பேச்சு:வலை 2.0

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயூரன், இணையம் என்ற சொல் Internet என்பதற்கு இணையாகப் பாவிக்கும்போது Web என்பதற்குத் துல்லியமாய் இல்லை என்று தோன்றுகிறது. வலை 2.0 என்றே சொல்லலாமே? --செல்வராஜ் 15:36, 6 ஜூலை 2006 (UTC)

உண்மையில் இது ஒரு கருத்துருவம் தொடர்பான சொல். முதலில் வலை 20 என்றே மொழிபெயர்க்க முயன்றேன். ஆனால் அது செயற்கையான ஒரு நேரடி மொழி பெயர்ப்பாயும், உயிர்ப்பில்லாமலும் இருந்தது. ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் எமக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டுமென்று இல்லைதானே. அத்தோடு web என்ற ஆங்கில சொல் தரும் உணர்வை வலை என்ற சொல் தரவில்லை. இணையம் என்பதே சரியான உணர்வை தருகிறது. அதோடு இணையப்போக்கு, இணையச்செல்நெறி, போன்றவற்றோடு தொடர்புடைய சொல் இது. web application போன்றவற்றை வலைச்செயலிகள் என்ற வாறு மொழிபெயர்க்கலாம். ஏனெனில் அங்கே தொழிநுட்ப துல்லியம் தேவைப்படுகிறது. மற்றைய விக்கிபீடியர்களின் கருத்துக்களை கேட்டு தலைப்புப்பற்றி முடிவு செய்யலாம். கருத்துக்கு நன்றி --மு.மயூரன் 18:50, 6 ஜூலை 2006 (UTC)

வலை என்பது பொருந்தும் என்று எண்ணுகிறேன். வலையேற்றல், வலைபரப்புதல் வலைப்பதிவு போன்ற பல சொல்லாட்சிகள் ஏற்கனவே பரவலாக உள்ளன. வலை என்பது வெ'ப் தானே? வலை என்பது பின்னப்படுவது, தொடர்புடைய இழைகளைக் கொண்டுள்ளது. வலை, வலையம் என்பதும் அதுவே. எனவே வலை என்பது பொருந்தும் என்றுதான் நினைக்கிறேன். --C.R.Selvakumar 19:11, 6 ஜூலை 2006 (UTC)செல்வா

இப்பெயர் தொடர்பாக எனக்கு உறுதியான கருத்தெதுவும் இல்லை. வலை சரியெனப்பட்டால், தலைப்பை மற்றிவிடலாம். என்ன நினைக்கிறீர்கள்?--மு.மயூரன் 19:28, 6 ஜூலை 2006 (UTC)

இணையம் வேறு உலகம் பரவிய வலை வேறு. இங்கு வலை என்பதே பொருந்தும் என்று நினைக்கின்றேன். இணையம் தொடர்பாடல் 32 பிற் இலிருந்து 64 பிற்க்கு மாறும்பொழுது அங்கு அதை குறிக்க இணையம் பொருத்தமாக இருக்கும். --Natkeeran 20:00, 6 ஜூலை 2006 (UTC)

தலைப்பினை வலை 2.0 என்றே மாற்றிவிடலாமா? --மு.மயூரன் 17:29, 25 ஜூலை 2006 (UTC)

கண்டிப்பாக. -- Sundar \பேச்சு 07:24, 26 ஜூலை 2006 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 02:05, 14 மே 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வலை_2.0&oldid=140610" இலிருந்து மீள்விக்கப்பட்டது