பேர்கன் நகர நிர்வாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேர்கன் நகரம்
பற்றிய கட்டுரைகள்

பேர்கன் நகரம் நகர தந்தை
பேர்கன் நகர இலச்சினை
தற்போது
Rune Bakervik

அக்டோபர் 2007 முதல்
நியமிப்பவர்Herman Friele
உருவாக்கம்17ம் நூற்றாண்டு
அடுத்து வருபவர்முடிவாகவில்லை

பேர்கன் (Bergen) நோர்வேயில் இரண்டாவது பெரிய நகரமாகும். பண்டைய காலத்தில் அரசாட்சி முறையில் ஆளப்பட்டு வந்த இந்நகராட்சி, பின்னர் அரசாட்சி முறையை இழந்து நாடாளுமன்ற நடைமுறைக்கு வந்தது. ஜூன் 2000 ஆம் ஆண்டு முதல் பேர்கன் நாடாளுமன்ற நடை முறையை அடிப்படையாகக் கொண்ட நகராட்சி முறையிலான நிர்வாகத்தைக் கொண்டிருக்கிறது[1]. நகர மன்றத்தினால் தெரிவுசெய்து அமர்த்தப்படும் ஆணையர்கள் (Commisioners) என அழைக்கப்படும் ஏழு அரசாங்க அங்கத்துவர்களே நகரத்திற்கான உயர் அதிகாரத்தைக் கொண்டவர்களாவர். நகர அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் (Chief Commisioner), 25 ஏப்ரல் 2019 இலிருந்து, ரோகர் வல்ஹம்மெர் (Roger Valhammer) என்பவர்[2]இருக்கிறார். ஒக்டோபர் 2015 - செப்டெம்பர் 2021 இற்கான நகர முதல்வராக (Mayor) மார்த்தே மியூஸ் பேர்சென் (Marte Mjøs Persen) என்பவர் இருந்தார். [3] தற்போதைய நகர முதல்வராக ரூன பாக்கர்வீக் Rune Bakervik 2013 வரை இருப்பார்.[4] பேர்கன் நகராட்சி உள்ளிட்ட வெஸ்ட்லான்ட் (Vestland) மாவட்டத்தின் மாவட்ட ஆணையராக (County Governer of Vestland) லார்ஸ் ஸ்பொன்ஹைம் (Lars Sponheim) என்பவர் இருக்கிறார்[1].

கட்சிகளின் பிரதிநிதித்துவம்[தொகு]

Bergen city council 2007–2011[5]
தொழிலாளர் கட்சி Labour Party 13
சாலை சுங்கச் சாவடிகள் வேண்டாம் என்னும் மக்கள் நடவடிக்கை People's Action No to More Road Tolls 11
முன்னேற்றக் கட்சை (Progress Party) 3
பச்சைக் கட்சி Green Party 7
பழமைவாதக் கட்சி Conservative Party 14
கிறிஸ்தவ ஜனநாயக கட்சி Christian Democratic Party 2
ஓய்வூதியம் பெறுவோர் கட்சி Pensioners' Party 1
சிவப்புக் கட்சி Red Party 3
மத்திய கட்சி Centre Party 4
சோசலிச இடது கட்சி Socialist Left Party 6
தாராளவாத கட்சி Liberal Party 3
Total 67

பிரதேசங்கள்[தொகு]

Boroughs of Bergen

பேர்கன் 8 பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[6] வலதுபக்கம் காட்டப்பட்டிருப்பதுபோல், ஓசானா, ஆர்னா, பானா, யித்ரபிக்டா, பில்லிங்ஸ்டாலன், லக்சவோக், ஓர்ஸ்தாட், பேர்கன்ஹூஸ் என்பவையே அந்த 8 பிரதேசங்களாகும். நகரத்தின் மையம் பேர்கன்ஹூஸ் இல் அமைந்துள்ளது. பானா, யித்ரபிக்டா, ஓசானாவின் பகுதிகள் நகரப் பரப்பிற்கு வெளியே அமைந்திருப்பதனால், நகரப் பரப்பிலிருக்கும் சனத்தொகையை விட 20,000 அதிகமான குடியிருப்பாளர்கள் பேர்கன் நகராட்சிக்குள் இருக்கின்றனர். .[7]

பிரதேசம் சனத்தொகை[8] % பரப்பளவு (km2) % அடர்த்தி
(/km2)
ஆர்னா 12,680 4.9 102.44 22.0 123
பேர்கன்ஹூஸ்1 38,544 14.8 26.58 5.7 4.415
பானா 38,317 14.8 159.70 34.3 239
பில்லிங்ஸ்டாலன் 28,844 11.1 18.84 4.0 1.530
லக்சவோக் 38,391 14.8 32.72 7.0 1.173
யித்ரபிக்டா 25,710 9.9 39.61 8.5 649
ஓர்ஸ்தாட்2 37,614 14.5 14.78 3.2 4.440
ஓசானா 39,534 15.2 71.01 15.2 556
குறிப்பிடப்படாதவை 758
Total 260,392 100 465.68 100 559

(மேலுள்ளதன்படி: சில பகுதிகள் தவிர்த்து பரப்பளவு நீர்நிலைகளையும் குடியிருப்புகளற்ற மலைப் பகுதிகளைய்ம் உள்ளடக்கியே காட்டப்பட்டுள்ளது, தவிர்க்கப்பட்ட பகுதிகள்:
1 1 பேர்கன்ஹூஸ் 8.73 km2 (3.37 sq mi), மிகுதி நீர்நிலைகளும் குடியிருப்புகளற்ற மலைப் பகுதிகளும்
2 2 ஓர்ஸ்தாட் 8.47 km2 (3.27 sq mi), மிகுதி நீர்நிலைகளும் குடியிருப்புகளற்ற மலைப் பகுதிகளும்)

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. "Styringssystem" (in Norwegian). Bergen kommune. Archived from the original on 2007-10-15. பார்க்கப்பட்ட நாள் 9 October 2007.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Byrådet Valhammer 2019 - 2021". பார்க்கப்பட்ட நாள் 2022-01-04.
  3. [https://www.bergen.kommune.no/politikk/ordforeren/historikk/marte-mjos-persen%7Cdate=}}[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Om Rune Bakervik". Archived from the original on 2022-01-04. பார்க்கப்பட்ட நாள் 2022-01-04.
  5. "Resultater for Bergen i Hordaland" (in Norwegian). regjeringen.no. பார்க்கப்பட்ட நாள் 30 October 2007.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. Statistics Norway (2004). "Bydeler i Oslo, Bergen, Stavanger og Trondheim" (in நார்வேஜியன்). Archived from the original on 3 September 2007. பார்க்கப்பட்ட நாள் 14 August 2007.
  7. says, suNeil (29 October 2019). "The History of Bergen". Life in Norway (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 August 2020.
  8. "Statistics Norway – Population, by sex and age. Bergen. Urban district". Ssb.no. 1 January 2011. Archived from the original on 18 January 2012. பார்க்கப்பட்ட நாள் 4 January 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்கன்_நகர_நிர்வாகம்&oldid=3614738" இலிருந்து மீள்விக்கப்பட்டது