பேச்சு:விசையியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயக்கவியல் எதிர் விசையியல் குழப்பம்[தொகு]

Mechanics என்பதற்கு இயக்கவியல், விசையியல் என்ற இரு சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியிலும் அவ்வாறே தரப்பட்டுள்ளது. Mechanics - விசையை அடிப்படையாகக் கொண்டது. இயக்கம் இதன் ஒரு உட்பிரிவே. நிலையியலும்(statics), Mechanics கீழ் வரும். எனவே விசையியல் என்ற சொல்லே பொருத்தமானதாகத் தோன்றுகிறது. அதன்படி இக்கட்டுரையை உருவாக்கினேன். ஏற்கனவே இருக்கும் "இயக்கவியல்" கட்டுரையை Kinematics பற்றி எழுத மாற்றிக்கொள்ளலாம். உங்கள் கருத்துக்களை தயவுகூர்ந்து தெரிவிக்கவும்.

இயக்கவியல் என்ற தலைப்பில் உள்ள குறுங்கட்டுரை mechanics என்ற மொழிபெயர்ப்பில் எழுதப்பட்டுள்ளது. இயக்கவியல் என்பது dynamics (அல்லது kinematics) என்பதற்கு பொருத்தமாக உள்ளது.--Kanags \பேச்சு 22:24, 11 ஏப்ரல் 2008 (UTC)

Mechanics, Dynamics, Kinetics என்னும் மூன்று சொற்களும் அடிக் கருத்தளவில் ஏறத்தாழ ஒரே பொருளுடையவையே. எல்லாவற்றிலும் விசை, விசையின் இயக்கப்பாடுகளும் உண்டு. Kinematics என்னும் துறையில் மட்டும் விசையைக் கருத்தில் கொள்ளாமல், நகர்ச்சியின் இயல்புகளை மட்டும் கருத்தில் கொள்ளும் துறை. கருத்தளவில், இயக்கம் என்பது விசை, நகர்ச்சி என்பவற்றோடு தம்மிடையே உள்ள தொடர்புபாடுகளையும், இணக்கப் பிணக்க முறைமைகளையும் உள்ளடக்கியது. இயக்கம் என்பது வெறும் நகர்ச்சியல்ல. விசை தொழிற்படுவது மட்டுமல்ல. பகுதிகளுக்கு இடையே உள்ள உறவாட்டத்தையும் குறிப்பது. இயங்கு என்பது வேலை செய்தல் (நடத்தல், ஒழுங்குற நடத்தல்). Quantum mechanics, statistical mechanics என்று வருமிடங்களில் எல்லாம் விசையியல் என்பது பொருந்தாது என்று நினைக்கிறேன். குவாண்ட்டம் (குவிண்டம்) முறையில் விசை என்பதன் கருத்தே சற்று விரும்பபடாதது. இயங்கியல் என்பது பொருந்தலாம். இயக்கவியல் என்று (பிறவினையாய்) வரும் பொழுது அது விசையை அல்லது ஆற்றலால் தூண்டப்பெற்று நிகழ்வது, நிகழ்விப்பது என்று தெளிவாகவே பொருள் சுட்டுவது. ஏன் இயக்கவியல் என்பது Mechanicis என்பதற்குப் பொருந்தாது என்று எனக்கு விளங்கவில்லை. Statics என்பதும்

Merriam dictionary:

Kinetics : a branch of science that deals with the effects of forces upon the motions of material bodies or with changes in a physical or chemical system

Mechanics:a branch of physical science that deals with energy and forces and their effect on bodies

Dynamics:a branch of mechanics that deals with forces and their relation primarily to the motion but sometimes also to the equilibrium of bodies

Statics:mechanics dealing with the relations of forces that produce equilibrium among material bodies

ஈடுநிலை (சமநிலை) பெற்றால் நிலையியல் (இயக்கம் ஈடுநிலையில் உள்ளது; நிலைபெற்றுள்ளது).

ஆனால், kinematics என்னும் கருத்தில், நிறை (பொருட்திணிவு), எடை, விசை இவற்றைப் பொருட்படுத்தாது நகர்ச்சியின் இயல்புகளை மட்டும் கருத்தில் கொள்வது. எது எங்கு நகருகின்றது, எப்பாதையில், எவ்வளவு விரைவாக நகருகின்றது என்று நகர்ச்சியை மட்டுமே மையமாகப் பற்றி எண்ணுவது. எதனால், எவ்விசைகளால், எவ்வாற்றலால் நகருகின்றது என்பது இத்துறையில் பொருட்பாடு அல்ல. எடுத்துக்காட்டாக ஒருவர் நடக்கும் பொழுது அவருடைய கால் முட்டி எப்படி நகருகின்றது என்பதை மட்டுமேயோ அல்லது கை முட்டியின் நகர்ச்சியை ஒப்பிடும் பொழுது கால் முட்டியின் நகர்ச்சி எவ்வாறு நகருகின்றது என்பதை அறிவது.

Kinetics: a branch of dynamics that deals with aspects of motion apart from considerations of mass and force

எனவே, mechanics என்பதை இயக்கவியல் என்றால், dynamics, kinetics என்பவற்றுக்கு என்ன சொற்கள் வழங்குவது என்ற கேள்விகள் எழுகின்றன. Dynamics என்பதற்கு விசையியல் என்றும், Kinetics என்பதற்கு விசைநகர்ச்சியியல் என்றும், Kinematics என்பதற்கு நகர்ச்சியியல், அல்லது நகர்வியல் என்றும் கூறலாம். அதாவது இயக்கம் என்பது வெறும் விசை, நகர்ச்சி இவற்றுக்கு மேலான கருத்தானது.

--செல்வா 11:05, 12 ஏப்ரல் 2008 (UTC)

ஆங்கில விக்கியில் "Statics is the branch of physics concerned with the analysis of loads (force, torque/moment) on physical systems in static equilibrium, that is, in a state where the relative positions of subsystems do not vary over time, or where components and structures are at rest under the action of external forces of equilibrium." இயக்கத்தில் உள்ள பொருட்களை விளக்குவது Statics கீழ் வருவது இல்லை. மாறாக அவை Dynamics கீழேயே வரும். Staticsம் Dynamicsம் Mechanicsன் கிளைகள். அதனாலேயே இயக்கவியல் என்ற சொல் Mechanicsற்கு சமனானதில்லை என நினைக்கிறேன்.(பிகு: குவாண்டம் விசையியல் (Quantum Mechnics) என்பது சற்று பொருள் தவறி வருவதை ஆமோதிக்கிறேன். ஆனால் மரபார்ந்த விசையியல் (Classical Mechanics) என்ற சொல் துள்ளியமான பயன்பாடாகத் தோன்றுகிறது. ) --Jaekay 16:51, 13 ஏப்ரல் 2008 (UTC)
Jaekay|, கருத்துக்கு நன்றி. விசையியல் நன்றாக உள்ளது. அதனை நாம் பயன்படுத்தலாம். ஆனால் நான் கூற வந்தது, மேலே கூறியுள்ளவாறு, இயக்கம் என்பது வெறும் நகர்ச்சியல்ல. நகராமல் விசைகள் தொழிற்பட்டு ஈடுநிலையில் இருந்தாலும் அது இயக்கம்தான். இயக்கம் என்றால் உடனே நகர்ச்சி என்று எண்ண வேண்டாம் என்று கூறவே எழுதினேன். விசைகள் இயங்கி (தொழிற்பட்டு), அசையாநிலையில் இருப்பதும் இயக்கம்தான். விசைகளின் இயக்கப்பாடு ஈடுநிலை (சமநிலை) எய்தி இருக்கும் இயக்கங்கள் நிலையியல் எனப்படும். அதாவது kinematics என்னும் துறை மட்டுமே விசைகள், எடை, நிறை ஆகிய கருத்துக்கள் தேவைப்படாமல் நகர்ச்சியை மட்டும் அலசுவது. மேலே என் கடைசி வரியில் கூறியவாறு இயக்கம் என்பது வெறும் விசை, நகர்ச்சி இவற்றுக்கு மேலான கருத்தானது.

விசையியல் என்பதைப் பயன்படுத்துவோம், ஆனால் mechanics என்று வரும் எல்லா இடங்களிலும் பயன்படுத்தவேண்டும் என்று கொள்ளவேண்டாம். Biomechanics என்பது இயக்கவியல் கோட்பாடுகளை உயிருடல் இயக்கங்களுக்குப் பொருத்தி புரிந்து கொள்வதும் பயன்படுத்துவதுமாகிய துறை. இங்கு உயிருடல் விசையியல் என்பதும், உயிருடல் இயக்கவியல் என்பதும் பொருந்தும். இயக்கவியல் என்பது mechanical என்பதற்கு ஈடாகப் பயன்படும் சொல். அதாவது புற, பரும, நகர்ச்சியடிப்படையிலான இயக்கவியல். --செல்வா 17:33, 13 ஏப்ரல் 2008 (UTC)

செல்வா, உங்கள் கருத்துக்களோடு எனக்கும் உடன்பாடு இருக்கிறது. Biomechanics, Quantum Mechanics போன்ற இடங்களில் பொருத்தமான வேறு சொற்களை பயன்படுத்தவேண்டும். --Jaekay 17:43, 13 ஏப்ரல் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விசையியல்&oldid=279028" இலிருந்து மீள்விக்கப்பட்டது