பேச்சு:வட்டெறிதல் (விளையாட்டு)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எறிதட்டு என்பதே எறிவதற்குத் தானே. அப்புறமென்ன எறிதட்டு எறிதல்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:45, 15 மே 2012 (UTC)[பதிலளி]

இப்போட்டி வட்டு எறிதல் / வட்டெறிதல் என்றே பரவலாக அறியப்படுகிறது. எடுத்துக்காட்டு: http://www.bbc.co.uk/tamil/sport/2012/05/120514_india_athletics_qualify.shtml . தலைப்பை மாற்றலாமா?--இரவி (பேச்சு) 11:05, 15 மே 2012 (UTC)[பதிலளி]

தட்டெறிதல் எனும் தலைப்புக்கு நகர்த்தப்படுகிறது. --மதனாகரன் (பேச்சு) 14:00, 15 மே 2012 (UTC)[பதிலளி]

வட்டு = disc, தட்டு = plate என்ற பரவலான பயன்பாடு என்பதால் வட்டு எறிதல் என்ற பெயரே கூடுதல் பொருத்தமாகத் தோன்றுகிறது--இரவி (பேச்சு) 14:37, 15 மே 2012 (UTC)[பதிலளி]

சரியானதே. வட்டு எறிதல் எனுந்தலைப்புக்கே நகர்த்தி விடுங்கள். --மதனாகரன் (பேச்சு) 14:49, 15 மே 2012 (UTC)[பதிலளி]

தலைப்பை மாற்றிட ஆதவன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலேயுள்ள உரையாடலைக் கருத்தில்கொண்டு அவரது கருத்துக்களை பதிய வேண்டுகிறேன்.--மணியன் (பேச்சு) 02:08, 7 ஏப்ரல் 2013 (UTC)
இலங்கையில் வட்டு எறிதல் என்ற சொல்லை கேள்வி பட்டதே இல்லை. இரவி,எனக்கு தெரிந்த வரையில் இங்கு தட்டு = disc என பயன்படுதப்படுகிறது. ஆங்கில சொல்லை தனித்தனியாக பிரித்து அதற்கு பொருள் காணுதல் சரியாக தோன்றவில்லை. தமிழ் வழக்கத்தில் உள்ளவற்றை பயன்படுத்தலாம் என நினைக்கின்றேன். நன்றி.

தென்னிலங்கையில் இது பரிதி வட்டம் எறிதல் எனப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 08:18, 29 சூலை 2013 (UTC)[பதிலளி]