பேச்சு:வினவல் அமைப்பு மொழி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நன்றி நற்கீரன் உங்களின் "கட்டமைப்புள்ள வினவு மொழி" என்னும் தமிழாக்கம் மிகவும் பிடித்துள்ளது. இவ்வாறான கட்டுரைகள் எனக்கு ஆர்வமூட்டுகின்றது. --உமாபதி \பேச்சு 07:36, 15 மார்ச் 2008 (UTC)

Query - வினவல் நன்றாக உள்ளது. இதை அறியாமல் குவெரியை விசாரணை என்று இங்கு சிறுபிள்ளைத்தனமாக மொழிப்பெயர்த்துள்ளேன் :-)) వినోద్  வினோத் 07:59, 15 மார்ச் 2008 (UTC)
கவி மொழி?? இதனை விளக்க முடியுமா?--Kanags \பேச்சு 08:48, 15 மார்ச் 2008 (UTC)


[தொடர்புசால் தரவுதளக் கட்டமைவுகள் - கோட்பாடுகளும், பயன்படுத்து முறைகளும்]

பராட்டுக்கள் எனக்கு அல்ல. பயனர்:வேணுகோபாலனை சேர வேண்டும். அவருடைய தமிழாக்கத்தையும் குறிப்புகளையும் வைத்தே இந்த சிறு கட்டுரைகளை ஆக்கினேன்.

கனக்ஸ் கவி மொழி என்பது ட்டமைப்புள்ள வினவு மொழி என்பதன் சுருக்கம். பொருத்தமில்லை என்றால் நீக்கிவிடலாம். --Natkeeran 15:25, 15 மார்ச் 2008 (UTC)

நன்றாக இருக்கின்றது, ஆனால். க.வி. மொழி என்று எழுதுவது நல்ல முறையாக இருக்கும் என்பது என் தனிக்கருத்து. ஆங்கிலத்தில் "தலைப்பு" எழுத்துக்கள் இருப்பதால், அவர்களின் பயன்பாடு சற்று வேறாக உணரப்படும். தமிழில் எழுத்துக்களைப் பிரித்தோ அல்லது, இடையே புள்ளிகள் இட்டோ எழுதுவது நலமாக இருக்கும் என நினைக்கிறேன்.--செல்வா 15:48, 15 மார்ச் 2008 (UTC)

சீக்வல் (க. வி. மொழி) என்ற தலைப்புக்கு நகர்த்தலாம்--ரவி 16:22, 15 மார்ச் 2008 (UTC)

இதன் தலைப்பையே கட்டமைப்புள்ள வினவு மொழி என மாற்ற வேண்டுகிறேன். ஆங்கில Acronymன் உச்சரிப்பையும் தமிழாக்கம் என இரண்டையும் தலைப்பில் வைத்திருத்தல் சரியன்று. சீக்வெல் என்பதை இங்கு திசைமாற்றியாக வைத்துக்கொள்ளலாம் వినోద్  வினோத் 16:42, 15 மார்ச் 2008 (UTC)
கருத்து விளங்குகிறது. பிறர் என்ன சொல்கிறார்கள் என்று பாப்போம். --Natkeeran 16:44, 15 மார்ச் 2008 (UTC)
க.வி. மொழி என்பது இங்கு அடைப்புக்குள் தேவை தானா? சீக்வல் என அப்படியே இருக்கட்டுமே? மற்றும் சீக்வல், சீக்குவெல் எது பொருத்தமாக உள்ளது?--Kanags \பேச்சு 01:21, 16 மார்ச் 2008 (UTC)

http://en.wikipedia.org/wiki/Sequel_(disambiguation) பக்கம் இருக்கிறது. ஆனால், அதில் உள்ள பெரும்பாலான கட்டுரைகளை உடனடியாகத் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதும் வாய்ப்பு குறைவு என்பதால் அடைப்புக்குறி விளக்கம் இல்லாமலேயே எழுதலாம்--ரவி 11:25, 16 மார்ச் 2008 (UTC)

ஆங்கிலத்தில் இது en:SQL என்ற பக்கத்தையே சுட்டி நிற்கிறது. SQL அதிகாரபூர்வமாக எஸ்.கியூ.எல் என்றே அழைக்கப்படுகிறது.--Kanags \பேச்சு 11:52, 16 மார்ச் 2008 (UTC)
இது பொதுவாக சீக்வல் என்றவாறே உச்சரிக்கபடுகின்றது. பார்க்க சைபேஸ் ஏற்கனவே இருந்த சீக்குவல் சேர்வரைத்தான் பின்னர் எஸ்.கியூ.எல் என்று மாற்றினார்கள் என்றாலும் இன்றும் சீக்வல் என்றவாறுதான் அழைக்கின்றார்கள். நான் 2006 ஆம் ஆண்டு கொழும்பில் மைக்ரோசாப்ட் டெக்நெட் இல் இவ்வாறுதான் உச்சரித்தார்கள். எஸ்.கியூ.எல் இற்கு வழிமாற்றுப்பக்கம் அமைக்கலாம். --உமாபதி \பேச்சு 18:19, 16 மார்ச் 2008 (UTC)
எங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் இதை எஸ்.க்யூ.எல் என்ற வாறே உச்சரிக்கின்றோம் వినోద్  வினோத் 18:31, 16 மார்ச் 2008 (UTC)


SQL என்பது Structured Query Languages என்பதன் சுருக்கம் இதைத் தமிழில் "வினவல் அமைப்பு மொழி" என்று பரவலாகக் கூறுவார்கள். இதுவே பாடநூல்களிலும் உள்ளது. நான் கணினியில் பட்டம் பெற்றுள்ளேன் மற்றும் எனது பாடநூல்களில் குறிப்பிட்டுள்ளது "வினவல் அமைப்பு மொழி" மேலும் "கட்டமைப்புள்ள வினவு மொழி" என்பது வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தது பேலாகும். இது மாணவர்களுக்கு குழப்பத்தை விளைவிக்கவும் செல்லாம். நாம் ஏன் இந்த கட்டுரைக்கு "வினவல் அமைப்பு மொழி" என்றே பெயரிடக்கூடாது. - மகேஸ்வரி


கலைச்சொற்கள்[தொகு]

  • தரவு - data
  • ஏரணம் - logic
  • Predicate logic
  • அட்டவணை - table
  • நிரல் - column
  • வரிசை - row
  • Views
  • வினவல் - query
  • clause
  • expression
  • Predicates
  • Statements
  • SELECT - தேர்தெடு
  • FROM - இருந்து
  • WHERE - எங்கே
  • ORDER BY - ஓழுங்கு படுத்து
  • GROUP BY - ஒன்று படுத்து ?
  • HAVING
  • BETWEEN
  • INSERT - இடு
  • UPDATE - இற்றைப்படுத்து
  • DELETE - அழி
  • transaction - பரிவார்த்தனை
  • procedure
  • INNER JOIN -

தரவுத்தளம் தலைப்புகள் பட்டியல்[தொகு]

  • Database models
  • Database normalization
  • Database storage
  • Distributed DBMS
  • Transaction processing

கருத்துருக்கள்[தொகு]

  • Objects Relation (Table)
  • View
  • Transaction
  • Log
  • Trigger
  • Index
  • Stored procedure
  • Cursor
  • Partition

கட்டுரைகளை ஒன்றிணைத்தல்[தொகு]

இந்த பக்கத்திற்கும் கட்டமைப்புள்ள வினவு மொழி என்ற தலைப்பில் உள்ள இருக்கும் பக்கமும் ஒன்றுதானே? இந்த இரு பக்கத்தையும் ஏன் இணைக்கக் கூடாது? -ராஜா