பொதுநலவாய தலைமைச் செயலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொதுநலவாய தலைமைச் செயலகம்
அமைப்பின் வகைமுதன்மை அங்கம்
தலைமைபொதுநலவாய செயலாளர்-நாயகம்
2008–நடப்பில்
கமலேஷ் சர்மா
இந்தியா
Statusசெயற்பாட்டில்
அமைக்கப்பட்ட நாள்1965
தலைமையகம்மார்ல்பரோ மாளிகை, வெஸ்ட்மின்ஸ்டர், இலண்டன், ஐக்கிய இராச்சியம்
இணையதளம்www.thecommonwealth.org
தாய் அமைப்புபொதுநலவாய நாடுகள்

பொதுநலவாய தலைமைச் செயலகம் (Commonwealth Secretariat) பொதுநலவாய நாடுகளின் மைய நிறுவனமும் அரசுகளுக்கிடையேயான முகமையுமாகும். இது உறுப்பினர்களிடையே கூட்டுறவை வளர்க்க வகை செய்கிறது; பொதுநலவாய அரசுத் தலைவர்கள் சந்திப்புக்கள் உட்பட சந்திப்புக்களை ஒருங்கிணைப்பது, பொதுநலவாய கொள்கைகளையும் முடிவுகளையும் நிறைவேற்றத் தேவையான உதவிகளை உறுப்பினர் நாடுகளுக்கு வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்கிறது.[1]

இச்செயலகத்திற்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பார்வையாளர் தகுதி உண்டு. இது ஐக்கிய இராச்சியத்தின் இலண்டனில் மார்ல்பரோ மாளிகையில் அமைந்துள்ளது. முன்பு அரண்மனையாக இருந்த இதனைப் பொதுநலவாய நாடுகளின் தலைவர் ஐக்கிய இராச்சியத்தின் அரசி எலிசபெத் II இச்செயலகத்திற்காக வழங்கியுள்ளார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Commonwealth Secretariat". Commonwealth Secretariat. பார்க்கப்பட்ட நாள் 27 July 2007.

வெளி இணைப்புகள்[தொகு]