பைங்குடில் வளிமம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(பைங்குடில் வாயு இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
பைங்குடில் விளைவிற்கு காரணிகளாக விளங்கும் வளி மண்டலத்தில் உள்ள வாயுக்கள் பைங்குடில் வாயுக்கள் (Greenhouse gases) எனப்படும். இவ்வாயுக்களோ, அதனால் பைங்குடில் விளைவோ இல்லையெனில் புவி வாழ்வதற்கு தகுதியற்ற அளவிற்கு குளிருற்றிருக்கும்; அதாவது புவிப் பரப்பின் mean வெப்பநிலை −19 °C (−2 °F, 254 K) ஆக இருந்திருக்கும்(தற்போதைய mean வெப்பநிலை ஏறக்குறைய 15 °C (59 °F, 288 K)). நீராவி, கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் வாயு போன்றவை வளியில் உள்ள முக்கிய பைங்குடில் வாயுக்கள். இவை இயற்கையாகவோ, மனிதர்களின் நடவடிக்கைகளினாலோ உறுவாகின்றன. சமீப காலங்களில், மனிதர்களின் அதிக நுகர்வால் வளியில் கரியமிலத்தின் பங்கு அதிகரித்தலும், அதனால் புவி சூடாதலும் அறிஞர்களின், அரசுகளின் கவனத்தை கவர்ந்திருக்கின்றன.