பண்டுங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேண்டுங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பண்டுங்
கொத்தா பண்டுங் (இந்தோனேசிய மொழி)
சிகாம்பெலாசிடமிருந்து பசுபதி பாலத்துடன் பண்டுங் நகரின் காட்சி
சிகாம்பெலாசிடமிருந்து பசுபதி பாலத்துடன் பண்டுங் நகரின் காட்சி
பண்டுங்-ன் சின்னம்
கொடி
Official seal of பண்டுங்
முத்திரை
சிறப்புப்பெயர்: கொத்தா புஙா (மலர்களின் நகரம்) மற்றும் Parijs Van Java (ஜாவாவின் பாரிசு)
குறிக்கோளுரை: Gemah Ripah Wibawa Mukti
பண்டுங் is located in Indonesia
{{{alt}}}
பண்டுங்
இந்தோனேசியாவில் பண்டுங் நகரின் அமைவிடம்
அமைவு: 6°54′53.08″S 107°36′35.32″E / 6.9147444°S 107.6098111°E / -6.9147444; 107.6098111
நாடு இந்தோனேசியா
மாநிலம் மேற்கு ஜாவா
அரசு
 - நகரத்தந்தை டடா ரொசாடா
பரப்பளவு
 - நகரம் 167.67 கிமீ²  (64.74 ச. மைல்)
 - மாநகரம் 2,216.6 கிமீ² (855.8 sq mi)
ஏற்றம் 768 மீ (2,520 அடி)
மக்கள் தொகை (2010 முன்கட்ட கணக்கெடுப்பின்படி)
 - நகரம் 23,93,633
 - அடர்த்தி /கிமீ² (/சதுர மைல்)
 - மாநகரம் 74,14,560
 - மாநகர அடர்த்தி /கிமீ² (/ச. மைல்)
நேர வலயம் மேலை WIB (ஒ.ச.நே.+7)
இணையத்தளம்: www.bandung.go.id

பண்டுங் (Bandung) இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாநிலத்தின் தலைநகரமாகும். இது 2007ஆம் ஆண்டில் 7.4 மில்லியன் மக்கள் தொகையின்படி நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகவும் இரண்டாவது பெரும் நகரப்பகுதியாகவும் விளங்குகிறது. [1] கடல் மட்டத்திலிருந்து 768 மீ (2,520 அடி) உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் ஜகார்த்தாவிலிருந்து தென்கிழக்கே ஏறத்தாழ 140 கிமீ தொலைவில் உள்ளது. பிற இந்தோனேசிய நகரங்களை விட பண்டுங்கில் ஆண்டு முழுமையும் குளிர்ந்த வெப்பநிலை நிலவுகிறது. ஆற்று முகவாயில் எரிமலைக் குன்றுகள் சூழ அமைந்துள்ளதால் இயற்கையான அரண் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே டச்சு கிழக்கிந்தியக் கம்பனி தனது குடியேற்றத்தின் தலைநகரை பத்தாவியாவிலிருந்து பண்டுங்கிற்கு மாற்றியது.

டச்சு காலனியவாதிகள் பதினெட்டாம் நூற்றாண்டில் சுற்றியுள்ள மலைகளில் தேயிலைத் தோட்டங்களையும் அவற்றை தலைநகருடன் இணைக்க நெடுஞ்சாலைகளையும் நிறுவினர். ஐரோப்பிய குடியேறிகள் தங்களுக்கு ஓர் நகராட்சியை வேண்டி 1906ஆம் ஆண்டில் இதற்கான அனுமதி பெற்றனர். இதன்பின்னர் தேயிலைத் தோட்ட முதலாளிகளுக்கான ஆடம்பர கேளிக்கை நகரமாக பண்டுங் மாறியது. ஆடம்பர தங்குவிடுதிகள், உணவகங்கள், சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் ஐரோப்பிய ஆடை அங்காடிகளுமாக ஜாவாவின் பாரிசு என்று கூறுமளவில் புகழ் பெற்றது.

1945ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் விடுதலைக்குப் பின்னர் விரைவான வளர்ச்சியைக் கண்டு இன்று பெருநகரப்பகுதியில் சதுரகிமீக்கு 16500 பேர் அளவிலான மக்களடர்த்தியையும் 2 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தொகையையும் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பண்டுங்&oldid=1362134" இருந்து மீள்விக்கப்பட்டது