போசளப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(போசளர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
போசளப் பேரரசு
ಹೊಯ್ಸಳ ಸಾಮ್ರಾಜ್ಯ
Hoysala Empire
பேரரசு
(1187 வரையில் மேற்கு சாளுக்கியத்தைச் சார்ந்திருந்தது)
Blank.png
1026 – 1343 Blank.png
ஹோய்சாலப் பேரரசு அமைவிடம்
ஹோய்சாலப் பேரரசு ஆட்சி செய்த நிலப்பகுதிகள், 1200
தலைநகரம் பேளூர், ஹளபீடு
மொழி(கள்) கன்னடா
மதம் இந்து
அரசு மன்னராட்சி
மன்னர்
 - 10261047 நிருப காமா II
 - 12921343 வீர பல்லாலா III
வரலாறு
 - முற்கால போசள அரசின் பதிவுகள் 950
 - நிறுவிய ஆண்டு 1026
 - கலைக்கப்பட்டது 1343

போசளப் பேரரசு (Hoysala Empire, ஹோய்சாளப் பேரரசு) பத்தாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை இன்றைய கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளை ஆண்டு வந்தது. இது தென்னிந்தியாவின் முக்கியமான பேரரசுகளில் ஒன்றாகும். இவர்கள் முதலில் பேளூரைத் தலைநகராகக் கொண்டும் பின் ஹளபீடினைத் தலைநகராகக் கொண்டும் ஆண்டு வந்தனர்.

ஹோய்சாளப் பேரரசு

போசளப் பேரரசர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேட்டுப் பகுதியான கர்நாடகவின் மலைநாடு பகுதிவாழ் மக்களின் வழிவந்தவர்கள். 12 ஆம் நூற்றாண்டில், மேற்குப் ப‌குதியை ஆண்ட‌ சாளுக்கிய‌ர்க‌ளுக்க‌ள் ம‌ற்றும் கால‌ச்சுரி பேர‌ர‌சுக்கிடையே ந‌ட‌ந்த‌ உள்நாட்டுப் போரைத் த‌ங்க‌ளுக்கு சாத‌க‌மாக்கிக் கொண்டு, த‌ங்க‌ள‌து எல்லைக‌ளை இன்றைய‌ க‌ர்நாட‌க‌ப் ப‌குதிக‌ளுக்கும் ம‌ற்றும் இன்றைய‌த் த‌மிழ்நாட்டிலிருக்கும் விளைச்சல் நிலங்கள் நிறைந்த காவிரியாற்றின் வ‌ட‌க்குப் ப‌குதிக்கும் விரிவுப்ப‌டுத்தின‌ர். 13ம் நூற்றாண்டிலே, அவர்கள் இந்தியாவில் இன்றைய கர்நாடகவாவின் பெரும்பாலானப் பகுதிகளையும் , தமிழகத்தின் ஒருசிலப் பகுதிகளையும் மற்றும் வடக்கு ஆந்திரப்பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர்.

தென்னிந்தியாவில் கலை, கட்டிடக்கலை, சமயம் இவற்றின் வளர்ச்சியில் ஹோய்சால அரசவைக் காலக்கட்டம் மிக‌ முக்கியமானதாகும். முதன்மையாகக் கோவில்களின் கட்டிடக்கலைக்காக ஹோய்சாலப் பேரரசன் இன்றும் நினைவுக்கூறப்படுகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள் கர்நாடகா முழுவதும் இன்றும் காணப்படுகின்றன, அவைகளில் பெருமை வாய்ந்தவை பேளூரி்ல் உள்ள சென்னகேசவ கோவில், ஹளபீடில் உள்ள ஹோய்சாலசுவரா கோவில், சோமநாதபுரத்தில் உள்ள கேசவக் கோவில் ஆகியன. ஹோய்சால அரசர்கள் தொடர்ந்து கலைகளை வளர்த்து வந்தனர். அவர்கள் இடைவிடாது அளித்த‌ ஊக்கம் இலக்கியங்கள் கன்னடத்திலும்,சமசுக்கிரத்திலும் வளர்வதற்கு வழிசெய்தன. போசள மன்னர்கள் சமண, இந்து சமயங்களைப் பின்பற்றினர். விஷ்னுவர்த்தனன் என்ற மன்னரும் அவருடைய வாரிசுகளும் வைணவர்கள் ஆவர்.

புலியுடன் போரிடும் வீரன் (Sala) - பேளூரில் உள்ள போசளர்களின் சின்னம்

மேலும் பார்க்க [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=போசளப்_பேரரசு&oldid=1372539" இருந்து மீள்விக்கப்பட்டது