பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
Association of Commonwealth Universities
அமைப்பின் வகைஅற நிறுவனம்
குறியீடுகள்ACU
தலைமைபேரா. ஜான் வூட்[1]
கூட்டமைப்பின் பொதுச் செயலர்
Statusமுனைப்புடன் உள்ளது
அமைக்கப்பட்ட நாள்1913
தலைமையகம்லண்டன், ஐக்கிய இராச்சியம்
இணையதளம்www.acu.ac.uk
தாய் அமைப்புபொதுநலவாய நாடுகள்

பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (Association of Commonwealth Universities) என்பது 37 பொதுநலவாய நாடுகளின் 535 பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு பன்னாட்டு அமைப்பு ஆகும்.[2]

வரலாறு[தொகு]

1912 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகம் பிரித்தானியப் பேரரசின் பல்கலைக்கழகங்களின் பேரவை ஒன்றைக் கூட்டும் நோக்குடன் லண்டனில் உள்ள பல்கலைக்கழகங்களின் 53 பிரதிநிதிகளைக் கூட்டி மாநாட்டை நடத்தியது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களைப் பிரதிநித்தித்துவப்படுத்தும் குழு ஒன்றும் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. 1913 இல் பொதுநலவாய நாடுகளின் பல்கலைக்கழகப் பணியகம் ஒன்று அமைக்கப்பட்டது. பேரரசின் பல்கலைக்கழகங்கள் இவ்வமைப்பிற்கு நிதியுதவி வழங்கும் என்ற எதிர்பார்ப்போடு 1919 ஆம் ஆண்டில் அதற்கான பணியகங்களை அமைப்பதற்காக £5000 நல்கைத்தொகையும் கிடைத்தது. 1948 இல் இவ்வமைப்பி பெயர் பிரித்தானியப் பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு என மாற்றப்பட்டது. 1963 இல் பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு என்ற தற்போதைய பெயரைப் பெற்றது.

1986 இல் இரண்டாம் எலிசபெத் மகாராணி இக்கூட்டமைப்பின் காப்பாளராக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]