பேச்சு:முதற் பக்கம்/1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Reorganising the Main page contents[தொகு]

  • The main page contents can be better organised. we may just list the main ctegories like arts, culture, history, science, counties, personalities and then move all the sub categories to a secondary main page. Options for category wise browsing and topic wise browsing shall be given. One fetured article post and One colloboration article announcement post shall be made. Please post your views.--ரவி (பேச்சு) 05:08, 5 ஏப் 2005 (UTC)
  • I agree with you, Ravi. The main page of the Tamil wikipedia is a bit dull also. We need to make it more interesting. Currently the other languages section cover a considerable part of the main page. It needs to be shortened. The contents here was translated from the old English page. I think it should be improved. Your suggestion on organising the categories is OK, but I am not sure whether we have adequate quality articles, for a featured article post. I suggest that we include a few sentence description of a colloboration article, preferably with an image, and a similar write up for a topic from the list of "to be translated articles".Mayooranathan 18:03, 5 ஏப் 2005 (UTC)
  • Thanks for your comments, Mayooranathan.We may just give the links to main language wikis in the navigation pane without mentioning most of them in the main page. (its done like that in german wiki); and just give a prominent link in the main page for the complete list of other articles.I will try to work out a draft for main page (keeping in mind your suggestions above) and post it for everyone's review.--ரவி (பேச்சு) 02:12, 6 ஏப் 2005 (UTC)
  • While discussions for a new look main page is going on, I think we shall immediately make some moinor changes in the main page.
  • The other language links can be replaced with the template template:wikipedialang which is more explanatory and concise. (It can be made even more concise).also right now, the other language links in the left pane are mainly indian language links.We shall replace it with links for language with more content.
  • The big yellow box at the bottom can be removed and a small note for the same cause may be included in the top yellow box.
  • I look forward to your feedback for a week's time.If no objections, I guess I can proceed with the changes.--ரவி (பேச்சு) 05:31, 8 ஏப் 2005 (UTC)

Suggested Model main page[தொகு]

Please visit மாதிரி முதற்பக்கம் and post your comments,suggestions there.--ரவி (பேச்சு) 13:04, 6 ஏப் 2005 (UTC)

Current changes implemented[தொகு]

I have made some changes to the main page after much thought,thorogh testing and caution.I have re written the top yellow box and included a navigation aid below that.I hope that the new Major category listing and the alphabetical listing, category listing , new article listing will help in better navigation.Kindly provide with feedback.Please incorporate more changes and suggestion at the மாதிரி முதற்பக்கம்.I hope and sincerely believe that this new look main page will make tamil wiki attractive,informative and update.----ரவி (பேச்சு) 10:56, 10 ஏப் 2005 (UTC)

Feature article selection[தொகு]

Right now the featured articles on srilanka and architecture are of diverse nature and informative reflecting the encyclopedia's versatility.these two article were the top two articles in "nILamaana pakkangkaL" page listed at "siRappu pakkangkaL".I found them to be well written and completely in tamil.so I have featured them.since we are very few users here and very few quality articles, i think there won't be any problem in zeroing in the articles.If ok for everyone, we shall feature new article once in a fortnight which will allow us the time to come up with more quality articles.--ரவி (பேச்சு) 10:56, 10 ஏப் 2005 (UTC)

In the news section[தொகு]

I hope that,The daily tid bits for the news section can be updated atleast once in two three days by any of us.While th enews feature article like the one on Jayakanthan can be updated when we find some quality uptodate articles.I sincerely believe that I haven't done any blunder in designing the new page..If so, please bear and corect.Thanks for santhosh, sundar, mayoornaathan, harikishore for your inputs in designing the main page--ரவி (பேச்சு) 10:56, 10 ஏப் 2005 (UTC)

  • Looks good, ravi. Thanks. If there is any thing to be improved that can always be done any time. Mayooranathan 17:22, 11 ஏப் 2005 (UTC)

Links to wikipedia in other languages[தொகு]

Why is the links to other language wikipedias absent here? Any technical difficulty? In my opinion, it must be included right here in the main page instead of in a seperate page. Ofcourse, it will be under the featured article template or in the footer. And I see that there are links to other Indian language wikipedias (including Tamil) on the main page-side bar of all Indian language wikipedias, except Tamil wikipedia. I suggest that the template wikipedialang be added in the footer of the main page here, and interwiki links to English and other South Asian language wikipedias be added in the sidebar. - ஸ்ரீநிவாசன் 08:37, 1 ஆகஸ்ட் 2005 (UTC)

Previously, there were links to Indian language wikipedias in the side bar and there were wikipedialang template in the main page footer. When I redesigned the front page after taking suggestions from all memebers in April 2005, I moved the template to a separate page and replaced the side bar with wikipedias having most number of articles. Frankly speaking I dont think that many people will follow these links and putting the big lang template in the main page will only clutter the page and make it unnecessarily big. Those who want to follow those wikipedia can easily the click the prominent link "piRa mozi wikipediakkaL" at the footer. Except for kannada, hindi and sanskrit wikipedias all other indian language wikipedias are still in the initial stages without much articles..It will not be a quality links from the main page to link all the indian language wikipedias. If you would like to add Indian wikipedia links then we can just add links to kannanda, hind and sanskrit which have some shape.--ரவி (பேச்சு) 09:59, 1 ஆகஸ்ட் 2005 (UTC)

I strongly feel that links to other lang wikis should be here in the front page at one shot, because, I myself was highly motiviated to contribute to ta after finding that wikipedia is available in so many other languages. May be.. we can just have links to wikis with more than 10000 and 1000 articles and leave the rest. I also believe that we must have links to other south asian language wikipedias. when quality wikis like en:, fr:, etc., doesn't mind having the long list in their main page, i don't understand why we would lose our quality by doing so. If you think it's a liability having links to infant wikipedias, you have to consider that even ta would've been an infant some time ago, and would never have grown this much if others had considered us a liablility. And it wouldn't clutter the page. I would help my best to make it look good :) - ஸ்ரீநிவாசன் 12:36, 1 ஆகஸ்ட் 2005 (UTC)

Ok Srinivasan, this is not a big issue. we can go ahead and make the changes in the main page footer templates and main page :) --ரவி (பேச்சு) 12:49, 1 ஆகஸ்ட் 2005 (UTC)

Thanks Ravi :) we would soon make those changes. And, my browser (firefox, in both linux and windows) displays the categories listed in the main page with too much space between them, it's fine in IE though. this needs to be fixed. - ஸ்ரீநிவாசன் 15:24, 1 ஆகஸ்ட் 2005 (UTC)

பிறமொழி விக்கிகள் பக்கத்தை முதற் பக்கத்துக்கு கொண்டுவருவது குறித்து மீண்டும் யோசிக்க வேண்டும். தேடு பொறிகளில் (கூகுல், யாகூ) 'tamil' என்று தேடினால் த.வி. முதல் பக்கத்தில் கூட வரவில்லை. (கூகுல் தேடலில் த.வி. படிப்படியாக முன்னேறுவதை சில மாதங்களாக கவனிக்கிறேன்) பல நம்பகமான தளங்களுக்கு இணைப்புகள் இருப்பது ஒரு பக்கத்தின் மதிப்பை (page rank) அதிகமாக்கும். அதனால் பிறமொழி விக்கிகள் பக்கத்தை முதற் பக்கத்துக்கு கொண்டுவருவது பயனுள்ளதாக இருக்கலாம். பாலாஜி 18:10, 20 டிசம்பர் 2006 (UTC)

பாலாஜி, tamil என்று ஆங்கிலத்தில் தேடினால் தமிழ் விக்கிபீடியா கூகுள் முடிவுகளில் முதற்பக்கத்தில் வருவது சிக்கல் தான். ஆனால், பெரும்பாலான தமிழ்ச் சொல் தேடல்களுக்கு தமிழ் விக்கிபீடியா கட்டுரைகள் முதற்பக்கத்தில் வருவதை கண்டிருக்கிறேன். இது குறித்து மயூரனாதன் கூட முன்பு சொல்லி இருக்கிறார். முதற்பக்கத்தில் பிற விக்கி இணைப்புகளை தருவது குறித்து ஏற்கனவே ஸ்ரீநிவாசனும் சொல்லி இருக்கிறார். விரைவில் செய்வோம். எனினும், இது page rankஐ அதிகரிக்கச் செய்யுமா என்று உறுதியாக சொல்லத் தெரியவில்லை. தமிழ் விக்கிபீடியாவுக்கு வெளியில் இருந்து வரும் இணைப்புகள் தான் அதன் கூகுள் தர மதிப்பீட்டை அதிகரிக்கும் என்று நினைக்கிறேன். இங்கிருந்து வெளியில் செல்லும் இணைப்புகள் இல்லை.--Ravidreams 19:30, 20 டிசம்பர் 2006 (UTC)

ரவி, மேலும் பிற மொழி இணைப்புகளை இடது பக்கத்தில் இருக்கும் பட்டையில் சேர்க்கலாம்.--Natkeeran 02:09, 21 டிசம்பர் 2006 (UTC)

முதல் பக்க மாற்றங்கள்[தொகு]

முதல் பக்கத்தில் "கட்டுரை பிரிவுகள்" மற்றும் ":" தேவையற்றதாக படுகின்றது. அதை நீக்கினால் முதல் பக்கம் மேலும் எளிமையாக தென்படும் என்பது என் கருத்து. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?--Natkeeran 00:36, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

முதல் பக்கத்தில் உள்ள கட்டுரைப் பிரிவுகள் அடிப்படைப் பிரிவுகள் (root categories). ஆகவே அவை முதற் பக்கத்தில் இருப்பது அவசியம் - 05:28, 3 ஆகஸ்ட் 2005 (UTC)
Natkeeran, this format to mention the number of articles and the parent categories is done following the other major wikipedias. I feel that this will help us to keep track of the growth of wikipedia and make navigation easier for a new user. So my opinion is that it should stay as it is.--ரவி (பேச்சு) 09:53, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

I now think that Natkeeran might be referring only the words "கட்டுரை பிரிவுகள்:" in the main page and not the category names as such. If that is the case, it is a good suggestion. ஸ்ரீநிவாசன் 10:44, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

Even then i feel that the label கட்டுரை பிரிவுகள் makes it clear that the following links are categories and not articles as such because generally a blue link in wikipedia means a link to an article--ரவி (பேச்சு) 11:13, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

Yes! I did refer to the words only. I thought it would be intuitive for anyone. Also, the EWiki does not has such a description. But, Ravi does have a point. --Natkeeran 12:52, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

I think we can give a link to the "இந்த வாரக் கூட்டு முயற்சி" in the first page. Because, I feel it not getting the attention of the people other than frequent visitors. Any opinions? -Sivakumar 04:54, 15 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

சிவகுமார், உங்கள் ஆலோசனை பயனுள்ளது. இது குறித்து நானும் பல சமயங்கள் நினைத்தது உண்டு. உடன் செயல்படுத்துவோம்.--ரவி (பேச்சு) 08:50, 15 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
நல்லது. நன்றி!:-) - Sivakumar 10:05, 15 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

விக்கிபீடியா நுழைவாயில்கள்[தொகு]

புதுப்பயனர்கள் ஒவ்வொரு நாளும் வரத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்களின் "நுழைவாயில்கள்" எவையென அறிந்து அங்கெல்லாம் உதவிப் பக்கத்திற்கான இணைப்பைத் தர வேண்டும் விக்கிபீடியா:வகைப்படுத்துதல் போன்ற உதவிப் பக்கங்கள் உருவாக்கப் பட வேண்டும். அண்மையில் நற்கீரருக்கு ஏற்பட்ட ஐயங்கள் (விக்கிபீடியா:ஒத்தாசை பக்கம்) எந்த ஒரு பயனருக்கும் ஏற்படக் கூடியவை. அவற்றை நாம் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் அண்மையில் சரவணன் என்ற கணக்கு ஏற்படுத்தாத பயனர் ஒருவர் பகுப்புப் பக்கங்களில் பதிவேற்றத் துவங்கியது போல் நடக்க வாய்ப்புள்ளது.

முதலில் முதற்பக்கத்தின் அமைப்பினை மறுஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் தற்போதுள்ள அமைப்பில் புதுப்பயனர்கள் பக்கவகைப் பக்கங்களையே தொகுக்கத் துவங்குகின்றனர். -- Sundar \பேச்சு 06:18, 17 ஆகஸ்ட் 2005 (UTC)

ஆம். உதவிப்பக்கங்கலும் கொள்கை பக்கங்களும் முழுமைப் படுத்த வேண்டியது தலையாயதாகும். முதற் பக்கத்திறகு தேவையான மாற்றங்கள் குறித்து உங்கள் யோசனைகள் என்னென்ன? - ஸ்ரீநிவாசன் 04:47, 18 ஆகஸ்ட் 2005 (UTC)
என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமென எனக்கும் தெளிவாகத் தெரியவில்லை. ஒருவேளை முதற்பக்கத்திலுள்ள உதவிச்சட்டத்தை முதன்மைப்படுத்தலாம். முதலில் உதவிப்பக்கத்திலுள்ள தகவல் மிகுதியைக் குறைத்து எளிமைப்படுத்தலாம். பக்கவகைகளுக்கான இணைப்புகளை சிறிது அழுத்தம் குறைத்துக் காண்பிக்கலாம். ஆனால் இவை பயன் விளைவிக்குமா அல்லது ஊறு விளைவிக்குமா என்பதை கலந்தாய்வு செய்ய வேண்டும். புதிதாய் வரும் பயனர்களிடம் இதுபற்றி கேட்கலாம். -- Sundar \பேச்சு 05:33, 18 ஆகஸ்ட் 2005 (UTC)

எந்தத் தளத்துக்குமே முதற் பக்கம் முக்கியமானது. தமிழ் விக்கிபீடியா இதற்கு விதிவிலக்கல்ல. வெவ்வேறு வகையான நோக்கங்களோடு பயனர்கள் விக்கிபீடியாவை அணுகுவார்கள் என எதிர்பார்க்கலாம். முக்கியமாக இங்கே வருபவர்களை இரு பிரிவுகளாகப் பிரிக்க முடியும்.

  • தகவல் அறிய வருபவர்கள்.
  • விக்கிபீடியாவுக்குப் பங்களிப்பவர்கள்.

இவர்களில் முதல் வகையினர்தான் எண்ணிக்கையில் கூடுதலாக இருக்கவேண்டும். விக்கிபீடியாவின் முதன்மையான நோக்கம் அறிவுசார் தரவுகளை வழங்குவதுதான். ஆகவே முதற்பக்கம் தகவல் பெற வருபவர்களை முதன்மைப் படுத்தி இருப்பது முக்கியம். அத்துடன் எத்தகைய தகவல்களை வழங்குவதில் விக்கிபீடியா முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்பதும் இன்னொரு விடயம். எனவே முதற்பக்கம் அத்தகைய அம்சங்களுக்கு கூடிய அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியம். முக்கியமாக விக்கிபீடியாவின் உள்ளடக்கம் இன்னும் தெளிவாக முதற்பக்கத்தில் வெளிப்படுத்தபட வேண்டும் என்பது எனது கருத்து. விக்கிபீடியா ஒரு செய்தி ஊடகம் அல்ல. இது ஒரு அறிவுத் துறைசார்ந்த விடயங்களை மற்றவர்கள் பயன்படுத்துவதற்காகச் சேமித்து வைக்கும் ஒரு களஞ்சியம். நடப்புச் செய்திகளுக்கான பின்னணிகள் அல்லது அவற்றுடன் தொடர்புடைய தகவல்களை முதற்பக்கம் குறித்துக் காட்டலாம். இவ்வாறு சொல்வதால் பங்களிப்பவர்களுக்குத் தேவையான தகவல்கள் முக்கியத்துவம் பெறக்கூடாது என்பது அல்ல. தற்போதைய நிலையில் தமிழ் விக்கிபீடியாவுக்குப் பங்களிப்பவர்கள் நிறையத் தேவைப்படுகிறார்கள். அவர்களையும் கவரக்கூடிய வகையிலும், தேவையான தகவல்களை இலகுவாக அவர்கள் பெற்றுக்கொள்ளும் வகையிலும் முதற்பக்கத்தில் இவர்களுக்கான பகுதி வேறுபடுத்திக் காட்டப்படலாம். உண்மையில் இது ஒரு சிறிய விளக்கத்துடன் கூடிய இணைப்பாக இருந்தாலே போதுமானது என்பது எனது கருத்து. இணைக்கப்பட்ட பக்கம் பங்களிப்பவர்களுக்கான முழு விபரங்களையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும். Mayooranathan 06:26, 18 ஆகஸ்ட் 2005 (UTC)

அனைத்து வகைப் பக்கங்களில் "இது *** பற்றிய விக்கிபீடியா:வகைப்பக்கம். *** தொடர்பான கட்டுரைகள் இவ்வகையில் அடங்கும் *** பற்றிய கட்டுரைக்கு *** பார்க்கவும்" போன்ற முன்னுரையையும், வகைப்படுத்ததுதல் குறித்த உதவிப்பக்கத்தின் இணைப்பையும் கொடுத்தால் புதிய பயனர்கள் கட்டுரைப் பக்கத்தையும் வகைப்பக்கத்தையும் குழப்பிக் கொள்ளும் நிலையை தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன். - ஸ்ரீநிவாசன் 08:47, 18 ஆகஸ்ட் 2005 (UTC)
நல்ல திட்டம். மேலே உள்ள இந்த செய்தியை ஒரு வார்ப்புருவாக்கி விட்டால் வகைப்பக்கங்களில் இணைப்பதுற்கு எளிதாக இருக்கும். -- Sundar \பேச்சு 08:51, 18 ஆகஸ்ட் 2005 (UTC)

முதலில் விக்கிபீடியாவுக்கு வருகை தருபவர்கள் எந்தெந்த பக்கங்கள் வழியாக நுழைகிறார்கள், அவர்கள் அனைவரும் முதற்பக்கம் உட்பட எந்தெந்த பக்கங்களை பார்க்கிறார்கள், எவ்வளவு முறை பார்க்கிறார்கள் என்ற தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இவற்றை அறிந்தால் தான் தெளிவான உதவிப்பக்க வழிகாட்டுதல்களை உருவாக்க இயலும். (இதற்கான சாத்தியங்கள் குறித்து சுந்தர் விளக்கலாம்).என்னை பொறுத்த வரை விக்கிபீடியாவின் நோக்கங்களை அறிந்து நல்ல பங்களிப்பை ஆற்ற முனையும் அனைவரும் உதவிப்பக்கங்களை கவனம் கொண்டு படிக்கிறார்கள் என நம்புகிறேன். வேண்டுமானால், தற்பொழுது Font help notice உள்ள இடத்திற்கு அருகில் புதுப்பயனர் உதவிப்பக்கத்திற்கு இணைப்பு தரலாம். புதுப்பயனர் பக்கத்தை இன்னும் விரிவு படுத்தி புதுப்பயனர்கள் பொதுவாக செய்யும் தவறுகளையும் சுட்டிக்காட்டி எழுதலாம். அதற்கு மேல் முதற் பக்க கட்டமைப்பில் ஏற்படுத்தும் பெரிய மாற்றங்கள் யாவும் முதற் பக்க தோற்றப்பொலிவை குலைக்கும் என நினைக்கிறேன். முதற்பக்கத்தில் விக்கி பீடியா பற்றிய அறிமுக பத்தியிலும் புதுப்பயனர் உதவிப்பக்கத்தை பிரதானப்படுத்தலாம். பங்களிப்பாளர் என்ற சொல்லை எத்தனை பேர் சரியாகப்புரிந்து கொள்வர் என்பதும் கேள்விக்குறியது. பங்களிப்பாளர்கள் என்றால் ஏதோ பணம் நன்கொடை செய்பவர்கள் என்றும் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு..இந்தக்குழப்பத்தை தவிர்க்கும் வகையில் தெளிவான முதற் பக்க அறிமுகப்பத்தி அமைய வேண்டும். இது குறித்த மாற்றங்களை மாதிரி முதற்பக்கத்தில் செயல்படுத்தி இறுதி செய்த பின் முதற் பக்கத்தில் செயற்படுத்தலாம்--ரவி (பேச்சு) 13:09, 21 ஆகஸ்ட் 2005 (UTC)

Erik Zachte (epzachte at chello.nl) என்பவர் தான் இந்த புள்ளி விவரங்களைத் தொகுத்து வந்தார். எனினும், பயனர் வரவைக் கண்காணிப்பது விக்கிமீடியா இணையப்பக்கத்தருவிகளின் (? web servers) வேலைப்பளுவைக் கூட்டுவதால் இதை நிறுத்தி விட்டார். எனினும் அவருக்கு மின்னஞ்சல் செய்து பார்க்கலாம்.
மற்றபடி இரவியின் மேற்காணும் கருத்துக்கள் அனைத்திற்கும் எனக்கு உடன்பாடு உண்டு. உதவிப் பக்கங்களை எளிமைப் படுத்தி மேம்படுத்த வேண்டியது முதன்மையான தேவை.
முதற் பக்கத்திற்கான மற்றங்களை இரவி கூறியுள்ளதுபோல் மாதிரிப் பக்கத்தில் செய்து பார்த்துவிட்டு பின்னர் செய்தல் நலம். -- Sundar \பேச்சு 05:09, 22 ஆகஸ்ட் 2005 (UTC)
கீழ்காணும் இணைப்புகள் (from en:User:Raul654) பயனர் வரவைக் காட்டுபவை. அவை நுழைவாயில்கள் என உறுதியாகக் கூற முடியாது. எனினும், அவை அதிகமாகப் பார்க்கப்படும் விக்கி பக்கங்கள் ஆவன. இவ்விணைப்புகளை புள்ளி விபரங்கள் பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ பாதுகாக்க வேண்டும்.
-Sundar \பேச்சு 06:42, 22 ஆகஸ்ட் 2005 (UTC)

சுந்தர், நீங்கள் குறிப்பிட்ட epzachte at chello.nl மின் மடல் முகவரிக்கு நிறைய நாட்கள் முன்னரே மடல் அனுப்பினேன். இன்னும் பதில் வர வில்லை. விக்கிபீடியா புள்ளிவிவர இற்றைப்படுத்தல்கள் நம் தளத்தின் வளர்ச்சி, தேவைகள் குறித்து அறிந்து கொள்ள மிகவும் உதவிக்கொண்டிருந்தது. திரும்பவும் எப்பொழுது இற்றைப்படுத்துவார்கள் எனத்தெரியவில்லை. நீங்கள் கொடுத்த பிற சுட்டிகளின் மூலம் ஒரு போக்கு தெளிவாகத் தெரிகிறது. முதற் பக்கமும் முதற் பக்கத்தில் காட்சிப்படுத்தபடும் கட்டுரைகளும் தாம் அதிகம் பார்க்கப்படுகின்றன. எனவே சிறந்த கட்டுரைகள், செய்திக்கட்டுரைகளுடன் கூட்டு முயற்சிக் கட்டுரையையும் முதற் பக்கத்தில் காட்சிப்படுத்தினால் அதற்கு மேம்பட்ட பங்களிப்பு கிடைக்கும் என நினைக்கிறேன். அண்மைய மாற்றங்கள் பக்கம் அதிக முறை பார்க்கப்பட்டிருந்தாலும் அவற்றை நம்மை போல் பங்களிப்பாளர்கள் தான் அதிகம் பார்த்திருப்பார்கள் என்பது என் இலகுவான கணிப்பு. அண்மையில் தான் உருவாக்கப்பட்ட Font help பக்கம் பல முறை பார்க்கப்பட்டிருப்பது கவனத்திற்குரியது. இது, பல பயனர்களால் இன்னும் நம் தளத்தை பார்க்க இயலவில்லையா என்ற கேள்வியை கிளப்புகிறது. அதே நேரம், எல்லா பக்கங்களிலும் பிரதானமாக இவ்விணைப்பை கொடுத்ததின் மூலம் இதன் பார்வை எண்ணிக்கை அதிகமாய் இருப்பதையும் கவனிக்க வேண்டும். அதனால், புதுப்பயனர் உதவிப்பக்கத்திற்கான இணைப்பையும் இது போல் எல்லா பக்கங்களின் மேலும் பிரதானமாக தரலாமா என்பது என் எண்ணமாக உள்ளது. அதே போல இங்குள்ள தமிழ் எழுத்துருக்களை படிக்க இயலாதவர்களும் கருத்து தெரிவிக்க ஏதுவாய் விக்கிபீடியா:கலந்துரையாடல் பக்கத்திற்கான இணைப்பையும் ஒவ்வொரு பக்கத்திலும் பிரதானமாக ஆங்கிலத்தில் தரலாம். மேற்கண்ட என் பரிந்துரைகள் பற்றி அனைவரின் கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன்.--ரவி (பேச்சு) 18:37, 29 ஆகஸ்ட் 2005 (UTC)

ஆம், உங்கள் கணிப்பு சரிதான் எனத் தோன்றுகிறது.
அண்மைய மாற்றங்கள் பக்கத்தைப் பார்ப்பவர்களில் நம் போன்ற பங்களிப்பாளர்களே பெரும்பாண்மையினராக இருப்பரெனினும், சில வாசிப்பாளர்களும் அண்மைய கட்டுரைகளை வாசிக்கும் பொருட்டு இந்த இணைப்பைப் பயன்படுத்தலாம். மேலும் ஒரு சிரு எண்ணிக்கையிலான வருணர்கள் நான் சில வலைப்பதிவு மறுமொழிகளில் இப்பக்கத்திற்கு தந்த இணைப்புகளின் வழியே வந்திருக்கலாம்.
உதவிப்பக்கங்களுக்கான இணைப்பை எழுத்துரு உதவிக்கு அருகில் தருவது நல்ல திட்டமே. மேலும் உதவிப் பக்கங்கள் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும். -- Sundar \பேச்சு 13:54, 30 ஆகஸ்ட் 2005 (UTC)

ஜூலை 13, 2005 வரையிலான தமிழ் விக்கிபீடியா புள்ளிவிவரங்களை இற்றைப்படுத்தியுள்ளார்கள் :) அதை இங்கு காணலாம். பகுப்பு மேலோட்டம் பற்றிய இந்த இணைப்பும் பயனுள்ளது.--ரவி (பேச்சு) 14:53, 15 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

main page updates[தொகு]

someone may please update the main page contents regularly to keep a fresh look for regular visitors. I will try do my best regarding this once i become active again, may be a month later. Till then hi for all the friends here--ரவி 14:35, 12 மார்ச் 2006 (UTC)

ரவி, சொலவது சரிதான்.

ஆட்சோபனை, மாற்று யோசனைகள் இருந்தால் தெரிவியுங்கள். இல்லாவிட்டால், நாளை இன்றைப்படுத்திவிடுகின்றேன். --Natkeeran 15:58, 12 மார்ச் 2006 (UTC)


முதற்பக்கம் இன்றைப்படுத்தல் ஒழுங்கமைவு[தொகு]

முதற்பக்கம் எப்படி இன்றைப்படுத்துவது, எப்பொழுது இன்றைப்படுத்துவது, எவ்வொப்பொழுது இன்றைப்படுத்துவது, யார் இன்றைப்படுத்துவது என்று சற்று தெளிவு இல்லாமல் இருக்கின்றது. இதற்கு, "முதற்பக்கம் இன்றைப்படுத்தல் ஒழுங்கமைவு" என்று ஒரு பக்கம் ஏற்படுத்தி, அங்கே திகதி, மற்றும் கட்டுரை மற்றும் கூறுகளை முன்னரே தெரிந்து இணைத்தால் நன்று. தற்போதைக்கு இக்கட்டுரைகளை பரிந்துரை செய்கின்றேன், பிறருடைய கருத்துக்களும் இவ்விடயம் நோக்கி வேண்டி நிற்கின்றேன்.

ஆட்சோபனை, மாற்று யோசனைகள் இருந்தால் தெரிவியுங்கள்.--Natkeeran 12:50, 27 ஏப்ரல் 2006 (UTC)


With limited editors able to spare time for overall tamil wiki administration, its hard to definee strict time frames for first page update. Still I would prefer updating the featured article atleast once in a month , news section once in a week, do u know and COTW section once in a fortnight. However a better frequency of update is always welcome. Right now, the main page is locked to prohibit vandalism. so anyone can admin acceess can come forward to do this. I supporrt the suggestions for articles topics u made abovee. I had been thinking about this organising for some while..vow, we are in same frequency.  :)--ரவி 13:09, 27 ஏப்ரல் 2006 (UTC)

கட்டுரைகளின் எண்ணிக்கை[தொகு]

பல மொழிகளுமாகச் சேர்த்து கட்டுரைகளின் எண்ணிக்கை 4,600,000 ஐ தாண்டிவிட்டது. கோபி 16:45, 16 ஜூலை 2006 (UTC)

தமிழ் இந்திய மொழிகளில் இப்பொழுது இரண்டாவதாக உள்ளது. வங்காள மொழியும் கன்னட மொழியும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன (கட்டுரை எண்ணிக்கையில்). அடிப்படையான அளவீடுகளின் படி தமிழே முதலாவதாக இது வரையிலும் இருந்து வருகின்றது. அனால், கன்னடத்திலும் மிக அழகாக செய்திருப்பது போலத் தெரிகின்றது (எனக்கு கன்னடம் படிக்கத் தெரியாது, ஆனால் ஓரளவு எழுத்துக்கூட்டி மிக மிக மெள்ள சில வரிகள் படிக்க முடியும்). முன்னணியில் நிற்கும் மராட்டி மொழிக்கும் தமிழுக்கும் சுமார் 1000 கட்டுரைகள் வேறுபாடு உள்ளது. ஆனால் மராட்டிய மொழியில் தரமான வளமான கட்டுரைகள் குறைவு. கருத்துப் பரவலும் குறைவு. பல இந்திய மொழிகளும் கிரிக்கெட் வீரர்களையும், திரைப்படம் பற்றியும், ஊர், மாநிலம், நாடு பற்றிய கட்டுரைகளையும் கொண்டே கட்டுரை எண்ணிக்கைகளைக் கூட்டியுள்ளன. அறிவான கருத்தூறும் ஆக்கங்கள் மிக குறைவு. இடைவிடாதும், இன்னும் தக்கார் பலரையும் கொண்டு உழைத்தால், த.வி. ஒரு சிறந்த அறிவுப் பயன் கருவூலமாகத் திகழ வாய்ப்புள்ளது. ஓரிரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு நல்ல நிலையை எட்டும் என்று எண்ணுகிறேன். இதுவரையிலும் த.விக்கு உழைத்தவர்கள் மிகச்சிறப்பாக பணியாறியிருக்கிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. இன்னும் சுமார் 100 தர்மான உழைப்பாளிகள் வந்து ஆக்கங்கள் தர இயலும். தரவேண்டும்.

--C.R.Selvakumar 17:12, 16 ஜூலை 2006 (UTC)செல்வா

Wikipedia[தொகு]

Can an admin please wikilink the விக்கிபீடியா to the Tamil article. It currently links to English Wiki article. - Ganeshk 22:04, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

Done Ganesh. Thanks for the notification. --சிவகுமார் 08:32, 17 ஆகஸ்ட் 2006 (UTC)

யாராவது நிருவாகிகள் முன்பக்கத்தில் இலங்கைச் செய்தியை உள்ளிடவும். யாழ்ப்பாணத்தில் கடும் சமர் ஏற்பட்டுள்ள வேளையில் பழைய மும்பை குண்டு வெடிப்பு தகவல் நீக்கப்பட வேண்டும்.--ஜெ.மயூரேசன் 06:13, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

நிர்வாகிகள் அல்லாதோரும் கூட வார்ப்புரு:Mainpagefeature பக்கத்தில் ஏற்புடைய மாற்றங்களை செய்வதன் மூலம் முதற்பக்க உள்ளடக்கத்தை மாற்ற முடியும், மயூரேசன். --ரவி 07:07, 13 ஆகஸ்ட் 2006 (UTC)
நன்றி ரவி --ஜெ.மயூரேசன் 07:50, 17 ஆகஸ்ட் 2006 (UTC)

ப்[தொகு]

கட்டுரை பிரிவுகள் அல்ல கட்டுரைப் பிரிவுகள் என்று இருப்பதே சரியானது. --கோபி 15:36, 16 ஆகஸ்ட் 2006 (UTC)

சமுதாய வலைவாசல்[தொகு]

சமுதாய வலைவாசல் பக்கத்துக்கு என்னாச்சு? வலப்பக்கத்து Menu வில், சில தமிழாக்கங்களும் காணாமல் போய்விட்டன! Mayooranathan 15:54, 6 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

ஆம். சிறப்புப் பக்கங்களில் "அனைத்து முறைமைசார் பக்கங்கள்" பக்கத்தில் சென்று பார்த்தால் அங்கு சரியாகவே உள்ளது. ஒருவேளை அண்மைய மீடியாவிக்கி இற்றைப்படுத்தத்தின் போது அந்த பக்கச்சட்ட உறுப்பின் பெயரை "portal-url" என்பதில் இருந்து வேறாக மாற்றிவிட்டனரோ என்னவோ? தற்போதைக்கு வழிமாற்றி ஏற்படுத்தி விடுகிறேன். -- Sundar \பேச்சு 11:45, 12 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

இற்றைப்படுத்தல்[தொகு]

கடந்த 11 நாட்களில் 2686 பார்வைகள் முதற்பக்கத்தில் விழுந்துள்ளன. இதில் பாதிக்குப் பாதி பங்களிப்பாளர்கள் என்று வைத்துக்கொண்டால் கூட (!!!;)), நாளொன்றுக்கு குறைந்தது 100 பார்வைகள் கிடைக்கின்றன. முதற்பக்கத்தை அடிக்கடி இற்றைப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. சிறப்புக்கட்டுரைகள், கூட்டு முயற்சிக்கட்டுரையை அடிக்கடி மாற்ற முடியாது. அந்தளவுக்கு நிறைய சிறப்புக்கட்டுரைகள் நம்மிடத்தில் இல்லை. கூட்டு முயற்சிக் கட்டுரைக்கும் போதுமான வெளிச்சம் தேவை. எனவே செய்திக்கட்டுரைகளையும், உங்களுக்குத் தெரியுமா பகுதியையும் தான் அடிக்கடி மாற்றியாக வேண்டும். குறைந்தது மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது இப்பகுதிகளை இற்றைப்படுத்தலாம் என்று பரிந்துரைக்கிறேன். இவ்விதயத்தில் அனைத்துப் பங்களிப்பாளர்களும் பங்கெடுக்க அழைக்கிறேன். விரைவில் இடம்பெறக்கூடிய செய்திக்கட்டுரைகள் பகுப்பு இங்கு உள்ளது. அவற்றை மேம்படுத்தி உதவுங்கள். உங்களுக்குத் தெரியுமா பகுதியில் கூடுதல் கட்டுரைகளை இனங்கண்டு சேருங்கள். நன்றி--ரவி 21:28, 11 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

Anti-tamil nadu article[தொகு]

Hey Guys, Take a look at the article Kaveri River Water Dispute here[1].This article is totally biased and represents karnataka POV. The user editing this article is notorious to push pro-karnataka views on all artilces. Can't you do anything?

Hi I have gone through the site but the article is quite lengthly and it takes my time. But if you think that article is not neutral just put {{NPOV}} at the begnning of the article or elsewhere where ever is appropriate. let me know if you need any help. --Umapathy 05:32, 9 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

For specific points, you can read the points at the end of discussion page here [2].

முதற்பக்க காட்சிப்படுத்தல் கட்டுரைகள்[தொகு]

தமிழ் விக்கிபீடியாவுக்கு பங்களிப்பாளர்களை விட பார்வையாளர்களே அதிகம் வருவதால், முதற்பக்கத்தில் புதுப் புதுக் கட்டுரைகளை காட்சிப்படுத்தினால் நன்றாக இருக்கும். கூட்டு மு யற்சிக் கட்டுரை பகுதியை முதற்பக்கத்தில் இருந்து எடுத்து விடலாம். குறைந்த அளவே உள்ள சிறப்புக் கட்டுரைகளையும் திரும்பத் திரும்ப காட்டுவதால் அலுப்புத் தட்டலாம். அதனால், சிறப்புக் கட்டுரைகளுடன் சேர்த்து, ஓரளவு நிறைவடைந்துள்ள பட்டாம்பூச்சி போன்ற நல்ல கட்டுரைகளை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தலாமே! சிறப்புக் கட்டுரைகள் என்ற பகுதியை நீக்கி முதற்பக்கக் கட்டுரைகள் என்று ஒரு பிரிவை துவக்கலாம் இடப்பக்கச் சட்டத்தில் இரண்டு கட்டுரைகளை காட்சிப்படுத்தலாம். இவற்றை மூன்று நாளைக்கு ஒரு முறை மாற்றலாம். வலப்பக்கச் சட்டத்தில் வழக்கம் போல் உங்களுக்குத் தெரி யுமாவும் செய்திப்பகுதிகளும் இடம்பெறட்டும்.

முதற்பக்கக் கட்டுரைகளுக்கான பரிந்துரையை [[பேச்சு:விக்கிபீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்]] பக்கத்தில் தெரிவிக்கலாம்--ரவி 09:34, 11 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

பயனர்களிடம் இருந்து கருத்தோ எதிர்ப்போ வராத நிலையில் முதற்பக்கத்தில் மாற்றங்களை செய்துள்ளேன். இன்னும் அதிகமான காட்சிப்படுத்தல்களை சீரான குறைந்த கால இடைவெளிகளில் முதற்பக்கத்தில் இருந்து தருவது அவசியம். எந்த தளத்திலும் புகைப்படத்துடன் காட்சிப்படுத்தப்படும் கட்டுரைகளை நாம் கவனித்துப் படிப்பது வாடிக்கை. அதனால், முதற்பக்கத்தை அடிக்கடி இற்றைபடுத்த வேண்டும். முதற்பக்கத்தில் அடிக்கடி மாற்றங்கள் இல்லாவிட்டால், casual readers தளத்துக்கு வரும் frequency குறையும். நற்கீரனின் இம்மாதப் பயனர் தெரிவுகள் பக்கத்துகான இணைப்பையும் முதற்பக்கத்தில் கொண்டு வருவது பற்றி யோசிக்கலாம். ஓரளவு செறிவாக உள்ள கட்டுரைகளில் உள்ள படிமம் ஒன்றையும் காட்சிக்கான படிமமாக முதற்பக்கத்தில் தந்து கட்டுரைப் பக்கத்துக்கு இணைப்பு தரலாம்--ரவி 15:51, 12 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]


சில கருத்துக்கள்[தொகு]

  • முதற்பக்க படிமக் கட்டகம் மேலே இருக்கும் கட்டகத்தோடு align ஆக இருந்தால் நன்றாக இருக்கும்.
  • இன்றைய என்றதை விட்டுவிட்டு, 2,3,4 படங்களை அவ்வப்பொழுது இடுவது பொருந்துமோ !!!
  • ரவி, த.வி. பீடியாவின் சகோதர திட்டங்களை சிறிய படிமங்களோனாவது மீள் இணைப்பது நன்று என்று நினைக்கின்றேன். (Simplicity is fine, but requiring users to search for something is not necessarily good design. It requires more clicks.)
  • இடப்பக்கத்தில், இந்திய மொழிகளும், பரவலாக பேசப்படும் மொழிகளும் மேலும் இணைக்கப்படலாம்.

--Natkeeran 00:13, 7 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

நற்கீரன், என் விக்கி விடுப்பை கட்டிக் காக்க நினைப்பதால் ;) தொகுப்புகள் செய்யாமல் இருந்து வருகிறேன். நீங்களும் பிற பயனர்களும் முதற்பக்கத்தில் செய்ய விரும்பும் மாற்றங்களுடன் உடன்படுகிறேன். மாற்றங்களை நீங்களே செய்து விடுங்கள். முதற்பக்கம் இரண்டு வாரமாக இற்றைப்படுத்தப்படாமல் இருப்பது கவலைக்குரியது.--Ravidreams 08:11, 7 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...வடிவமைப்பில் அவ்வளவு திருப்தியில்லை,[தொகு]

வடிவமைப்பில் அவ்வளவு திருப்தியில்லை, பழைய 8 பிற விக்கிமீடியா திட்ட இணைப்புக்களைத் தருவதே நன்றாக இருப்பதாகவும் தோன்றுகின்றது. என்ன சொல்கின்றீர்கள்? --Natkeeran 16:37, 11 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]


தமிழில் உள்ள விக்கி திட்டங்களுக்கும் மேல் விக்கிக்கும் படிமங்களுடன் கூடிய இணைப்புத் தருவது பொருத்தமாக இருக்கும்.... இப்போதுள்ள வடிவமைப்புக் காரணமாக கணினித்திரையில் முதற்பக்கத்தை முழுமையாகப் பார்க்க முடியாதுள்ளது. --கோபி 16:42, 11 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
கோபி, screen shot கோப்பேற்ற முடியுமா? --Natkeeran 17:18, 11 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]


உண்மைதான் முதல்பக்க அமைப்பு எனக்கும் திருப்தி இல்லை மற்றது இவ்வார படிமதின் மீது விக்கிதிட்ட Logo இடைவெட்டுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.இதனையும் கவனிக்க--கலாநிதி 17:14, 11 நவம்பர் 2006 (UTC)


தேவையான மாற்றங்களை செய்து இன்றிரவு என் கருத்துக்களை பகிர்கிறேன். சற்று அவகாசம் தரவும்.--Ravidreams 17:10, 11 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

தமிழ் நடை[தொகு]

அனைவருக்கும் வணக்கம், விக்கிபீடியாவில் கட்டுரைகளில் பெரும்பாலும் இலங்கைத்தமிழே கையாளப்பட்டுள்ளது. ஆதலால் கட்டுரைகளில் கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் புரிவதற்கு கடினமாக உள்ளது. உதாரணமாக பாவணை, அவதானிப்பது, போன்ற சொற்கள் இந்திய தமிழர்கள் பயன்படுத்தாத சொற்கள். கட்டுரைகளில் கையாளப்படும் கலைச்சொற்களும் ஏற்கனவே தமிழ்நாட்டில் வழகத்தில் உள்ள கலைச்சொற்களும் வேறுபட்டுள்ளன. கட்டுரைகளின் மொழிநடையும் அவ்வாறே உள்ளது.எனவே கட்டுரைகளை இயற்றும் போது அனைத்து தமிழர்களும் எளிதில் புரிந்து கொள்ளும்விதமாக, ஒரு பொதுவான நடையில் இயற்றவேண்டுமென கேட்டுகொள்கிறேன். - வினோத்

வினோத், தற்பொழுது தமிழ் விக்கிபீடியாவில் இலங்கைப் பயனர்களே அதிக முனைப்புடன் இயங்குகின்றனர். இதனால், இலங்கை எழுத்து நடை, சொற்கள் கட்டுரைகளில் காணக்கிடைப்பது புரிந்து கொள்ளத்தக்கது. அனைத்து நாட்டுப் பயனர்களுக்கும் புரியும் வகையில் பொது நடையில் நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமான இலங்கை வழக்குகள் வருமிடத்து தமிழக வழக்கும் இணைத்தே தரப்படுகிறது (எடுத்துக்காட்டு, கொசு-நுளம்பு). உங்களைப் போன்ற தமிழகப் பயனர்கள், பிற உலகத் தமிழர்கள் பலரும் சேர்ந்து பங்களிக்கத் தொடங்கும்போது பொது நடை தானாக வரும். தவிர, பாவனை, அவதானம் போன்ற சொற்கள் இன்று இணையத்தின் மூலம் பல தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் அறிமுகமாகி வருகிறது. எனவே அவற்றை இலங்கைத் தமிழ் என்று ஒதுக்காமல் பொது நடையாக கருதுவதும் தகும் (இவை நல்ல தமிழ்ச் சொற்களாக இருக்கும் பட்சத்தில்). --Ravidreams 19:36, 7 டிசம்பர் 2006 (UTC)

என் முதல் கட்டுரை[தொகு]

வணக்கம், விக்கிபீடியாவில் நான் 'கிரந்தம்' குறித்து ஒரு கட்டுரையை சமர்ப்பித்துள்ளேன். இதுவே எனது முதல் கட்டுரை, ஆகவே இதில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டினால் மேலும் என் கட்டிரைகளை சிறப்பாக சமர்ப்பிக்க ஏதுவாக இருக்கும். மேலும் என் கீழ்க்காணும் சந்தேகங்களை தயவு செய்து தீர்க்கவும். நான் இயற்றிய கட்டுரைகள் பற்றிய பிறர் கருத்துக்களை எங்கே காண முடியும் ? பிற பயனர்கள் என் கட்டுரைகளை தொகுக்கும் போது அவர்களின் அனைத்து தொகுப்பு வரலாற்றினையும் என்னால் காண இயலுமா ?

please give a "font help" link on frontpage[தொகு]

please give a "font help" link on frontpage


Hi Sri Lankan user, it's already there on the upper left hand corner. If there is anything need to be done please let me know. --Umapathy 15:49, 2 ஜனவரி 2007 (UTC)

உமாபதி, முதல் பக்கத்திலுள்ள 'உதவி' இணைப்பைக் குறிப்பிடுகிறீர்களா? ஆங்கிலத்தில் எழுத்துரு உதவிப்பக்கம் இருக்கவேண்டுமென்று நானும் நினைக்கிறேன். பெரும்பாலான இயங்குதளங்களில் ஒருங்குறி எழுத்துருக்கள் இருந்தாலும் அவை சரியாகத் தெரிவதில்லை. TSCu_paranar போன்ற எழுத்துருக்களை கிடைக்கச்செய்வது பயனளிக்கலாம். பாலாஜி 01:48, 11 ஜனவரி 2007 (UTC)

பாலாஜியின் கருத்துடன் உடன்படுகிறேன். font help ஆங்கிலத்திலும் தமிழிலும் இருப்பது அவசியம். முதற்பக்கத்தில் தேடிப்பார்த்தேன். இருப்பதாகத் தெரியவில்லை.--Kanags 02:17, 11 ஜனவரி 2007 (UTC)

sidebar[தொகு]

Hello. As I do not know where to find the village pump around here, I just write it on this talkpage. When I open an edit window, I see that the sidebar on the left is shifted downwards. I wonder why this is, but my guess is that is it caused by some monobook.js/css or so. Maybe someone could take a look at it? I am using currently Windows ME and Mozilla FireFox 1.5 . Thank you for your attention. Effeietsanders 11:54, 9 ஏப்ரல் 2007 (UTC)

how to search[தொகு]

I wanted to search through your articles but since i have no tamil software i was not able to. if you had categorized articles in alphabetic orders and put a link in the main page it would have been easy --202.83.54.70 02:37, 19 ஏப்ரல் 2007 (UTC)


u can use the links அகரவரிசை, துறை வரிசை given in the main page below the parent category links --ரவி 07:11, 19 ஏப்ரல் 2007 (UTC)

बधाई[தொகு]

हिंदी विकिपीडिया से नमस्ते! 10,000 से ज़्यादा लेख के संख्या reach करने के लिए बधाई! Greetings from the Hindi Wikipedia! Congratulations on reaching 10,000 articles! --वुल्फ़ 15:46, 27 ஏப்ரல் 2007 (UTC)

धन्यवाध --ரவி 16:08, 27 ஏப்ரல் 2007 (UTC)

ta.wikisource.org[தொகு]

Hello. Tamil Wikisource has been created for classical and modern books and texts written in the Tamil language. Congratulations!

Please correct the Wikisource link at the bottom of the Main Page, so that it links to the new Tamil Wikisource wiki. Thanks. 80.178.233.25 08:46, 10 மே 2007 (UTC)[பதிலளி]

Thanks--Sivakumar \பேச்சு 08:50, 10 மே 2007 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முதற்_பக்கம்/1&oldid=169924" இலிருந்து மீள்விக்கப்பட்டது