பேச்சு:வடிவமைப்புப் பாங்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடிவமைப்புக் கோலம் என்ற தலைப்பை விடவும் வடிவமைப்புப் பாங்கு என்ற பெயர் மிகப் பொருத்தமாக இருக்கிறது. எனவே பக்கத்தை நகர்த்துகிறேன். --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 14:00, 9 மே 2011 (UTC)[பதிலளி]


pattern என்பதற்கு தமிழில் கோலம், அல்லது தோரணம் என்றே பல இடங்களில் வழங்குகிறது. பாங்கு என்றா என்ன பொருள் தருகிறது என்று தெரியவில்லை. --Natkeeran 16:54, 9 மே 2011 (UTC)[பதிலளி]

விக்சனரியில் இதுவும் ஒரு பொருளாகத் தரப்பட்டிருந்தது. (பார்க்க) மேலும் அகராதி இணையதளத்திலும் இச்சொல் இடம்பெற்றுள்ளது. (பார்க்க) மேலும் இவ்விடத்திற்குப் பொறுத்தமானதாகவும் உள்ளதெனக் கருதுகிறேன். மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவிக்கவும் நக்கீரன். --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 17:01, 9 மே 2011 (UTC)[பதிலளி]

software design pattern என்பதற்கு வடிவமைப்புக் கோலம் என்றோ வடிவமைப்புப் பாங்கு என்பதை விடவும், மென்பொருள் வடிவமைப்பியல் என்பதே மிகச் சரியாகப் பொருந்தும் என்பதே எனது எண்ணம். நாம் மொழி பெயர்க்கிறோம் என்பதை விடவும் புதிய கலைச் சொற்கள் உருவாக்குகிறோம் என்பதை விடவும், மொழிமாற்றம் செய்யப் பட்ட சொல்லினால் என்ன பயன் என்பதே முக்கியம். மேலும் ஒரு குறிப்பிட்டத் துறைச்சாரா நபரிடமும் நாம் ஒரு சொல்லைக் கூறினால் அவருக்கும் விளங்க வேண்டும் என்பதே முக்கியம். மென்பொருள் வடிவமைப்பியல் -அதாவது மென்பொருளை வடிவமைக்கும் பொழுது உபயோகம் செய்யப்பட வேண்டிய முறைகள் என்று மிகச் சுலபமாக அனைவருக்குமே புரியும்- என்பதே மிகச் சரியாகக் பொருந்தும் சொல் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்தப் பக்கத்தை மென்பொருள் வடிவமைப்பியல் என்றோ நிரலி வடிவமைப்பியல் என்றோ மாற்றம் செய்ய பரிந்துரை செய்கிறேன். -Pitchaimuthu2050 06:50, 30 சனவரி 2012 (UTC)[பதிலளி]
உங்கள் பரிந்துரைக்கு நன்றி. வடிவமைப்பியல் என்று கூறும் போது design pattern என்பதை விடச் சற்றுக் கூடியப் பொதுப் பரப்பை சுட்டுவது போல் படுகிறது. --Natkeeran 06:56, 30 சனவரி 2012 (UTC)[பதிலளி]