பேச்சு:மு. க. முத்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதிலுள்ள தகவல்களுக்குத் தக்க சான்றுகள் தேவை. மு.க.முத்து ம.கோ.இராமச்சந்திரனின் மீது பெருமதிப்பு கொண்டு அதிமுகவின் துவக்கத்திலேயே அதில் இணைந்தார் (உறுதிப்படுத்தாத கூற்று) என்றும் அதனால் தனது தந்தையிடம் இருந்து விலகி விட்டதாகவும் நான் கேள்விப்பட்டுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 10:01, 16 ஜூலை 2009 (UTC)

மேற்கோள் இணைத்தமைக்கு நன்றி. பிறகு எப்படி மு.க.முத்து கருணாநிதியிடமிருந்து விலகி ம.கோ.இராவுடன் இணைந்தார் என அறிய விரும்புகிறேன். மேலும் ம.கோ.இரா. பிரிந்தது (வேறு காழ்ப்புணர்ச்சிகள் உள்ளுக்குள் இருந்தாலும்) தான் பொருளாளர் என்ற வகையில் மேயர் முத்து (மு.க.முத்து அல்ல) ஒருங்கிணைத்து நடத்திய மதுரை மாநாட்டில் பலர் முன் கணக்குக் கேட்டதால் எனக் கேள்விப்பட்டுள்ளேன். இது தொடர்பில் நடுநிலைச் சான்றுகள் கிடைத்தால் சேர்க்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 16:30, 16 ஜூலை 2009 (UTC)
சுந்தர், அரசியலில் விலக/விலக்கப்பட காரணங்கள் உருவாக்கப்படுகின்றன.நீங்கள் குறிப்பிடுவது சரியான நிகழ்வே.தன்னுடைய நிலை அச்சுறத்தப்பட்டதால் ம.கோ.இரா மாநாட்டில் கணக்கு கேட்டு கட்சியால் விலக்கப்பட்டார். கட்டுரையில் வித்திட்டது என்றே குறித்துள்ளேன். வித்து விருட்சமான கதை தனி.(மொழி அழகுக்கு உரையாடலில் பிறமொழிச்சொற்களை அனுமதிப்பீர்கள் அல்லவா :)) நீங்கள் கூறிய முதற்கூற்று சரியல்ல. மு.க.முத்து அதிமுகவில் சேர்ந்தது தனது தந்தையுடன் பிணக்கு ஏற்பட்டதும் ம.கோ.இரா கருணாநிதியை சங்கடப்படத்தவும் தான்.அதாவது இணந்ததால் பிரியவில்லை,பிரிந்ததால் இணைந்தார் ;) முகமுத்துவிற்கு அரசியல் ஆர்வம் இருந்ததில்லை.--மணியன் 05:24, 17 ஜூலை 2009 (UTC)
ஓ, அப்படியா. தகவலுக்கு மிக நன்றி, மணியன். அனுமதி என்று பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீர்கள். :) -- சுந்தர் \பேச்சு 06:33, 17 ஜூலை 2009 (UTC)
நீங்கள் கூறியது போல் "திருத்தியமைக்கப்பட்ட" வரலாறைத் தான் நான் படித்திருக்கிறேன் போலும். ஏதோ ஒரு கிழமை (வார) இதழில் தொடர்கதை போல ம.கோ.இராவின் வரலாறு வந்து கொண்டிருந்தது. அதில் மு.க.முத்து ம.கோ.இராவை பெரியப்பா என்றுதான் அழைப்பார், தந்தையைக் காட்டிலும் அவர்மீது பாசம் கொண்டிருந்தார் என்பது போன்ற தோற்றம் தரப்பட்டிருந்தது. -- சுந்தர் \பேச்சு 06:38, 17 ஜூலை 2009 (UTC)

மணியன், வித்து விருட்சமான கதை என்று தாராளமாகக் கூறலாம். பிறமொழிச்சொற்கள் இருப்பதில் தவறில்லை. அளவிறந்து பயன்படுத்தாமல் இருக்கவே சிலர் பரிந்துரைக்கிறார்கள். அதாவது மரத்தையே அழித்து விருட்சமாக்க வேண்டாம் (இதுவும் அழகு கருதியே). விளக்கை அணைத்து லைட் "போட" வேண்டாம். நம் கட்டுரைகளில் ஏராளமாக பிறமொழிச்சொற்கள் உண்டு :)--செல்வா 12:59, 17 ஜூலை 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மு._க._முத்து&oldid=405847" இலிருந்து மீள்விக்கப்பட்டது