பொதும்பில் கிழார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொதும்பில் கிழார் சங்ககாலப் புலவர்.அவை நற்றிணை 57 எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
இவரது மகனார் பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார் என்பவரும் ஒரு புலவர்.

மந்தி வன்பறழ்[தொகு]

ஆமான் கூட்டம் வேங்கை மரத்தடியில் வாழும்போது மந்தி ஆமானின் பாலைக் கறந்து தன் குட்டியின் கை நிறையப் பெய்யும் மலையில் வாழ்பவன் அவன். (அவள் தினைப்புனம் காத்தபோது அவன் அவளோடு இருந்தான்.) தினை கொய்பதம் கொண்டதும் அவள் நலம் தொலைந்தது. - தலைவி வீட்டுக்குள் அடைபட்டுக் கிடப்பதைத் தோழி இவ்வாறு தலைவனுக்கு உணர்த்துகிறாள். நற்றிணை 57

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதும்பில்_கிழார்&oldid=3198674" இலிருந்து மீள்விக்கப்பட்டது