பேச்சு:யோகான் ஐன்றிச் சூல்ட்சு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Johann Heinrich Schulze என்பார் பெயரை யோகான் ஐன்றிச் சூல்ட்சு என்று எழுதினால் ஒலிப்பு இன்னும் சரியாக இருக்கும். இடாய்ட்சு மொழியில் ie என வந்தால் ஈ என்றும், ei என்று வந்தால் ஐ என்றும் சீராக ஒலிக்கும் (ஆங்கிலம் போல அல்லாமல்). Schulze என்பதும் சற்று நெடிலாக சூல்ட்சு என்று ஒலிக்கும். யோஃகான் அல்லது யோகான் என்பது சரியாக இருக்கும். --செல்வா 18:30, 14 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மயூரநாதன் 18:40, 14 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]



டொச்சில் Z வரும் போது ற் என்ற உச்சரிப்பும் சேர்ந்தே வரும். Schulze என்பதன் கிட்டிய உச்சரிப்பு சூல்ற்சே என்றே அமையும். ze என்று முடியும் போது ற்சே(ஏ) என்றே உச்சரிப்பு இருக்கும்.
--Chandravathanaa 20:32, 14 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

ஆமாம், சந்திரவதனா கூறுவது சரி. கடைசி எழுத்தும் ஒலிப்பு பெறும். சூல்ற்சே என்பது மிகச்சரியாக இருக்கும். Nazi எனப்தும் நாட்சி அல்லது நாற்சி என்பது சரியான ஒலிப்பாக இருக்கும். நாட்ஃசி என்றும் கூறலாம். இடாய்ட்சு மொழியில் வரும் z ஒலிப்பு tz, ts போன்ற ஒலிப்பு தரும். --செல்வா 22:40, 14 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]