| போக்குவரத்துப் பொறியியல் கட்டுரை பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய சீர்தரமானதும் செறிவுடையதுமான கட்டுரைகளை எழுதும் பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்குடைய விக்கித் திட்டம் பொறியியலின் ஒரு பகுதியாகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
போக்குவரத்துப் பொறியியல் என்பது மக்களும் பொருட்களும் பாதுகாப்பானதும், செயற்றிறன் கொண்டதுமான முறையில் போக்குவரத்துச் செய்வதற்கான அறிவியலோடு தொடர்புள்ள ஒரு பொறியியல் துறையாகும். இது குடிசார் பொறியியலின் ஒரு துணைத் துறையாகும்.
போக்குவரத்துப் பொறியியலின் திட்டமிடல் அம்சம் நகரத் திட்டமிடலோடு தொடர்புடையது. இது தொழில்நுட்ப எதிர்வுகூறல் முடிவுகள் மற்றும் அரசியல் காரணிகளில் பெருமளவு தங்கியுள்ளது. பயணிகளின் பயணங்கள் தொடர்பான தொழில்நுட்ப எதிர்வுகூறல் ஒரு நகரப் போக்குவரத்துத் திட்ட மாதிரியோடு சம்பந்தப்பட்டது. இதற்கு பயண உருவாக்கம் (எத்தனை பயணங்கள், எதற்காக என்பது), பயணப் பரவல் (முடிவிடத் தேர்வு, பயணி எங்கே போகிறார் என்பது), mode choice (எதில் போகிறார் என்பது), வழித்தடத் தேர்வு (எவ்வழித்தடம் தெரிவு செய்யப்படுகிறது என்பது) ஆகியவை தொடர்பான மதிப்பீடுகள் தேவைப்படும்.
போக்குவரத்துப் பொறியியலுடன் தொடர்புடைய வடிவமைப்பு அம்சங்கள் போக்குவரத்து வசதிகளின் அளவுகளைத் தீர்மானித்தல், தொடர்புடைய கட்டுமானக் கூறுகளின் அளவுகளைத் தீர்மானித்தல், சாலைகள் முதலியவற்றின் வடிவவியல் அம்சங்களைத் தீர்மானித்தல் போன்றவற்றை உள்ளடக்கியவை.
|
விக்கித் திட்டம் பொறியியலின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |