - Cidades, 2004". Instituto Geográfico Português. பார்த்த நாள் 20 April 2010.

வெளியிணைப்புக்கள்[தொகு]