போங் நா-கே பாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Phong Nha cave in Phong Nha-Ke Bang National Park
Tien Son cave in Phong Nha-Ke Bang National Park

போங் நா-கே பாங் (வியட்நாமிய மொழிe: Vườn quốc gia Phong Nha-Kẻ Bàng) வியட்நாமின் குவாங் பின் என்னும் இடத்திலுள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். இது மாகாணத் தலைநகரமான டாங் ஓயில் இருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், வியட்நாமின் தலைநகர் அனோயில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

இங்கே 70 கிலோமீட்டர் மொத்த நீளம் கொண்ட 300 குகைகள் காணப்படுகின்றன. இவற்றுள் சுமார் 20 கிலோமீட்டர் நீளம் கொண்ட பகுதியை வியட்நாமிய அறிவியலாளர்களும், பிரித்தானிய அறிவியலாளர்களும் ஆய்வு செய்துள்ளனர். இப் பூங்காவில் பல நிலக்கீழ் ஆறுகள் உள்ளதுடன், உயிரியல் பல்வகைமைத் தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது. 2003 ஆம் ஆண்டில் யுனெசுக்கோ இதனை ஒரு உலக பாரம்பரியக் களமாக அறிவித்தது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=போங்_நா-கே_பாங்&oldid=1384604" இருந்து மீள்விக்கப்பட்டது