பேச்சு:யாழ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்ல கட்டுரை kanags, பாராட்டுக்கள். காந்தர்வ தத்தை என்பதை இன்னும் எளிய தமிழில் சொன்னால் நன்றாக இருக்கும். யாழின் படம் ஒன்றை பாகங்கள் குறித்து தந்தால் மிகவும் அருமையாக இருக்கும். நன்றி--ரவி 08:31, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி ரவி. காந்தர்வதத்தை என்பது பெண்ணின் பெயர். (இரண்டு சொற்களாகப் பிரித்தது எனது தவறு). யாழின் படம் தேடி வருகின்றேன்.--Kanags 11:37, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

/** அக்காலத்தில் வேடன் விலங்குகளைக் கொல்ல வில்லையும் அம்பையும் பயன்படுத்தினான். அவன் அம்பைச் செலுத்தும்போது, வில்லில் வெவ்வேறு நீளமுடைய நாண்களைக் கட்டி, அவற்றை மீட்டும் பொழுது பல இனிய ஒலிகளும் சுரங்களும் உண்டானதை உணர்ந்தான். அதன்மூலம் ஒரு இசைக்கருவியை அமைக்க முனைந்ததன் பயனாய் பிறந்ததே வில்யாழ் என்ற இசைக்கருவியாகும்.

    • /
இந்த வரிகளை வரலாறு என்ற தலைப்பின் கீழ் போட்டது, பகுத்தறிவுக்கு எதிரானது? இதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.. வெறும் அனுமானமே.. இசை என்பது நாகரிகத்தின் அடையாளம்.. மேற்கத்தியவர்களின் பரிணாமத்தை அடிப்படையாக கொண்ட வரலாறு, சர்ச்சையில் இருக்கிறது.. அது இந்தியாவிற்கு ஒத்து வராது..
ஆகையால், அனுமான வரலாறு என்று தலைப்பை மாற்றுங்கள்..

கட்டுரை இணைப்பு[தொகு]

இதனை harp என்ற கட்டுரையுடன் இணைத்திருக்கிறீர்கள். ஆனால், ஆங்கிலத்தில் en:Yazh என்றும், அதற்கு இணைப்பாக மலையாளத்தில் யாழ் கட்டுரையும் உள்ளன. திருத்தி நடவடிக்கை எடுக்கவும். இணைப்பதா? அல்லது என்ன செய்ய வேண்டும்? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:45, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆங்கிலக் கட்டுரை பின்னரே எழுதப்பட்டிருக்கிறது. இப்போது அதற்கு இணைத்திருக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 07:57, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி! அப்படியானால், முன்பு இணைக்கப்பட்டிருந்த கட்டுரைக்கு இணையான பதிப்பு தமிழில் தேவைப்படுமோ! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:44, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நிச்சயம்! எழுதுகிறீர்களா?--Kanags \உரையாடுக 09:05, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஐய்யய்யோ, நான் எபோ சொன்னேன்? ஆள விடுங்க ;) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:21, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யாழ்&oldid=1518252" இலிருந்து மீள்விக்கப்பட்டது