பேச்சு:விண்மீன் பேரடை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விண்மீன் பேரடை என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
விண்மீன் பேரடை என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


"அண்டம்" galaxy என்பதைக் குறிக்கும் எனவும் "பேரண்டம்" universeஐக் குறிக்கும் எனவும் சரி என தோன்றுகிறது. எனவே இக்கட்டுரையின் தலைப்பு "அண்டம்" என மாற்றுவது சரி என தோன்றுகிறது.

பெரும்பாலுமான தமிழ் அறிவியல் நூல்களில் galaxyக்கு "அண்டம்" என்பதாகவே குறிப்பிட்டுள்ளன.

-ராஜ் 29 - 8 - 08

விண்மீன் மண்டலம்[தொகு]

--Natkeeran 21:38, 4 ஜனவரி 2009 (UTC)

விண்மீன்பேரடை எனலாமா[தொகு]

விண்மீன் என்று கூறி விட்டு, நாள்மீன் என்று இங்கு குறிப்பிடுவது சற்றுக் குளப்புகிறது. ஒத்திசைவு தேவை. நன்றி. --Natkeeran 00:31, 16 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

விண்மீன் பேரடை என்று மாற்றலாம் தவறில்லை. அப்படி விரும்பினால் அப்படியே மாற்றிவிடுங்கள். --செல்வா 02:47, 17 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]
இங்கு விண்மீன் திரள் எனவும் கொடுக்கப்பட்டுள்ளது, அப்படியாயின் Star clusterஐ எவ்வாறு அழைப்பது?--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 03:23, 13 சனவரி 2013 (UTC)[பதிலளி]
"Star cluster" ஐ விண்மீன் தூள் எனலாமா? --செல்வா (பேச்சு) 16:24, 13 சனவரி 2013 (UTC)[பதிலளி]
தூள் என்பது துகள் எனக் கருதப்பட அதன் பொருள் மாறிவிடுமோ என்று ஐயமாக உள்ளது. "cluster" ஐ கொத்து அல்லது குவியல் அல்லது திரள் என்றுதானே அழைப்பது? எனது கருத்தின்படி, விண்மீன் திரள் என்பதே Star clusterக்குப் பொருத்தமானது, ஏனெனில் Galaxyஐப் பொறுத்தளவில் அங்கு விண்மீன் மட்டும் இருக்கவில்லை அல்லவா? வளிமங்கள், தூசுகள், விண்மீன் உருவாகும் பகுதிகள், கருங்குழிகள் எல்லாம் அமைந்துள்ள படியால் பேரடை என்று அழைப்பதே சாலச்சிறந்தது. பேரடையிலேயே சில இடங்களில் திரள் திரளாக / கொத்து கொத்தாக விண்மீன்கள் நெருக்கமாகச் சேர்ந்து (Star cluster ஆகக்) காணப்படுகின்றன. அவற்றை விண்மீன் திரள் என்று கூறுவதே மிகவும் பொருத்தம் என்பது எனது கருத்து. அல்லது விண்மீன் குவியல் எனலாமா?--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 19:28, 13 சனவரி 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விண்மீன்_பேரடை&oldid=2291073" இலிருந்து மீள்விக்கப்பட்டது