பேச்சு:மௌடம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மௌடம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

சுந்தர், மிகவும் அருமையான செய்தி. முதல் வரியை மாற்றியுள்ளேன். மரங்கள் எல்லாம் 48க்கு ஒருமுறை ஒன்றாக ஒருசேர பூத்து மடிவதே பெரும் வியப்பான செய்தி, கருவான நிகழ்வும் கூட. எப்பொழுதுமே மூங்கில் மரங்கள் இப்படித்தான் 48 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்குமா, அல்லது, இப்படி ஒருசேர பூப்பது மட்டும் 48 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வதா (மற்ற காலங்களிலும் தனித்தனியாக மரங்கலௌக்கு மரம் வெவ்வேறு காலங்களில் பூப்பதுண்டா?) இதைப்ப்பற்றியெல்லாம், சற்று விளங்கிகொண்டு இது பற்றி இன்னும் எழுதலாம். நல்ல ஆர்வத்தைத் தூண்டும் குறுங்கட்டுரை எழுதியுள்ளீர்கள்.--C.R.Selvakumar 13:31, 7 ஜூன் 2006 (UTC)செல்வா

உங்கள் கேள்விக்கான விளக்கத்தை கட்டுரையில் சேர்த்துள்ளேன். பார்க்கவும். மற்றபடி உங்கள் மாற்றம் நன்று. மேலும் செய்திகளை தொடர்புடைய ஆங்கில விக்கி கட்டுரையிலிருந்து (en:Mautam) பெற்று எழுதலாம். மேலும், ஒவொரு தமிழ்க்கட்டுரையிலும் இறுதியில் [[en:<en wiki topic>]] என்ற நிரல் துண்டை இணைத்துவிட்டால், தாமாக கட்டுரையின் இடதுபுறம் உள்ள சட்டத்தில் ஆங்கில விக்கி கட்டுரைக்கு இணைப்பு ஏற்பட்டுவிடும் (அந்த தலைப்பில் (<en wiki topic>) அங்கு கட்டுரை உள்ளதா என அறிந்தபின் இணைக்கவும்.) இந்த கட்டுரைப்பக்கத்திற்குச் சென்று அந்தச் சட்டத்தில் பாருங்கள். நன்றி. -- Sundar \பேச்சு

சில திருத்தங்கள்[தொகு]

  • லால்தெங்கா முன்னாள் முதல்வர் என்று ஆங்கில விக்கி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர, உயிரோடும் இல்லை என்று அவரைப் பற்றிய ஆங்கில விக்கி கட்டுரை கூறுகிறது.
  • மிசோர நாட்டுப் பஞ்ச முன்னணி என்பது மிசோரம் நாட்டு பஞ்சம் முன்னணி என்பதை விடப் பொருத்தமாக இருக்கிறது.

இவை குறித்த மாற்றங்களை சேர்த்துள்ளேன். முதற் பக்க உங்களுக்குத் தெரியுமா? பகுதிக்கு பொருத்தமான கட்டுரை. சுவையான தகவலுக்கு நன்றி சுந்தர்--ரவி 09:42, 8 ஜூன் 2006 (UTC)

நன்றி இரவி. தேவையான திருத்தங்களைச் செய்துள்ளேன். உண்மையில் உங்களுக்குத் தெரியுமா பகுதிக்கு மிகவும் ஏற்ற தகவல் இது. -- Sundar \பேச்சு 09:51, 8 ஜூன் 2006 (UTC)

மொழிபெயர்ப்பு உதவி தேவை[தொகு]

"Predator satiation" என்பதை நானாக கொன்றுண்ணிகளைத் தெவிட்டவைத்தல் என்று மொழிபெயர்த்துள்ளேன். சரியா? -- Sundar \பேச்சு 13:47, 24 ஜூன் 2006 (UTC)

Beast of prey like lion and tiger is called கோண்மா (கொள்> கோள் + மா = விலங்கு). இது தமிழ் அகராதியில் உள்ள சொல் (எடுத்துக் காட்டாக கழக தமிழ் அகராதி, தமிழ் லெக்சிகன்). கோட்பு என்றால் கொள்ளுதல், வலிமை என்றும் பொருள் கூறுகின்றது. என்வே கோண்மா என்பது predator. நம் மக்கள் ஆங்கிலத்தில் தமக்கு அறியா ஒரு சொல்லைக் காண நேர்ந்தால், ஒழுக்கமாக ஆங்கில அகராதியை பார்த்து பொருள் கொள்ளுவார்கள் (ஆங்கிலேயரும் மற்றோரும் இப்படித்தான்). ஆனால் சட்டென்று விளங்கா தமிழ்ச் சொல் ஒன்றைக் கண்டால் இவ்வாறு அகராதி பார்க்கும் பழக்கம் தமிழர்களுக்கு (அதுவும் படித்த தமிழர்களுக்கும்) இல்லாததாலேயே பல இடர்கள் ஏற்படுகின்றன. கொன்றுண்ணி என்னும் சொல்லாக்கமும் இதனால் விளைந்ததே. இன்னொறு சொல்லும் துணை தரும். Birds of prey என்பதற்கு பறிபுள் என்றும் ஒரு நல்ல சொல் ஆளலாம். இதனால் பறிணி என்றாலும் predator என்னும் பொருளதே. எனவே விதையை உண்ணும் எலி, பெருச்சாளி போன்ற கொறிணிகளை இங்கு உணர்த்துவதால் பொதுத் தொடராகிய predator satiation என்பதில் கொன்றுண்ணி என்பதைக்காட்டிலும் பறிணி தெவிட்ட மலியச் செய்தல் (மலிவு எனில் மிக அதிகமாக கிடைப்பது, ஆக்குவது; மல்லி என்பது பல இதழ்களை அடுக்காகக் கொண்டிருப்பதாலும், அதிகமாக மணம் பரப்புவதாலும் பெற்ற பெயர்) என்பது பொருதும். எனவே கோண்மா தெவிட்டல், பறிணி தெவிட்டல், {கோண்மா, பறிணி} தெவிட்டும் மலிவு ஏதேனும் ஒன்றை ஆளலாம் என நினைக்கிறேன்.--C.R.Selvakumar 14:45, 24 ஜூன் 2006 (UTC)செல்வா
நல்ல விளக்கம். திங்கட்கிழமை மீண்டும் பதிகிறேன். -- Sundar \பேச்சு 15:13, 24 ஜூன் 2006 (UTC)
பறினி என்பதைக் காட்டிலும் கோண்மா பொருத்தமானதாக இருக்குமெனத் தோன்றுகிறது. மல்லிகைக்குப் பின்னால் மலிவு இருப்பது மிகச்சுவையான செய்தி. கோண்மா தெவிட்டும் மலிவு என்று பயன்படுத்திவிடுகிறேன். அந்தத் தலைப்பில் ஒரு கட்டிரையை எவரேனும் உருவாக்கும்போது பிற பெயர்களையும் விளக்கத்தையும் தரலாம். -- Sundar \பேச்சு 06:34, 26 ஜூன் 2006 (UTC)
பி.கு. புள் போன்ற அரிய பழந்தமிழ்ச் சொர்களை தமிழ் விக்சனரியில் பதிந்து வைக்க வேண்டும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மௌடம்&oldid=825371" இலிருந்து மீள்விக்கப்பட்டது