பொடுதலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொடுதலை
Phyla nodiflora 3 (Corse).JPG
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) மெய்யிருவித்திலையி
(தரப்படுத்தப்படாத) Asterids
வரிசை: Lamiales
குடும்பம்: Verbenaceae
பேரினம்: Phyla
இனம்: P. nodiflora
இருசொற்பெயர்
Phyla nodiflora
(லி.) கிரீன்

பொடுதலை, பொடுதினை அல்லது பூந்சாதம் (Phyla nodiflora) ஒரு மூலிகைச் செடியாகும். இது ஈரப்பாங்கான தரையுடன் ஒட்டிப் படர்ந்து வளர்கிறது. இதன் எல்லாப் பாகங்களுமே மருத்துவக் குணங்களுடையனவாகும். பொடுதலை (Phyla nodiflora) ஒரு மூலிகைச் செடியாகும்..இதற்கு வேறு பல மருத்துவ குணங்களும் உண்டு.

’பொடுதலை என்ற பேருரைக்கில் விடுதலையாகும் பேதி’ என்பது பழமொழி.

பெயரைச்சொன்னாலே பேதி ஓடியே போய்விடுமாம்!

பொடுதலைச் செடி ஈரப்பாங்கான தரையுடன் ஒட்டிப் படர்ந்து வளர்கிறது. இதை பலர் கவனித்துக்கூட இருக்க மாட்டார்கள். இதன் எல்லாப் பாகங்களுமே மருத்துவக் குணங்கள் உடையனவாகும்.

"பொடுதலையின் பேருரைத்தால் போராமப் போக்கும் அடுதலை செய் காசம் அடங்கும் கடுகிவரு பேதியொடு சூலைநோய் பேசரிய வெண்மேகம் வாதமும் போ மெய்யுரக்கும் வாழ்த்து"

(அகத்தியர் குணபாடம்)

மனிதனின் தலையில் வரும் பொடுகை நீக்கும் மூலிகை பொடுதலை. பெயரிலேயே மூலிகையின் பலனை வைத்திருக்கும் மூலிகைகளில் இதுவும் ஒன்று. இதற்கு பூற்சாதம், பூஞ்சாதம், பொடசிரிசம், நாகசிங்கு, ரசாயனி சைய்வம், தோசாக்கினி, குன்ம நாசனி எனப் பல பெயர்களும் உண்டு.

பொடுதலை உடலுக்குக் குளிர்ச்சி தந்து, உடல் எரிச்சலைத் தணிக்கிறது. உடலின் பசியின்மையைப் போக்குகிறது. அபான வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும். வயிற்று மந்தம், வயிற்று வலி, சீரணக் கோளாறு, குடற்புழுக்களின் தொல்லை, சீதபேதி, வயிற்றுப்புண் ஆகியவற்றை குணமாக்கும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பொடுதலை&oldid=1513133" இருந்து மீள்விக்கப்பட்டது