பேச்சு:.இலங்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டொமெயின் என்பதை 'களம்' என மொழிப்பெயர்க்களாமா ? மத்திய அரசின் தமிழ்-ஆங்கில மென்பொருள் சொற்பட்டியளில் டொமைன் என்பதற்கு களம் என்றுள்ளது ? வினோத் 04:28, 11 டிசம்பர் 2007 (UTC)

ஆள்களம் என்று மொழிபெயர்க்கலாம். LK Domain Registry என்பதற்குத் தமிழில் LK ஆள்களப் பதிவகம் என்று உள்ளது. இங்கே பார்க்க: ஆள்களப் பதிவகம் --மதனாஹரன் 04:05, 12 பெப்ரவரி 2012 (UTC)

இலங்கை இணையக்களம்[தொகு]

இக்கட்டுரையை “இலங்கை இணையக்களம்” எனும் தமிழ்த் தலைப்பிற்கு மாற்றம் செய்யலாமா? தலைப்பு சரியாக இருக்கிறதா? கருத்து வேண்டப்படுகிறது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:32, 4 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

இல்லை. வேண்டாம். .இலங்கை என்று ஆள்களப் பெயர் உள்ளதால் அத்தலைப்பிற்கு நகர்த்தியுள்ளேன். --மதனாஹரன் 12:15, 21 பெப்ரவரி 2012 (UTC)

.lk , .இலங்கை - இவ்விரண்டும் வெவ்வேறு ஆள்களங்கள் அல்லவா? .lk க்கு ஈடான தமிழ் விக்கிப்பீடியா பக்கமாக இதனைத் தருவது, முதல் வரியில் ஆங்கில, சிங்களப் பெயர்களைச் சுட்டுவது, தகவல் சட்டத்தில் .lk எனச் சுட்டுவது சரியாக இருக்காது.--இரவி 13:09, 21 பெப்ரவரி 2012 (UTC)

வெவ்வேறு ஆள்களங்கள் தான்... ஆனால், அனைத்து விதங்களிலும் ஒரே கருத்துடையவை (அறிமுகப்படுத்தப்பட்ட திகதியைத் தவிர). நான் உருவாக்கிய .இலங்கை என்ற கட்டுரையையே .lk என்ற பக்கத்துடன் இணைக்கச் சொன்னேன். --மதனாஹரன் 12:36, 26 பெப்ரவரி 2012 (UTC)

அயல்மொழியில் வழிமாற்று உள்ளது நீக்கலாம்தானே?[தொகு]

.ලංකා என்ற அயல்மொழியில் உள்ள வழிமாற்றை நீக்கலாமா?--உழவன் (உரை) 07:02, 10 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 13:40, 10 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:.இலங்கை&oldid=2128391" இலிருந்து மீள்விக்கப்பட்டது