பேச்சு:விடுதலைக் கட்டுநர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயல் என்பது ஒரு படிப்புத்துறையையே பெரும்பாலும் குறிக்கும். இங்கு நீங்கள் ஏன் அப்படி பெயரிட்டீர்கள் என்று ஓரளவு புரிந்து கொண்டாலும், எவ்வளுவு பொருத்தம் என்று தெரியவில்லை. தலைப்பு எவ்வளவு பொருத்தம் என்று பிற பயனர்களும் கருத்து சொன்னால் நன்றாக இருக்கும். --Natkeeran 23:31, 2 மே 2007 (UTC)[பதிலளி]

Free Mason என்பதற்கு இலவசக் கொத்தனார் என மொழி பெயர்த்துக் கொண்டால் (இதுவே சரியாகப் படவில்லைதான்) Free Masonry என்பதற்கு என்ன சொல்ல வேண்டும் எனத் தெரியாமல்தான் இயல் என சேர்த்தேன். நான் மணல்பெட்டியில் முயல்வதாகத்தான் நினைத்துக் கொண்டேன். ஆனால் அது தவறுதலாக பதிப்பித்து விட்டேன். அதற்கு மன்னிக்கவும். இதுதான் என் முதல் முயற்சி. ஆகவே சட்டதிட்டங்களை சரிவர பின்பற்றவில்லை என்றால் சுட்டிக் காண்பிக்க வேண்டுகிறேன். திருத்திக் கொள்வேன். தங்கள் திருத்தங்களுக்கு நன்றி நக்கீரன். --இலவசக்கொத்தனார் 23:39, 2 மே 2007 (UTC)[பதிலளி]

அப்படி இறுகிய சட்ட திட்டங்கள் என்று பெரிதாக இல்லை. Free Masonary என்ற அமைப்பின் இயல்பை இயல் என்று சேர்க்கும் பொழுது அவ்வளவு பொருத்தமாக இருக்கமா என்று தெரியவில்லை. ஆனால், ஒரு நல்ல பரிந்துரை கிடைக்கும் மட்டும் பிரதான ஆக்கரின் தலைப்பிலேயே கட்டுரை இருக்கும். ஒரு வளர்ந்த அல்லது இது போன்ற ஓரளவு பூரணமான கட்டுரையில் முக்கிய அல்லது பாரிய மாற்றங்கள் கலந்துரையாடியே செய்யதல் வழமை. --Natkeeran 23:51, 2 மே 2007 (UTC)[பதிலளி]

இலவச கொத்தனார் எதிர் விடுதலைக் கொத்தனார்[தொகு]

இங்கு free என்பது விடுதலை என்ற அர்தத்திலா அல்லது இலவச என்ற அர்த்ததிலா இங்கு பயன்படுத்தப்படுகிறது.--டெரன்ஸ் \பேச்சு 03:17, 3 மே 2007 (UTC)[பதிலளி]


விடுதலைக் கட்டுநர் என்பது பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. "இலவச" என்ற பயன்பாடு சரியன்று. -- Sundar \பேச்சு 04:58, 3 மே 2007 (UTC)[பதிலளி]
விடுதலைக் கட்டுநர் (இரகசிய சமூகம்) --Natkeeran 13:39, 3 மே 2007 (UTC)[பதிலளி]