போர்டோ நோவோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போர்டோ-நோவோ (Porto-Novo) என்பது மேற்கு ஆப்ரிக்கா நாடான பெனின் நாட்டின் தலைநகராகும் .1904-1958 வரை பிரெஞ்சு டஹொமெய் என்று அழைக்கப்பட்ட ஒரு பிரான்ஸ் நாட்டின் கட்டுபாட்டில் இருந்த பகுதின் தலைநகராகவும் விளங்கியது .இந்த இடம் பெனின் நாட்டில் உள்ள 77 கோம்யூன்களில் இதுவும் ஒன்று . போர்டோ நோவோ சூற்றியுல்ல பகுதியில் இருந்து பனை என்னை, பருத்தி மற்றும் இளவம்பஞ்சு கிடைக்கிறது.இதன் பரப்பளவு 110 சதுர கிலோமீட்டர்.மக்கள்த்தொகை அடர்த்தி 2400சதுர கிலோமீட்டர். பெனின் நாட்டின் இரண்டாவது மிக பெரிய நகரம்.

இங்கு இருக்கும் கரையோரம் பாறை எண்ணெய் உள்ளதை 1990 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கபட்டது பாறை எண்ணெய் இந்நாட்டின் ஒரு மிக முக்கியமான ஏற்றுமதி செய்யப்படும் ஒரு பொருள் .இங்கு சுமார் 2,50,000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர் .1500ஆம் ஆண்டு இங்கு இருந்த போர்ச்சுகீஸ்யரால் இந்த பெயர் வழங்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்டோ_நோவோ&oldid=2222199" இலிருந்து மீள்விக்கப்பட்டது