பேச்சு:ராசிதீன் கலீபாக்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கித் திட்டம் இசுலாம் (Rated அருமையான-class, தெரியாத-importance)
WikiProject iconஇந்த கட்டுரை விக்கித் திட்டம் இசுலாம்-ன் வாய்ப்பளவில் உள்ளது. விக்கிப்பீடியாவில் இருக்கும் இசுலாம்-தொடர்பான கட்டுரைகள்விரிவாக்க இது ஒரு கூட்டு முயற்சி ஆகும். இந்த திட்டத்தில் பங்கேற்க அதன் பக்கத்திற்கு செல்லவும். அங்கே நீங்கள் விவாதிக்கலாம் மற்றும் செய்யவேண்டியவைகளை பார்க்கலாம்
 அருமையான  இந்த கட்டுரை அருமையான பிரிவாக தர நிர்ணயிக்கப்பட்டுள்ளது விக்கித்திட்டத்தின் தர நிர்ணைய அளவுகோலில்.
 தெரியாத  இந்த கட்டுரை இன்னும் தர மதிப்பீடு செய்யப்படவில்லை , விக்கித்திட்டத்தின் importance அளவுகோலில்.
 
ராசிதீன் கலீபாக்கள் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

ரசூத்தீன் கலிபாக்கள் என்று தலைப்பிட்டுத் தொடங்கி எழுதியிருந்த கட்டுரையை மாகிர் ஓராண்டு கழித்து (அண்மையில்) ராஷிதீன் கலிபாக்கள் என்று மாற்றியுள்ளார். ஏன் ரசூத்தீன் கலிபாக்கள் என்றே இருக்கலாமே. அல்லது ராசித்தீன் கலிபாக்கள் என்று இருக்கலாமே. --செல்வா 17:34, 17 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

அரபியில் இதனை குலபாஉர் ராஷிதீன் என்றுதான் குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள் நேர்வழி நடந்த கலீபாக்கள் என்பதாகும். ரசூத்தீன் என்பது பிழையான சொல்.--பாஹிம் 17:53, 17 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

சரி, அப்படியென்றால் குலபாஉர் ராசித்தீன் என்று எழுதுங்கள். அரபி மொழியைப் போற்றும் நீங்கள் தமிழில் எழுதும்பொழுது தமிழ்மொழியைப் போற்றுவது முறைதானே. இல்லை நேர்வழிநடந்த கலீபாக்கள் என்றே தலைப்பிட்டு எழுதுங்கள். கலீபாவா, கலிபாவா என்றும் முடிவு செய்யுங்கள். --செல்வா 18:50, 17 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

நேர்வழி நடந்த கலீபாக்கள் என்று தலைப்பை மாற்றுவதில் தவறில்லை. எனினும் இவர்களுக்குப் பின்னரான ஏனைய கலீபாக்களைக் குற்றஞ் சொல்வது போன்று உணர்கிறேன். தமிழ் முஸ்லிம்கள் குலபாஉர் ராஷிதீன் என்றும் நேர்வழி நடந்த கலீபாக்கள் என்றும் பயன்படுத்துகின்றனர். எனவே, இதனைக் குலபாஉர் ராசிதீன் என்று மாற்றுவதே பொருத்தம் என நினைக்கிறேன். கலிபா என்பது பிழை. நான் தமிழனல்லவெனினும் அரபு மொழியைப் போலவே தமிழ் மொழியையும் நேசிக்கிறேன். அதனாற்றான் தமிழில் எழுதுவதில் ஆர்வமாயுள்ளேன்.--பாஹிம் 19:06, 17 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி. மற்றவர்கள் யாருக்கும் மறுப்பு இல்லை எனில் குலப்பாஉர் ராசிதீன் என மாற்றிவிடுகிறேன். மாகிர், அராபத், இபயத்துல்லா போன்ற இசுலாத்தை அறிந்த பயனர்களோ மற்றவர்களோ ஏதும் கருத்து இருந்தால் தெரிவிக்கவும். --செல்வா 19:18, 17 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
செல்வா, பாகிம் குலப்பாஉர் ராசிதீன் என்பது இந்த கலீபாக்களுக்கான அடைமொழியே. எனவே தமிழ் நடைக்கேற்ப இவர்களை ராசிதீன் கலீபாக்கள் என்றே அழைக்கலாம்.--அராபத்* عرفات 09:42, 18 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]