பேச்சு:வேலுப்பிள்ளை பிரபாகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும், அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும், தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடி, திரைகடல்களில் திரவியம் குவித்த மறவர்கள் வாழும் பூமிதான் வல்வெட்டித்துறை. தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகிறது. காரணம் இங்குதான் தமிழீழ தேசிய விடுதலைப் போரை மக்கள் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவரும் தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றிப் புகழப்படுபவருமான பிரபாகரன் அவர்கள் 1954 ஆம் ஆண்டு கார்த்திகை திங்கள் 26ம் நாள் பிறந்தார்.

வல்வெட்டித்துறையில் பிரபலமான குடும்பம் ~திருமேனியார் குடும்பமாகும்~. இக் குடும்பத்தின் மூதாதையரான திருமேனியார் வெங்கடாசலம் என்பவர் அவ்வூரிலுள்ள வல்வை வைத்தீஸ்வரன் கோவிலைக் கட்டியும், வல்வை முத்துமாரியம்மன் கோயில், நெடியகாடு பிள்ளையார் கோயில் இரண்டையும் கட்ட உதவியும் செய்தார். இவ்வூருக்கு அருகிலுள்ள பருத்தித்துறையில் மெத்தை வீட்டு நாகலிங்கம் என்பவரின் குடும்பமும் பல கோவில்களைக் கட்டியெழுப்பிய குடும்பம் ஆகும். இவ்விரு குடும்பத்தினரும் திருமண உறவின் மூலம் இணைந்தனர். திருமேனியார் குடும்பத்தில் தோன்றிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், நாகலிங்கம் வழித்தோன்றிய பார்வதியும் திருமணத்தில் இணைந்து கொண்டனர். இவர்களுக்குப் பிறந்த கடைசிக் குழந்தையே பிரபாகரன் அவர்கள். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள். அண்ணனும் அக்காமார்களும் திருமணம் செய்து விட்டார்கள். பிரபாகரன் அவர்களின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர்.

பிரபாகரன் அவர்கள் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்த்pலுள்ள 'சிதம்பரா கல்லூரியில்" 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். யாழ்ப் பாணத்தில் அந்நாட்களில் செல்வம்மிக்க குடும்பங்களில் பிறந்த பிள்ளைகள் ஆங்கிலம் கற்பதும் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போவதும் அரச பணிகளில் அமர்வதுமே வாழ்வின் இலட்சியமாகக் கொள்வது நடைமுறையாக இருந்து வந்தன. ஆனால் பிரபாகரன் அவர்களின் சிந்தனையோட்டம் சிறுவயதிலேயே வேறுவிதமாக இருந்தது.

தந்தையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போது சிங்களக் காவற்துறையினர் அப்பாவித் தமிழர்களை அடித்து இம்சிப்பதையும் உதைப்பதையும் கண்டதினால் சிறுவனாக இருந்த பிரபாகரனின் பிஞ்சு உள்ளத்தில் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டதுடன் அவைகளே ஆழமான வடுவையும் ஏற்படுத்திவிட்டன. அதிலும் குறிப்பாகப் பிரபாகரன் அவர்கள் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த முதலாவது தமிழன அழிவில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. சிங்கள இனவெறியரால் எம்மக்கள், ஈவிரக்கமில்லாது கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உறுத்தும் சம்பவங்களை அவர் கேள்விப்பட்டதோடு, அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறியபோதும் சிறுவர்களைக் கொதிக்கும் தார்ப் பீப்பாக்களினுள் உயிருடன் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்கள், பாணந்துறையில் இந்துக் குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம், இவ்வாறு அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்பதையெல்லாம் அவர் அறிந்தபோதும் தமிழ் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்தச் சிங்கள இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உத்வேகம் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் ஆழமாக உறுதியாக உணர்ந்தார்.

இதனால் பிரபாகரன் அவர்கள் படிக்கும் சிறுவனாக இருந்தபோது அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து கைக்குண்டுகளைத் தயாரிக்கப் பழகினார்கள். ஒருமுறை பிரபாகரன் அவர்கள் கைக்குண்டுகளைத் தயாரிக்கும் போது எதிர்பாராதவிதமாகக் குண்டு வெடித்து அவரது காலில் எரிகாயம் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் அந்த இடம் கருமையாக மாறியது. அதனால் ~கரிகாலன்~ என்னும் புனைபெயரும் பிரபாகரனுக்குச் சிறுவயதிலேயே அமைந்தது.

தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல சிங்கள அரசின் ~தரப்படுத்தல் கொள்கை~ ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. மகன் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் தானே தேடி வந்தது. ஒருமுறை பிரபாகரன் அவர்களைத் தேடி காவற்துறையினர் வந்தனர். அதிகாலை 3 மணிக்கு அவரின் வீட்டுக் கதவைத் தட்டினர். கதவைத் தட்டும் சத்தம் கேட்டவுடனேயே காவற்துறையினர் வந்துவிட்டனர் என்பதைப் புரிந்து கொண்ட பிரபாகரன் அவர்கள் யாரும் அறியாமல் தப்பிவிட்டார். பிரபாகரன் அவர்களின் தாய் கதவைத் திறந்தபோது ஏராளமான காவற்துறையினர் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனார்.

ஏனென்றால் பிரபாகரன் அவர்கள் ~இரகசிய இயக்கத்தில்~ இருக்கிறார் என்ற செய்தியை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. வீடு முழுவதும் காவற் துறையினர் சோதனையிட்டனர். இறுதியில் பிரபாகரன் அவர்களைக் கண்டு பிடிக்க முடியாமல் காவற் துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபாகரன் அவர்கள் தன் வீட்டிற்குத் திரும்பவே இல்லை. பிரபாகரன் அவர்கள் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற செய்தியை அறிந்தபோது அவரது தந்தையார் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே சென்று அவரை வீட்டிற்கு அழைத்துவந்தார். வீட்டிற்கு வந்த பிரபாகரன் அவர்கள் தன் பெற்றோரிடம் பின்வருமாறு கூறினார். "உங்களுக்கோ, குடும்பத்திற்கோ நான் ஒருபோதும் பயன்படமாட்டேன். என்னால் உங்களுக்கு எத்தகைய தொல்லையும் வேண்டாம். என்னை என்போக்கில் விட்டுவிடுங்கள். இனி எதற்கும் என்னை எதிர்பார்க்காதீர்கள்" என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிப் போய் இரகசிய இயக்க வேலையில் ஈடுபடத் தொடங்கினார்

பொருளடக்கம்

[தொகு] நடுநிலை

இவரைப் பற்றிய குற்றச்சாட்டுக்களையும் சேர்க்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 08:07, 25 ஏப்ரல் 2009 (UTC)

இவர் குற்றமற்றவர் −முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து 116.202.142.131 (talkபங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .

[தொகு] இறப்பு நாள்

ஆங்கில விகியில் இது மே 18 என கொடுக்கப் பட்டுள்ளது. இதை சரி செய்ய வேண்டும்--92.39.200.17 09:33, 10 ஜூன் 2009 (UTC)

இரண்டு தேதிகளுக்கும் இப்போது மேற்கோள்கள் கொடுத்துள்ளேன். நன்றி.--Kanags \பேச்சு 10:32, 10 ஜூன் 2009 (UTC)

[தொகு] தேவையற்ற மாற்றம்

செல்வா, நான் முதலில், `தி ஹிந்து`வின் கட்டுரையை வெளி இணைப்பாக கொடுத்தேன். ஏன் அதை மாற்றி போடுகிறீர்கள்.? இது தேவை அற்றது.--92.39.200.17 22:25, 10 ஜூன் 2009 (UTC)

த இந்து அல்லது தி இந்து என்று இருப்பது சரியாக இருக்கும் என்பதால் மாற்றினேன். இந்து மதம், இந்தி, இதோளம் என்னும் இராகம் என்பதெல்லாம் வழக்கம்தானே. அது போலவே இந்து நாளிதழை த இந்து என்று இடுவது சரியென்று இட்டேன். --செல்வா 23:57, 10 ஜூன் 2009 (UTC)
ஆம், இந்து என்பது பொதுவழக்கும் பெற்றது. இதைப் பயன்படுத்துவது முறையே. (ஆர்.எசு.எசு. அமைப்பினர் கூடத் தமிழ்நாட்டில் அவ்வாறே பயன்படுத்துவதாக நினைவு.) -- சுந்தர் \பேச்சு 02:57, 11 ஜூன் 2009 (UTC)
`இந்து` பொது வழக்கு என்பதற்கு ஆதாரம் என்ன? `ஆர்.எசு.எசு. அமைப்பினர் ` அமைப்பினர் அப்படி எழுதினாலும் அது பொது அமைப்பு ஆகாது. `ஆர்.எசு.எசு. அமைப்பினர் ` அப்படி எழுதுகிறனர் என்பதற்கு ஆதாரம் என்ன? தமிழ் கூகிளில் போட்டு தேடினால் ’ஆர்.எஸ்.எஸ்.’ 162,000 பதில்களை கொடுக்கிறது. ஆர்.எசு.எசு. என தேடினால் அந்த அமைப்பை குறிக்க 1000 பதில்கள் கூட வருவதில்லை. பயனர் சுந்தர் பொது வழக்கிலிருந்து பெரிதும் மாறுபவர் போலுள்ளது. ஹிண்டு என்ற சொல்லிற்கு 3300 மேல் பதில்கள் வருகின்றன. இவை இந்த பத்திரிகையை குறிப்பதாகும்.’இந்து’ என்பதில் பல பதில்கள் வருகின்றன, ஆனால் அவை அப்பத்திரிகையை குறிப்பவை அல்ல.--92.39.200.17 08:06, 11 ஜூன் 2009 (UTC)
ஆர். எசு. எசு. என்று அவர்கள் எழுதவில்லை, அது நான் பேச்சுப் பக்கத்தில் பயன்படுத்துவது. ஆனால் இந்து, இந்து முன்னணி, த இந்து என்று பயன்படுத்துவது பொது நடையும் ஆகும். தேடுபொறிகளின் எண்ணிக்கையை மட்டும் வைத்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதை பலமுறை இங்கு உரையாடியுள்ளோம். இருந்தாலும் நீங்கள் குறிப்பிட்டதால் தருகிறேன்:
தேடுபொறிக்குத் தேடுபொறி பக்கங்களின் எண்ணிக்கை இவ்வளவு வேறுபடுவது இம்முறையைக் கொண்டு பொதுவழக்கைக் கணிக்க முடியாது என்பதற்கான மற்றொரு சான்று. தவிர, ஏற்கெனவே சொல்லியபடி பொதுவழக்கில் எழுதுவதற்கு இது வலைப்பதிவோ, செய்தித்தாளோ அல்ல. கலைக்களஞ்சியம். இதற்கென தனி நடை, செந்தமிழ் நடையைப் பயன்படுத்துவது பொருத்தம். கிரந்தமே வேண்டாமென்று கூட சொல்லவில்லை, பொது வழக்கு இருக்கும் இடங்களிலாவது கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்கிறேன். அது சரி, ஒலிப்புத் துல்லியம் தான் முதன்மை என்றால் நீங்கள் இந்து என்பதை இண்டு என்று மாற்ற வேண்டுமென்று ஏன் கோரவில்லை? கிரந்தம் விடுபடுவது தான் உறுத்துகிறதா? -- சுந்தர் \பேச்சு 09:24, 11 ஜூன் 2009 (UTC)
நீங்கள் 2 வார்த்தைகளைப் போட்டு தெடினால், எல்லா பதில்களும் 2 வார்த்தைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக தருவன அல்ல. இந்த இரண்டு தேடல்களிலும், ’ஹிந்து நாளிதழ்’ என்பது கடைசி பக்கம் வரை ஒன்றக வருகிறது. மேலும் இப்படி காலச்சுவடு, கீற்று, திண்ணை, வரலாறு, தமிழ் ஹிந்து போன்ற இலக்கிய தளங்களும் எழுதுகிறன.’இந்து நாளிதழ்’ முதல் 2,3 பக்கங்களுக்கு அப்பால் பிரிந்து காணப் படுகிரது. அதனால் நீங்கள் ஹிந்து என்று பலர் எழுதுகிறார்கள் என புரிந்து கொள்ளலாம். எனக்கு இந்து என்று யாராவது எழுதினால், ஆட்சேபணை இல்லை. ஆனால் ஹிண்டு தவறு என்று மாற்றுவது, உங்கள் சாய்வுகளை மற்றவர் மீது திணிப்பதாகும். மற்றோர் இடத்தில் பயனர் `ரவிட்ரீம்ஸ்` இயல்பான எழுத்துகளை மாற்ற மாட்டோம் என் உறுதி இட்டாரே! ஒரு ஆங்கில பத்திரிகையின் பெயரை `தி` யா `த` வா என்பதை பெரிய பிரச்சினை ஆக்குவது ஒரு பக்கம், பொது வழக்கற்ற எழுத்துகளை பின்பற்றுவது மற்றொரு பக்கம். --92.39.200.17 09:50, 11 ஜூன் 2009 (UTC)
இது தேவையற்ற வாதம் என்றே தோன்றுகிறது. The Hindu என்ற பத்திரிகைப் பெயரை அப்படியே த ஹிண்டு அல்லது த இண்டு என்று எழுதுவதே முறை. அவ்வாறே ஆங்கிலத் திரைப்படங்கள், மற்றும் பெயர்களை அவற்றின் ஒலிப்பிற்கேற்ற எழுதுகிறோம். அதற்காக hindu என்ற பொதுவான சொல்லை ஹிந்து அல்லது ஹிண்டு என்று எழுதச் சொல்லவில்லை. எனினும் பெரும்பான்மையோரின் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.--Kanags \பேச்சு 08:18, 11 ஜூன் 2009 (UTC)
கனகு, கிரந்தம் தொடர்பில் தெளிவான கொள்கை இல்லாத நிலையில் நாம் பெரும்பான்மையான இடங்களில் கிரந்தத்தைத் தவிர்க்கவே இல்லை. ஆனால் இந்துவைப் பொருத்தமட்டில் பொது வழக்கில் த இந்து என்பதும் பரவலாகத்தான் உள்ளது. அதனால் தான் இந்த வாதம். த இந்து என்ற கட்டுரையின் உள்ளே இந்த எல்லா மாற்றுப் பயன்பாடுகளையும் தருவதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. இப்போது இவர் ஆர். எஸ். எஸ் என்று ஒரு கட்டுரை எழுதினால் நாம் ஒன்றும் மாற்றப் போவதில்லை. காஸிரங்கா என்று எழுதினால் காசிரங்கா என்று மாற்றுவோம். ஏனென்றால் இந்த தலைப்புகள் இங்கேதான் அறிமுகம் ஆகின்றன, காசிரங்கா ஒலிப்பும் நெருங்கித்தான் உள்ளது. -- சுந்தர் \பேச்சு 09:24, 11 ஜூன் 2009 (UTC)
நான் பொதுவாக எல்லோரும் பின்பற்றும் வழக்கத்தைத்தான் கடைப் பிடிக்கிறேன். ‘சாஸிரங்கா’ என எழுத மாட்டேன், ஏனெனில் காசிரங்கா தான் வழக்கு. தமிழில் ஆங்கில Z ஐ , ச என தான் எழுதுகிறோம்.என் அளவுகோல், ‘ஒலிப்பு’ முறை சரியா, தப்பா என்றில்லை; வழக்கமா, இல்லையா - அதுதான்.--92.39.200.17 09:55, 11 ஜூன் 2009 (UTC)

[தொகு] தேவையான மாற்றம்

பெயரில்லா நண்பருக்கு,

the ஐ தி அல்லது த எப்படி எழுதினாலும் சரி.

தி ஹிந்துவை தி இந்துவாக எப்படி மாற்றலாம் என்பதே வாதம். இதற்குச் சான்றாக 92.39.200.17 கீற்று, திண்ணை, வரலாறு, காலச்சுவடு, தமிழ் இந்து ஆகிய இதழ்களை எடுத்துக்காட்டாகத் தந்திருக்கிறார்.

//`இந்து` பொது வழக்கு என்பதற்கு ஆதாரம் என்ன? `//

தேடுபொறி முடிவுகளை வைத்து முடிவெடுப்பது புள்ளியியல் அடிப்படையில் தவறு என்பது பல முறை சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. இருந்தாலும், வாதத்துக்காக குறிப்பிட்ட ஆதாரங்களில் இருந்து தேடு பொறி முடிவுகள். "தி ஹிந்து" என்ற சொற்கூட்டே தேடப்படிருக்கிறது. (phrase search). எனவே, இந்து மதத்தைக் குறிக்கும் சொல் வந்து முடிவுகளைத் தவறாக காட்ட வழியில்லை:

தி இந்து

திண்ணை - 120 - http://www.google.com/search?hl=en&q=site:thinnai.com+"தி+ஹிந்து"&aq=f&oq=&aqi=

காலச்சுவடு - 4 - http://www.google.com/search?hl=en&q=site:kalachuvadu.com+"தி+இந்து"&aq=f&oq=&aqi=

கீற்று - 118 - http://www.google.com/search?hl=en&q=site:keetru.com+"தி+இந்து"&btnG=Search&aq=f&oq=&aqi=

வரலாறு - 4 - http://www.google.com/search?hl=en&q=site:varalaaru.com+"தி+இந்து"&aq=f&oq=&aqi=

tamilhindu - 2 - http://www.google.com/search?hl=en&q=site:tamilhindu.com+"தி+இந்து"&aq=f&oq=&aqi=

தி ஹிந்து

திண்ணை - 76 - http://www.google.com/search?hl=en&q=site:thinnai.com+"தி+ஹிந்து"&aq=f&oq=&aqi=

காலச்சுவடு - 2 - http://www.google.com/search?hl=en&q=site:kalachuvadu.com+"தி+ஹிந்து"&aq=f&oq=&aqi=

கீற்று - 38 - http://www.google.com/search?hl=en&q=site:keetru.com+"தி+ஹிந்து"&aq=f&oq=&aqi=

வரலாறு - 1 - http://www.google.com/search?hl=en&q=site:varalaaru.com+"தி+ஹிந்து"&aq=f&oq=&aqi=

tamilhindu - 6 - http://www.google.com/search?hl=en&q=site:tamilhindu.com+"தி+ஹிந்து"&aq=f&oq=&aqi=

பெயரிலா நண்பர் மேற்கோள் காட்டிய எல்லா தளங்களிலும் (TamilHindu தவிர. tamilhindu தளத்தின் கிரந்த ஆதரவு எழுத்து நடை கொள்கை அறிந்ததே. இருந்தாலும் எடுத்துக் கொள்கிறேன். தமிழோசை இதழ்களில் இருந்து நானும் எடுத்துக்காட்டுகள் தரலாமா?) கூட தி இந்து என்று எழுதும் வழக்கமே முந்துகிறது.

இப்படியே ஒவ்வொரு சொல்லுக்கு தேடுபொறியை மேற்கோள் காட்டி எழுதினால், விடிந்து விடும். தயவுசெய்து இன்னொரு முறை இப்படி அலைக்கழிக்க வேண்டாம்.

கனகு,

//The Hindu என்ற பத்திரிகைப் பெயரை அப்படியே த ஹிண்டு அல்லது த இண்டு என்று எழுதுவதே முறை. //

இதில் எனக்கு உடன்பாடில்லை. Hindu சமயம் இந்து சமயம் என்றால், Hindu நாளிதழ் இந்து நாளிதழ் தான். ஒரே ஆங்கில எழுத்துச் சொல் கூட்டலுக்கு வெவ்வேறு தமிழ் எழுத்துக் கூட்டல் தருவது தேவை அற்றது.

தி இந்து என்று எழுதுவது:

  • பரவலான பொது வழக்கத்துக்கு உட்பட்டது.
  • தமிழ் இலக்கண வழக்கத்துக்கு உட்பட்டது.
  • தமிழ் வழக்கு, பிற மொழி வழக்கு இருக்கையில் தமிழ் வழக்குக்கே முன்னுரிமை கொடுப்பது என்ற தமிழ் விக்கியின் அடிப்படை கொள்கைக்கு உட்பட்டது.
கூகிள் தேடுபொறியை ஆதாரம் காட்டுவது/இண்டெர்நெட் இணைகளை ஆதாரம் கட்டுவது பொது வழக்கத்திற்கு மட்டும் அல்ல, ஜனரஞ்சக ஊடகங்கள், இலக்கியவாதிகள் எப்படி எழுதிறார்கள் என்பதற்குதான். நீங்கள் சுட்டி கட்டிய படி, ஹிண்டு, ஹிந்து, இந்து என்று ஒரே வார்த்தையை சில விதமாக எழுதுகிறார்கள் - இம்மூன்று முறைகளும் சரிதான். மூன்றும் பொது வழக்கம்தான். நான் ஒரு பொது வழக்கத்தில் எழுதியதால், அதை மாற்றியது சரியல்ல. நீங்கள் எழுதும் கட்டுரைகளில் ‘இந்து’ என எழுதினால் நான் நிச்சியமாக ஆட்சேபிக்க மாட்டேன். எவ்வளவோ இலக்கண தவறுகளும், தகவல் தவறுகளும், தகவல் குறைபாடுகளும் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்யாமல், கிரந்தத்தின் மேல் உள்ள Obsession சீற்குலைக்கும் வழியே. மேலும் நேற்றுதான் நீங்கள் ‘நீங்கள் இயல்பாக எழுதுங்கள், யாரும் மாற்ற மாட்டார்கள்’ என கூறி விட்டு, இன்று ‘தவிற்பு நடனம்’ ஆடுகிறீர்களே.--92.39.200.17 12:09, 11 ஜூன் 2009 (UTC)

//மூன்றும் பொது வழக்கம்தான்.//

பல பொது வழக்கங்கள் இருந்தால் அதில் தமிழ் எழுத்துக்களை மட்டும் கொண்டுள்ள வழக்கத்துக்கு முன்னுரிமை தருவது தமிழ் விக்கியின் அடிப்படை கொள்கைகளின் ஒன்று. செல்வாவின் மாற்றம் இந்தக் கொள்கைக்கு உட்பட்டதே. இத்தகைய மாற்றங்களில் தலையிட முடியாது.

தவிர்ப்பு என்று ஒரு எளிய சொல்லைக் கூட பிழை விடாமல் எழுதத் தெரியாத, உங்களைப் போன்றோரிடம் இருந்து விக்கியின் தமிழ் நடை பற்றி நாங்கள் பாடம் கேட்க வேண்டி இருப்பது தான் தமிழ் விக்கியின் பெரிய சாபக் கேடாக இருக்கிறது.

விக்கியில் உன் கட்டுரை என் கட்டுரை என்று ஏதும் இல்லை. எல்லாம் கூட்டு முயற்சி தான். rajasthan கட்டுரையை இராசத்தான் என்று எழுதியது சர்ச்சை ஆனது. அதை மீள ராஜஸ்தான் என்று மாற்றி விட்டு செல்வம் அவர்களின் கட்டுரைப் பணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்தே வருகிறோம். இன்னும் அவரது பல கட்டுரைகளில் கிரந்தம் உள்ளது. அங்கு தலையிடுகிறோமா? ஆனால், இந்த நன்னம்பிக்கையைச் சாக்காக வைத்து, "ஏற்கனவே நன்கு தமிழ்வழிப்பட்ட சொற்களைக் கூட கிரந்தம் கலந்து தான் எழுதுவேன், நீங்கள் தலையிடக்கூடாது" என்றால் ஒத்து வராது. --ரவி 12:24, 11 ஜூன் 2009 (UTC)


--ரவி 12:19, 11 ஜூன் 2009 (UTC)

என்னை வம்புக்கு இழுக்கவில்லையென்றால் ரவிக்கு தூக்கம் வருவதில்லை. 10 சதவீதம் இருக்கும். அது தவிர்க்கமுடியாத இடங்களில் வரும் அவ்வப்பொழுது மாற்றுகின்றேன். கிரந்தம் தட்டச்சு செய்வது சற்றுக் கடினமானதும் கூட அவற்றை நான் விரும்புவதும் இல்லை. பல நேரங்களில் அந்த எழுத்துகள் மறந்து விடுகின்றது. அவ்வப்பொழுது மழலையர் புத்தகத்தைப் பார்த்துதான் தெரிந்து கொள்கின்றேன்.(6 எழுத்தா 5 எழுத்தா சந்தேகம்-இரண்டு எழுத்துதான் அதிகம் தெரியும்) அதிலும் இரண்டு எழுத்துக்ளைத்தான் அதிகம் பயன் படுத்துகின்ற சூழ்நிலை ஜ, ஸ் (இதில் நெடில், குறில் வரும்) மீதியெல்லாவற்றிற்கும் உயிர் எழுத்து இருக்கின்றது. பெயர்களில் மாற்றுவதில்லை அவர் பதிவு செய்திருப்பதை பொறுத்து. மற்றவைகளில் மாற்றுகின்றேன். ஊர் பெயர்களில் சில இடங்களில் மாற்றுவதில்லை. பொருள் தராமல் மாற்றுவதில்லை. இது தற்கால நடைமுறையில் நான் எடுத்த முடிவு முன்பு உங்களைப்போலத்தான். கிரந்தம் உச்சரிப்பது ஆயுளை குறைக்கும் எனத் தமிழ் அறிஞர்களின் கருத்து. அடிவயிற்றிலிருந்து உச்சரிக்க வேண்டும். ஆகையால் சீக்கிரம் மோட்சம் அடைய அந்த உச்சாடணைகளை கொண்டனர் என்று திராவிட பற்றாளர்கள், ஆய்வாளர்கள் கருத்து. என்னுடைய கருத்தல்ல வம்புக்கு வராதீர். இவ்விடயத்தில் சற்று நடுநிலையே வகிக்கின்றேன். ஏற்கனவே கிரந்தத்திற்கு மாற்று சொல் பொருளுடன் கண்டுபிடிப்பது நல்லது என்ற கருத்தில் நான் மாறுபடவில்லை. அதுவரை தவிர்க்க முடியாத இடங்களில் வருவதை.............--செல்வம் தமிழ் 14:26, 18 ஜூன் 2009 (UTC)

[தொகு] Notes 2


==ஆரம்ப வாழ்க்கை==
வேலுபிள்ளை பிரபாகரன், நவம்பர் 26, 1954ல் வடக்கு கடற்கரை நகரமான [[வேல்வெட்டிதுணை|வேல்வெட்டித்துறை]]யில் திருவேங்கடம் வேலுபிள்ளைக்கும், வல்லிப்புரம் பார்வதிக்கும் மகனாக பிறந்தார்.<ref name="lp-first">{{cite news | title=First Political Assassination Of Prabhakaran | date=2009-02-25 | url =http://www.lankapuvath.lk/index.php?view=article&id=273:first-political-assassination-of-prabhakaran-&option=com_content&Itemid=80 | work =Lankapuwath | accessdate = 2009-05-17}}</ref> <ref name="ht=prabhaprofile">{{cite news | title=Profile of Velupillai Prabhakaran | date=2009-04-22 | url =http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=66266307-fb34-4150-b9b0-392df102e067 | work =Lankapuwath | accessdate = 2009-05-17}}</ref> ஆளும் இலங்கை அரசாங்கங்களால் தமிழ் மக்களுக்கு எதிரான கொடுமைகளைக் கண்டு ஆத்திரமடைந்த அவர், தரப்படுத்தல் விவாதங்களின் போது டிஐபி -யின் மாணவர் குழுவில் சேர்ந்தார்.
  <ref>[[#ஹெயில்94 (Heil) |ஹெயில்மன்-இராஜநாயகம் 1994]]: 37</ref>நாட்டின் காலனிக்கு பிந்தைய அரசியல் போக்கிற்கு எதிராக போராடிய பல முந்தை அமைப்புகளுக்கு மாற்றாக 1972ல், பிரபாகரன் [[புதிய தமிழ் புலிகள்|புதிய தமிழ் புலிகள்]] (டிஎன்டி) <ref>[[#ஹெயில்94 (Heil)|ஹெயில்மன்-இராஜநாயகம் 1994]]: 38</ref> அமைப்பை நிறுவினார், இதில் சிறுபான்மை [[இலங்கை தமிழர்கள்|இலங்கை தமிழர்கள்]], பெரும்பான்மை [[சிங்கள மக்கள்|சிங்கள மக்களுக்கு]] எதிராக போராடினார்கள்.{{Cref|Political situation}}


1975ல், தமிழ் போராட்டங்களில் கடுமையாக ஈடுபட்டதற்கு பின்னர், தமிழ் போராளி குழுவின் உதவியுடன் அவர் முதன்முதலாக முக்கிய அரசியல் படுகொலையை நிகழ்த்தினார், அதாவது பொன்னாலையில் உள்ள ஹிந்து கோவிலுக்குள் நுழையவிருந்த [[யாழ்பாணம்|யாழ்பாண]] மேயர் [[ஆல்பிரட் துரையப்பா|ஆல்பிரட் துரையப்பா]]வை அருகாமையில் இருந்து சுட்டதன் மூலம் அவர் படுகொலை செய்யப்பட்டார்.   [[1974 தமிழ் மாநாடு சம்பவம்|1974 தமிழ் மாநாடு சம்பவத்திற்கு]] பிரதிபலிப்பாக இந்த படுகொலை நடத்தப்பட்டது. அப்போது ஆளும் [[ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி|இலங்கை சுதந்திர கட்சி]]க்கு அவர் ஆதரவாக இருந்தார் என்பதற்காக, <ref>{{cite web|url=http://www.uthr.org/Book/CHA02.htm#_Toc527947383 |title=Welcome to UTHR, Sri Lanka |publisher=Uthr.org |date= |accessdate=2009-05-19}}</ref> தமிழ் மாநாடு சம்பவத்திற்கு தமிழ் மூலத்துவவாதிகள் துரையப்பாவை குற்றஞ்சாட்டினார்கள். சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்துடன் கூட்டணி வைத்து கொண்டதன் மூலம் [[யாழ்பாண தீபகற்பம்|யாழ்பாண தீபகற்பத்தில்]] உள்ள தமிழ் தேசிய உணர்வுகளைக் அவர் காட்டி கொடுத்துவிட்டதாகவும் தமிழ் போராளிகளால் கருதப்பட்டது.<ref>{{cite web|url=http://www.atimes.com/ind-pak/DA26Df04.html |title=Asia Times: Sri Lanka: The Untold Story |publisher=Atimes.com |date= |accessdate=2009-05-19}}</ref>



==தமிழ் புலிகள்==

===எல்டிடிஈ தோற்றம்===
மே 5, 1976ல், டிஎன்டி என்பது பொதுவாக ''தமிழ் புலிகள்''  என்று அறியப்படும், தமிழீழ விடுதலை புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது. 
<ref name="health">{{cite web|url=http://www.asiantribune.com/index.php?q=node/889|title=Health card of Prabakaran is not so rosy as it ought to be}}</ref>{{Failed verification|date=July 2009}}


அவர் தத்துவத்திலும், சி்த்தாந்தத்திலும் மதம் ஒரு முக்கிய காரணியாக இருக்கவில்லை, ஆனால் எல்டிடிஈ புத்த மதத்திற்கு எதிரானதாக பாத்திரப்படுத்தப்பட்டது.<ref>[[#ஹெயில்94 (Heil)|ஹெயில்மன்-இராஜநாயகம் 1994]]: 69</ref> பிரபாகரன் அவரேகூட ஒரு பழைய மெதோடிஸ்ட் ஆவார் <ref>[http://findarticles.com/p/articles/mi_m1058/is_/ai_17497865 மத்தியஸ்தர்களாக இருக்கலாம் - இலங்கை - தலையங்கம்] [[கிறிஸ்துவ நூற்றாண்டு|கிறிஸ்துவ நூற்றாண்டு]] - செப்டம்பர் 13, 1995</ref>.  மதம் அல்லது மத வாசகங்களை தன் எந்த சித்தாந்த ஆவணங்களிலும், பிரச்சாரங்களிலும் மேற்கோள் காட்டாத ஓர் அமைப்பாகவும் எல்டிடிஈ இருந்தது , ஆனால் இலங்கை தமிழ் தேசியவாதம் சிந்தனையால் மட்டுமே வழிநடத்தப்பட்டு வந்தது. அவர்கள் இந்த ஒரே சிந்தனை அணுகுமுறையிலும், ஒரு சுதந்திர தமிழ் ஈழத்தைப் பெறுவதை நோக்கிய உள்ளுணர்விலும் கவனம் செலுத்தினார்கள்.



===கிளிநொச்சியில் பத்திரிக்கையாளர் கூட்டம்===
2002 ஏப்ரல் 10ல், பிரபாகரனின் முதல் மற்றும் ஒரேயொரு முக்கிய பத்திரிக்கையாளர் கூட்டம் [[கிளிநொச்சி|கிளிநொச்சி]]யில் நடத்தப்பட்டது. <ref name="tnr">{{cite web|url=http://www.hinduonnet.com/2002/04/11/stories/2002041103800100.htm |title=The Hindu : Time not ripe to give up Eelam goal: Prabakaran |publisher=Hinduonnet.com |date=2002-04-11 |accessdate=2009-05-17}}</ref>இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டதாகவும், அவர்கள் அந்நிகழ்ச்சிக்கு முன்னதாக 10 மணி நேர பாதுகாப்பு சோதனைக்கு ஆட்படுத்தப்பட்டார்கள் <ref name="tnr"></ref> என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் [[ஆண்டன் பாலசிங்கம்|ஆண்டன் பாலசிங்கம்]], எல்டிடிஈ தலைவரை ''"தமிழ் ஈழத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி"''  என்று அறிமுகப்படுத்தினார்.


அதில், பிரபாகரனின் முந்தைய அமைதி நடவடிக்கைகள் நோக்கிய எல்டிடிஈ -இன் பொறுப்புகள் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டன, பிரபாகரனும், டாக்டர். ஆண்டன் பாலசிங்கமும் இணைந்து கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.


பத்திரிக்கையாளர்களில் ஒருவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கையில், சுதந்திர நாடு குறித்த இலக்கில் தாம் சமரசப்பட்டால் தம்மை கொன்றுவிடுமாறு எல்டிடிஈ வீரர்களுக்கு தாம் அறிவித்திருப்பதாக பிரபாகரன் தெரிவித்தார்.<ref name="tnr"></ref>


[[ராஜீவ் காந்தி|ராஜீவ்காந்தி]] படுகொலையில் அவர் சம்பந்தப்பட்டது குறித்த தொடர்ச்சியான கேள்விகளுக்கு, பாலசிங்கம் மற்றும் பிரபாகரன் இருவராலும் தெளிவற்ற வகையில் மட்டுமே பதிலளிக்கப்பட்டது. அவர்கள் அதை ஒரு "துயரமான சம்பவமாக" குறிப்பிட்டார்கள், "10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவத்தைத் தோண்ட வேண்டாம்" என்று அவர்கள் பத்திரிக்கையாளர்களைக் கேட்டு கொண்டார்கள்.


அந்த நேர்காணலின் போது, தமிழ் ஈழத்திற்கான கோரிக்கையை விட்டுவிடுவதற்கான சரியான சூழல் இன்னும் உருவாகவில்லை என்று அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "முன்று அடிப்படைகள் உள்ளன. அவை: தமிழ் தாய்நாடு, தமிழ் தேசியம் மற்றும் சுய-அதிகாரத்திற்கான தமிழ் உரிமை. இவை தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகள். இந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டவுடன் அல்லது இந்த மூன்று அடிப்படைகளை அங்கீகரிப்பதன் மூலம் ஓர் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டவுடன், எம்மக்கள் தீ்ர்வுகளால் திருப்திப்படுத்தப்பட்டால், ஈழத்திற்கான கோரிக்கையைக் கைவிடுவது குறித்து நாங்கள் சிந்திப்போம்," என்றார். தமிழ் ஈழம் என்பது எல்டிடிஈ -இன் கோரிக்கை மட்டும் அல்ல, அது தமிழ் மக்களின் கோரி்க்கை என்று அவர் தெரிவித்தார்.<ref name="tnr"></ref>


 பிரபாகரன் பல கேள்விகளுக்கு பதிலளித்தார், அதில் அமைதி நிகழ்முறையை நோக்கிய அவர்களின் பொறுப்பு குறித்து அவர் மறுஉறுதி அளித்தார், அவர், "நாங்கள் அமைதி நடைமுறைக்கு நேர்மையுடன் பொறுப்பேற்றுள்ளோம். நாங்கள் நான்கு மாத போர்நிறுத்தத்தைத் தொடர்ந்ததும், இலங்கை மற்றும் இந்தியாவால் எல்டிடிஈ மீதான தடையை நீக்குவதில் நாங்கள் உறுதியாக இருப்பதும்," நாங்கள் அமைதிக்காக நேர்மையுடன் பொறுப்பேற்று இருக்கிறோம் என்பதற்காக தான். "எல்டிடிஈ மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். சரியான நேரத்தில் நாங்கள் அந்தப் பிரச்சனையை எழுப்புவோம்." என்றார்.


நார்வேயின் மத்தியஸ்தத்துடன் நடந்து வரும் அமைதி பேச்சுவார்த்தையில், தடைநீக்கம் ஒரு இணக்கமான தீர்வை கொண்டு வரும் என்று பிரபாகரன் உறுதியாக கூறினார்: "நாங்கள் அரசாங்கத்திடம் அறிவித்துள்ளோம், பேச்சுவார்த்தை தொடங்கப்படுவதற்கு தடைநீக்கம் ஒரு அடிப்படை நிபந்தனையாகும் என்று நாங்கள் நார்வியர்களிடம் தெரிவித்துள்ளோம்." <ref>அசெயின்மெண்ட் கொலம்பு பக்கம் xv(15), ஐஎஸ்பிஎன் 81-220-0499-7, பதிப்பகம் - கோனார்க் பப்ளிஷர்ஸ் பிரைவேட் லிமிடெட், டெல்லி</ref> <ref>எஸ்எல் குணசேகராவினால் எழுதப்பட்ட ''பாவத்திற்கான கூலி'' </ref>



==தத்துவமும், சித்தாந்தமும்==
{{quote|"Few dispute he was one of the most effective [[guerrilla]] leaders in modern warfare - displaying the tactical prowess of Afghanistan's [[Ahmad Shah Masoud]], the ruthlessness of [[Osama bin Laden]] and the conviction of Latin American revolutionary [[Che Guevara]]."| ''[[Straits Times]]'' <ref name="SunGodWar">[http://www.straitstimes.com/Breaking%2BNews/Asia/Story/STIStory_378372.html 'Sun God's' Life of War] ''Straits Times'', May 18, 2009</ref>}}


அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முறையான [[தத்துவம்|தத்துவத்தை]] பிரபாகரன் ஒருபோதும் அறிவித்ததில்லை, ஆனால் 'புரட்சிகர [[சோசலிசம்|சோசலிசம்]] மற்றும் ஓர் ஈகலேட்டிரியன் சமூகத்தின் உருவாக்கத்தால்' தம் சித்தாந்தம் முன்னெடுத்துச் செல்லப்படுவதாக அவர் அறிவித்தார். தம் இளம் வயதில் தமிழ் தேசியவாத இயக்கத்தில் சேர்ந்த அவர், எல்டிடிஈ -ஐ உருவாக்கியதன் மூலம் அவரை அவர் ஒரு வலிமையான [[போராளி|போராட்ட]] தலைவராக உருவாக்கி கொண்டார். அவரின் அரிதான நேர்காணல்கள், ஆண்டுதோறும் அளிக்கப்படும் அவரின் தமிழீழ வீரர்கள் தின உரைகள் மற்றும் அவர் கொள்கைகள் மற்றும் எல்டிடிஈ -ன் நடவடிக்கைகள் ஆகியவற்றை பிரபாகரனின் தத்துவம் மற்றும் சித்தாந்தத்தின் அறிகுறிகளாக எடுத்துக் கொள்ளலாம். பிரபாகரனின் தத்துவம் மற்றும் சித்தாந்தத்தில் பின்வருவன சில முக்கிய பகுதிகளாகும்.



===இலங்கை தமிழ் தேசியவாதம்===
பிரபாகரனின் முன்னுதாரணம் மற்றும் போக்கின் ஆதாரமாக இருப்பது [[இலங்கை தமிழ் தேசியவாதம்|இலங்கை தமிழ் தேசியவாதமாகும்]].{{Cref|Sri Lankan Tamil Nationalism}} ஐக்கிய நாடுகள் சபையின் வலைத்தளத்தில் அளிக்கப்பட்டுள்ள, அரசியல் சுதந்திரத்திற்கான <ref>{{cite web|url=http://www.hrweb.org/legal/cpr.html |title=UN Covenant on Civil and Political Rights |publisher=Hrweb.org |date=1994-07-07 |accessdate=2009-05-17}}</ref> மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் அதன் சாசனத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட ஒரு [[நாடு|நாடாக]] தமிழ் ஈழத்தைப் பெறுவதே அவரால் குறிப்பிடப்பட்ட மற்றும் இறுதியான கருத்தாக உள்ளது. 2003ன் அமைதி பேச்சுவார்த்தையின் போது, ஓர் [[இடைக்கால சுயாட்சி ஆணையம்|இடைகால சுயாட்சி ஆணையம்]] உருவாக்கப்படுவதையும் எல்டிடிஈ முன்மொழிந்தது. முன்னாள் தமிழ் கொரில்லாவாக இருந்தவரும், பின்னர் அரசியல்வாதியாக மாறியவருமான தர்மலிங்கம் சித்தாத்தன், "[[தமிழ் ஈழம்|தமிழ் ஈழத்தை]] உருவாக்குவதற்கான அவரின் அர்பணிப்பு கேள்விக்குட்பாததாகும், இலங்கையில் யுத்தமா அல்லது அமைதியா என்பதை தீர்மானிக்க கூடிய ஒரே மனிதர் அவர் மட்டும் தான்." என்று குறிப்பிட்டார்.   <ref name="SunGodWar"></ref>



===எல்டிடிஈ -இன் இராணுவவாதம்===
ஒருபுறம், ஆயுதமேந்திய இலங்கை அரசாங்கமும், மறுபுறம் நிகரற்ற வகையில் நிராயுதபாணியாக இருக்கும் [[முரண்பட்ட யுத்தமுறை|சமமற்ற யுத்தமுறையை]]த் தவிர்க்க ஓர் ஆயுதமேந்திய போராட்டம் மட்டுமே ஒரே வழியாகும் என்று அவர் வெளிப்படையாகவே அறிவித்தார். [[வன்முறையின்மை|வன்முறையின்மை]] என்பது பலனற்றும், வழக்கொழிந்ததாகவும் கண்ட பின்னர் தான், குறிப்பாக [[திலீபன்|திலீபன்]] சம்பவத்திற்கு பின்னர், தாம் இராணுவத்தைத் தேர்ந்தெடுத்ததாக அவர் விளக்கினார். ஒரு கர்னல் பதவியில் இருந்த திலீபன், ஐபிகேஎப் படுகொலைகளுக்கு எதிராக [[காந்தி|காந்திய]] வழியில் போராட 1987, செப்டம்பர் 15ல் இருந்து ஒரு சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார், [[26 செப்டம்பர்|செப்டம்பர் 26]] வரை உணவிலிருந்து, தண்ணீர் வரை எதுவும் எடுத்துக் கொள்ளாத அவர், அவருடன் சேர்ந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வந்திருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் முன்னிலையில் இறந்தார்.  அமைதியான போராட்டங்கள் நிராகரிக்கவும் படாது, நசுக்கவும் படாது, மாறாக கேட்பாரற்று போகும் என்ற பிரபாகரனின் தீர்மானத்தை இது மேலும் பலப்படுத்தியது.<ref>[http://www.hindustantimes.com/news/181_1806875,001302310000.htm ]{{Dead link|date=May 2009}}</ref>


உத்திரீதியாக, பிரபாகரன் நியமனங்களையும், [[மனித வெடிகுண்டு|தற்கொலைப்படை]] பிரிவுகளைத் துல்லியப்படுத்தினார், அவர் போராளிகள் பொதுவாக யாரையும் சிறைபிடிப்பதில்லை, மேலும் பொதுவாக ஒவ்வொரு எதிரி வீரரையும் இறக்க விட்டுவிடும் காயப்பட்டவர்களின் அவமதிப்பையும் அவர்கள் செய்வதில்லை.<ref name="SunGodWar"></ref> தனிப்பட்ட வகையில், "மிகவும் எச்சரிக்கையான, நவீன ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் பாகுபடுத்தவும், பயன்படுத்தவும்" தெரிந்த ஒரு நபர் என்று [[இன்டர்போல்|இன்டர்போல்]] குறிப்பிடுகிறது.<ref name="SunGodWar"></ref>



===மோடஸ் ஆப்ரண்டி===
2009ல் இலங்கை இராணுவ வெற்றிகளைத் தொடர்ந்து அவர் (பிரபாகரன்) இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டதாக இலங்கை இராணுவ [[பொது|ஜெனரல்]] [[சரத் பொன்சேகா|சரத் பொன்சகா ]]குற்றஞ்சாட்டுகிறார்.  <ref>{{cite web|url=http://in.reuters.com/article/southAsiaNews/idINIndia-37514520090118 |title=Tamil Tiger head may have fled Sri Lanka - army chief | South Asia | Reuters |publisher=In.reuters.com |date=2009-01-18 |accessdate=2009-05-17}}</ref> அவர் [[மலேசியா|மலேசியா]]விற்கோ அல்லது [[தாய்லாந்து|தாய்லாந்திற்கோ]] தப்பி இருக்கலாம் என்பதால் மலேசிய போலீஸ் படை எச்சரிக்கையாக நிறுத்தப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.<ref>{{cite web|url=http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?sectionName=Cricket&id=1402909b-6e90-41a2-bef7-f685c8becfb9&&Headline=Malaysia+sounds+alert+for+LTTE+chief+Prabhakaran |title=Malaysia sounds alert for LTTE chief Prabhakaran |publisher=Hindustan Times |date=2009-01-22 |accessdate=2009-05-17}}</ref>



===இறப்பு===
இலங்கை இராணுவம் எல்டிடிஈ மாகாணத்திற்குள் நுழைந்த போது, பிரபாகரனும் அவரின் முக்கிய தலைவர்களும் முல்லைத்தீவிற்குள் பின்வாங்கினார்கள், அதுவே போராளிகளின் வலிமையான இறுதிப்பிடியாக இருந்தது. போராட்ட களத்தில் இருந்து ஓர் ஆம்புலன்சில் தப்பிக்க முயன்ற போது, பிரபாகரன் ராக்கெட் குண்டுவீச்சில் கொல்லப்பட்டதாகவும், அவர் உடல் மோசமாக எரிந்துவிட்டதாகவும் ஆரம்ப தகவல்கள் வெளியாயின. ஆனால் அதற்கு பின்னர் போராளிகளின் ஆதரவு தளமான [[தமிழ்நெட்|தமிழ்நெட்]] அவர் உயிருடன் இருப்பதாக அறிவித்தது, அவர் உடல் தேசிய தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. பிந்தைய செய்திகளின்படி, முல்லைத்தீவுக்கு அருகில் வெள்ளைமுல்லிவாய்க்காலின் வடக்கில் நந்திகடல் லக்கூனுக்கு அருகில் அவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. பிரபாகரனின் முன்னாள் நம்பிக்கைக்குரியவரான [[விநாயகமூர்த்தி முரளிதரன்|கருணா அம்மனாலும்]], <ref name="karuna">{{cite web|url=http://news.yahoo.com/s/nm/20090519/india_nm/india397203_6|title=Sri Lanka confirms Prabhakaran is dead}}</ref> தயா மாஸ்டராலும் மற்றும் அவர் மகனின் மரபணு மூலமான டிஎன்ஏ பரிசோதனையாலும் அந்த உடல் அடையாளம் காணப்பட்டது.<ref name="DNA"> {{cite web|url=http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6313072.ece|title=DNA tests on body of Prabhakaran, Sri Lankan rebel leader}}</ref> தலையில் ஏற்பட்ட ஒரு பயங்கர காயத்தால் அவர் மரணம் அடைந்திருக்க கூடும் அல்லது அவர் மிக அருகாமையில் இருந்து சுடப்பட்டிருக்க வேண்டும் என்று சுற்றுவட்டார ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் தூக்கிலிடப்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்களும் உள்ளன.<ref name="cremated">{{cite web|url=http://www.breitbart.com/article.php?id=D98AFLI00|title=Sri Lankan rebel leader's body cremated, military spokesman says}}</ref>அவர் உடல் ஒரு லகூனில் கண்டறியப்பட்டதாக இலங்கை இராணுவம் கூறுகிறது. இலங்கை இராணுவத்தால் கூறப்படும் பிரபாகரனின் உடல் தூக்குபடுக்கையில் கிடத்தி வைக்கப்பட்டு, வீரர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களால் சூழப்பட்ட நிலையில் புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் வெளியிடப்பட்டது. பிரபாகரனின் சீருடையில் இருந்த அந்த சடலம், பிரபாகரனின் தோற்றத்தையும் கொண்டிருந்தது, அவர் தலையில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில், அதன் நெற்றியில் நிறைய தோட்டாக்களின் காயங்கள் இருந்தன. 



<gallery>
</gallery>



==கிரிமினல் குற்றச்சாட்டுகள்==
பயங்கரவாதம், படுகொலை, திட்டமிட்ட கிரைம் மற்றும் பயங்கரவாத சதி ஆகியவற்றிற்காக 1991 முதல் வேலுபிள்ளை பிரபாகரன் [[இன்டர்போல்|இன்டர்போலினால்]] தேடப்பட்டு வருகிறார்.<ref name="Interpol">{{cite web|url=http://www.interpol.int/public/Data/Wanted/Notices/Data/1994/54/1994_9054.asp|work = [[Interpol]] | date = [[2006-10-04]]|accessdate+2006-10-06|title=Wanted: VELUPILLAI, Prabakaran }}</ref> 1991 மே மாதம், முன்னாள் இந்திய பிரதம மந்திரி [[ராஜீவ் காந்தி|ராஜீவ்காந்தி]]யைப் படுகொலை செய்தமைக்காக இந்தியாவின் சென்னை உயர்நீதி மன்றத்தால் அவருக்கு மரண தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது, <ref>{{cite web|url=http://brcslproject.gn.apc.org/slmonitor/january98/raji.html |title=Sri Lanka Monitor |publisher=Brcslproject.gn.apc.org |date= |accessdate=2009-05-17}}</ref>  மேலும் 1996 [[சென்ட்ரல் பேங்க் குண்டுவெடிப்பு|சென்ட்ரல் பேங்க் குண்டுவெடிப்பில்]] தொடர்புபட்டதற்காக அவரை கைது செய்வதற்கான ஆணையையும் 2002ல் நீதிபதி அம்பேபிட்டியா அளித்தார்.<ref>{{cite web|url=http://www.spur.asn.au/LTTE_Atrocities_Central_Bank_in_Colombo.htm |title=LTTE Tamil Tiger Terrorists Bomb Central Bank in Sri Lanka killing 58 Civilians |publisher=Spur.asn.au |date=1997-10-17 |accessdate=2009-05-17}}</ref> அந்த நீதிபதி அவரை 51 விஷயங்களில் குற்றவாளியாக தீர்ப்பளித்து, அவருக்கு 200 ஆண்டு கால சிறை தண்டனை விதித்தார். 



==சொந்த வாழ்க்கை==
[[File:Prabhakaran family.jpg|250px|thumb|வலப்புறமிருந்து, வேலுபிள்ளை பிரபாகரன், அவர் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் சார்லஸ் ஆண்டனி மற்றும் மதிவதனியின் அடையாளம் தெரியாத இரண்டு உறவினர்கள்[76]]]
1984, அக்டோபர் 1ல் மதிவதனி ஈராம்புவை அவர் மணந்து கொண்டார் என்பது பரவலாக அறியப்பட்ட போதினும், பிரபாகரனின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவரின் நேர்காணல்கள் அல்லது ஊடக ஆதாரங்களின் மேற்கோள்களில் இருந்து மிகச் சிறிதளவே அறியப்படுகிறது. <ref name="health"></ref>{{Failed verification|date=July 2009}} அவர்களுக்கு ஒரு மகள் (துவாரகா) மற்றும் இரண்டு மகன்கள் (சார்லஸ் ஆண்டனி மற்றும் பாலசந்திரன்) இருந்தனர்.  அவர்களைப் பற்றி எதுவும் தெரியவில்லை, ஆனால் அவர்கள் இலங்கையில் இல்லை என்று பரவலாக நம்பப்படுகிறது.<ref name="health"></ref>{{Failed verification|date=July 2009}} எவ்வாறிருப்பினும், சார்லஸ் ஆண்டனியின் சடலத்தை மீட்டிருப்பதாக இலங்கை இராணுவ வட்டாரங்கள் அறிவித்தன. <ref name="Charles Anthony Killed">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/Prabhakarans-son-killed-Sri-Lanka-military/articleshow/4545092.cms|title=Prabhakaran's son killed: Sri Lanka military}}</ref> இலங்கை இராணுவம் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் 13, மனைவி மதிவதனி, அவர் மகள் துவாரகா ஆகியோரின் உடல்களையும் கண்டறிந்ததாக இலங்கையின் ஒரு மூத்த அமைச்சர் பின்னர் அறிவித்தார்.<ref name="familydead">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/videoshow/4556609.cms|title=Prabhakaran's family found dead}}</ref> எவ்வாறிருப்பினும், பிரபாகரன் குடும்பத்தின் மீத உறுப்பினர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை என்று இராணுவத்தின் செய்தி தொடர்பாளர் உதய நானாயக்காரா பின்னர் குறிப்பிட்டார். "அவர்களின் உடல்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை, அவர்களைப் பற்றிய விபரமும் எங்களுக்கு கிடைக்கவில்லை," என்று அவர் தெரிவித்தார்.<ref>{{cite web|url=http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=49660|title=Prabhakaran’s body cremated (Daily Mirror)}}</ref> இதுவரை, பிரபாகரனின் குடும்பம் முழுவதும் அழிக்கப்பட்டு விட்டதாக எண்ணப்படுகிறது; அறிவிக்கப்பட்ட வகையில், மதிவதனி, துவாரகா மற்றும் பாலசந்திரன் ஆகியோரின் உடல்கள் பிரபாகரன் உடல் கண்டறியப்பட்ட இடத்திலிருந்து சுமார் 600 மீட்டர் தூரத்தில் புதர்களுக்கு நடுவில் கண்டறியப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. <ref>{{cite web|url=http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=49739|title=Last days of Thiruvenkadam Veluppillai Prabhakaran (Daily Mirror)}}</ref>


தங்களின் 70வது வயதில் இருக்கும், வேலுபிள்ளை பிரபாகரனின் பெற்றோர்களான திருவேங்கடம் வேலுபிள்ளையும், பார்வதியும் வவுனியா நகருக்கு அருகில் இருந்த இடம்பெயர்த்தப்பட்ட மக்களுக்கான மேனிக் பண்ணை முகாமில் கண்டறியப்பட்டார்கள். அவர்கள் விசாரிக்கப்பட மாட்டார்கள், காயப்படுத்தப்பட மாட்டார்கள் அல்லது கடுமையாக நடத்தப்பட மாட்டார்கள் என்று இலங்கை இராணுவமும், அரசாங்கமும் பொது உத்தரவாதங்களை அளித்தன.<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/8072081.stm|title=Tamil Tiger chief's parents found (BBC News)}}</ref>



===சார்லஸ் ஆண்டனி===
சார்லஸ் ஆண்டனி தான் வேலுபிள்ளை பிரபாகரனின் முதல் குழந்தையாவார். [[2008–2009 இலங்கை இராணுவம் வடக்கத்திய தாக்குதல் |2008-2009 இலங்கை இராணுவ வடக்கு தாக்குதலின்]] முதல் கட்டத்தில் சார்லஸை கொல்லப்பட்டு விட்டதாக 2009 மே மாதத்தில், இலங்கையின் [[பாதுகாப்பு அமைச்சகம் (இலங்கை)|பாதுகாப்புத்துறை அமைச்சகம்]] அறிவித்தது. பிரபாகரனின் நெருங்கிய நண்பரான [[சார்லஸ் லூகாஸ் ஆண்டனி|சார்லஸ் லூகாஸ் ஆண்டனி]]யின் நினைவாக சார்லஸிற்கு பெயரிடப்பட்டது.



===அவர் பெயர் உச்சரிப்பு===
[[இலத்தீன் எழுத்துக்கள்|இலத்தீன் மொழி]]யில் அவர் பெயர் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படுகிறது, இது முதல் பார்வையில் மிகவும் வித்தியாசமாக இருக்கும். [[கொல்கத்தா ரோமனைசேசனில் தேசிய நூலகம்|தேசிய நூலக சொற்பெயர்ப்பு திட்டத்தின்படி]] [[எழுத்து பெயர்ப்பு|சொற்பெயர்ப்பு]] செய்வது தான் மிக நேர்வழியாகும். தமிழில் வேலுபிள்ளை பிரபாகரன் என்று அளிக்கப்படும் அந்த பெயர், Vēluppillai Pirapākara<u>n</u> என்று உச்சரிக்கப்படுகிறது. இந்த சொற்பெயர்ப்பிற்கு பரிச்சயமில்லாத மக்கள் இந்த பெயரை தவறாக உச்சரிக்கிறார்கள், ஆகவே தான் கல்வியாளர்களைத் தவிர, மற்றவர்கள் மத்தியில் பெரும்பாலும் போனட்டிக் வாசிப்பு ([[ஒலிபெயர்ப்பு (மொழியியல்)|ஒலிபெயர்ப்பு]]) பொதுவாக காணப்படுகிறது. [ʋeːlʊppɨllaəppɨraːbaharan] என்பது பெயரின் உச்சரிப்பாகும். இது ஆங்கிலத்தில் "Pirapakaran", "Pirapaharan" அல்லது "Pirabaharan" என்று எழுத்து மாற்றத்துடன் பயன்படுத்தப்படுகிறது. மூன்றாவது வழி என்னவென்றால், பெயரின் மூலமான [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]]த்தில் இருந்து பெயர் [[வேர்சொல்லாக்கம்|வரலாறை கண்டறி்ந்து]], பின்னர் தேசிய நூலக சொற்பெயர்ப்பு விதிகளைப் பயன்படுத்துவதாகும். இது பெரும்பாலும் மேற்கத்திய ஊடகங்களில் பயன்படுத்தப்படும் "Prabhakaran" என்ற வகையை அளிக்கிறது.      



==குறிப்புகள்==
<div class="references-small"> 

*{{cnote|Political situation|Sri Lanka’s nation-building program became intimately linked with a [[Sinhalisation]] of the state directive.<ref name=SB >{{cite journal | coauthors = Sunil Bastian | title = The Failure of State Formation, Identity Conflict and Civil Society Responses - The Case of Sri Lanka | volume = | pages = | publisher = Brad.edu | date=  1999 | url = http://www.brad.ac.uk/acad/confres/assets/CCR2.pdf | accessdate = 2006-04-16 }}</ref> One form of extremism and violence led to the other and by 1970's there were some minority radical Tamil youth who were legitimizing [[terrorist]] attacks against the state as a response to alleged [[state violence]].<ref>{{cite web |url= http://www.paradisepoisoned.com/PDFs/Preview21.pdf|title= How it Came to This – Learning from Sri Lanka’s Civil Wars By Professor John Richardson|accessdate=2006-03-30 |work=paradisepoisoned.com}}</ref> }}
*{{cnote|Sri Lankan Tamil Nationalism|Sri Lankan Tamil nationalism is expressed in the political desire by some to form an independent nation state called [[Tamil Eelam]] for the [[minority]] [[Sri Lankan Tamil]] people.  Both moderate [[TULF]] and [[TNA]] and militant groups such as [[LTTE]], [[EPRLF]], [[PLOTE]], [[EPDP]] etc have expressed such political goals either in the past or now.<ref>''Sri Lankan Tamil Nationalism: Its Origins and Development in the Nineteenth and Twentieth Centuries'', By Professor A. Jeyaratnam Wilson
Publisher: [[University of British Columbia]] Press (March 2000) (ISBN 1-850-65338-0)</ref> }}
</div>

பிரபாகரன் பிள்ளைமார் சமூகத்தை சார்ந்தவரில்லை என்பதையும் பதிவு செய்யலாம், இதனால் தவறாக நினைத்துக்கொள்பவர்கள் திருத்திக்கொள்ள வாய்ப்புண்டு...

கடந்த ஆண்டு இறுதியில் மீனவ சொந்தங்கள் ஏற்பாடு செய்து இருந்த ஒரு கூட்டத்தில் திருமாவளவன் அழைக்க பட்டு இருந்தார் அந்த மேடையில் அவர் பேசும் போது பிரபாகரன் அவர்களின் பெயருக்கு முன்னால் வேலு பிள்ளை என்று வருவதால் பலரும் அவரை பிள்ளைமார் சமுகத்தை சார்ந்தவர் என்று நினைத்து கொள்கின்றார்கள் , ஆனால் அவர் கரையாளர் என்ற மீனவ சமுகத்தை சார்ந்தவர் என்று ஒரு கருத்தை பதிவு செய்தார் . இதில் உள்ளபடியே பார்த்தல் சாதி பிரியர்கள் பிரபாகரன் ஒரு மீனவரா? என வேதனை பட்டு இருக்கலாம் . ஆனால் தமிழ்வின் இணயதளம் வேதனைபடுவத்தின் நோக்கம் நமக்கு இன்னும் புரியாமலே இருக்கிறது .கடந்த ஆண்டு இறுதியில் மீனவ சொந்தங்கள் ஏற்பாடு செய்து இருந்த ஒரு கூட்டத்தில் திருமாவளவன் அழைக்க பட்டு இருந்தார் அந்த மேடையில் அவர் பேசும் போது பிரபாகரன் அவர்களின் பெயருக்கு முன்னால் வேலு பிள்ளை என்று வருவதால் பலரும் அவரை பிள்ளைமார் சமுகத்தை சார்ந்தவர் என்று நினைத்து கொள்கின்றார்கள் , ஆனால் அவர் கரையாளர் என்ற மீனவ சமுகத்தை சார்ந்தவர் என்று ஒரு கருத்தை பதிவு செய்தார் . இதில் உள்ளபடியே பார்த்தல் சாதி பிரியர்கள் பிரபாகரன் ஒரு மீனவரா? என வேதனை பட்டு இருக்கலாம் . ஆனால் தமிழ்வின் இணயதளம் வேதனைபடுவத்தின் நோக்கம் நமக்கு இன்னும் புரியாமலே இருக்கிறது .

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி