பேச்சு:வலு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Energy என்பதை ஆற்றல் என்றும், Power என்பதை ஆற்றுதிறன் (அல்லது ஆற்றுகை) என்றும் கூறுவது பொருந்தும். வலு என்னும் சொல் பொருந்தாது. ஆற்றுவன்மை, ஆற்றுமை என்றுகூட கூறலாம். Power என்பது ஆற்றல் செல்லும் விரைவு, ஆற்றல் கடக்கும் விரைவு. அதே போல வீதம் என்பதையும், வெறும் வீதம் என்று கூறாமல், காலவீதம் (காலத்தால் கடக்கும் தன்மை ) என்று கூறலாம். இது எத்தனை காலத்தில் எவ்வளவு ஆற்றல் கடக்கின்றது என்னும் கருத்து .காலவீத ஆற்றல் கடத்துமை ஆகையால் ஆற்றுமை. இதனை ஆற்றுதிறன், ஆற்றுவன்மை என்றும் கூறலாம்)--செல்வா 22:20, 13 ஆகஸ்ட் 2008 (UTC)--செல்வா 02:00, 14 ஆகஸ்ட் 2008 (UTC)

மிகவும் அடிப்படையான பாடநூல்களில் உள்ள சொற்களுக்கு புதிய சொற்கள் ஆக்க தயக்கமாக உஇருக்கிறது. திறன் தமிழக வழக்கு. வலு இலங்கை வழக்கு. குதிரைத் திறன், "உடம்பில வலு இருக்கா" போன்ற சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன. எதைத் தேர்ந்தெடுப்பது என்று தெளிவில்லை--ரவி 22:29, 13 ஆகஸ்ட் 2008 (UTC)

பாடநூல்களில் வலு என்று என்று இருந்தால் அப்படியே இருக்கட்டும். ஆனால் அது சரியான சொல் இல்லை! Strength என்பது பொருள். ஆற்றுவலு என்றாலும் பொருந்தும். --செல்வா 22:33, 13 ஆகஸ்ட் 2008 (UTC)
வலு என்றே தமிழகத்திலும் வழங்குவதாக நினைத்தே மாற்றினேன். திறன் அல்லது ஆற்றுதிறன் என்று வேண்டுமானல் மாற்றி விடலாம். --Natkeeran 23:02, 13 ஆகஸ்ட் 2008 (UTC)
ஆற்றுதிறன் என மாற்றலாமா? --செல்வா 15:29, 14 ஆகஸ்ட் 2008 (UTC)

திறன் என்று இருப்பதையே விரும்புகிறேன். ஏற்கனவே பாடநூலில் உள்ள சொல். wind power, solar power என்று பல இடங்களில் தேவைப்படும் சொல். சுருக்கமாக இருப்பது நல்லது. power என்று சொன்னாலும் என்ன power என்று தெளிவாக இல்லாமலே இருக்கிறது--ரவி 18:20, 14 ஆகஸ்ட் 2008 (UTC)

இலங்கையில் பாவிக்கப்படும் சில சொற்கள் (தகவலுக்காக மட்டும் இங்கு இடுகிறேன்):

ஆங்கிலம் இலங்கையில் தமிழகத்தில்
power வலு திறன்
efficiency திறன் ??
mass திணிவு நிறை
weight நிறை எடை

--Kanags \பேச்சு 21:28, 14 ஆகஸ்ட் 2008 (UTC)

efficiency - பயனுறுதிறன் எனப்படித்த நினைவு.--சிவக்குமார் \பேச்சு 02:09, 15 ஆகஸ்ட் 2008 (UTC)
வலு/திறன்/ஆற்றுதிறன் குறித்த தெளிவு இன்னும் இல்லாமல் இருப்பது குழப்பத்தையே உண்டாக்குகிறது. திறன் என்று ஒரு கட்டுரை ஸ்கில் என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக இருக்கிறது. வாட்இல் இருந்து திறனுக்கான இணைப்பு அங்கே செல்கிறது! ஆற்றுதிறன் (ஏன், ஆற்றல்திறன் எனவே இருக்கலாமே?) அல்லது ஆற்றுவலு என்று இரண்டையுமே முன்னொட்டுப் போட்டு வைத்துக் கொள்ளலாம். Efficiencyக்குப் பெரும்பாலும் நான் செயல்திறன் என்றே பாவிக்கிறேன். Effectiveness=செயல்நேர்த்தி. Solar Power = சூரிய ஆற்றல்திறன்; Wind Power = காற்று ஆற்றல்திறன்; Power Generation = ஆற்றல்திறன் ஆக்கம். (?) --இரா. செல்வராசு 17:58, 9 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

தங்கராசு சொல்வது சரியே. இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் வெவ்வேறு பதங்கள் பயன்பாட்டில் இருக்கும்போது கட்டுரையின் உள்ளடக்கத்தில் இதைத் தெரிவிப்பதும் தேடலுக்கு வசதியாக பக்க வழிமாற்று செய்து விடுவதுமே சரி என நினைக்கிறேன். திறன் skill என்ற பொருளில் வந்துள்ளது. எனவே வாட் உடன் இனைக்கப்பட்டது தவறு.--சஞ்சீவி சிவகுமார் 23:53, 9 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

செல்வராசு, ஆற்றல் என்பதை energy என்று கூறினால், அந்த ஆற்றலை செலவிடும் அல்லது கடத்தும் அல்லது உருவாக்கும் கால வீதம் ஆற்றுதிறன் (ஆற்றுகின்ற திறன், ஆற்றியதிறன், ஆற்றும் திறன் என வினைத்தொகையாய் நினைத்தேன்). வினை ஆற்றினேன் என்றால் வினையைச் செய்தேன், செய்து முடித்தேன் என்று பொருள் கொள்கிறோம். இயற்பியலிலே வினை, வேலை என்பது work என்னும் சொல்வான ஆற்றலைக் குறிக்கும். ஆற்றுதிறன் என்பது ஆற்றல் செலுத்தும் விரைவைக் குறிக்கும். எனவே பவர். Solar power, wind power என்பதும் solar energy, wind energy என்பதும் பொதுவாகவும் துல்லியமாகவும் கூறக்கூடும். சூரிய ஆற்றல் என்பதை விட கதிரொளி ஆற்றல் என்று கூறுவதே பொருந்தும். காற்று வீசுவதும் கதிரவனின் வெப்பத்தால்தான். ஆகவே கதிரொளி என்பதை முதன்மைப்படுத்தலாம். efficiency என்பதைப் பயனுறுதிறன் என அ.கி. மூர்த்தியின் அறிவியல் அகராதி குறிப்பிடுகின்றது. பயன்மை அல்லது பயன்நேர்த்தி என்றும் சொல்லலாம். பயன்பெயர்மை என்றும் சொல்லலாம். அதாவது உள்ளிடும் ஆற்றல் அல்லது ஆற்றுதிறனில் எவ்வளவு வெளிப்படுகின்றது, பயன்படுகின்றது, பயனுறுகின்றது என்பதைக் காட்டுகின்றது. தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய தமிழ்வழங்கு நிலங்களில் கட்டாயம் கலைச்சொற்கள் பற்றிய ஒரு சீரொருமை தேடுவது மிகவும் தேவைப்படுகின்றது. இதனை நாம் பலகாலும் உணர்ந்திருந்தாலும், இப்பொழுது முன்பினும் வலுவாக இக்கட்டாயத்தை உணரலாம். என் பரிந்துரை

  • energy = ஆற்றல்
  • power= ஆற்றுதிறன் அல்லது திறன்
  • efficiency = பயன்மை (அல் பயன்நேர்த்தி, அல்லது சுருக்கமாக நேர்த்தி)
  • Solar energy = கதிரொளி ஆற்றல் (solar power = கதிரொளி ஆற்றுதிறன்)
  • Wind energy = காற்று ஆற்றல் (காலாற்றல்; கால் = காற்று), wind power - காற்றாற்றல்திறன்

--செல்வா 01:09, 10 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வலு&oldid=2519938" இலிருந்து மீள்விக்கப்பட்டது