பேச்சு:மோசே

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோசே என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

மோசஸ் என்பவரும் மோசே என்பவரும் ஒன்றுதானே?. மோசே என்ற பெயரா மோசஸ் என்ற பெயரா சரி? --ஜெ.மயூரேசன் 05:08, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

மோசஸ் என்பது "Moses" என்ற ஆங்கிலவாக்கம் செய்யப்பட்ட பெயரின் நேரடி தமிழ் எழுத்துப் பெயர்ப்பாகும். ஆனால் மோசே பேசிய எபிரேய மொழியில் அவரது பெயர் "מֹשֶׁה " என்பதாகும் இதனை தமிழாக்கம் செய்தால் மிக கிட்டிய வடிவம் மோஸே ஆகும். வட மொழி எழுத்தை தவிர்க்க "மோசே" என்று பயன்படுகிறது. வழக்கமாக விவிலியம் மற்றும் அதன் பெயர்கள் மூல மொழியிலிருந்தே தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப் படுகின்றன. இது வழுக்களை குறைக்க உதாவும். இதே போல தான் Peter-பீற்றர்-பீட்டர்---தமிழில் பேதுரு என்றே வரவேண்டும் John--யோன் --ஜோன் ---தமிழில் யோவான் (மூல ஒலி யுவான்) உங்கள் கேள்விக்கு பதில்: மோசஸ் ஆங்கிலேயர்---மோசே தமிழர்....:-() --டெரன்ஸ் 04:22, 9 ஆகஸ்ட் 2006 (UTC).

நன்றி டெரான்ஸ்--ஜெ.மயூரேசன் 09:14, 10 ஆகஸ்ட் 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மோசே&oldid=2294834" இலிருந்து மீள்விக்கப்பட்டது