பேச்சு:ரகுவரன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விவாகரத்து = மணமுறிவு??--ரவி 13:25, 19 மார்ச் 2008 (UTC)

ஆம், மணமுறிவு என்பது ஈடான தமிழ்ச்சொல். சில குழுவினரிடையே இது தும்பறுப்பு என்று நெடுங்காலமாக வழங்கி வந்துள்ளது. மணமுறிவு செய்வதை உறுதி செய்யும் எழுத்தோலை விடுமுறி என்று பெயர். மணமுறிவை துரும்புகொடுத்தல் என்றும் கூறுவர். மணமுறிவின் பின்னர் மறுமணம் செய்துகொள்ளுதலும் உண்டு. அதற்கு அறுத்துக்கட்டல் அல்லது "தீர்த்துக்கட்டுதல்"என்று பெயர். தீர் என்றாலே முடிந்துவிட்டது (மணம் ஒப்பந்தம் முடிவுற்றது என்று பெயர். தீர் என்பது மணமுறி என்னும் வினைச்சொல்). அறுத்துமுறி என்பது மனைவியைத் "தள்ளிவைத்தல்" (அதாவது கணவனும் மனைவியும் பிரிந்து இருக்கை). பிரிந்து வாழும் பெண்களை வாழாவெட்டி என்று கூறுவர். ஆனால் பிரிந்து வாழும் ஆணை வாழாவெட்டி என்று கூறுவது பொருந்தும் எனிலும், கூறுவதில்லை. கணவணை இழந்த பெண்ணுக்கு கைபெண் என்பதோடு அறுதலி என்றும் ஒரு பெயர் உண்டு. மனைவியை இழந்த கணவனுக்கு தாபதன் என்று பெயர். --செல்வா 14:01, 19 மார்ச் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ரகுவரன்&oldid=222876" இலிருந்து மீள்விக்கப்பட்டது