பேச்சு:வங்காளப் புலி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காளப் புலி என்ற இக்கட்டுரை, விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்டப் பாலூட்டிகள் என்னும் திட்டத்துள் அடங்கியதாகும்.

இத்திட்டக் கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடையவர், இத்திட்டத்தில் உறுப்பினராகலாம். இத்திட்டத்தில் பங்களிக்க விரும்புவர், இத்திட்டப் பக்கத்திற்குச் சென்றால், அங்கு நிறைவேற்ற வேண்டியப் பணிகளின், பட்டியலைக் காணலாம்.

royal bengal tigerல் உள்ள royalக்கு இணையான தமிழ்ச்சொல் என்ன?--ரவி 14:41, 27 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

royal என்னும் சொல் அரச என்னும் பொருளுடையது. ஆனால் இன்று மக்களை ஆளும் எந்த அமைப்புக்கும் அரசு என்கிறோம் (கவர்மெண்ட்டு). இங்கு இந்த விலங்கின் பெயரில் ராயல் என்பது ஏன் என்று தெரியவில்லை. இங்கு அத்தகைய முன்னொட்டு ஏதும் தேவை இல்லை என நினைக்கிறேன். ஆனால் ராயல் என வரும் வேறு சில இடங்களில் அரசாண்மிய (அரசாளும் அமைப்புகளில் ஒன்றாகிய என்னும் பொருள் தருமாறு) கூறலாம். அல்லது வேதர் என்னும் சொல்லடிப்படையில் வேந்திய என்னும் முன்னொட்டு தரலாம். ராயல் கழகம் என்பதை வேந்தியக் கழகம், அரசாண்மியக் கழகம் எனலாம். வேந்திய நிறுவனம்.

furக்குத் தமிழ்ச்சொல் என்ன?--ரவி 15:19, 27 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

உடல் மயிர். இதற்கு வேறு பல பெயர்களும் உண்டு. இப்பொழுது நினைவுக்கு வரவில்லை.--செல்வா 21:53, 3 ஆகஸ்ட் 2009 (UTC)
விலங்கின் மென்மயிர் என்கிறது விக்சனரி--கார்த்திக் 11:27, 4 ஆகஸ்ட் 2009 (UTC)

Carnivora, carnivore ??[தொகு]

en:Carnivora, en:carnivore தமிழ் சொற்கள் என்ன?--Terrance \பேச்சு 04:36, 4 ஆகஸ்ட் 2009 (UTC)

ஊனுண்ணிகள்? -- சுந்தர் \பேச்சு 04:41, 4 ஆகஸ்ட் 2009 (UTC)

இவையிரண்டும் ஆங்கிலத்தில் வேறு பொருள் கொண்டுள்ளன. தமிழிலும் இரு சொற்கள் தேவையில்லையா?--Terrance \பேச்சு 05:12, 4 ஆகஸ்ட் 2009 (UTC)

en:Carnivora என்பது ஊனுண்ணி விலங்குகளை கொண்டு ஒரு வரிசை, ஆதாவது வகைபடுத்தலில் ஒரு நிலை. en:carnivore என்பது ஊனுண்ணிகள் என்பது. கண்டிப்பாக இவை இரண்டிற்கும் தனித்தனி கட்டுரைகள் தேவை. en:carnivore என்பதற்கு கட்டுரை உள்ளது. காண்க ஊனுண்ணி. பல இடங்களில் இது குழப்பத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. வகைப்பாட்டு சட்டத்தில் இருந்து இக்கட்டுரைக்கு இணைப்புகள் உள்ளது, ஆனால் en:Carnivora விற்கு இணைப்பு இருக்கவேண்டும்--கார்த்திக் 11:27, 4 ஆகஸ்ட் 2009 (UTC)
என்ன வேறுபாடு என்று சொல்லுங்கள். ஒன்று ஊனுண்ணும் விலங்கின வகையைக் குறிக்கும் "வரிசைப்" பெயர், கார்னிவோரா என்பது. மற்றது ஊனுண்ணும் அல்லது புலாலுண்ணும் விலங்கு, பொதுவாக. வகைப்பாட்டுப் பெயரில் இலத்தீன் வடிவம் மாறாமல் உள்ளது (பன்மை வடிவம்), ஆனால் கார்னிவோர் என்னும் சொல்லில் அப்படி இல்லை என நினைக்கிறேன். தமிழில் தனித் தனி சொற்கள் தேவை இல்லை என நினைக்கிறேன். வேண்டுமெனில் ஊனுண்ணி வரிசை (= கார்னிவோரா) எனலாம். ஊனுண்ணி வரிசையி (வரிசையைச் சேர்ந்த விலங்குகள்) என்றும் கூறலாம். ஆனால் இவ்வகை வேறுபாடுகள் தேவையா என விளங்கவில்லை. எங்கு தேவையோ அங்கு ஊனுண்ணி வரிசை என்று கூறலாம். பேச்சு வழக்கில் கூட ஊனுண்ணி வகையைச் சேர்ந்த விலங்கு என்கிறோம். அது ஊனுண்ணி என்கிறோம். தமிழில் ஊனுண்ணி என்பது தனி விலங்காகவும் இருக்கலாம் அப்பெயர் கொண்ட வகையைச் சேர்ந்த ஓர் உறுப்பினமாகவும் இருக்கலாம், அவ் வகையைக் குறிக்கும் தொகைப்பெயராகவும் இருக்கலாம். மாந்தன் என்பது தனி மாந்தன் ஒருவனாகவும் இருக்கலாம், மாந்த இனத்தைச் சேர்ந்தவன் என்னும் பொருளில் குறிக்கலாம், மாந்த இனத்தையே குறிக்கும் தொகுதிப்பெயராகவும் (தொகைப்பெயராகவும்) இருக்கலாம். இவை எல்லாம் கருத்தில் கொள்ளவே கூறுகிறேன். தேவை என்றால் கட்டாயம் ஊனுண்ணி வரிசை என்று வேறுபடுத்தி எழுதலாம். --செல்வா 11:52, 4 ஆகஸ்ட் 2009 (UTC)

வங்காளப் புலிகள்[தொகு]

கட்டுரையின் உள்ளடக்கம் வங்காளப் புலி கட்டுரையில் இணைக்கப்பட்டது. நிர்வாகிகள் எவரேனும் இரு கட்டுரைகளையும் ஒன்றிணைத்து விடலாம்.--Booradleyp1 (பேச்சு) 04:35, 26 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வங்காளப்_புலி&oldid=1972769" இலிருந்து மீள்விக்கப்பட்டது