பேச்சு:E (கணித மாறிலி)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
E (கணித மாறிலி) எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தலைப்பையும் e என்றே வைத்துவிடலாமே? ஈ என்று எழுதுவது தேவையற்றதும் குழப்பம் உண்டாக்குவதுமாக இருக்கும்--ரவி 20:17, 23 மே 2007 (UTC)[பதிலளி]

எழுதினபிறகு எனக்கும் அப்படித்தான் தோன்றிற்று. தயவு செய்து அப்படியே மாற்றிவிடவும். தலைப்பை மாற்றுவதற்கு எனக்கு அனுமதி கிடையாது என்று நினக்கிறேன்.--Profvk 20:21, 23 மே 2007 (UTC)[பதிலளி]

profvk, நீங்களும் தலைப்பை மாற்றலாம். பக்கத்தின் மேல் உள்ள நகர்த்து என்னும் இணைப்பைப் பின்பற்றி புதிய தலைப்புக்குப் பக்கத்தை நகர்த்தலாம். ஆங்கில விக்கி பக்கத்தில் e என்று சிறிய எழுத்துக்களிலேயே பக்கப் பெயர் இருக்கிறது. இது போல் இங்கு எப்படி செய்வது என்று பார்க்க வேண்டும். தற்காலிகமாக E என்றே இருக்கட்டும்--ரவி 20:27, 23 மே 2007 (UTC)[பதிலளி]

ஆரம்பமே ஆங்கில எழுத்தில் இருக்க வேண்டாம். எனது ஆலோசனை: கணித மாறிலி e என இருக்கலாம். e நிச்சயம் lower case இல் இருக்க வேண்டும்.--Kanags 21:16, 23 மே 2007 (UTC)[பதிலளி]

தொடக்க எழுத்து eஐ சிறு எழுத்துக்களில் காட்ட இயலும். இது தொடர்பாக சில வார்ப்புருக்களைச் சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். முதல் எழுத்து ஆங்கிலத்தில் இருக்கக் கூடாது என்று இறுக்கமான விதிகளைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். தற்போது உள்ள தலைப்பே பொருத்தமாக இருக்கிறது. a-z முதல் எழுத்துக்களைக் குறித்தும் கூட விக்கிபீடியா கட்டுரைகளை எழுத வேண்டி வரும். அப்போது அவற்றைத் தவிர்க்க இயலாது. தவிர்க்கவும் தேவை இல்லை--ரவி 21:50, 23 மே 2007 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 04:09, 5 செப்டம்பர் 2015 (UTC)

நிலைப்பி[தொகு]

நிலைப்பி என்றால் நிலைநிறுத்துவிக்கும் ஒன்று என்பது போல் பொருள் தருவதாக நினைக்கிறேன். constant என்பதற்கு நிலையெண் எனலாம் என்று நினைக்கிறேன். மேலும் Transcendental number என்பதற்கு வேர்கொளா நிலையெண் எனலாம் என்று நினைக்கிறேன். மாறிலி என்பதும் சரியான சொல்லே. இல இடங்களில் நிலையெண் என்பது பொருத்தமாக இருக்கும்போல் தெரிகின்றது. --செல்வா 23:09, 28 மார்ச் 2009 (UTC)

மாறிலி இலங்கை, தமிழ்நாட்டுப் கணிதப் பாட நூல்களில் வழக்கில் இருக்கும் சொல். --Natkeeran 23:13, 28 மார்ச் 2009 (UTC)
'மாறிலி' ஓர் அருமையான சொல். மாறிலியை மாற்றி மற்றொரு சொல்லைப் பயன்படுத்தத் தேவையில்லை. --Profvk 23:58, 28 மார்ச் 2009 (UTC)

கட்டுரை இணைப்பு[தொகு]

அடுக்குமாறிலி e ஒரு விகிதமுறா எண் கட்டுரையின் உள்ளடக்கம் இங்கே சேர்க்கப்பட்டு இந்தக் கட்டுரையுடன் இணைக்கப்பட்டு விட்டது.--Kalaiarasy 13:19, 10 ஏப்ரல் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:E_(கணித_மாறிலி)&oldid=1910839" இலிருந்து மீள்விக்கப்பட்டது