பைங்குடில் விளைவு
பைங்குடில் விளைவு Greenhouse Effect என்பது இயற்கையாக அல்லது செயற்கையாக சூரிய சக்தியை தடுப்பதன் மூலம் வெப்பநிலையை அதிகரிப்பதாகும். பைங்குடில் என்பது குளிர் பிரதேசங்களில் விவசாயம் செய்யப் பயன்படும் ஒரு கொட்டகை போன்ற அமைப்பாகும். இதன் கூரையானது கண்ணாடி போன்ற சூரிய ஒளியை ஊடுறுவச்செய்யும் பொருளால் செய்ததாகும். இந்த கூரையின் மற்றொரு பயன்பாடு, இதன் வழி புகும் சூரிய ஒளிக்கற்றையையும் அதனால் ஏற்படும் வெப்பத்தையும் வெளியே விடாமல் தடுப்பது. இதனால் வெளியில் வெகுவாகக் குளிராக இருந்தாலும், குடிலினுள் விவசாயத்திற்கு ஏற்ற ஒளிநிலையையும் வெப்பநிலையையும் பராமரிக்கலாம். இதுபோன்று சூரிய சக்தியை தடுத்து வெப்பநிலையை அதிகரிப்பதை பைங்குடில் விளைவு என்பர்.
|
இக்கட்டுரை அல்லது இக்கட்டுரையின் ஒரு பகுதி விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இது விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்றப்பட வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம் மற்றும் நடைக் கையேடு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம். |
வளிமண்டலத்தில் கலந்துள்ள வாயுக்கள் அகச்சிவப்பு கதிர்வீச்சினை உறிஞ்சுவதோடு மட்டும் அல்லாமல் அதனை உமிழவும் செய்கிறது, அதனால் கிரகம் அல்லது சந்திரனின் மேல்பாகம் வெப்பமடைவதையே பைங்குடில் விளைவு (கிரீன்ஹவுஸ் விளைவு) என்கிறார்கள்[1]. பைங்குடில் வாயுக்கள் நீராவி, கரியமிலவாயு, மீதேன் வாயு ஆகியவை கொண்டதாகும், அவை சூரிய கதிர்வீச்சிற்கு தெள்ளத்தெளிவானவையாக இருந்தாலும், அகச்சிவப்பு கதிர்வீச்சினை உறிஞ்சவும் உமிழவும் செய்யும்.
இப்படி, பைங்குடில் வாயுக்களால் அடிமண்டல புவியின் (ட்ரோபோச்பியர்) மேல்பாகம் வெப்பத்தில் அடைபடுகிறது[2][3][4][5]. இந்த இயங்கு முறையானது ஒரு உண்மையான சூரிய பைங்குடிலில் நடைபெறும் இயங்கு முறையினைப் போல் அல்லாமல் வேறுபட்டு, இதன் செயல்முறையானது உள்ளே இருக்கும் வெப்பக் காற்றை தனிப்படுத்தி, வெப்பச் சுழற்சி மூலமாக வெப்பம் வெளியேறுவதை தடுக்கிறது.
யோசப் போரியர் என்பவர் 1824 ஆம் ஆண்டு பைங்குடில் விளைவினை கண்டு பிடித்தார், 1858 ஆம் ஆண்டில் முதன் முறையாக ஜோன் டின்டால் என்பவர் நம்பத்தக வகையில் பரிசோதனைகளை நடத்தினார். மேலும் 1896 ஆம் ஆண்டில் ச்வந்தே அற்ஹீநியஸ் என்பவர் அதனை அளந்து தன் அறிக்கையை வெளியிட்டார்[6].
வளிமண்டலமும் பைங்குடில் விளைவும் இல்லாமல் இருந்தால், புவியின் மேல்பரப்பின் சராசரி வெப்பமானது 14° செல்சியசுக்குப் (57 °F)பதிலாக −18 °C (−0.4 °F) ஆக இருந்திருக்கும், அதாவது புவியின் கரும்பொருள் வெப்ப நிலைக்கு ஈடாக[7][8][9]. தற்போது புவியின் கீழ் வெளிமண்டலத்தில் வெப்பத்தின் அளவானது, புவியின் சராசரி வெப்பத்தை விட அதிக முரண்பாட்டுடன்[10] காணப்படுகிறது, இந்த உலக அளவிலான வெப்ப உயர்வுக்கு காரணம், முக்கியமாக மனிதர்கள் உருவாக்கிய புவி வெப்ப உயர்வு (ஏ ஜி டப்), வளிமண்டலத்தில் கிரீன்ஹவுஸ் வாயுவின் செறிவு அதிகரித்து அதனால் பைங்குடில் விளைவு மேலும் மிகையானதே காரணம்.[11].
பொருளடக்கம் |
[தொகு] அடிப்படை இயங்குமுறை
புவியானது சூரியனிடம் இருந்து முக்கியமாக காண்புறு ஒளி மூலமாக சக்தியைப் பெறுகிறது. வளிமண்டலமானது காண்புறு ஒளியைப் பொறுத்த வரை தெள்ளத் தெளிவாக இருப்பதால், சூரியனிடம் இருந்து வரும் சக்தியின் 50 விழுக்காடு பாகம் புவியின் மேற்பரப்பு உறிஞ்சுகிறது. தனிச் சூன்ய வெப்பநிலைக்கு மேல் வெப்பம் கொண்ட பொருட்களைப் போலவே, புவியின் மேல்பாகம் அகச்சிவப்பு எல்லைப் பகுதியில் சக்தியை கதிர் இயக்கம் மூலம் வெளியேற்றுகிறது.
பைங்குடில் வாயுக்கள் அகச்சிவப்பு கதிர் வீச்சிற்கு தெள்ளத் தெளிவாக இல்லாததால், அவை அதனை உறிஞ்சி விடுகிறது.
அனைத்து திசைகளில் இருந்தும் அகச்சிவப்பு கதிர் வீச்சு உறிஞ்சப் படுவதால், வளிமண்டலத்திலுள்ள அனைத்து வாயுப் பொருட்களும் சூடேறுகிறது.
வளிமண்டலமும் (அதன் வெப்பம் காரணமாக, புவியைப் போலவே) அகச்சிவப்பு கதிர் வீச்சினை எல்லா திசைகளிலும் பரப்புகிறது.
இதனால், மேல்பரப்பு மற்றும் கீழ் வளிமண்டலம், பைங்குடில் வாயுக்களின் வெப்பம் காரணமாக சூடேறி விடுகிறது, ஆதலால் நாம் புவியில் வாழ்வதென்பது சாத்தியம் ஆகின்றது.[7]
[தொகு] விரிவான விளக்கம்
கதிர் வீச்சின் மூலமாக சூரியனிடம் இருந்து புவி தன் சக்தியைப பெறுகிறது. இந்த சக்தியானது காண்புறு ஒளி அலை வரிசையிலாகவும் மற்றும் அதற்கு மிகவும் அருகாமையிலான அகச்சிவப்பு அலைவரிசைகளிலும் இருந்தே பெறுகிறது (மிக்கவாறும் "அருகாமையில் உள்ள அகச்சிவப்பு" என்றழைக்கப் படுவது). புவிக்கு வந்தடைந்த சூரியனின் கதிர் வீச்சின் 30% விழுக்காடு சக்தியை அது பிரதிபலித்து (திருப்பி அனுப்பி) விடுகிறது. மீதமுள்ள 70% உறிஞ்சப் படுவதால், பூமி, கடல் மற்றும் வளிமண்டலம் சூடேறுகிறது.
புவியின் வெப்பமானது சீரான நிலைக்கு வருவதற்கும் மேலும் அது விரைவாக சூடேறவோ அல்லது குளிர்ந்து போகாமல் இருப்பதற்கும், புவி உறிஞ்சிய சூரியனின் கதிர் வீச்சின் அளவும் அகச்சிவப்பு அலை வரிசை கொண்ட கதிர்வீச்சின் மூலம் விண்வெளிக்கு வெளியேற்றிய அளவும் சமச்சீராக இருத்தல் வேண்டும். வெப்பம் ஏற ஏற அகச்சிவப்பு கதிர் வீச்சின் வேகம் செறிவேறுவதால், புவியின் வெப்பமானது உறிஞ்சிய சூரியனின் கற்றைக்கு ஏற்ப அகச்சிவப்பு கற்றையில் மாறுபாடுகள் வரையறுக்கும் என்று நினைக்கத் தொன்றும்.
காண்புறும் சூரிய கதிர் வீச்சானது மிக்கவாறும் புவியின் மேல்பரப்பினை சூடேற்றுகிறது, வளிமண்டலத்தை அல்ல, ஆனால் விண்வெளிக்கு தப்பி விடும் அகச்சிவப்பு கதிர் வீச்சானாது மேல்பரப்பில் இருந்து அல்லாமல் வளிமண்டலத்தின் மேல் பாகத்தில் இருந்தே அதிகமாக உமிழ்கிறது.
மேல்பரப்பில் இருந்து உமிழப்படும் அகச்சிவப்பு ஒளித்துகள்கள் மிக்கவாறும் பைங்குடில் வாயுக்களால் மற்றும் மேகங்களால் வளிமண்டலத்திலேயே உறிஞ்சப் படுவதால், நேராக விண்வெளிக்கு தப்பி செல்வதில்லை.
மேல்பரப்பில் மட்டும் சூடேறுவதற்கான காரணத்தை ஒரு எளிதான பைங்குடில் விளைவிற்கான எடுத்துக்காட்டின் மூலம் புரிந்து கொள்ளலாம், இது வெப்பச் சலனம் அல்லது சுழற்சியினால் வளிமண்டலத்திற்கு ஏற்படும் வெப்ப உயர்வை கருத்தில் கொள்வது இல்லை (உணர்வெப்ப இடமாற்றம் மற்றும் உணர்வெப்பக் கற்றை) மேலும் நீராவியானது குளிர்ந்து திரவமாவதும் வெப்பத்தால் நீராவி ஆவதும் (உள்ளுறை வெப்ப இடமாற்றம், மறை வெப்பக் கற்றை) கருத்தில் கொள்வது இல்லை.
இந்த தூய்மையான கதிர் வீச்சினை மட்டும் கொண்ட நிகழ்வு, நாம் வளிமண்டலத்தை விண்வெளி நோக்கி மேல்புறமும், புவியை நோக்கி கீழ்புறமும், அகச்சிவப்பு கதிர் வீச்சினை உமிழ்வதாக காணலாம். இப்படி மேல் நோக்கி உமிழ்ந்த அகச்சிவப்பு கற்றையானது சூரியனில் இருந்து உறிஞ்சிய சூரிய ஒளியின் கற்றையை மட்டும் அல்லாமல், வளிமண்டலத்தால் கீழ் நோக்கி உமிழ்ந்த அகச்சிவப்பு கற்றையையும் சமச்சீர் படுத்த வேண்டும்.
உள்நோக்கி வரும் சூரியனின் கதிர் வீச்சு மற்றும் அகச்சிவப்பு கதிர் இயக்கத்திற்கு சமமாக மேல்பரப்பில் இருந்து உமிழ்ந்த கதிர் இயக்கத்தின் அளவை அடையும் வரை, மேல்பரப்பின் வெப்பம் உயர்ந்து கொண்டே போகும்.
வெப்பச் சுழற்சி மற்றும் மறை வெப்பத்தினையும் கணக்கில் கொண்டு உண்மையான நிலைமையை அறிவதென்பது சிக்கல் கொண்டதாகும்.
ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய விளக்கம் அதன் (சாராம்சம்) உட்கருத்தாகும்.
இதற்கான துவக்கம், வளிமண்டலத்தின் ஒளிபுகாவியல்பு என்பது புவியில் இருந்து எந்த உயரத்தில் மிகையான ஒளித்துகள்கள் விண்வெளி நோக்கி உமிழ்கிறது என்பதை சார்ந்தது ஆகும். வளிமண்டலம் அதிகமாக ஒளி புகா தன்மையுடன் இருந்தால், அதிக உயரத்தில் இருந்தே ஒளித் துகள்கள் வளிமண்டலத்தில் இருந்து விண்வெளி நோக்கி உமிழப் படும், ஏன் என்றால் அப்போது விண்வெளியை அகச்சிவப்பு கதிர் இயக்கத்தில் பார்வை இட, ஒருவர் மேலும் உயரத்திற்கு செல்ல வேண்டும்.
வெப்பத்தின் அளவினை ஒத்தே அகச்சிவப்பு கதிர் இயக்கம் உமிழ்வதால், இந்த உமிழும் அளவினை பொறுத்தே வெளிமண்டல்த்தின் வெப்பம் சரியான முறையில் உமிழப் படும் கற்றையின் அளவானது உறிஞ்சப் படும் சூரிய ஒளிக் கற்றைக்கு சமமாக இருக்கும் நிலையை அடைந்து வரையறுக்கிறது.
ஆனால் வளிமண்டலத்தின் வெப்பமானது, மேல் பரப்பில் இருந்து உயரம் கூடக் கூட குறைந்து வரும், அதாவது சராசரியாக ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் 6.5 ° செல்சியஸ் என்ற விகிதத்தில் குறையும், அதாவது ஒருவன் மேல் பரப்பில் இருந்து 10 முதல் 15 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் அடுக்கு மண்டலத்தை அடையும் வரை.
(விண்வெளிக்கு தப்பிச் செல்லும் மிக்க அகச் சிவப்பு ஒளித் துகள்கள் அடிவளிமண்டலத்தில் (ட்றோபோச்பியர்) இருந்தே உமிழகிறது, அதாவது மேல் நிலப்பரப்பு மற்றும் அடுக்கு மண்டலத்திற்கும் இடையே அடைபட்டுள்ள இடம், அதனால் நாம் இந்த எளிய படத்தில் அடி மண்டலத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவை இல்லை.)
இது ஒரு மிகவும் எளிமையான எடுத்துக்காட்டு, ஆனால் மிகவும் பயனுள்ளது, ஏன் என்றால் கதிர் இயக்கம் அல்லாத சக்திகளின் கற்றைக்கு இணங்க, வெப்பத்தின் அளவு குறிப்பிட்டு, அதன் தாக்கத்தினை எளிதாக கண்டறியலாம் என்ற கற்பிதம் கொண்டுள்ள படியால்.
விண்வெளி நோக்கி உமிழப்படும் அகச்சிவப்பு கதிர் இயக்கத்தின் உயரத்தில் நிலவும் வெப்பத்தின் அளவை தெரிந்து கொண்டு, மேல்பரப்பளவில் நிலவும் வெப்பத்தை கிலோமீட்டருக்கு 6.5° என்ற அளவில் உயர்த்திக் கொண்டே போகலாம், இதனை சுற்றுச் சூழலின் உயரத்திற்கேற்ப வெப்பத்தின் மாறுபாடு விகிதம் என்பர், ஒருவன் மேல்பரப்பை அடையும் வரை இதை செய்யலாம்.
வளிமண்டலம் மிகவும் ஒளி புகாவியல்பு கொண்டு இருந்தால், மேலும் உமிழப் படும் உயரம் அதிகமாக இருந்தால், மேல பரப்பில் வெப்பம் அதிகமாக இருக்கும், ஏன் என்றால் உயரத்திற்கேற்ப வெப்பத்தின் மாறுபாடு விகிதம் அதிகரித்தும் மற்றும் நீளமாக பார்க்கையில் அதிக தூரம் செல்ல வேண்டி உள்ளதாலும்.
தனிப்பட்ட முறையில் பைங்குடில் விளைவு பற்றி தெரிந்து கொள்வதற்கு, இந்த முறை குறைவான இயல்புணர்வு கொண்டதாக இருந்தாலும், இந்த குறைவு மதிப்பீடு பெற்ற கதிர் இயக்க-வெப்பச் சலனம் கொண்ட படம் தான் பைங்குடில் விளைவு பற்றி துவக்கத்தில் விளக்குவதற்கு கால நிலை எடுத்துக்காட்டாக வானிலை பற்றிய எழுத்தேடுகளில் பயன்படுத்துகின்றனர்.
[தொகு] பைங்குடில் வாயுக்கள்
வரிசைக் கிரமப் படி, புவியில் அதிகமாக காணப்படும் பைங்குடில் வாயுக்கள் கீழே தரப் பட்டுள்ளன:
- நீராவி
- கரியமில வாயு
- மீதேன் வாயு அல்லது சாண வாயு
- நைட்ரஸ் ஆக்சைடு
- ஓசோன்
- [கார்பன் ப்ளூரோ கார்பன்கள்
இந்த வாயுக்கள் பைங்குடில் விளைவுக்கு காரணியாக இருப்பதற்கு வரிசைப் படுத்தும் பொது, முதன்மை பெறுபவை:
- நீராவி, அதன் பங்கேற்பு 36–70%
- கரியமில வாயு அல்லது கார்பன் டை ஆக்சைடு, அதன் பங்கேற்பு 9–26%
- மீதேன் வாயு அல்லது சாண வாயு, அதன் பங்கேற்பு 4–9%
- ஓசோன், அதன் பங்கேற்பு 3–7%
மேகங்களானவை, வாயுப் பொருளாக இல்லாமலேயே, அகச் சிவப்பு கதிர் இயக்கத்தினை உறிஞ்சவும், உமிழவும் செய்கின்றன, மேலும் அதனால் பைங்குடில் விளைவினை பாதிக்கவும் செய்கின்றன.[12][13].
[தொகு] தப்பி ஓடிடும் கால நிலை மாற்றம்
நேர்ப்பின்நூட்டம் காரணமாக இருக்கும் அனைத்து பைங்குடில் வாயுக்களும் வளிமண்டலத்திற்குள் நீராவியாக மாறிவிடும் போது, தப்பி ஓடிடும் கால நிலை மாற்றம் ஏற்படுகிறது[14]. வெள்ளி கிரகத்தில் கரியமில வாயு மற்றும் நீராவி சம்பந்தப்பட்ட (தப்பி) ஓடிய கிரீன்ஹவுஸ் விளைவு நடந்திருக்கலாம்.[15].மனித இன உலைவுகளால் அது போன்ற நிகழ்வு புவியில் நடைபெற வாய்ப்பில்லை, இருந்தாலும் ஆர்க்டிக் நிரந்தர உறைபனியில் இருந்து ஆர்க்டிக் மீதேன் வாயு வெளியேற்றத்தால் நிலையற்ற கால நிலை மாற்ற விளைவுகள், போன்றவை நடக்கலாம் என்று கருதப் படுகிறது[16].க்லாத்ரேட்ஸ் எனப்படுபவையும் மீதேன் வாயுவினை கொண்டுள்ளதால், அவை கூட 'தப்பி ஓடிடும் கால நிலை மாற்றம்' ஏற்படுத்தலாம் என்று கருதப் படுகிறது[17].
[தொகு] மனிதன் மிகைப்படுத்திய பைங்குடில் விளைவு
மனிதன் உற்பத்தி செய்த பைங்குடில் வாயுக்களில், அதிகமாக கதிர் இயக்கப் பின் விளைவுகளை வித்திடுவது கரியமில வாயு ஆகும்.
மனித இனத்தினரின் அதிகரித்து வரும் தொழில் செயல் பாடுகளினால் (புதைப்படிம எரிபொருள் எரிப்பு) மற்றும் இதர சிமென்ட் உற்பத்தி, ட்ரோபிகல் காடுகளை அழித்தல்[18] போன்ற செயல்பாடுகளால் கரி அமில வாயுவின் CO2 செறிவு அளவு வளிமண்டலத்தில் அதிகரித்து உள்ளது.
மாவன லோவாவில் உள்ள வானியல் ஆய்வகத்தில் நடந்த சோதனை ஆய்வின் படி (கரி அமில வாயுவின்) செறிவு அளவு 1960 ஆம் ஆண்டில் CO2 313 பிபிஎம் (மில்லியனில் காணும் பாகம்) அளவு இருந்தது 2005 ஆம் ஆண்டில் 375 பிபிஎம் அளவிற்கு (உலர்ந்த காற்றில் காணப் படும் மோல் பின்னம் [19]) அதிகரித்துள்ளது.
தற்போது காணப் படும் CO2 அளவு புவிச்சரிதவியலுக்குரிய பதிவு செய்யப்பட பனி உள்ளக தரவு [20] ஆவணத்தின் மீப்பெருமதிப்பு அளவினை (~300 ppm)மீறி உள்ளது.
ஒரு பொருளை எரிப்பதால் உருவாகும் கரி அமில வாயு புவியின் கால நிலை மாற்றங்களில் பின் விளைவுகளை ஏற்படுத்தும், இது ஒரு தனிவகையான மனிதன் உற்பத்தி செய்த பைங்குடில் விளைவு ஆகும், இதனை முதன் முதலாக ச்வந்தே அற்ஹீநியஸ் என்பவர் 1896 ஆண்டில் விளக்கி உள்ளார், இதனை "கால்லெண்டர் விளைவு" என்றும் கூறுவர்.
இது ஒரு பைங்குடில் வாயுவாக இருப்பதால், CO2 செறிவு அளவு அதிகரித்தால், வெப்ப அகச்சிவப்பு காரணமாக வளிமண்டலத்தில் மேலும் அதிகமாக உறிஞ்சுதல் மற்றும் உமிழ்தல் ஏற்படும், அதன் விளைவு வெப்ப அளவு அதிகரித்தலே.
நிஜத்தை கூறுவதானால், காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு அளித்த மதிப்பீடு அறிக்கையின் படி, "20 ஆம் நூற்றாண்டின் பின் பகுதியில் உலகளவிலாக சராசரி வெப்பத்தின் அளவு உயர்வதற்கான காரணம் மனிதன் உற்பத்தி செய்த பைங்குடில் வாயுக்களின் செறிவூட்டமாகவே இருக்கலாம் "[21].
கடந்த 800,000 ஆண்டுகளாக,[22] பனி உள்ளக தரவு கரியமில வாயுவின் அளவானது குறைந்தபட்சமாக 180 பிபிஎம் முதல் தொழில் வளர்ச்சி துவங்காத சமய அளவான 270 பிபிஎம் (ppm) வரை இருந்ததாக காட்டுகின்றது[23]. சில பழம் காலநிலை ஆராய்வாளர்கள் கரியமில வாயுவின் இவ்வேறுபாடினை இக்காலப்பகுதியின் கால நிலை வேறுபாடுகளை கட்டுப்படுத்தும் முக்கிய கருவியாக கருதுகின்றனர்[24].
மனிதனால் ஏற்பட்ட புவி வெப்ப உயர்விற்கான பதில்களை மூன்று பாகங்களாக பிரிக்கலாம்:
- இசைவாக்கம் - புவி வெப்ப உயர்வினை எதிர்கொள்ளுதல், வெள்ளப்பாதுகாப்பு அமைத்தல் போன்றவை அமைப்பதனால்
- எதிர் விளைவை குறைத்தல் -கார்பன் உமிழ்தலை குறைத்தல், அதாவது புதிப்பிக்க இயன்ற சக்தியை பயன்படுத்துதல் மற்றும் சக்தியின் ஆற்றலை மேம்படுத்து்ம் திட்டங்கள் போன்றவை.
- புவிபொறியியல் - கால நிலை மாறுதல்களை கட்டுப்பாட்டுக்குள் நேரடியாக கொண்டுவருதல். எ.கா. சூரிய கதிர் இயக்க நிருவாகம்
[தொகு] நிஜமான பைங்குடில்கள்
"பைங்குடில் விளைவு" என்ற வார்த்தை குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியது, ஏன் என்றால் உண்மையான பைங்குடில்கள் வளிமண்டலத்தில் இயங்குவது போல செயல் படுவது இல்லை.
பல விதமான பொருட்கள் சரியாக பயன் படுவதாக சில நேரங்களில் தவறாக கணிக்கப் படுகின்றன அல்லது கதிர்வீச்சிற்கு்ம் வெப்ப சலனத்திற்கும் இடையிலான வழிமுறைகளில் உள்ள தனித்தன்மையை சரியாக கண்டு்கொள்ளப் படுவதில்லை[25].
தோட்டம் இடுவதற்கான பயன் படுத்திய பைங்குடில்களை மூலமாக கொண்டதே 'பைங்குடில் விளைவு' என்ற வார்த்தை ஆகும், ஆனால் இந்த பைங்குடில் இயங்கும் விதம் சொன்னது போல வேறுபட்டதாகும்.[26]. இதனைப் பற்றி எழுதிய பல மூல கர்த்தாக்கள், ஒரு பைங்குடில் எவ்வாறு "வெப்பப் பொறி" என்ற ஒப்புமை மூலமாக வெப்ப சலனத்தை ஒரு வரையறைக்குள் வைப்பது என்பது முதல் எப்படி வளிமண்டலம் இதைப் போலவே வேறுபட்ட விதத்தில் அகச்சிவப்பு கதிர்வீச்சினை கொண்ட வாயுக்கள் உறிஞ்சி இயங்குகின்றது என்பதையும் விளக்கியுள்ளனர்[27].
ஒரு பைங்குடில் சாதரணமாக கண்ணாடி, பிளாஸ்டிக், அல்லது பிலாச்டிக்கைப் போல ஒரு பொருளைக் கொண்டு கட்டியது ஆகும். சூரியன் அதற்குள் அடை பட்டிருக்கும் நிலத்தை முக்கியமாக சூடேற்றுவதால், அதுவே பிற்பாடு பைங்குடிலில் இருக்கும் காற்றினையும் சூடேற்றுகிறது.
இந்த காற்றானது வெப்பம் அடைந்து கொண்டே போகும், ஏன் என்றால் அது பைங்குடிலில் உள்ளே அடைபட்டுள்ளது, ஆனால் பைங்குடிலுக்கு வெளியே உள்ள சூழ்நிலையில், மேற்பரப்பில் வெப்பம் ஏறிய காற்றானது மேல் நோக்கி சென்று குளிர்ந்த காற்றுடன் கலக்கின்றது. இதனை செயல் முறையில் பைங்குடிலின் மேல பாகத்தில் ஒரு ஜன்னலை திறந்து வைத்து விளக்கி காட்டலாம்: வெப்பமானது கணிசமாக குறைவதையும் காணலாம். பரிசோதனை மூலமாகவும் இது விளக்கிக் காட்டப் பட்டுள்ளது (வுட்,1909 ) அதாவது பாறை உப்பினால் மூடிய "பைங்குடில்" அடையும் வெப்ப அளவு கண்ணாடியால் ஆன பைங்குடிலிற்கு சமமாகவே இருப்பதாக கண்டது.[28]. இப்படியாக பைங்குடில் முக்கியமாக வெப்ப சலனத்தை தடுத்து பணி செய்பவை ஆகும்; வெளிமண்டல பைங்குடில் விளைவானது கதிர் இயக்க நட்டத்தை குறைத்து செயல் படுகிறது, வெப்ப சலனத்தை அல்ல.[26][29]
[தொகு] புவியல்லாத இதர பொருட்கள்
நமது சூரிய மண்டலத்தில், செவ்வாய், வெள்ளி, திங்கள் டைட்டான் ஆகியவை கூட பைங்குடில் விளைவினை வெளிப் படுத்துகின்றன.
டைட்டானில் எதிர்மறையான பைங்குடில் விளைவு காணப்படுகிறது, அதன் வளிமண்டலம் சூரிய கதிர் வீச்சினை உறிஞ்சிக் கொள்கிறது ஆனால் அதில் அகச்சிவப்பு கதிர் வீச்சு தெள்ளத் தெளிவாக உள்ளது.
புளூட்டோ கிரகமும் பைங்குடில் விளைவிற்கு எதிரான நடத்தையை கொண்டது.[30][31][32].
[தொகு] அடிக்குறிப்புகள்
- ↑ http://www.ipcc.ch/pdf/assessment-report/ar4/syr/ar4_syr_appendix.pdf IPCC AR4 SYR Appendix Glossary
- ↑ "பைங்குடில் (கிரீன்ஹவுஸ்) விளைவு என்றால் என்ன ?"என்பதற்கான சுருக்கமான விளக்கம் காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு அளித்த நான்காவது மதிப்பீடு அறிக்கை யில் வெளியிட்டுள்ளது.[1] ஐஐபிசிசி நான்காவது மதிப்பீடு அறிக்கை, அத்தியாயம் 1 ,பக்கம் 115 : "சூரியனில் இருந்து உள்நோக்கி வரும் வெப்ப ஆற்றலை புவியின் மேல்பாகம் உறிஞ்சுவதுடன், ஆற்றலை சமமாக பாகு படுத்த, புவி, சராசரியாக , விண்வெளியை நோக்கி அதே அளவு ஆற்றலை வீச்சின் மூலம் வெளிப்படுத்தி முறைப் படுத்த வேண்டும். புவி சூரியனை விட குளிர்ந்து இருப்பதால், அது அதிக அளவிலான அலை வரிசையில் கதிர் வீசுகிறது, முக்கியமாக நிறமாலையின் அகச்சிவப்பு பாகத்தை கொண்டுள்ளது (படம் 1 பார்க்க ). நிலமும் கடலும் உமிழ்ந்து வெளியேற்றிய இந்த வெப்பக்கதிர் வீச்சின் மிகையான பாகத்தை வளிமண்டலம் உறிஞ்சி விடுகிறது, மேகங்கள் உட்பட, மேலும் அவை திரும்பவும் புவியை நோக்கி தகிர் வீசப்படுகிறது. இதனையே பைங்குடில் விளைவு என்பர்."
- ↑ ஸ்டீபான் எச். ஸ்நீடர்,
- புவி உருண்டை மற்றும் உயிரினக் கோளம் இடையிலான இடர்பாடுகள் மற்றும் கால நிலை மாற்றம், லெனார்ட் ஒ. பெங்க்த்சன் மற்றும் க்ளாஸ் யு. ஹாம்மர், ஆசிரியர்கள், காம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக அச்சகம், 2001, ஐஎஸ்பிஎன் 0521782384, பிபி. 90-91.
- ↑ ஈ.க்லாச்சன், வி. ஏ. கொச்றான், மற்றும் டி.பி.டேவீஸ், கால நிலை மாற்றம்: அறிவியல், உத்திகள், மற்றும் பதில்கள், மிச்சிகன் பல்கலைக் கழகம், 2001. ப . 373.
- ↑ ஏ. அல்லாபி மற்றும் பி. அல்லாபி, புவி அறிவியலை பற்றிய ஒரு அகராதி ஆக்ச்போர்ட் பல்கலைக்கழக அச்சகம், 1999, ஐஎஸ்பிஎன் 0192800795, ப 244. 244.
- ↑ வருடாந்தர விமர்சனம் (பதிவு செய்ய வேண்டியது )
- ↑ 7.0 7.1 காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு அளித்த நான்காவது மதிப்பீடு அறிக்கை[2] முதல் அத்தியாயம்: வானிலை மாற்ற அறிவியல் குறித்த சரித்திர மேலோட்டம்/0} பக்கம் 97
- ↑ வி 1003 அறிவியல் மற்றும் சமூகம் - சூரிய கதிர் வீச்சு
- ↑ சூரிய கதிர் வீச்சு மற்றும் புவியின் ஆற்றல் சரியீடு
- ↑ ஒன்றாக்கப்பட்ட நிலம் காற்று மற்றும் கடல் மேல்பரப்பு வெப்ப நிலை தரவு
- ↑ அதிகரிக்கும் கிரீன்ஹவுஸ் விளைவு
- ↑ Earth’s Annual Global Mean Energy Budget
- ↑ Water vapour: feedback or forcing?
- ↑ Kasting, James F.(1991). "Runaway and moist greenhouse atmospheres and the evolution of Earth and Venus.". Planetary Sciences: American and Soviet Research/Proceedings from the U.S.-U.S.S.R. Workshop on Planetary Sciences, 234-245, Commission on Engineering and Technical Systems (CETS). 2009 அன்று அணுகப்பட்டது..
- ↑ doi:10.1038/2261037a0
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ doi:10.1029/2008GL033985
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ doi:10.1029/2004GC000854
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ ஐ பி சி சி நான்காவது மதிப்பீடு அறிக்கை, செயற்குழு I அறிக்கை "இயற்பியல் அறிவியல் ஆதாரம் " அத்தியாயம் 7
- ↑ Atmospheric Carbon Dioxide - Mauna Loa
- ↑ ஹான்சன் ஜெ.வானிலை மாற்றம் 68 , 269, 2005 ஐ எஸ் எஸ் என் 0165-0009
- ↑ ஐ பி சி சி நான்காவது மதிப்பீடு அறிக்கை கருத்துத்தொகுப்பு அறிக்கை: கொள்கை முடிவு செய்பவர்களுக்கான சுருக்கம் (ப.5 )
- ↑ பிபிசி செய்திகள் ஆழம் மிகுந்த பனி சொல்லும் கால நிலையின் கதை
- ↑ ரசாயன மற்றும் பொறியியல் செய்திகள்:புதிய தகவல் - பனி உள்ளகம் பதிவு நீட்டப் படுதல்
- ↑ போவன், மார்க்;மெல்லிய பனி: உலகின் மிகப் பெரிய மலைகளில் நிலவும் வானிலை ரகசியங்களை வெளிப் படுத்துதல்; அவுள் புத்தகங்கள், 2005.
- ↑ ஈபிஏ வின் கால நிலை மாற்றத்திற்கான தளம்
- ↑ 26.0 26.1 Schroeder, Daniel V. (2000). An introduction to thermal physics. San Francisco, California: Addison-Wesley. pp. 305–307. ISBN 0-321-27779-1. "... this mechanism is called the greenhouse effect, even though most greenhouses depend primarily on a different mechanism (namely, limiting convective cooling)."
- ↑ ஜி பி 25 வெப் புத்தகம் |அத்தியாயம் 7
- ↑ ர .டபி்ல்யு. வுட் , ( 1909 ) . (1909) "பைங்குடில் தத்துவம் பற்றிய குறிப்பு," பிலோசொபிகல் வெளியீடு , 17 , பக்கங்கள் 319–320. இதனை கணினியில் வெப்தளத்தில் உடன் செயலாக்க ர .டபி்ல்யு. வுட்: பைங்குடில் தத்துவம் பற்றிய குறிப்பு பார்க்கவும்.
- ↑ * பீக்சொடோ, ஜெ பி மற்றும் ஊர்த், ஏ எச் : கால நிலையின் இயற்பியல், அமெரிக்க இயற்பியல் நிறுவனம்,1992. எடுத்துக்காட்டு: "...சொல்லப் போனால் நீர் ஆவி பைங்குடில் விளைவு என்ற பெயர் தவறானது, ஏன் என்றால் சாதாரணமான பைங்குடில் வெப்பமானது வேப்பச்சலனத்தை குறைப்பதால் வருவதாகும்."
- ↑ ஏ டி எம் eS 211 - குறிப்புகள்
- ↑ டைடான் :: கிரீன்ஹவுஸ் மற்றும் எதிர்மறை கிரீன்ஹவுஸ் :: வான் உயிரியல் வெளியீடு - புவி அறிவியல் - படிப்படியான வளர்ச்சி வினியோகம் உலக வாழ்க்கையின் மூலாதாரம் - வாழ்க்கைக்கும் அப்பால் :: வான் உயிர் இயல் ஆனது புவியை படிப்பது ...
- ↑ SPACE.com - ப்ளூடோ நினைத்ததை விட குளிர்சியாக உள்ளது
[தொகு] குறிப்புகள்
- புவியின் கதிர்வீச்சின் வரவு செலவுத் திட்டம், http://marine.rutgers.edu/mrs/education/class/yuri/erb.html
- பிலீசில், ஆர் ஜி மற்றும் பசிஞர், ஜெ ஏ : வளிமண்டல இயற்பியலுக்கான ஒரு துவக்கம், இரண்டாம் பதிப்பு , 1980
- ஐ பி சி சி தாக்கல் அறிக்கைகள், பாருங்கள் http://www.ipcc.ch/
- ஆன் ஹெண்டர்சன் செல்லேர்ஸ் மற்றும் மக்கப்பே, கே : ஒரு வானிலை போன்ற பொருள் தொடக்கப் பாடம் (எடுத்துக் காட்டு :கிரீன்ஹவுஸ் விளைவு : நீண்ட அலை வரிசை கொண்ட கதிர் வீச்சினை புவியின் மேல்பரப்பில் திரும்பவும் கதிர்வீச்சு மூலமாக அனுப்புவதால் வளிமண்டலத்தில் ஏற்படும் விளைவு. கண்ணாடியால் செய்யப் பட்ட வீடுகளுடன் அதற்கு யாதொரு சம்பந்தமும் இல்லை, எவை வெப்பமான காற்றை அதன் மேல்் பரப்பில் அடைத்து வைக்கிறதோ.) ).
- இட்சோ, எஸ்.பி.: "கரியமில வாயு : நண்பனா அல்லது எதிரியா," 1982 (எடுத்துக் காட்டு : ...இதற்கான சொற்றொடர் சரியாக அமைக்கப் படவில்லை, ஏன் என்றால் ஒரு கிரீன்ஹவுஸ் அதன் உள்புறத்தை எப்படி வெப்பத்துடன் வைத்துக் கொள்கிறதோ,அதே போல CO2 ஆனது புவியை சூடாக வைத்துக் கொள்வது இல்லை. ).
- கேஹ்ல். ஜெ.டி., மற்றும் திரேன்பெர்த், கே. (1997)"புவியின் சராசரியான உலக அளவு சக்தி வருடாந்தர வரவு செலவு கணக்கு," சிற்றேடு அமேரிக்கன் மிடீரியலோசிகல் சொசைடி '78 (2), 197–208.