பேச்சு:வில்லை (ஒளியியல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இதன் தலைப்பை வில்லை (ஒளியியல்) என்று மாற்றலாமா? மயூரநாதன் 20:35, 30 ஜூலை 2008 (UTC)

தமிழ்நாட்டில் ஆடி (ஒளியியல்) என்ற சொல் பாடநூல்களிலும் பொதுவிலும் புழக்கத்தில் உள்ளது. வில்லை என்பது பொதுவான பெயராக இருப்பதால் இதை முதன்மையாக்கலாமா --ரவி 20:45, 30 ஜூலை 2008 (UTC)

ஆடி என்பது mirror என்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது, இதுவே இலங்கையிலும் புழங்குகிறது. வில்லை என்பது Lense. வில்லை என்பது வேறு பொருள்களையும் கொடுக்கும், எடுத்துக்காட்டாக மருந்து வில்லைகள். இதனால் தான் ஒளியியல் என்பதையும் சேர்த்து வேறுபடுத்தலாமா என்று கேட்டேன். மயூரநாதன் 20:55, 30 ஜூலை 2008 (UTC)

தமிழ்நாடு ஒன்பதாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் concave, convex mirrorகளை குழி, குவி ஆடிகள் என்றும் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் concave, convex lensகளை குழி லென்ஸ், குவி லென்ஸ் என்றும் "தமிழாக்கி" இருக்கிறார்கள் :( வில்லை என்ற சொல்லையே பயன்படுத்துவோம். குழப்பத்துக்கு வருந்துகிறேன்--ரவி 00:58, 31 ஜூலை 2008 (UTC)

தமிழ் பாட நூல்களில் சிலர் செய்து வரும் "திருப்பங்கள்" மிக வருந்தத்தக்கது. முக்கோணவியல் என்பதைக்கூட திரிகோணமிதி என்று எழுதியிருக்கிறார்கள். தமிழுக்கு எதிராக இயங்குபவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்! வில்லை என்பது இரு பொருளில் பொருந்துவது. ஒளியை "வளைப்பதாலும்", ஒளி ஊடுருவும் பொருளால் செய்யப்பட்ட (கண்ணாடி, நெகிழி போன்ற பொருளால் செய்யப்பட்ட) அதன் பரப்பும் வளைந்து இருப்பதாலும் வில்-->வில்லை என்று பெயர் கொள்ளும். வட்டமான துண்டு, சில்லு என்றும் பொருள் படும். அம்பு எய்யும் வில்லும், வளைவதால்தான் வில் என்று பெயர். வானவில் என்று கூறுவதும் வளைந்து இருப்பதால். வானவில்லுக்குத் திருவில் என்றும் ஒரு பொருள் உண்டு (அழகாக இருப்பதால்). அம்பு எய்து வெளியேற்றப் பயன்படும் வில் போல் ஒரு பொருளை ஒரு விலைக்கு வெளி ஏகச்செய்வது வில்-->விற்றல். வாங்கல் என்பது பெறுதல், ஒன்றைக்கொடுத்து பெற்றுக்கொள்ளுதல். விற்றல் என்பது ஒன்றை பெற்றுக்கொண்டு விட்டு வெளி ஏகச்செய்தல் (கொடுத்து விடல்). இங்கே ஒளியை விலகச்செய்து வெளியேற்றல் என்னும் பொருளும் கொள்ளும். --செல்வா 02:44, 31 ஜூலை 2008 (UTC)

செல்வா, அருமையான விளக்கம். மயூரனாதன், இது இலங்கை பாடநூல்களில் உள்ள சொல்லா?--ரவி 10:21, 31 ஜூலை 2008 (UTC)

இலங்கைப் பாடநூல்களில் குவி வில்லை, குழி வில்லை, குவி ஆடி, குழி ஆடி ஆகிய சொற்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன. மயூரநாதன் 11:01, 31 ஜூலை 2008 (UTC)
குவிவில்லை, குழிவில்லை, குவிவாடி, குழிவாடி.--Kanags \பேச்சு 12:28, 31 ஜூலை 2008 (UTC)

நன்றி மயூரநாதன், கனகு --ரவி 13:33, 31 ஜூலை 2008 (UTC)

வில் என்பது விலகுதல் என்னும் அடிப்பொருளிலேயே வளைதல் (நேராக செல்லாமல், நேர்ப்பாதையில் இருந்து விலகுதல் என்னும் பொருள் வழி வளைதல் என்னும் பொருள் கொள்கின்றது.). கொடு, கோடு என்னும் சொற்களும் வளைதல் (நேர்த்திசையில் இருந்து மடங்குதல், வளைதல்) என்னும் பொருள் கொண்டது. யானையின் பல், தந்தம் அல்லது எயிறு என்பதையும் கோடு என்பது வளைந்து இருப்பதால்தான். மலைக்கும் கோடு என்று பெயர் - மலைமுகட்டின் வடிவத்தால். கொடுங்கோல் என்பது நேர்மையில் இருந்து விலகி இருப்பதால். கொடுக்கு, கொடுவாள், கொடி (செடிகொடி) என்னும் சொற்களையும் நோக்குங்கள். கனகு குறிப்பிட்டுள்ள குழிவாடி, குவிவாடி என்பன குழுவு +ஆடி, குவிவு + ஆடி என்று சேர்வதால் எழும் வடிவங்கள். இவற்றை குழியாடி, குவியாடி என்றும் சுருக்கமாகச் சொல்லலாம். --செல்வா 14:18, 31 ஜூலை 2008 (UTC)

மயூரநாதன் துவக்கத்தில் எழுப்பிய கேள்விக்கு மறுமொழி கிடைத்ததாகத் தெரியவில்லை..அவரது கூற்றுப்படி தெளிவாக வில்லை (ஒளியியல்) என மாற்றப் பரிகிறேன். மேலும் வில்லை (கணினியியல்) பக்கம் இருப்பதால் ஒரு பக்கவழி நெறிப்படுத்தலும் தேவை. --மணியன் (பேச்சு) 03:40, 15 சனவரி 2013 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று--சோடாபாட்டில்உரையாடுக 06:21, 15 சனவரி 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வில்லை_(ஒளியியல்)&oldid=2505314" இலிருந்து மீள்விக்கப்பட்டது