பேச்சு:மேகக் கணிமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேகக் கணினியம் இன்னும் அதிகம் புழக்கத்துக்கு வராத ஒரு கம்ப்பியுட்டர் கலைச்சொல், CLOUD COMPUTING என்றால் பலருக்கு புரியும். தற்போது hot topic ஆக இருக்கும் கூகுள் chrome OS இன் அடிப்படை தொழில்னுட்பமே மேக கணினியம் தான். இணையத்தையும் இணையம் சார்ந்த செயலிகளையும் கொண்டு செயல்படும் தொழில்னுட்பம் என ஜல்லியடிக்காமல் சொல்வதென்றால் 50 ரூபாய்க்கு சிம் கார்டு வாங்கி 5 ரூபாய்க்கு பேசும் தொழில்னுட்பம். அதாவது கணினிக்கோ மென்பொருளுக்கோ ஆகும் செலவுகளை குறைத்து மென்பொருள் பாவணைக்கான செலவுகளை மட்டுமே ஏற்படுத்தும் தொழில்னுட்பம்.

SaaS என்று சுருக்கமாக அழைக்கப்படும் Software As A Service என்ற மென்பொருள் சேவையே இதன் ரிஷி மூலம் இதை முதலில் தொடங்கியது salesforce.com எனப்படும் நிறுவனம் 1999 ல் தொடங்கிய இந்த நிறுவனம் இப்போது பில்லியன் டாலர்களில் கொழிக்கின்றது. SaaS தான் இப்போதைக்கும் இன்னும் சில ஆண்டுகளுக்கும் ஜெயிக்கிற குதிரை, கூகுளில் SaaS companies என்று தட்டி பார்த்தால் தெரியும். இந்த SaaS ஐ கொண்டே மேக கணினியம் உருவாகிக் கொண்டு வருகின்றது. விண்டோஸ் போன்ற ஆபரேடிங் சிஸ்டம் உள்ள கணினிகளில் ஒரு சாஃப்ட்வேரை இன்ஸ்டால் பண்ண என்ன செய்ய வேண்டும்? முதலில் அந்த குறித்த சாஃப்ட்வேருக்கான ஹார்ட்வேர் தேவைகளை பூர்த்தி செய்ய்ய வேண்டும், பின் சாஃப்ட்வேரை விலை கொடுத்து வாங்க வேண்டும் license ஆக்டிவேட் பண்ண வேண்டும் வாங்கியது pirate copy யாக இருக்குமோ என கவலை பட வேண்டும் இதெல்லாம் சரியாக செய்த பின் அது 6 மாதமோ 1 வருடமோ கழித்து காலாவதியகும் பின்...திரும்ப விண்டோசிலிருந்து வாசிக்கவும்...CLOUD COMPUTING ல் இந்த பிரச்சினை இல்லவே இல்லை.

ஏற்கனவே சொன்னது போல் cloud computing என்பது இணையத்தையே ஆதாரமாக கொண்டு செயல்படுவது, ஒரு பெரிய servar ல் உங்களுக்கு தேவையான மென்பொருட்கள் எல்லாம் வசதியாக இன்ஸ்டால் செய்து வைக்கப்பட்டிருக்கும் உங்களிடம் இருக்க வேண்டியது நல்ல வேகமான முடிந்தால் அதிவேகமான ஒரு internet connection மட்டுமே. தேவையான நேரத்தில் மென்பொருளை பாவித்து கொள்ளலாம் உங்கள் பாவனைக்கான பணத்தை மட்டும் அந்த SaaS provider இடம் செலுத்தினால் போதுமானது. இப்படி தேவையான அல்லது தேவையற்ற எல்லாவிதமான மென்பொருட்களும் செயலி(application) களும் மேகங்கள் போன்ற web server களில் கிடைப்பதனால் தான் இந்த cloud computing. நமக்கு தெரியாமலே இந்த cloud computing ஐ அனுபவித்து கொண்டு இருக்கின்றோம் உதாரணமாக E-Mail service providers, g-mail ஐ எடுத்துக் கொண்டால் நாம் அனுப்பும், பெறும் E-Mail கள் எல்லாம் கூகுல் server இலேயே சேமிக்கப்படுகிறது இணையத்தில் இணைந்த கணத்தில் இருந்து அந்த Data களை பாவிப்பவராகிறோம். சொல்லப்போனால் இந்த வலைபதிவது கூட CLOUD COMPUTING இன் ஒரு அம்சம்தான். இந்த CLOUD COMPUTING இனால் அதிகம் லாபமடைய போவது தனி நபர்களை காட்டிலும் கம்பனிகளே காரணம் இந்த தொழில்னுட்பம் ஹார்ட்வேர் செலவுகளை பெருமளவில் குறைத்து விடும் ஒரு மானிட்டரும் குறித்த OS ஐ இயங்க செய்ய தேவையான processor + hard disk போதுமானது மற்ற எல்லாவற்றையும் SssS service provider பார்த்துக்கொள்வார். SaaS சேவைகளை consumption அடிப்படையிலேயோ subscription அடிப்படையிலேயோ பெற்றுக்கொள்ளலாம். இதன் security மற்றும் privacy தொடர்பான கேள்விகளுக்கு authentication என்ற முறையே பதிலாக உல்லது அதாவது username, password முறை. குறித்த SaaS நிறுவன சேவையில் உங்களின் Data மற்றும் Privacy க்கு பாதிப்பு ஏற்படுமாயின் அந்த நிறுவன சேவைகளை துண்டிக்கவும் அது தொடர்பான financial losses களை நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவும் முடியும்.

CLOUD COMPUTING ஹார்ட்வேர் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் அதன் security,privacy தொடர்பான விளக்கங்கள் தெளிவானவையாக இல்லை. A, B என்ற இருவர் ஒரு SaaS நிறுவன சேவைகளை பெறும் போது இருவரும் ஒரே மாதிரியாகதான் தங்களது data வை store பண்ணவோ திரும்ப பெற்றுக்கொள்ளவோ போகிறார்கள், இதில் Authentication முறை மட்டும் போதுமானதாக இருக்கபோவதில்லை என்றாலும் இணையத்துக்காகவே கணினியை பயன் படுத்துவோருக்கு இந்த தொழில்னுட்பம் வரப்பிரசாதமாக அமையலாம். என்னிடம் ஒரு பழைய PIV 3.0 கணினி ஒன்று இருக்கின்றது 3 applications க்கு மேல் ஒரேதாக இயங்க செய்தால் need for speed ல் கார் ஓட்டுவது போலவே இருக்கும் அவ்வளவு சத்தம் போடும் Processor. சாதாரணமாக கணினியில் சாஃப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்ய செய்ய அதன் வேகம் குறைந்து கொண்டே செல்லும் இந்த டெக்னாலஜி கணினிகளில் அந்த பிரச்சினை இருக்காது என்றே சொல்லப்படுகிறது வாங்கிய நாள் எப்படி வேலை செய்ததோ அப்படியே தொடர்ந்து வேலை செய்யும் என்கிறார்கள்.

நல்ல விளக்கம் பெயர்தராத பயனர். நன்றி --மாஹிர் 16:15, 3 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
நல்ல விளக்கம் பெயர்தராத பயனர், நான் இப்பொழுதுதான் பார்க்கின்றேன். --செல்வா 17:24, 3 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]


தலைப்பு மாற்றக் கோரிக்கை[தொகு]

மேகக் கணிமை என்பது சரியாகத் தோன்றினாலும் கொளுவுக் கணிமை என்பதே சரியாக இருக்கும். இராம. கியின் விளக்கத்தைப் பார்க்கவும். | இங்கே! விக்சனரியில் கூட இச்சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே தலைப்பை மாற்றிவிட்டு வழிமாற்றை வேண்டுமானால், மேகக் கணிமை என்று வைத்துக் கொள்ளலாம்.

!!!கருத்து தேவை!!! --சூர்ய பிரகாசு.ச.அ. 11:46, 12 பெப்ரவரி 2011 (UTC)

பரவலாகப் பயன்பாடாகி விட்டது. மேலும் “மேகக் கணிமை” என்பது அழகாக உள்ளது. இதுவே இருக்கட்டும் :-). கொழுவினை வழிமாற்றாக்கி விடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 12:05, 12 பெப்ரவரி 2011 (UTC)
  • முகநூலிலும், உத்தமம் (infitt) உரையாடலிலும், பிறவிடங்களிலும் பகிர்ந்து வரவேற்றதன் அடிப்படையில் முகிற்கணிமை என்னும் தலைப்புக்கு இக்கட்டுரையை மாற்றி, உள்ளடக்கத்தையும் மேம்படுத்தவேண்டும்.

பலரும் சரியானச் சொல்லைத்தேர்வதற்கு மாறாக ஆங்கிலச்சொல்லாகிய கிளவுடு கம்ப்ப்யூட்டிங்கு என்னும் சொல்லின் மொழிபெயர்ப்பையே விரும்புவதாகத் தெரிகின்றது. நல்ல சொலைத் தேர்வுசெய்யாவிடில், முகில் கணிமைஎன்னும் சொல்லைத் தேர்ந்தெடுக்கலாம். இதற்காவது தமிழ்வழி சிறிது காரணம் காட்ட வாய்ப்பிருக்கின்றது. மேகம் என்பது மேலே இருப்பது எனத் தமிழில் பொருள்படும். இது சமற்கிருதச்சொல் என்றும் சொல்வார்கள். ஆனால் உறுதியன்று. முகில் என்றாலும் மேகம் எனப்பொருள் இருந்தாலும், நீரை முகந்து வருதல் என்னும் பொருளில் முகில் எனப்பெயர் பெற்றது. எனவே தரவுகளையும் நிரல்களையும் பல இடங்களிலும் இருந்து இணையம்வழி முகந்து வந்து கணிப்புகள் செய்து மீண்டும் நம் கணினியில் இருந்து முகந்து இணையவழிச்சென்று பலவிடங்களில் சேமித்து வைக்கும் தொழினுட்பம் என்னும் பொருள் கொள்ளலாம். எனவே முகில் கணிமை அல்லது முகிற்கணிமை எனலாம். -செல்வா மார்ச்சு 18, 2016.


--செல்வா (பேச்சு) 18:26, 22 மார்ச் 2016 (UTC)

இணையம் சார்ந்த ஒன்றல்ல[தொகு]

மேகக் கணிமை இணையம் சார்ந்த ஒன்றல்ல. அது ஒரு பொதுவான கணிமைத் தத்துவம். பார்க்க en:Cloud_computing#Deployment_models. இதனை உணர்த்தும் வகையில் கட்டுரையில் மாற்றங்கள் செய்ய வேண்டுகிறேன். ஸ்ரீகாந்த் (பேச்சு) 06:31, 23 மார்ச் 2012 (UTC)

simplicity[தொகு]

This article has been "translated" from english as it is. Please do simplify the article as much as possible. Most technological articles are hard to understand due to this. they are literally translated line by line. And hence it becomes difficult to understand. Words are being translated, not the meaning. Big sentences can be cut down and written into two or three sentences. after translating, please do read the article once again and check if the lines can be simplified or not. It will be great if this article is simplified. myself and my friends are yet to start projects on this topic. it will be helpful. Thanks-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:44, 8 சனவரி 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மேகக்_கணிமை&oldid=2041149" இலிருந்து மீள்விக்கப்பட்டது