பேச்சு:வான்புலிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வான்புலிகள் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

சிறீ லங்கா என்றே பயன்படுத்த விரும்புகிறேன். ஈழத்தில் சிறீ என்ற பயன்பாடுதான் பரவலாக இருக்கிறது. இது ஒருவித வடமொழி எதிர்ப்பின் வழி வந்தது. கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். --மு.மயூரன் 07:30, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

காலங்காலமாக srilankaவை இலங்கை என்று தானே தமிழில் அழைக்கிறோம். எனவே சிறீலங்கா என்பதை காட்டிலும் இலங்கை என்றே சொல்லலாமே..இலங்கை என்ற தலைப்பில் தானே சிறப்புக்கட்டுரையும் உள்ளது.--ரவி 08:00, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

சிறீ பிரச்சனை இப்போதைக்கு வேணாங்கறீங்களா? ;-) சரி சரி இலங்கை என்றே வச்சுக்கலாம். --மு.மயூரன் 09:57, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

பொதுவாக, தமிழகத்துக்கு தெற்கே உள்ள முழுத்தீவு அல்லது நாட்டையும், அது சார்ந்த சிறு தீவுகளையும் இலங்கை என்கிறோம். தற்போதைய srilanka நாட்டின் நில எல்லையில் அதிகாரப்பூர்வ மாற்றம் வரும் வரை srilankaவை இலங்கை என்று சொல்லுவதில் தவறு இல்லை. தவிர, ஏற்கனவே ர, ற, ட பிரச்சினையை அலசிக்கொண்டிருப்பதால் இப்போதைக்கு சிறீ பிரச்சினையை ஒத்தி வைப்போம் :)--ரவி 11:23, 13 ஆகஸ்ட் 2006 (UTC)
ஏற்கனவே இலங்கையைப் பிரித்து ஒரு கோடு கீறியாகிவிட்டது. யோக சுவாமிகள் சொன்னமாதிரி இது எப்பவோ முடிந்த முடிபு. இனி ஸ்ரீலங்கா என்றாலென்ன இலங்கை என்றாலென்ன ஒன்றுதான்:). விடுதலைப் புலிகள் தமது உத்தியோகபூர்வ அறிக்கைகளில் இலங்கை என்னும் சொல் பாவிப்பதில்லை. ஸ்ரீலங்கா என்றே பயன்படுத்துகின்றனர் எனத் தெரிகின்றது.--Kanags 10:04, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

எனினும் ரவி கூறியபடி அதிகாரபூர்வ மாற்றம் வரும்வரை இலங்கை எனவே பாவிக்கலாம்.--Kanags 11:33, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

பலாலி இலங்கை இராணுவத்திற்குச் சொந்தமானதல்ல இது அப்பாவிப் பொதுமக்களின் நிலப்பரப்பாகும். --Umapathy 13:38, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

கடைசியில் அது உண்மை என்றாகிற்று![தொகு]

வான்புலிகள் தொடர்பான விக்கிபீடியாகட்டுரை இப்பொழுது ஊகங்களுக்கு அப்பாற்பட்டு உண்மை என்றாகிற்று. ;-) --மு.மயூரன் 02:18, 26 மார்ச் 2007 (UTC)

இது பற்றிய செய்தி கட்டுரையினை விக்கி செய்தியில் இட்டுள்ளேன் . யாரேனும் தொடுப்பு கொடுக்கவும்--கலாநிதி 18:21, 31 மார்ச் 2007 (UTC)

பயன்படக்கூடிய தகவல் சுட்டிக்கள்[தொகு]

--Natkeeran 05:51, 22 மே 2007 (UTC)[பதிலளி]

பிழைகள்[தொகு]

  • கட்டுநாயக்கா தாக்குதல் சூலை 24 ஆம் தேதி 2001 ஆம் நாடு நடத்தப்பட்டது. மார்ச்சு என்று குறித்துள்ளார்கள்
  • வான்புலிகளின் பொறுப்பாளர் கேணல் சங்கர் கொல்லப்பட்டது செப்டம்பர் 26 ஆம் தேதி. திசம்பர் என்று குறித்துள்ளார்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வான்புலிகள்&oldid=2093843" இலிருந்து மீள்விக்கப்பட்டது