பொன்மணி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன்மணி
பொன்மணி திரைப்படத்தில் சுபாஷிணி
இயக்கம்தர்மசேன பத்திராஜா
தயாரிப்புமுத்தையா ராஜசிங்கம்
கதைகாவலூர் ராசதுரை
திரைக்கதைகாவலூர் ராசதுரை
இசைஎம். கே. றொக்சாமி
நடிப்புபாலச்சந்திரன்,
சுபாசிணி,
சித்திரலேகா மௌனகுரு,
எம். எஸ். பத்மநாதன்,
செ. சிவஞானசுந்தரம்,
சி. மௌனகுரு
சர்வமங்களம் கைலாசபதி,
எம். சண்முகலிங்கம்,
எஸ். திருநாவுக்கரசு,
ஆர். ராஜசிங்கம்,
எஸ். யோகநாதன்,
சோக்கல்லோ சண்முகம்
ஒளிப்பதிவுடொனால்ட் கருணாரத்தின
வெளியீடுஏப்ரல் 1977
நாடுஇலங்கை
மொழிதமிழ்

பொன்மணி 1977 ஆம் ஆண்டில் வெளியான ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். தர்மசேன பத்திராஜா இயக்கிய இத்திரைப்படத்தில் பாலச்சந்திரன், சுபாஷிணி, கலாநிதி செ. சிவஞானசுந்தரம் (நந்தி), எம். எஸ். பத்மநாதன், சித்திரலேகா மௌனகுரு முதலானோர் நடித்தார்கள்.

எம். கே. றொக்சாமியின் இசையில் கமலினி செல்வராஜன், சில்லையூர் செல்வராஜன் இயற்றிய பாடல்களை சக்திதேவி குருநாதபிள்ளை, எஸ். கே. பரராஜசிங்கம், கலாவதி சின்னசாமி, சாந்தி கணபதிப்பிள்ளை, ரஜனி-ராகினி சகோதரிகள், ஜனதா சின்னப்பு ஆகியோர் பாடினார்கள். டொனால்ட் கருணாரத்தின இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணி புரிந்தார். திரைக்கதை வசனத்தை காவலூர் ராசதுரை எழுத இத்திரைப்படத்தை முத்தையா ராஜசிங்கம் என்ற தொழிலதிபர் தயாரித்தார்.

திரைக்கதை[தொகு]

யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பு பிரச்சினையை மையமாகக் கொண்டு இத்திரைப்படக் கதை உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாண உயர்சாதி இந்துக் குடும்பத்தில் கடைசிப் பெண்ணாகப் பிறந்தவள் பொன்மணி (சுபாசிணி). தாழ்ந்த சாதி இளைஞனைக் (பாலச்சந்திரன்) காதலித்து தனது காதலுடன் ஓடி விடுகிறாள். உயர் சாதிக் குடும்பத்தினர் பொன்மணியைக் கொன்று விடுகின்றனர்.[1]

பாடல்கள்[தொகு]

  • எடுக்கும் இளம் தோளில் மணமாலையே, (பாடியவர்: சக்திதேவி குருநாதபிள்ளை, இசை: எம். கே. றொக்சாமி, பாடல் வரிகள்: கமலினி செல்வராஜன்)[1]
  • பாதையில் எத்தனை ராதைகள் பேதைகள் (பாடியவர்: கலாவதி சின்னசாமி, இசை: எம். கே. றொக்சாமி, பாடல் வரிகள்: சில்லையூர் செல்வராஜன்)
  • வானில் கலகலவென இருபறவைகள் திரியுது, (பாடியோர்: எஸ். கே. பரராஜசிங்கம், சக்திதேவி குருநாதபிள்ளை, இசை: எம். கே. றொக்சாமி)[1]

சிறப்புத் தகவல்கள்[தொகு]

  • பேராசிரியர் கைலாசபதியின் மனைவி திருமதி சர்வமங்களம் கைலாசபதியும் இப்படத்தில் நடித்துள்ளார்.
  • படப்பிடிப்பு யாழ்ப்பாணம், குருநகர், சுன்னாகம், பண்ணை, மண்ணித்தலை, பரந்தன், ஆனையிறவு, கொழும்பு ஆகிய இடங்களில் நடைபெற்றன.
  • இதில் கதாநாயகனாக நடித்த பாலச்சந்திரன், கலைஞர் கே. எஸ். பாலச்சந்திரன் அல்ல.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "இலங்கை சினிமாவை வளர்த்தவர்கள் தொடர் 201". வீரகேசரி. 01-10-2018. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்மணி_(திரைப்படம்)&oldid=3223011" இலிருந்து மீள்விக்கப்பட்டது