பேச்சு:ஹெச். எம். எஸ் (கப்பல் பெயர்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • ஹெச். எம். எஸ் என்பது இந்தியாவிலுள்ள ஒரு மிகப்பெரிய தொழிற்சங்கத்தையும் குறிக்கும். அதாவது ஹெச். எம். எஸ்

என்பது ஹிந்து மஸ்தூர் சபா என்கிற தொழிற்சங்கப் பெயரின் சுருக்கமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. எனவே தலைப்பை வேறுபடுத்திக் காட்ட ஹெச். எம். எஸ் என்பதுடன் அடைப்புக் குறிக்குள் கட்டுரைக்குப் பொருத்தமான சொல் சேர்ப்பது நல்லது. --தேனி.எம்.சுப்பிரமணி. 17:55, 16 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி சுப்பிரமணி. தோணவேயில்லை. இப்போது மாற்றிவிட்டேன்.--சோடாபாட்டில் 18:04, 16 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
இரண்டு கருத்துகள்/கேள்விகள்: (1) கப்பல் என்று அடைப்புக்குறிகளுக்குள் இருந்தால் போதும் அல்லவா? (2) எச். எம். எசு (கப்பல்) என்றே பெயரிடலாமே? கூடியமட்டிலும் கிரந்தம் தவிர்த்து எழுதுவதை ஒரு பரிந்துரையாகக் கொண்டு இங்கு எழுதிவருகிறோம். இது மிகவும் எளிமையாகவே உள்ளது. நானும் ஆக்ஸிஜன் என்றுதான் கட்டுரைகள் எழுதினேன். ஆனால் ஆக்சிசன் என்பதே போதும் என்பது பல உரையாடல்கள் வழி உணர்ந்தது (இங்கே விக்கியில்). ஐதரசன் என்பது போதும். பல மொழிகளில் இவற்றை எப்படி எழுதுகிறார்கள் என்றெல்லாம் விரிவாக உரையாடியதன் விளைவாகவே பரிந்துரைகள் முன்ன்மொழியப்பட்டு பின்பற்றுகிறோம். எனவே எச். எம். எசு (கப்பல்) என்று கட்டுரையின் தலைப்பை இட்டு, அதற்கு வழிமாற்றாக ஹெச். எம். எஸ் (கப்பல்) என்று உருவாக்கலாம் என்பது என் கருத்து. கட்டாயம் H ஒலிதான் வரவேண்டும் என்றாலும் ஃகெச் என்று எழுத முடியும். Helicopter என்பதை இத்தாலிய மொழியில் Elicottero என்று எழுதுகிறார்கள் ([http://it.wikipedia.org/wiki/Elicottero பார்க்கவும்). நாம் எலிக்காப்டர் என்று எழுதலாம். ஏன் இத்தாலிய மொழியைச் சுட்டுகின்றேன் என்றால் அவர்களும் எச் ஒலியைப் பயன்படுத்துவதில்லை. Helium என்பதை Elio என்கிறார்கள், Hungary என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நாட்டை Ungheria என்கிறார்கள். எனவே எளிமையாகவும், தமிழ்மொழிக்கு உகந்தவாறும் எச். எம். எசு (கப்பல்) என்றே இடலாமே. (அனுமன், அரி, இந்து, இந்தி , இம்சை என்றெல்லாம் எழுதுவதும் வ்வழக்கம்தானே). --செல்வா 18:37, 16 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
1)கப்பல் பெயர் என்பதே தெளிவாக இருக்கும் என்று எண்ணுகிறேன். பெயரிடல் மரபைப் பற்றி மட்டுமேயான கட்டுரை என்பதால் “கப்பல் பெயர்” என்றிருக்க வேண்டுமென நினைக்கிறேன். கப்பல் என்று மட்டும் இருந்தால் கப்பலைப் பற்றியான தகவலோ என்று தோன்றக்கூடும்
2) எச். எம். எசு. என மாற்றிவிடலாம். எனக்கு இன்னும் கிரந்தம் கலந்தே எழுத வருவதால் இப்படி நிகழ்கிறது. கிரந்த கலப்பு/தவிர்ப்பு பற்றி எனக்கு தனிப்பட்ட நிலைப்பாடு கிடையாது. கலந்து எழுதுவோர், கலக்காமல் எழுதுவோர் அனைவருக்கும் தேடுபொறியில் சிக்கினால் போதுமென்பதே என் நிலை.--சோடாபாட்டில் 18:47, 16 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]