பேச்சு:ம. ப. பெரியசாமித்தூரன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ம. ப. பெரியசாமித்தூரன் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இவர் பார்வையில் வெளிவந்த நூல்களில் இவரது பெயர் ம. ப. பெரியசாமித் தூரன் (பாரதியும் கடவுளும்), ம. ப. பெரியசாமித்தூரன் (கலைக்களஞ்சியம் தொகுதி 10) என்பனவாக உள்ளன. கோபி 16:37, 29 சனவரி 2012 (UTC)[பதிலளி]

தமிழிசைச் சங்கம் வெளியிட்டுள்ள ஒரு பட்டியலில் ம. ப. பெரியசாமித்தூரன் என்றே எழுதப்பட்டுள்ளது ( 1972 ஆம் ஆண்டு அச்சங்கம் வழங்கிய இசைப்பேரறிஞர் விருதினை இவர் பெற்றிருக்கிறார்). எனவே தலைப்பை ம. ப. பெரியசாமித்தூரன் என மாற்றலாம்.--மா. செல்வசிவகுருநாதன் 09:16, 13 பெப்ரவரி 2012 (UTC)
அப்படியே மாற்றுங்கள்.--Kanags \உரையாடுக 09:34, 13 பெப்ரவரி 2012 (UTC)
பெரியசாமித்தூரன் ஒரு சொல்லா அல்லது இரண்டு சொற்களா? தெளிவாக்கிய பின்னர் மாற்றுங்கள். பெரியசாமித் தூரன் என்று ஞாபகம்.--Kanags \உரையாடுக 09:36, 13 பெப்ரவரி 2012 (UTC)
இரு சொற்கள் போலத் தான் தெரிகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 18:02, 14 பெப்ரவரி 2012 (UTC)
இப்படியே இருந்தால் சரி என்று கருதுகிறேன். பெரும்பாலான இடங்களில் எப்படி எழுதப்பட்டிருக்கிறதோ அப்படியே இங்கே கட்டுரைத் தலைப்பு தொகுக்க வேண்டும். --வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 03:01, 15 பெப்ரவரி 2012 (UTC)

பெரும்பாலான இடங்களில் என்றால்? கோபி 03:22, 15 பெப்ரவரி 2012 (UTC)

புத்தகங்கள், இணையத்தளங்கள், நாளிதழ்கள். --வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 04:31, 15 பெப்ரவரி 2012 (UTC)
வாசு, தூரன் தாம் எழுதிய நூல்களில் பெரியசாமித் தூரன் என்றே பயன்படுத்தியுள்ளார் என்பதனையே சுட்டியிருந்தேன். நன்றி. கோபி 04:34, 15 பெப்ரவரி 2012 (UTC)
என்னிடம் பெரியசாமித்தூரன் அவர்கள் எழுதிய கலைக்களஞ்சியத்தில் சில தொகுதிகள் உண்டு. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திலும் பார்க்கலாம். இவருடைய பெயர் பெரியசாமித்தூரன் என்றுதான் எழுதவேண்டும். எல்லா எழுத்துகளும் தமிழில் இருப்பதால், சிக்கல் ஏதும் இல்லை. ஒருவர் பெயரை K.V.ஜெயஸுந்தரேஸ்வரன் என்று எழுதினால், தமிழில் எழுதும்பொழுதும் உரோமன் எழுத்தோடும், கிரந்த எழுத்தோடும்தான் எழுதவேண்டும் என்னும் கட்டாயம் ஒருசிறிதும் இல்லை. தமிழ் முறைப்படி, கே.வி.செயசுந்தரேசுவரன் என்று கட்டாயம் எழுதலாம். ஒருவரின் கையெழுத்து எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அது தனியுரிமை (அது ஒரு மொழி எழுத்துகளால் ஆனதாகக்கூட இல்லாமல் இருக்கலாம்), ஆனால் எழுதும் மொழி தமிழாயின், அதன் முறைப்படி தமிழ் எழுத்துகளில் எழுதுவதில் எந்தத்தடையும் இல்லை- சொல்லப்போனால் அதுவே சரியான முறை. இதை அறியாத சிலர் என் பெயரை மாற்ற உங்களுக்கு உரிமை இல்லை, அது என் பெற்றோர் எனக்கு ஆசையுடன் வைத்தப் பெயர் என்பார்கள். மாற்றுவது அநாகரிகம் என்பார்கள். இதே வாசகத்தை பிறமொழியில் சென்று சொல்லமுடியாது அவர்களால். எனவே ஒருவரின் பெயர் தமிழில் உள்ள 247 தமிழ் எழுத்துகளில் அமைந்து இருந்தால் அவர் எழுதியபடி எழுதுவதின் எந்தச் சிக்கலும் இல்லை. எனவே பெரியசாமித்தூரன் என்று எழுதுதல் முறை இங்கு. --செல்வா 04:52, 15 பெப்ரவரி 2012 (UTC) "அது தனியுரிமை" என்னும் சொற்கோவையை மேலே சேர்த்தல்.--செல்வா 06:11, 15 பெப்ரவரி 2012 (UTC)
புத்தகங்களில் பெரியசாமித்தூரன் என்று இருந்தால், அப்படியே எழுதலாம். "ம. ப." பெரும்பாலான இடங்களில் இல்லை என்றால், அதை விட்டு விடுவதே சரி. பெரும்பாலும் பெரியசாமித்தூரன் என்றே அழைக்கப்பட்டார் என்றும், நான் கருதுகிறேன். --வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 05:47, 15 பெப்ரவரி 2012 (UTC)
ஏன் "ம. ப" என்பதை வேண்டாம் என்கிறீர்கள் என்று புரியவில்லை. அவரை முழுமையாக அடையாளப்படுத்த முன்னெழுத்துகள் தேவைதானே. பல பெரியசாமித்தூரன்கள் இருக்கலாமே. ஒரே முன்னெழுத்து கொண்டவர்கள் இருந்தால், அவர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதும் தேவை. "பெரும்பாலான இடங்கள்" என்பதைவிட அவரைச் சரியாக அடையாளப் படுத்தி அவருடைய முழுப்பெயரை இடுவதே முறை. தெரியாதவர்களும் தெரிந்துகொள்ளும் இடமாக இது இருக்கவேண்டும் அல்லவா? --செல்வா 06:11, 15 பெப்ரவரி 2012 (UTC)
விக்கிப்பீடியா வழிமுறைகளையும் அடிப்படியாகக் வைத்து பார்க்க வேண்டும்.
  • பல ம. ப. பெரியசாமித்தூரன்கள் இருக்கலாமே. அதை சேர்ப்பதனால் என்னத்தை சாதித்து விடுகிறோம்?
  • புத்தகங்களில் பெரியசாமித்தூரன் என்று பார்த்தால், அது ம. ப. பெரியசாமித்தூரன் தான், என்று எப்படி முடிவுக்கு வருவது (படிப்பவர்கள்)?
  • உசாத்துணைகள் ஒன்று கூறி, விக்கிப்பீடியா வேரு ஒன்று கூறினால் அது சரியா?
ஆங்கில விக்கிப்பீடியா வழிமுறைகளையும் வைத்து நாம் பார்க்க வேண்டும். அதில் தொகுப்புகள் சேர்க்கும்போது எனக்கு புறிந்த வழிமுறைகளை வைத்து எழுதுகிறேன். --வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 06:37, 15 பெப்ரவரி 2012 (UTC)
ம. ப. பெரியசாமித்தூரன் என்பதை முதன்மையாக்கி ஏனையவற்றிற்கு வழிமாற்றுகள் ஏற்படுத்தலாம். தினமணி கட்டுரையில் அவ்வாறே தரப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 06:25, 15 பெப்ரவரி 2012 (UTC)

சாதிப் பின்னொட்டுகள்[தொகு]

1940களில் சுயமரியாதை இயக்கத்தின் சாதிப்பெயர் நீக்கம் பரவலாக ஏற்றுக் கொள்ள்ப்பட்டதற்கு முன்னால் சாதிப்பெயர்கள் பரவலாகக் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நாம் நீக்க வேண்டாம். தமிழர்களில் இக்காலத்தில் பயன்படுத்துவோரும் உளர் (எ.கா சிவ நாடார்). மேலும், தமிழ்நாடு தவிர்த்த இந்தியப் பெயர்களில் பெரும்பாலானவை சாதிப்பின்னொட்டுகள் /குடும்பப்பெயர்கள் கொண்டவை. எனவே அவற்றை நாம் இங்கு தமிழ் விக்கியில் நீக்கக் கூடாது. (இங்கு தூரன் என்பதும் உட்சாதிப்பெயர் தான்) --சோடாபாட்டில்உரையாடுக 06:52, 15 பெப்ரவரி 2012 (UTC)

இங்கே வேறுபாட்டைப் பாருங்கள். எது சாய்வில்லாமலும், தேவையில்லாத குறிப்புகள் உள்ளதாகவும் உள்ளது என்று. சாதிப்பெயர் கட்டாயம் இருக்க வேண்டும் என்று ஏதும் கொள்கை இல்லை. சிவநாடார் என்றோ, சாமினாதையர், கே.கே. பிள்ளை, ஏ.எல். முதலியார், மூப்பனார் என்று சில இடங்களில் வருவதை அறவே நீக்கவேண்டும் என்று சொல்லவில்லை, ஆனால் எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும் என்னும் கட்டாயம் ஏதும் இல்லை. கூடியமட்டிலும் சாதிப்பெயர்களைக் குறைத்தோ, தவிர்த்தோ எழுதுவது நல்ல நடைமுறை. மேலே காட்டியுள்ள "diff" வேறுபாட்டை, மனம் திறந்து படித்துப் பாருங்கள், எது நன்றாக நடுநிலைமையாக இருக்கின்றது என. இந்திய, தமிழ்க் குமுகத்தில் சாதி மிகுந்த தாக்கத்தை இன்றும் தருகின்றது, பலர் இன்றளவும் மிகக்கொடுமையான முறையில் உயிரிழந்து வருகின்றார்கள். இதையெல்லாம் நன்கு கருத்தில் கொள்ளுங்கள். இது குமுக சீர்திருத்தத்தளம், அன்று (பலரைப் போல் நானும் நன்கு அறிவேன்), அதற்காக சாதியச் செய்திகளை கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் கொண்டு பரப்பும் தளமும் இல்லை. நடுநிலையாக படித்துக் கருத்துகளை உள்வாங்கிக் கொள்ள இக் கட்டுரையில் நான் சாதிப்பெயர்களை நீக்கி எழுதியுள்ளது உதவியாக இருக்கின்றதா இல்லையா என்று நன்னோக்கோடு, மனம் திறந்து எண்ணிப்பாருங்கள்! கட்டாயம் அப்பெயர்கள் இருக்க வேண்டும் என்று பலரும் கருதினால், நான் வலியுறுத்தவில்லை, ஆனால் தமிழ் விக்கியைக் கட்சிகட்டும் இடமாக மாற்றாமல் இருப்பது நல்லது. மேலும், விக்கிப்பீடியா ஒரு பெரும்பான்மை ஆட்சிக்குட்பட்டதல்ல (NOT#DEM), பெருந்தன்மை ஆட்சிக்குட்பட்டது. சீர் ஏற்றுவதும், சீரழிப்பதும் நம் கையில் உள்ளது. பொறுப்புடன், திறந்த மனத்துடன், நடுநிலைமையாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டுகிறேன். தக்கவாறு நன்னோக்குடன், கலந்துரையாடி நல்லிணக்கம் காணும் முகமாக, நன்மை பெருகும்படி செயற்பட வேண்டுகின்றேன். --செல்வா 15:44, 15 பெப்ரவரி 2012 (UTC)
செல்வா, சாதி உணர்வு, அதனால் சமூகத்தில் ஏற்படும் தீவிளைவுகள் ஆகியவை பற்றிய உங்கள் கூற்றுகளில் எனக்கு முழு உடன்பாடு உண்டு (விக்கிக்கு வெளியே). ஆனால் விக்கியில் பழங்காலத்தவர்களின் தகவல்களை ஆவணப்படுத்தும் போது அவர்கள் பயன்படுத்திய சாதிப்பின்னொட்டுகளை ”கூடியமட்டிலும்” மறைப்பது வரலாற்றை மறைப்பதைப் போன்றதாகும். தமிழர்களிடையே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சாதிப்பின்னொட்டுகளைப் பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. அதனை நாம் இங்கு ஆவணப்படுத்துகிறோம். தமிழர் சாதிப்பெயர் பயன்படுத்தினர் என்பதை நாம் எங்கும் மறைக்கத் தேவையில்லை. இது ”சாதியச் செய்திகளை கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் கொண்டு பரப்பு”வதோ “கட்சி கட்டுவதோ” ஆகாது. சாதீய அடையாளத்தைப் பின்பற்றாத ஒருவருக்கு சாதியப் பெயர் சேர்ப்பதும், சாதி அடையாளம் காட்டுவதும் நீங்கள் சொல்வதற்குள் அடங்கும். ஆனால் இங்கு நாம் செய்வது ஒருவரது இயற்பெயரை, அவர் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தியதை, பிற ஊடகங்கள், கருவிநூல்கள் இன்றளவும் பயன்படுத்தும் பெயர்களை உள்ளது உள்ளபடி விக்கிப்பீடியாவில் கூறல். ”சாதி தீது, எனவே சாதிப்பெயர்களை நீக்குவோம்” என்ற நிலைப்பாடே நடுநிலை பிறழ்வானதன்றோ. இது போல சமயம், அரசியல், இனக்குழு அடையாளம் என அனைத்தையும் ” சமூகத்துக்குத் தீது” என்ற அடிப்படையில் விக்கியில் செயல்பட்டால் நாம் ஒரு சமூக சீருதிருத்தத் தளமாகவே செயல்படுவோம். ”கூடியமட்டும் குறைப்போம்” என்பது செய்ய இயலாதது, வரையறுக்க முடியாதது. “நாயக்கர்”, “கவுண்டர்”, “செட்டியார்”, “அய்யங்கார்” போன்ற பின்னொட்டுகளை நீக்கிவிட்டு சீர்மைக்காக “தூரன்” என்ற சாதிப்பெயரையும் நீக்க முடியுமா?. சில தகவல்கள் விக்கியில் இருந்தால் அவை சமூகத்தை “சீரழிக்கும்” என்ற கூற்று ஏற்றக்கொள்ளத்தக்கதன்று. எது சீரழிப்பு என்பது நபருக்கு நபர் வேறுபடும். சிலருக்கு சாதி அடையாளம், சிலருக்கு சமய அடையாளம், சிலருக்கு அரசியல், பாலியல் போன்றவை. தகவல்களை ஆவணப்படுத்தும் போது, கலைக்களஞ்சியம் படைக்கும் போது இவற்றை நாம் கருத்தில் கொள்ள இயலாது, கொள்ளவும் கூடாது. இது ஒரு வழுக்குப்பாதை. விக்கி செயல்பாடுகளில் இதை முற்றிலும் தவிர்ப்பதே பொருத்தமானது. ஆவணப்படுத்துதல் /தகவல் பதிவு செய்தல் நோக்கில் மட்டும் இதனை எதிர்கொள்ள வேண்டும். --சோடாபாட்டில்உரையாடுக 03:51, 16 பெப்ரவரி 2012 (UTC)
ஆமா. இந்த மாற்றம் சாதிப் பெயர்களை தேவையற்றுப் பொருத்துவது போல் உள்ளது. அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன். --Natkeeran 03:03, 16 பெப்ரவரி 2012 (UTC)
நற்கீரன், “தேவையற்று பொருத்துவது” என்று எப்படிச் சொல்கிறீர்கள் எனத் தெரியவில்லை. நீக்கப்பட்டவை பெயர்களின் இயல்பான பகுதிகள். அவற்றை உள்ளது உள்ளபடி கொடுப்பது கலைக்களஞ்சிய முறையன்றோ?. ஒருவர் பெயரின் பகுதி தேவையா தேவையற்றதா என்று முடிவு செய்வது நாம் எடுக்கும் பண்பாட்டு மதிப்பீட்டு முடிவாகும். இப்பின்னொட்டுகளை நீக்குவது அக்காலத்தில் சாதிப்பெயர்கள் பயன்படுத்தப்படவில்லை என்ற ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கக்கூடும். --சோடாபாட்டில்உரையாடுக 04:00, 16 பெப்ரவரி 2012 (UTC)
நற்கீரன்,
திருத்தத்தின்போது சோடாபாட்டில், சாதிப்பெயர்களை பொருத்தவில்லை; செல்வா அவர்கள் தேவையற்றது எனக்கருதி நீக்கியதை, சோடாபாட்டில் மீண்டும் சேர்த்தார். நீங்கள் தவறாக புரிந்துகொண்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது. --மா. செல்வசிவகுருநாதன் 07:11, 16 பெப்ரவரி 2012 (UTC)

பழைய பெயர்களில் சாதி இருந்தால் அதை கொடுப்பது தான் முறை. அதை நீக்கவேண்டாம் என்பது என் கருத்து. இப்ப இருக்கும் பெயர்களில் (தமிழகத்தில்) யாரும் சாதியை போட்டுக்கொள்வதில்லை (சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம்) எங்க அப்பா பெயரில் சாதி இல்லை ஆனால் தாத்தா பெயரில் உண்டு, முழுவதும் சொன்னால் தான் இன்னார் என்று பலருக்கு புரியும் சாதியை நீக்கி சொன்னால் யாருக்கும் யாரைச் சொல்கிறோம் என்றே புரியாது. --குறும்பன் 03:24, 16 பெப்ரவரி 2012 (UTC)

இது போன்ற முந்தைய உரையாடல்கள்: பேச்சு:முத்துராமலிங்கத் தேவர், பேச்சு:ருக்மிணி தேவி அருண்டேல், --சோடாபாட்டில்உரையாடுக 04:22, 16 பெப்ரவரி 2012 (UTC)

கட்டுரையின் தலைப்பிலும் உள்ளே பல இடங்களிலும் தூரன் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டாகிவிட்டது. எனவே, ஒரு சில இடங்களில் தூரன் என்பதை விடுத்து பெரியசாமி என்று எழுதுவது வரலாற்றை மறைப்பதோ திரிப்பதோ ஆகாது. கட்டுரையின் முதற்பகுதியில் முழுப் பெயரையும் குறிப்பிட்டு விட்டு பிற இடங்களில் உலக நாட்டவர் அனைவரின் முதற்பெயர் / கடைசிப் பெயர் மட்டும் சுட்டுவது பல கட்டுரைகளிலும் விக்கியல்லா ஊடகங்களிலும் நாம் செய்து வருவதே. கன்னடர் என்பதை விட கன்னட நாயக்கர் என்று எழுதுவதன் மூலம் என்ன துல்லியத்தையும் தகவலையும் வலியுறுத்துகிறோம்? அவினாசிலிங்கத்தின் பெயரில் அமைந்த கல்லூரியே அவரை அவினாசிலிங்கம் என்றும் அவினாசிலிங்கம் ஐயா என்றுமே குறிப்பிடுகிறது. நாம் அவரைப் பற்றிய முதன்மைக் கட்டுரையை அவினாசிலிங்கம் செட்டியார் என்று தான் வைத்திருக்கிறோம். இப்படி இருக்க, முதன்மைக் கட்டுரை அல்லாற பிற கட்டுரைகளில் அவினாசிலிங்கம் என்று குறிப்பிடுவது எப்படித் தவறாகும்? இதே ஏரணம் வடுவூர் துரைசாமி ஐயங்கார் முதலிய பிற குறிப்பிடத்தக்கோருக்கும் பொருந்தும். வடுவூரில் வேறு துரைசாமி புகழ்பெற்றிருந்தால் தான் நாம் குறிப்பிடுபவர் ஐயரா ஐயங்காரா வேறு சாதியா என்ற குழப்பம் வரும். எத்தனை சச்சின் இருந்தாலும் சச்சின் என்றால் அது ஒரே ஆள் தான். டெண்டுல்கர் என்று எழுதவில்லை என்பதால் அவரை வரலாற்றை மறைத்து விடுகிறோமா? பெரியசாமி இந்த ஊரில் இந்த சாதிப் பெற்றோருக்குப் பிறந்தார் என்று தெளிவுபடுத்தும்போதே அவரது உறவினர்களும் எந்தச் சாதி என்று தெளிவாகி விடுகிறது. இந்நிலையில் அவரது சித்தப்பாவைக் கூட கவுண்டர் என்று சாதிப்பெயர் இட்டே எழுத வேண்டுமா? எனவே, சாதிப்பெயர் இடாவிட்டால் யாரைச் சொல்கிறோம் என்ற குழப்பம் வரும் வாதம் எல்லா இடங்களிலும் பொருந்தாது. குறிப்பிடத்தக்கவர்களின் பெயரில் சாதி இருந்தால் அவரைப் பற்றிய முதன்மைக் கட்டுரையில் சாதிப் பெயர் இட்டுக் குறிப்பிடலாம். ஆனால், மற்ற எல்லா கட்டுரைகளிலும் சாதிப்பெயரைச் சேர்த்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்தத் தேவை இல்லை. தகுந்த இடங்களில் உள்ளிணைப்பு தந்தால் போதுமானது--இரவி 09:28, 16 பெப்ரவரி 2012 (UTC)

ரவி, பெயர்கள் வரும் இடங்களில் பெயரின் பகுதி சாதியா இல்லையா, அதை நீக்கவா என்று ஆய்வு செய்ய முனைவதே விக்கியில் செய்யக்கூடாதென்பது தான் என் கருத்து. இங்கு செட்டியார், அய்யங்கார் என்று தனியே உள்ள பெயர்களில் எளிதாக இது சாதிப்பெயர் நீக்கிவிடலாம் எனலாம். “ஆச்சாரியார்”, “பண்டாரத்தார்”, ”படையாச்சி”, “மரைக்காயர்”, “லெப்பை” போன்ற சட்டென்று வெளித்தெரியா இடங்களிலும் இதையே கடைபிடிப்பதா?. பிற மாநில சாதி/இனப்பெயர்களான கவுடா, சிங், படேல், பானர்ஜி, பட்டச்சார்யா, சாட்டர்ஜி, மேனன், நாயர் போன்றவற்றில் என்ன செய்வது?. இதே தருக்கத்தை சமயப்பெயர்களிலும் பின்பற்றலாமா?. சமயப் பெயரெனத் தெரியும் இடங்களில் எல்லாம் சமயப் பெயரை நீக்கி விடலாமா?. என் கருத்து இது தான் - விக்கியில் இது போன்ற போக்கில் நாம் செல்வதைத் அறவே தவிர்க்க வேண்டும். //இந்நிலையில் அவரது சித்தப்பாவைக் கூட கவுண்டர் என்று சாதிப்பெயர் இட்டே எழுத வேண்டுமா?// இங்கு அப்பாவும் சித்தப்பாவும் என்ன பெயர் வைத்திருந்தார்களோ அப்படியே எழுதுகிறோம். அது சாதிப்பெயரா, இல்லையா, என்ன சாதி என்று கருதுவதே கிடையாது. ஒரு பெயர் சாதிப்பெயரா இல்லையா, அதை நீக்கி எழுது வேண்டுமா என்று ஆராயக் கூடாது. சமயப் பெயர்களுக்கும், இனக்குழுப் பெயர்களுக்கு இவ்வாறு செய்வதில்லையே. சாதியை மட்டும் ஏன் தனி முன்னுரிமை கொடுத்து, ஒருவர் பெயரில் இருந்து நீக்க வேண்டும்?.
//கன்னட நாயக்கர் என்று எழுதுவதன் மூலம் என்ன துல்லியத்தையும் தகவலையும் வலியுறுத்துகிறோம்// இந்த மாறுதல் பற்றி எனக்குப் பெரிதாக மாற்றுக் கருத்தில்லை - இது ஒரு சிறு தகவல் தான் என்பதால். (முழுமையாக மீளமைத்தபோது இதனையும் சேர்த்து மீளமைத்து விட்டேன்). எனினும் இப்படி எழுதுவதால் என்ன தவறாகி விட்டது?. இது தகவல் பிழையன்று. ஆனால் அதனையும் மீறி ஏன் இது தவறெனத் தோன்றுகிறது?. இதே “கன்னடக் கிறித்தவர்” வீட்டில் “கன்னட இசுலாமியர்” வீட்டில் என்றிருதால் ”கன்னடர் வீட்டில்” என்று மாற்றிக் கொண்டிருப்போமா?. சாதியைப் பற்றிய நமது சார்பினால் இது எழுகிறது. அச்சார்பு (அல்லது சமயம்,. இனக்குழு, கட்சி என்ற எச்சார்பும்) ஆவணப்படுத்ததலில் அறவே கூடாது --சோடாபாட்டில்உரையாடுக 10:26, 16 பெப்ரவரி 2012 (UTC)

சரி, இதைச் சாதி நோக்கு அல்லது சீர்திருத்த நோக்கில் பார்க்க வேண்டாம். மற்ற இடங்களில் முழுப்பெயரை விடுத்து இறுதிப்பெயரையோ முதற்பெயரையோ மட்டும் எழுதும் போது இயல்பாகத் தோன்றுவது ஏன் தமிழர் சாதிப் பெயரை விடுத்து எழுதும் போது மட்டும் இயல்பாகத் தோன்றுவதில்லை. என்ன காரணத்துக்காக கண்டிப்பாக எல்லா இடத்திலும் தமிழர் சாதிப்பெயர் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறதோ அதே காரணம் இதை எல்லா இடத்திலும் கண்டிப்பாக எழுதத் தேவை இல்லை என்பதற்கும் பொருந்தும். அவினாசிலிங்கம் செட்டியார் சரி என்பது போலவே அவினாசிலிங்கமும் சரி. முதன்மைக் கட்டுரையில் முழுப்பெயர் இருப்பதை உறுதி செய்தால் போதுமானது. மற்ற இடங்களில் வலியுறுத்தத் தேவை இல்லை என்பது தான் என் நிலைப்பாடு. அது எந்த வகையான கடைசிப் பெயராக இருந்தாலும் சரி.--இரவி 10:45, 16 பெப்ரவரி 2012 (UTC)

இதை சாதி நோக்கில் கையாண்டு நீக்கியதால் தான் சாதி நோக்கில் எப்பெயரையும் காண வேண்டாம் கொடுங்கள் என்று இவ்வுரையாடலைத் தொடங்கினேன். கட்டுரை எழுதிய குறும்பன் பெயராகக் கொண்டு எழுதியுள்ளார். ஆனால் அவை (முதன்மைக் கட்டுரை உள்ளவை, இல்லாதவை அனைத்தும்) சாதிப்பெயராக இருக்கின்றன என்ற காரணத்தால் நீக்கப்பட்ட பின் மீளமைத்துவிட்டு அவ்வாறு செய்ய வேண்டாம் என்று இவ்வுரையாடலைத் தொடங்கினேன். இது சமய நோக்கெனிலும் பொருந்தும். முதன்மைக் கட்டுரையில் முழுப்பெயர் இருந்தால் மட்டும் போதாது. ஒருவர் பெயரைப் பிற கட்டுரைகளில் குறிப்பிடும் போது, முதல் குறிப்பிடல் முழுப்பெயராக இருத்தல் வேண்டும். அடுத்து வரும் குறிப்பிடல்கள் குறுக்கமான பெயராக இருக்கலாம் இது ஆங்கில விக்கி, பிற ஊடகங்கள் பெரும்பாலானவற்றில் (ஆய்விதழ்களில் இறுதிப்பெயர் மட்டும் பின்பற்றுவர் என நினைக்கிறேன்) பின்பற்றும் வழக்கம். மேலும் முதல் பயன்பாட்டுக்கு அடுத்த பயன்பாடுகளில் பெரும்பாலானவற்றில் இறுதிப்பெயரைத் தான் குறிப்பிட்டு எழுதுவர். முதற் பெயரைக் குறிப்பிடமாட்டார்கள் (எ.கா, ஒபாமா, சிங், படேல், சின்கா, மேனன், நேரு தான். பராக், ரஞ்சித், வல்லபாய், யஷ்வந்த், சிவசங்கர், ஜவகர்லால் அல்ல). முதற்பெயர் மிகப்பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இடங்களில் விதிவிலக்கும் உண்டு (சச்சின், மம்தா, அமிதாப் போல). எனவே முதன்மைக் கட்டுரை இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒரு கட்டுரையில் முதலில் குறிப்பிடும் இடத்தில் முழுபெயரையும் (சாதியோ சாதி அற்றதோ), பின்பு குறிப்பிடும் இடங்களில் குறுக்கத்தைக் குறிப்பிட வேண்டும். அக்குறுக்கத்தில் சாதி நீக்கம் என்று முனைவதை விட, பொருள் பொருத்தமானது எது என்று அணுகுவதே சிறந்தது. (இக்குறிப்பிட்ட எடுத்துக் காட்டுகளில் செட்டியார் என்பதை விட, அவிநாசிலிங்கம் என்பதே பொருந்தும். உவேசா, பிள்ளை, சித்திலெப்பை, படையாச்சி போன்ற இடங்களில் பொருத்தமான குறுக்கங்கள் சில இடங்களில் சாதியுடனும், சாதியின்றும் அமையலாம்). இக்கட்டுரையில் முதலில் குறிப்பிடும் இடத்தில் முழுப்பெயரையும் இட வேண்டும், பின்பு அதே பெயர் குறிப்பிடப்பட்டால், குறுக்கிக் கொள்ளலாம். அவ்வாறு குறுக்கும் போது, சாதி, சீர்திருத்தம் பாராமல், பயன்பாட்டு நோக்கில் குறுக்குவது சிறந்தது. சாதி சீர்திருத்தக் கண்ணோட்டம் என்பது பெயர்ப் பயன்பாட்டில் விக்கியில் வரக்கூடாது என்பதே என் நோக்கம்--சோடாபாட்டில்உரையாடுக 11:07, 16 பெப்ரவரி 2012 (UTC)

உங்களின் இந்தக் கடைசி மறுமொழி பொதுவாக ஏற்புடையதாக இருக்கிறது. சில குறிப்புகள்:

  • //எனவே முதன்மைக் கட்டுரை இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒரு கட்டுரையில் முதலில் குறிப்பிடும் இடத்தில் முழுபெயரையும் (சாதியோ சாதி அற்றதோ), பின்பு குறிப்பிடும் இடங்களில் குறுக்கத்தைக் குறிப்பிட வேண்டும். // பிற ஊடகங்களில் யாரைக் குறிப்பிடுகிறோம் என்று அடையாப்படுத்த முழுப்பெயர் தேவைப்படுகிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் முதன்மைக் கட்டுரை உள்ள பெயர்களுக்கு இவற்றை வலியுறுத்தத் தேவை இல்லை. திரு. வி. க என்று குறிப்பிடுவது இலகுவா திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் என்று குறிப்பிடுவது இலகுவா? முதன்மைக் கட்டுரைகள் உள்ள பெயர்களுக்கு உள்ளிணைப்பு கொடுத்தால் போதும். முழுப்பெயரை வலியுறுத்தத் தேவை இல்லை.
  • தமிழ்நாட்டில் கடைசிப் பெயரை விட முதற்பெயரையோ மரியாதை நிமித்தம் முழுப்பெயரையுமோ சுட்டும் வழக்கம் அதிகம். குறிப்பாக, தமிழகப் பெயர்கள் இவ்வாறே வழங்கப்படுகின்றன. திருமதி. காந்தி, கருணாநிதி, senior / junior போன்ற ஆங்கில ஊடக வழக்குகள் குறைவு.
  • இப்போதும் கூட உள்ளூர் திருமண அழைப்புகளில் சாதிப்பெயர்கள் இடம்பெறுவதையும் ஆட்கள் அவ்வாறே அழைக்கப்படுவதையும் காண்கிறேன். ஆனால், அவர்களின் முறையான பதிவு செய்யப்பட்ட முழுப்பெயராக சாதிப் பின்னொட்டு அற்ற முதற்பெயர் மட்டுமே இருக்கிறது.
  • சுயமரியாதை இயக்கம் ஆட்களின் பெயரில் மட்டுமல்ல சமூகத்தில், மொழிநடையில் என்று அனைத்திலுமே தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. தற்கால எழுத்து நடையில் ஒரு பெயரினை எப்படிக் குறிப்பிடுகிறோம் என்பதும் இந்தத் தாக்கத்துக்கு உட்பட்டதே.

ஒரு ஐயம்: முதன்மைக் கட்டுரை இல்லாவிட்டாலும் முழுப்பெயர் இருக்க வேண்டும் என்கிறீர்கள். குறிப்பிடத்தக்கவராக இல்லாதவர்களுக்கு இது தான் முழுப்பெயர் என்று உறுதி செய்வது எவ்வாறு? அருணாச்சலக் கவுண்டர், பழனியப்பக் கவுண்டர் என்று தான் அழைக்கப்பட்டனர் என்பதற்கு என்ன சான்று? அந்தக் காலக் கட்டத்தில் வாழ்ந்தார்கள் என்பதற்காக எல்லார் பெயர்களிலும் அவரவர் சாதியைச் சேர்த்து விடலாமா? பெ. தூரனின் மனைவி, மகன், மகள்கள் முழுப்பெயர் என்ன? நீங்கள் பரிந்துரைக்கும் சீர்மை கருதி இந்தப் பெயர்களிலும் தக்க சான்றுகளுடன் முழுப்பெயர் சேர்த்து விடலாமே :) --இரவி 11:33, 16 பெப்ரவரி 2012 (UTC)

குறிப்பிடத்தக்கவராக இல்லாதவர்களுக்கு இது தான் முழுப்பெயர் என்று உறுதி செய்வது எவ்வாறு? அருணாச்சலக் கவுண்டர், பழனியப்பக் கவுண்டர் என்று தான் அழைக்கப்பட்டனர் என்பதற்கு என்ன சான்று?
இவ்வகை ஐயமுள்ள சந்தர்ப்பங்களில் உசாத்துணை / மூலநூல்களில் உள்ளவற்றை அப்படியே பின்பற்றலாம். குறும்பன் அச்சு நூல்களின் / உசாத்துணைகளின் அடிப்படையில் தான் எழுதியிருப்பார் என்று நம்புகிறேன். எனவே அவை அப்படியே இருக்கலாம். தினமணியில் செ. இராசு எழுதிய கட்டுரையில் ”கவுண்டர்” பயன்படுத்தியுள்ளதாகவே உள்ளது. (குறும்பன் - இதைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்). அவர்கள் “கவுண்டர்” என்ற பின்னொட்டு அவர்கள் பயன்படுத்தவில்லை என்று தெரியவந்தால் தாராளமாக நீக்கி விடலாம். இதற்கு எனக்கு மறுப்பொன்றும் இல்லை. பெயர்களை நீக்குவது சேர்ப்பதும் பற்றியான என் கண்ணோட்டத்தில் சாதி உணர்வு / சாதி ஒழிப்பு / சமூக சீர்திருத்தம் எதுவும் கிடையாது. .
அந்தக் காலக் கட்டத்தில் வாழ்ந்தார்கள் என்பதற்காக எல்லார் பெயர்களிலும் அவரவர் சாதியைச் சேர்த்து விடலாமா?
கூடாது. அனைத்து சாதிகளும் சாதிப்பின்னொட்டுகளைப் பின்பற்றவில்லை. பெண்களும், தாழ்த்தப்பட்ட சாதியினரும், மிகப்பெரும்பாலும் சாதிப்பெயர் பயன்படுத்தவில்லை. மேலும் பல சாதிகள் பல காலகட்டங்களில் சாதிப்பெயர்களையும் சாதிப்பட்டங்களையும் மாற்றியுள்ளனர். எனவே நம்பகத்தன்மையுடைய தரவுகளின் அடிப்படையில் (சாதிச் சங்க நூலென்றால் பெரும்பாலும் சாதிப்பின்னொட்டை சேர்த்து விட்டிருப்பார்கள், அவற்றைச் சொல்லவில்லை :-)) எழுதலாம். தமிழ்நாட்டில் சாதிப்பெயர் பயன்பாடு பற்றி ஒரு கட்டுரைக்குத் தரவுகள் திரட்டி வருகிறேன். விரைவில் எழுதிவிடுகிறேன்.


நீங்கள் பரிந்துரைக்கும் சீர்மை கருதி இந்தப் பெயர்களிலும் தக்க சான்றுகளுடன் முழுப்பெயர் சேர்த்து விடலாமே
இரவி, நான் எங்கும் சாதிப்பெயர் பயன்பாடு சீர்மை பரிந்துரைக்கவில்லை. பெயர்களைப் பதிவு செய்யும்போது, புற உசாத்துணைகளில் உள்ளது உள்ள போலவே பதிவுச் செய்யச் சொல்கிறேன். சீர்மைக்காக சாதியை வலிந்து சேர்க்கவோ நீக்கவோ சொல்லவில்லை. ஒருவர் சாதிப்பெயர் பயன்படுத்தியிருந்தால், அவரைப் பற்றிய நூல்களும் ஊடகங்களும் எழுதியிருந்தால் அதை அப்படியே பதிவு செய்வோம், இல்லையெனில் விட்டுவிடுவோம். விக்கியில் பெயரிடலில் சாதி (சமயம்/இனக்குழு/கட்சி) அல்லது சமூக சீர்திருத்தம் என்ற கண்ணோட்டமே வரக்கூடாது என்பது தான் நான் வலியுறுத்துவது. உசாத்துணை நூல்களில் சாதிப்பின்னொட்டு இருந்தால் விக்கிப்பீடியாவிலும் உண்டு, இல்லையேல் இல்லை. அவ்வளவு தான்.--சோடாபாட்டில்உரையாடுக 11:58, 16 பெப்ரவரி 2012 (UTC)
உரையாடல் திசைமாறிப் போய்விட்டது போல் தெரிகிறது. பெரியசாமித்தூரன் என்பது ஒரு பெயர் தான் என்று முடிவாகி விட்டது. அது பெரியசாமி தூரன் என்ற இரண்டு பெயர்களல்ல. இதனால் கட்டுரைகளில் தூரனை விடுத்துப் பெரியசாமி என மட்டும் எழுத முடியாது.--Kanags \உரையாடுக 11:16, 16 பெப்ரவரி 2012 (UTC)
ஒரே பெயர் என்றால் பெ. தூரன் என்று குறுக்கி எழுதுவது சரியா? தினமணி கூட இவ்வாறே குறிப்பிடுகிறது.--இரவி 11:34, 16 பெப்ரவரி 2012 (UTC)


தமிழகச் சாதிச்சூழல் எனக்குப் பரிச்சயமற்றது. அவ்வகையில் சாதிப் பெயர்ப் பின்னொட்டுக்களின் சமூகத் தாக்கம், அதுனுடனிணைந்த அரசியலைக் கவனத்தில் கொள்ளாமல் பின்வரும் சோடாபாட்டிலின் கருத்துடன் உடன்படுகிறேன்.

//பெயர்களைப் பதிவு செய்யும்போது, புற உசாத்துணைகளில் உள்ளது உள்ள போலவே பதிவுச் செய்யச் சொல்கிறேன். சீர்மைக்காக சாதியை வலிந்து சேர்க்கவோ நீக்கவோ சொல்லவில்லை. ஒருவர் சாதிப்பெயர் பயன்படுத்தியிருந்தால், அவரைப் பற்றிய நூல்களும் ஊடகங்களும் எழுதியிருந்தால் அதை அப்படியே பதிவு செய்வோம், இல்லையெனில் விட்டுவிடுவோம். விக்கியில் பெயரிடலில் சாதி (சமயம்/இனக்குழு/கட்சி) அல்லது சமூக சீர்திருத்தம் என்ற கண்ணோட்டமே வரக்கூடாது என்பது தான் நான் வலியுறுத்துவது. உசாத்துணை நூல்களில் சாதிப்பின்னொட்டு இருந்தால் விக்கிப்பீடியாவிலும் உண்டு, இல்லையேல் இல்லை.//

பழந்தமிழ் நூல்களின் தொகுப்பு வேலைகளின் போதும் அவை அச்சுவாகனமேறியபோதும் சீர்திருத்தக் கண்ணோட்டத்தால் இழந்தவை ஏராளம். ஒரு சமூக வரலாற்றாசிரியருக்கு இத்தகைய சாதிப் பின்னொட்டுக்கள் கொடுக்கக் கூடிய தகவல்கள் பெருமளவானதாக இருக்கலாம். தகவல்களை நல்ல தகவல், கூடாத தகவல் என்பதாகப் பிரித்து வடிகட்டுவது பொருத்தமில்லை. நன்றி. கோபி 12:57, 16 பெப்ரவரி 2012 (UTC)

மீண்டும் என் மறுப்பு[தொகு]

  • இங்கே வேறுபாட்டைப் பாருங்கள். எது நடுநிலையாகவும் சாய்வில்லாமலும், கட்டுரை சொல்ல வந்தக் கருத்தைச் சொல்கின்றது என்று கூறுங்கள்.
  • சோடாபாட்டில் சொல்வது போல இங்கு ஆவணப்படுத்தவில்லை, ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை இன்றைய தலைமுறைக்கும் இனி வரும் தலைமுறைக்கும் பயன்படுமாறு, தற்கால நடையில், செறிவாகவும், நடுநிலையாகவும் எழுதி, நல்வரவேற்புணர்வுடன் எல்லோரும் உள்வாங்கும் முகமாக எழுதப்படுவது. அதற்கு மேலே சுட்டியுள்ள இரண்டு பதிவில் எது நல்லது? மூல ஆவணங்களுக்குச் சுட்டுகள் தரலாம், முன்னே எழுதப்பட்ட நூல்களுக்கும், கட்டுரைகளுக்கும் சுட்டுகள் தரலாம். மூல ஆவணத்தில் ஒரு வரி இருந்து, அந்த வரி இக் கட்டுரைக்கு மிகமுக்கியமான செய்தியைத் தருவதாயின் அதனை, முதல்நூல் சொற்றொடரை, அப்படியே தரலாம். மற்றபடி "பழனிவேலப்பனார்-பாவாத்தாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்" என்று சொல்வதில் எந்தத்தவறும் இல்லை.
  • இந்தக் கட்டுரையைப் படித்து ஒருவர் ஆய்வு செய்து முன்னாளில் சாதிப்பெயர் வழங்கியதா இல்லையா என்று முடிவுக்கு வருவார் எனில் அவருக்கு ஆய்வு என்றால் என்ன, எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை என்றுதான் பொருள்!
  • நான் சாதியப் பின்னொட்டுகளாக அறியபப்டும் அனைத்தையும் அறவே நீக்கப் பரிந்துரைக்கவில்லை. பல எடுத்துக்காட்டுகளையும் தந்தேன். இக்கட்டுரையில் மேலே சுட்டியவாறு நான் மாற்றி எழுதியிருந்தபடி எழுதினால், கட்டுரையின் கருத்துகள் தடையின்றி மேலே நகர்ந்து செல்கின்றனவா இல்லையா? இதுவே கேள்வி. மீண்டும் ஒருமுறை "diff" படிவத்தைப் பார்க்கவும்.

--செல்வா 17:22, 16 பெப்ரவரி 2012 (UTC)

சாதிக்கும் நடுநிலைமைக்கும் என்ன சம்மந்தம்? ஒருவர் அஆஇஈ சாதியைச் சார்ந்தவர் எனக்குறிப்பிடுவதில் எங்கு நடுநிலைமைக் கொள்கை வெட்டுபடுகின்றது என எனக்கு உண்மையாகவே புரியவில்லை. ஒரு நபரின் முழு பெயர் ஒரே பக்கத்தில் மீண்டும் மீண்டும் வரும் பொழுது குறுக்குவது நல்லது. அப்பொழுது சாதிப்பெயர் அவசியமற்றது எனத் தோன்றினால் அதனை விட்டு எழுதலாம். அப்பொழுது கூட சாதி என்ற விடயம் முடிவெடுக்க வரக்கூடாது, எவ்வாறு உலகப்பார்வையில் பெருவாரியானவர்கள் குறுக்குவார்களோ / நபரை அழைப்பார்களோ அவ்வாறே குறுக்க வேண்டும்(இங்கு en:WP:NOT#DEM செல்லாது, NOT#DEM கருத்தாடல்களுக்கு மட்டுமே என்பது என் புரிதல்).
அவ்வாறு குறுக்கும் பொழுது கூட, பழனிவேலப்பர் எனக் குறுக்குவது தவறு. பழனிவேலப்பன் என்பதே சரி. அர்,ஆர் போன்ற மரியாதை விகுதிகளுக்கு விக்கியில் இடம் கிடையாது.* காந்தி யை, *ஜி / * காந்திஜி என அழைக்கப்பட்டாலும் விக்கியில் வெறும் * காந்தி தான். en:WP:HONORIFIC ஸ்ரீகாந்த் 20:58, 16 பெப்ரவரி 2012 (UTC)
//சாதிக்கும் நடுநிலைமைக்கும் என்ன சம்பந்தம்?// நீக்ரோ, நிக்கர், பாப்பான், சக்கிலி, பாரதியார் சொன்ன "ஈனப் பறையருக்கும்", ஆழ்வார் சொன்ன "சண்டாள சண்டாளராயினும்", "சூத்திரன்" முதலான சொற்பயன்பாடுகளுக்கும் இன, சாதி வேறுபாட்டுக்கும் "நடுநிலைமைக்கும்" என்ன சம்பந்தம் என்று கேட்பீரா? இந்திய, தமிழச் சூழலில் சாதி பற்றிய குறிப்புகள் கட்டுரையின் கருப்பொருளுக்குத் தேவையில்லாத இடத்தில் வேண்டாம். நான் மேலே காட்டியிருந்த "diff" படிவத்தில் சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டதால் கட்டுரையைப் படிப்பதில், கட்டுரையின் கருத்துகளை உள்வாங்குவதில் என்ன குறை இருந்தது? நான் NOT#DEM பற்றிச் சொன்னது இங்கு கருத்தாடலில் எத்தனை பேர் ஒரு கருத்தை ஆதரிக்கின்றார்கள் என்பதைப் பற்றித்தான். 10 பேர் சாதிப் பெயர் இக்கட்டுரை எங்கெல்லாம் குறிப்பிடப்பட்டதோ அங்கெல்லாம் இருக்கவேண்டும் என்றும் 7 பேர் வேண்டாம், தேவை இல்லை என்று கூறினாலும், வேண்டுமா வேண்டாமா என்பது இவ்வெண்ணிக்ககயின் அடிப்படையில் இல்லை. கூறப்பட்ட கருத்துகளின் அறிவடிபப்டையை, அற அடிப்படையை சாய்வின்றி, நடுநிலையாக, திறந்த மனத்துடன் அணுகி முடிவு செய்ய வேண்டியது கடமை. பழனிவேலப்பர் (பழனிவேலப்பன் என்பதற்கு மாறாக) என்பது தமிழ்ச்சூழலில் ஏற்றுக்கொள்ளப்படுவது. en:WP:HONORIFIC என்பது, இங்கும் இது போல் பிற மொழிவிக்கிகளிலும் வேறாக உணர்ந்து செயற்படுத்தப்படும் (ஆங்கில விதியே இங்கும் பயன்படவேண்டும் என்பதல்ல. இவை பண்பாடு சார்ந்தது). "பழனிவேலப்பர் அவர்கள்" என்றோ வேறு விதமாகவோ பெருமைச்சுட்டுகள் மிகையாகத் தருவது தவிர்க்கப்படலாம். சுப்பிரமணியன் (பாரதியாரை) என்றும் உ.வே. சாமிநாதன் என்றும் அழைப்பது தமிழ் மரபில் இல்லை. ஆனால் கம்பன், வள்ளுவன், கபிலன், இராசராசன் என்று காலத்தால் மிக முற்பட்டவரை அப்படி அழைப்பதும் வழக்கமாக இருந்த பொழுதும். பாரதியைக் கூட நல்ல கவிஞன் ஒருவன் "பாரதி அப்படிச் சொன்னான்" என்று சொல்வது கூடும். ஒரு குழந்தையோ, பொதுவாக ஒரு தமிழனோ நம்மில் ஒருவரிடம், "பாரதி அப்படிச் சொன்னானா?" , "உ.வே.சாமிநாதன் அப்படி எழுதினானா?" என்று ஒருவரைப் பார்த்துக் கேட்பது அவ்வளவு முறை அல்ல. ஆங்கிலத்தில் உயர்வு-தாழ்வு குறிக்கும் ஒட்டுகள் அண்மையில் அற்றுவிட்டன, ஆனால் இடாய்ச்சு போன்ற மொழிகளிலும் இந்திய மொழிகளிலும் உண்டு. ஆங்கிலத்திலும், தந்தையை "Sir" என்று அழைக்கும் பழக்கம் மிக அண்மைக்காலம் வரையும் இருந்தது. சாதிப் பின்னொட்டுக்கு மாறாக -அர் முதலான சிறு விகுதி சேர்த்து மதிப்புக் குன்றாமையைக் காட்டலாம். தமிழில் காந்தி என்று சொன்னாலும், காந்தி எழுதினார் என்று வினைச்சொல்லில் அவருக்குண்டான முறைசார்ந்த மதிப்பைக் காட்டுகின்றோம். ஆங்கிலத்தில் இப்படிக் காட்டுதல் இயலாது. மீண்டும் ஒன்னொரு முறையும் கேட்கிறேன். "diff" படிவத்தைப் பார்த்து, திறந்த மனத்துடன் அணுகி, நான் நீக்கியிருந்த இடங்களில் அந்த நீக்கங்களுக்குப் பிறகு கட்டுரையின் வரிகள் இயல்பாய் கருத்தை முன்னெடுத்துச் செல்கின்றதா இல்லையா என்று சொல்லுங்கள். --செல்வா 22:50, 16 பெப்ரவரி 2012 (UTC)

//எது நடுநிலையாகவும் சாய்வில்லாமலும், கட்டுரை சொல்ல வந்தக் கருத்தைச் சொல்கின்றது என்று கூறுங்கள்//

செல்வா, உள்ளதை உள்ளபடி ஆவணப்படுத்துவது நடுநிலை என்பர் சிலர். சாதிப்பெயர் விடுத்து எழுதுவது தற்காலத் தமிழ்ச் சூழலுக்கு ஏற்ற நடுநிலை என்பது தமிழ் நாடு அரசுப் பாடநூல் நடையில் இருந்து தெரிகிறது. எனவே, எது நடுநிலை என்ற கண்ணோட்டம் மாறுகிறது. எனினும், ஒரு விக்கிப்பீடியா கட்டுரையில் சாதிப் பெயர் இல்லாமல் போவதால் எந்தத் தகவல் இழப்பும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தற்காலத் தமிழ்ச் சூழலில், சாதிப் பெயர் விடுத்தே வாசித்துப் பழகியதால் இப்படி ஒரு கட்டுரையில் எல்லா இடங்களிலும் சாதியைக் குறிப்பிட்டே ஆக வேண்டுமா என்று எனக்குத் தோன்றுவதும் உண்மை. இது என் தனிப்பட்ட கருத்து.

en:WP:HONORIFIC குறித்து உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். சங்க காலப் புலவர்கள் பெயர்கள் பலவற்றில் ஆர் விகுதி உள்ளது. காக்கைப்பாடினியர், செம்புலப் பெயல் நீரார் என்று. இந்த மரபை sir, ji சேர்ப்பது போன்ற மரபோடு ஒப்பிட முடியாது. பெயரில் மதிப்பைக் காட்டாவிட்டாலும் வினையில் மதிப்பைக் காட்டுவது தமிழ் மொழி / பண்பாடு சார்ந்த மரபு. இந்த மரபைக் குலைக்கத் தேவை இல்லை. அதே வேளை, ஒருவர் குற்றவாளி என்பதால் அவன், இவன் என்று எழுதும் வெகுமக்கள் ஊடகப் போக்கு இல்லாமல் பார்த்துக் கொண்டால் போதும். உண்மையில், முந்தைய காலத்தில் புழங்கி வந்த சாதிப்பெயர்களே sir, ji நிமித்தமான மரியாதைச் சொற்கள் / பட்டப் பெயர்கள் என்பதால் மேற்கண்ட ஆங்கில விக்கிக் கொள்கைக்கு ஏற்ப அவற்றை விடுத்து எழுதுவதும் தகுமே :) அந்தக் காலத்தில் ஆதிக்க சாதிக்காரர்களை பட்டப்பெயர் இல்லாமல் அழைக்க முடியாது. ஆனால், ஒடுக்கப்பட்ட சாதிக்காரர்களுக்கு இவ்வாறு சாதிப் பெயரோ மரியாதைச் சொல்லோ தரத் தேவை இல்லாமல் இருந்தது. --இரவி 08:40, 17 பெப்ரவரி 2012 (UTC)

பெயரில் மதிப்பைக் காட்டாவிட்டாலும் வினையில் மதிப்பைக் காட்டுவது தமிழ் மொழி / பண்பாடு சார்ந்த மரபு. இந்த மரபைக் குலைக்கத் தேவை இல்லை

நான் WP:HONORIFIC ஐ சுட்டும் பொழுது பெயரை மட்டும் தான் குறித்தேன். WP:HONORIFIC என்பதே பெயர்களுக்கு மட்டும் தான் பொருந்தும். யாரும் இங்கு வினையில் ஒருமையில் எழுத கேட்கவில்லை. சங்க கால புலவரை எழுதுவது வேறு(அவர்கள் NOTABLE), ம._ப._பெரியசாமித்தூரனின் தந்தையின் பெயரில் மதிப்பைக் காட்டுவது வேறு. ஒரு இழையில் ஒன்றை மட்டுமே விவாதித்தால் நல்லது. முதல் முறை சாதிப்பெயருடன் தான் வரவேண்டும் என்ப்து என் கருத்து, நீண்ட மறுமொழி பின்பு (bore அடிச்சா வரேன்) ஸ்ரீகாந்த் 09:23, 17 பெப்ரவரி 2012 (UTC)

வினையில் மதிப்பைக் காட்டும் மரபு சில மொழிகளில் உண்டு. சில மொழிகளில் இல்லை. அதே போல் பெயரில் மதிப்பைக் காட்டும் மரபு தமிழில் உண்டு. இந்தத் தமிழ் மரபைத் தடுக்கத் தேவை இல்லை. உங்கள் வாதத்தின் அடிப்படையில் பெரியசாமித் தூரனின் தந்தை, சிற்றப்பா மற்றும் பலர் குறிப்பிடத்தக்கவர்கள் இல்லை என்றால், மரியாதை நிமித்தமான அவர்களது பட்டப்பெயர்களை மட்டும் ஏன் இட வேண்டும்? ----இரவி 10:28, 17 பெப்ரவரி 2012 (UTC)

தூரன் -> பெரியசாமி[தொகு]

தூரன் காரணமாக இருந்தார். -> பெரியசாமி காரணமாக இருந்தார். என்று மாற்றலாமே. --வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 07:10, 15 பெப்ரவரி 2012 (UTC)

அருணாசலக்கவுண்டர்[தொகு]

சித்தப்பா அருணாசலக்கவுண்டர் கூறிய கதைகளும், உறவினர் அருணாசலக்கவுண்டர் கற்றுக் கொடுத்த

ஒரே நபரா, இரண்டு நபர்களா? ஸ்ரீகாந்த் 11:08, 16 பெப்ரவரி 2012 (UTC)

இரண்டு நபர்கள்--சோடாபாட்டில்உரையாடுக 12:46, 16 பெப்ரவரி 2012 (UTC)

கல்வித் தகுதி[தொகு]

கட்டுரையில் B.A முடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், பல இணைய உசாத்துணைகளில் இவர் கல்லூரி இறுதித் தேர்வைப் புறக்கணித்ததாகச் செய்தி உள்ளது. இதனைச் சரி பார்த்துத் தெளிவுபடுத்த வேண்டும். மற்றபடி, ஒரு நல்ல அறிஞரைப் பற்றிய அருமையான கட்டுரை. கட்டுரையை எழுதிய அனைவருக்கும் நன்றியும் பாராட்டுகளும்--இரவி 12:50, 16 பெப்ரவரி 2012 (UTC)

பதிப்புரிமை சரி பார்க்க வேண்டும்[தொகு]

கட்டுரையின் குறிப்பிடத்தக்க பகுதி ஒத்த சொற்றொடர் அமைப்புடன் தினமணிக்கட்டுரையில் உள்ளது. இதில் பதிப்புரிமை பிரச்சினை ஏதும் உள்ளதா? குறிப்பிட்ட தினமணிக் கட்டுரையை உசாத்துணையாகத் தருவது பிரச்சினையைக் குறைக்குமா என்று பார்க்க வேண்டும்.--இரவி 19:54, 16 பெப்ரவரி 2012 (UTC)

தமிழ்நாடு அரசின் பாடப் புத்தக்கத்தில் சாதிப் பெயர்கள்[தொகு]

தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தக்கத்தில் இருந்து:

முதல் பாடம்: பரிதிமாற் கலைஞர்

ஒன்பதாம் பாடம்: திருவருட்பிரகாச வள்ளலார்

  • வள்ளலாரின் தந்தைப் பெயரை இராமையா என்று குறிப்பிடுகிறது. நாம் இராமையா பிள்ளை என்கிறோம்.

தமிழ்நாடு அரசின் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தக்கத்தில் இருந்து:

ஐந்தாம் பாடம்: திரு. வி. கலியாண சுந்தரனாரின் தமிழ்ப்பணி

  • திரு. வி. க. வின் பெற்றோர் பெயர் விருத்தாசலனார் - சின்னம்மா என்கிறது. நாம் சாதிப்பெயரோடு சேர்த்தே எழுதுகிறோம்.
  • திரு. வி. க கதிரைவேலனாரிடம் தமிழ் கற்றதாகச் சொல்கிறது. நாம். நா. கதிரவேற்பிள்ளை என்று சாதிப்பெயர் சேர்த்தே சொல்கிறோம்.

குறிப்புகள்:

  • தமிழ்நாடு அரசுப் பாடப்புத்தகம் சமூல நல நோக்கில் முந்தைய பெயர்களைச் சீர்திருத்திக் கூட எழுதி இருக்கலாம். ஆனால், முந்தைய பெயர்களில் சாதிப் பெயர் விடுத்து எழுதுவது தற்காலத் தமிழ் நடைக்கு உட்பட்ட ஒன்றே என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அரசு பாடப்புத்தக்கத்தில் உள்ள எல்லா முன்மாதிரிகளையும் அப்படியே நாம் ஏற்க வேண்டும் என்று இல்லை. ஆனால், மற்ற பல இடங்களிலும் தற்காலத் தமிழ் நடைக்கு பிற ஊடகங்களையும் அரசு பாடப்புத்தகங்களையும் உசாத்துணையாக வைக்கும் போது, இந்த இடத்திலும் கருத்தில் கொள்ளலாம்.
  • தமிழ்நாடு அரசு சீர்திருத்த நோக்கில் இவ்வாறு எழுதியிருக்கக்கூடியது நடுநிலையன்று என்று கருதினால், பிற ஊடகங்களில் சாதிப்பெயர் சேர்த்து எழுதுவதும் சாய்வுக்கு உட்பட்டதே என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். சாதிப்பெயர் சேர்த்து எழுதுவதற்கு மூன்றே காரணங்கள் தாம்: 1. உள்ளதை உள்ளபடி ஆவணப்படுத்தல். 2. எல்லாரும் எழுதுவதால் எழுதுவது. 3. இன்னார் இன்ன சாதியைச் சேர்ந்தவர் என்று சுட்டுவதற்காகவும் பெருமைக்காகவும் எழுதுவது. காமராசர் பெயரில் கூட சாதிப்பெயர் சேர்ப்பவர்கள் உள்ளார்கள்.
  • தெ. பொ. என்று கூகுளில் தேடினாலே தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்று இரு விதமாகவும் எழுதுவதைக் காணலாம். ஒரே பெயரை சாதிப்பெயர் விடுத்தும் சேர்த்தும் சுட்டும் போக்கு பரவலாகவே உள்ளது.
  • நாம் கொடுக்கிற புற இணைப்புகளிலும் முதன்மைக்கட்டுரைகளிலும் சாதிப்பெயர் ஆவணப்படுத்தவே செய்கிறோம். தமிழ் விக்கிப்பீடியா மட்டுமே தமிழர் அறிவின் ஒரே ஆவணச் சான்று கிடையாது. நாம் ஒரு சில கட்டுரைகளில் ஒரு சில இடங்களில் சாதிப்பெயர் விடுத்து எழுதுவதால் வரலாற்றை மறைப்பதும் அழிப்பதும் ஆகாது. --இரவி 08:40, 17 பெப்ரவரி 2012 (UTC)
மிக்க நன்றி இரவி. மிகவும் பொறுமையாக இவற்றைத் தொகுத்து இங்கு வழங்கியமைக்கு!--செல்வா 14:45, 17 பெப்ரவரி 2012 (UTC)