பேச்சு:முதற் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

முதற் பக்கம் தொடர்பான உரையாடல் மட்டும் இப்பக்கத்தில் செய்யலாம். விக்கிப்பீடியா தொடர்பான உரையாடல்களுக்கு ஆலமரத்தடிக்குச் செல்லவும்.

  • முதல் பக்கம் இன்றைப்படாமல் இருந்தால் இந்த இணைப்பைச் சொடுக்குவதன் மூலம் சரியாகலாம்.
  • முதற்பக்க பராமரிப்பு/ இற்றைப்படுத்துதலில் பங்கு கொள்ள இங்கு செல்லவும்
தொகுப்பு

காப்பகம் (தொகுப்புகள்)


1 2 3 4

முதற்பக்க இணைப்பு[தொகு]

கட்டற்ற உள்ளடக்கம் கட்டுரையை முதற் பக்கத்தில் "கட்டற்ற" என்ற சொல்லில் இணைப்பாகத் தரமுடியுமா ? ஆங்கில விக்கியில் தரப்பட்டுள்ளது.--பிரஷாந் (பேச்சு) 04:04, 23 சனவரி 2013 (UTC)

நானே இணைத்துள்ளேன்--பிரஷாந் (பேச்சு) 04:25, 23 சனவரி 2013 (UTC)

இந்திய விடுதலை இயக்கம்[தொகு]

இந்திய விடுதலை இயக்கம் வார்ப்புருவில் உள்ள தகவல்கள் முதற்பக்கத்தில் உள்ள பெட்டியில் இற்றைப்படுத்தவில்லையென்று நினைக்கிறேன். சரிபார்க்கவும். நன்றி --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:03, 29 சனவரி 2013 (UTC)

Yes check.svgY ஆயிற்று கட்டுரைகளுக்காக டீஃபால்டாட வார்ப்புரு மறைக்கப்பட்டிருக்கும். ஆனால் முதற்பக்கத்தில் அதை விரித்து காட்ட வேண்டும் என்பதால் அப்படியே வெட்டி ஒட்டப்பட்டுளது. அதனால் இற்றையாகவில்லை. தற்போது சரி செய்துளேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:53, 29 சனவரி 2013 (UTC)

ஒரு வார்ப்புருவை இயல்புநிலையிலேயே விரித்துக்காட்ட state=off என பயன்படுத்தலாமே? எ.கா {{இந்திய விடுதலை இயக்கம்|state=off}}:--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 10:21, 16 பெப்ரவரி 2013 (UTC)

இன்றைய நாளில்[தொகு]

கிருஸ்னா டாவின்சியின் இறப்பு நிகழ்ந்தது ஏப்பிரல் 4ந் திகதியா அல்லது ஏப்பிரல் 3ந் திகதியா? --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:51, 3 ஏப்ரல் 2013 (UTC)

பிறமொழிப்பட்டியல்[தொகு]

  • முதல்பக்கத்தில் தோன்றும் பிறமொழிப்பட்டியல் மிக நீளமாக உள்ளதே அதை எவரேனும் சீர்படுத்தி உதவவும்
  • Complete list
  • Text is available under the Creative Commons Attribution/Share-Alike License; additional terms may apply. See Terms of Use for details.

போன்றவற்றை மலையாள, இந்தி விக்கிகளில் அவர்களின் மொழியிலே தான் எழுதுகிறார்கள் நாமும் அப்படி மாற்றலாமே?--சங்கீர்த்தன் (பேச்சு) 16:48, 19 ஏப்ரல் 2013 (UTC)

முதற்பக்கத்தில் வலைவாசல்களைக் காட்டுதல்[தொகு]

அண்மைய பட்டறைகளில், விக்கிப்பீடியாவின் உள்ளடக்கங்களைத் துறை வாரியாக காட்சிப்படுத்திக் காட்ட வலைவாசல்கள் உதவின. தற்போது, புதிய வலைவாசல்களை அமைக்கும் போக்கும் கூடி வருகிறது. இதனை முன்னிட்டு, முதற்பக்கத்தில், தற்போது பங்களிப்பாளர் அறிமுகம் இருக்கும் இடத்தில், இரு வாரத்துக்கு ஒரு முறை ஒரு வலைவாசல் அறிமுகத்தைக் காட்டலாமா? இந்த இடைவெளியில், கூடுதல் பங்களிப்பாளர் அறிமுகங்களைப் பெற்றுக் கொண்ட பிறகு, மீண்டும் அதனை முதற்பக்கத்தில் காட்டலாம்--இரவி (பேச்சு) 03:46, 1 மே 2013 (UTC)

👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:51, 1 மே 2013 (UTC)
👍 விருப்பம்---இராஜ்குமார் (பேச்சு) 05:51, 1 மே 2013 (UTC)
👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 09:53, 1 மே 2013 (UTC)
👍 விருப்பம் - இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் இன்னும் அதிக அளவில், முக்கிய தலைப்புகளில், மக்களை அதிகம் கவரக்கூடிய வகையில் வலைப்பக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். --அராபத் (பேச்சு) 13:40, 1 மே 2013 (UTC)

முடிந்தளவு இதைப் போல் புது முயற்சிகளை முதற்பக்கத்தின் மேற்பகுதியில் காட்டினால் என்ன? கீழ்பகுதி அதிகம் கவனிக்கப்படுவதில்லை என்பது போன்ற எண்ணம் உளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:23, 1 மே 2013 (UTC)

அராப்பத், நீங்கள் சுட்டியபடி பல்வேறு புதிய வலைவாசல்களை உருவாக்க வேண்டியுள்ளது. ஆனால், இவற்றில் போதுமான உள்ளடக்கமும் விரிவாவதற்கான வாய்ப்பும் இருத்தல் நலம். ஏற்கனவே உள்ள வலைவாசல்களையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. முதற்கண், முகப்புப் பக்கத்தில் இருந்து இணைக்கப்பட்டுள்ள பெரும் வலைவாசல்களான தமிழ், அறிவியல், வரலாறு, புவியியல், கணிதம், தொழில்நுட்பம் ஆகியவற்றைக் காட்டலாம். அதன் பிறகு, தற்போது பயனர்கள் ஈடுபாடு காட்டி வரும் இந்து சமயம், கிறித்தவம், கருநாடக இசை, இலக்கியம், மின்னணுவியல் போன்ற வலைவாசல்களைக் காட்டலாம். இதனை இற்றைப்படுத்தும் பொறுப்பை யாராவது ஏற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்.
சுப்பிரமணியன், கீழ்பகுதிக்கான கவனம் குறையலாம் என்பது உண்மையே. அதே வேளை, இதற்கு மேலே உள்ள செய்திகள் பகுதி தொடர்ந்து இற்றைப்படுத்தப்படுவதால், அதுவும் முக்கியமானதே. வேறு வகையில் காட்சிப்படுத்துவதற்கான நுட்ப வாய்ப்பு இருந்தால் தெரியப்படுத்துங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 15:00, 2 மே 2013 (UTC)
இரவி, வலைவாசல் அறிமுகத்தை தொடங்கிவிட்டீர்களா???? இன்னும் கொஞ்சம் நாள் கிடைத்தால் தாய்ப் பகுப்பில் உள்ள வலைவாசல்களின் உள்ளடக்கங்களை செம்மைப் படுத்திவிடுவேன். அதன் பிறகு இதை தொடரலாமே.. (இப்போதைய உள்ளடக்கங்கள் மிகவும் குறைவு)--அராபத் (பேச்சு) 17:21, 6 மே 2013 (UTC)
அராப்பத், இப்ப தான் நீங்கள் புவியியல் வலைவாசலில் வேலை செய்வதைக் கண்டேன். தமிழ் வலைவாசலைப் பொருத்த வரை, ஓரளவு பயனுள்ள நிலையில் இருப்பதாகவே கருதுகிறேன். அடுத்த இரு வாரங்களுக்கு இதைக்காட்டும் இடை வெளியில் இதனையும் அடுத்தடுத்த வரும் வலைவாசல்களையும் மேம்படுத்தி விடலாம் என்றே நினைக்கிறேன். முழு விக்கிப்பீடியாவுமே எப்போதுமே வேலை நடந்து கொண்டிருக்கும் இடம் தானே?--இரவி (பேச்சு) 17:30, 6 மே 2013 (UTC)

சரி இரவி. அப்படியே அடுத்தடுத்து காட்டப்படும் வலைவாசல்களை வரிசைக்கிரமமாக பட்டியலிடுட்டுவிட்டால் (குறைந்தபட்சம் முதல் ஐந்து), முன்னுறிமை கொடுத்து செம்மைபடுத்த ஏதுவாக இருக்கும்.--அராபத் (பேச்சு) 17:44, 6 மே 2013 (UTC)

தமிழ், அறிவியல், வரலாறு, புவியியல், கணிதம், தொழில்நுட்பம் ஆகிய தாய்ப்பகுப்புகள். பிறகு, இந்து சமயம், கிறித்தவம், கருநாடக இசை, இலக்கியம், மின்னணுவியல் போன்று பயனர்கள் உருவாக்கி வரும் வலைவாசல்கள். குத்துமதிப்பாக, அதை வரிசையில்.--இரவி (பேச்சு) 17:47, 6 மே 2013 (UTC)

வார்ப்புரு:wiktionarysister - சீர்மை[தொகு]

அனைத்து தமிழ் விக்கித்திட்டங்களிலும், முதற்பக்கத்தில் வரும் சொற்கள்/வார்ப்புருக்கள்/பக்க வடிவம் என வருபவை அனைத்தும், அனைத்துத்திட்டங்களிலும் சீராக இருப்பின், புதியவர்களிடம் ஒரு நெருக்கத்தை உருவாக்கும். எடுத்துக்காட்டாக, இங்கு இடப்பக்கம் பொதுவகம் என்று உள்ளது. ஆனால், கீழே பொது என்றுள்ளது. இப்பக்கத்தில், இருவேறுபட்ட சொற்களுடன் திகழ்வது, இரண்டும் வெவ்வேறு திட்டம் என்ற எண்ணத்தை உருவாக்கும். விக்சனரி வார்ப்புரு:wiktionarysister என்பதில், பொதுவகம் என மாற்றிவிட்டேன். அதே போல இங்கும், பிற தமிழ் விக்கித்திட்டத்தங்களிலும் மாற்றக் கோருகிறேன். வணக்கம். ≈ உழவன் ( கூறுக ) 05:47, 5 மே 2013 (UTC)

தமிழ் விக்கிபீடியாவின் முதற்பக்கத்திலும் வார்ப்புரு:wikipediasister என்பதிலும் மாற்றப்பட்டது.--மணியன் (பேச்சு) 08:15, 5 மே 2013 (UTC)

2000 ஆண்டுகள் பழமை என்று இன்னும் எத்தனை வருடங்கள் கூறுவது?[தொகு]

தமிழ் பிராமி கல்வெட்டுகள் 2300 ஆண்டுகள் பழமையானவை என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும், அதற்கும் பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் கூறிக்கொண்டிருந்தாலும், நாம் மட்டும் 2000 பழமை என்றே கூறிக்கொண்டிருக்க வேண்டுமா? தயை கூர்ந்து 2300 ஆண்டுகள் பழமியான தமிழ் எனவே இனிக் கூற வேண்டுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:02, 6 மே 2013 (UTC)

இனி நான் அவ்வாறே கூற முயற்சிக்கிறேன். --இராஜ்குமார் (பேச்சு) 20:12, 6 மே 2013 (UTC)
முதற்பக்க வடிவமைப்புக் குறித்து மட்டும் இங்கு உரையாடுங்கள். ஏனையவற்றை ஆலமரத்தடியில் அல்லது அவ்வவற்றின் உரையாடல் பகுதிகளில் செய்யலாம்.--Kanags \உரையாடுக 21:18, 6 மே 2013 (UTC)

This content is also in முதற்பக்கம். தமிழ் வலைவாசல் என்ற பகுதியில் இந்த தகவலுள்ளது. அடுத்தாக தமிழர் வலைவாசலை தான் காடுவர் என நினைக்கிறேன். அப்போது வலைவாசலின் முதற்பக்க உள்ளடக்கத்தை சுட்டவும். நான் அதை காட்சிப்படுத்தும் முன்னரே பார்க்க வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:19, 7 மே 2013 (UTC)

முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா?[தொகு]

முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா பகுதியில் விரிவாக்க வேலை நடந்துக் கொண்டிருக்கிறது என்ற வார்ப்புரு தற்போது தெரிகிறது. சற்று கவனிக்கவும். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:44, 21 ஆகத்து 2013 (UTC)

அவசரகால இற்றையைச் செய்துள்ளேன். ஜுலை 31'க்குரிய துணுக்குகளையே திரும்பவும் இட்டுள்ளேன். புதிய துணுக்குகள் இடப்படல் வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:52, 21 ஆகத்து 2013 (UTC)
தானியங்கியை நிறுத்துமாறு பரிந்துரைக்கிறேன்.--Kanags \உரையாடுக 07:56, 21 ஆகத்து 2013 (UTC)

வேலை நடந்து கொண்டிருக்கிறது வார்ப்புரு இருந்தால் தானியங்கி முதற்பக்கத்தில் இடாது என்று கூறியதாக நினைவு. யாரேனும் தெளிவிப்படுத்த வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:53, 21 ஆகத்து 2013 (UTC)

ஆம். செவ்வாயன்றே குறித்த கிழமைக்கான உ.தொ. தயார் படுத்தப்பட்டிருப்பின் சிக்கல் இராது. --Anton (பேச்சு) 09:44, 21 ஆகத்து 2013 (UTC)
ஏற்கனவே தயார் செய்யப்படாமல் இச்சிக்கல் எழுவது இது இரண்டாவது தடவை. வேலை நடந்து கொண்டிருக்கிறது வார்ப்புரு இருந்தும் தானியங்கி அதனைக் கவனிக்கவில்லை. 1. தானியங்கியைத் திருத்த வேண்டும். 2. ஒரு மாத காலத்துக்கான பதிவுகளை முன்னரேயே பதிவிட வேண்டும். 3. இவை முடியாவிட்டால், தானியங்கியைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும்.--Kanags \உரையாடுக 09:51, 21 ஆகத்து 2013 (UTC)

நிருவாகிகளின் வேலைகளைப் பகிர்ந்துகொள்ளும் பொருட்டும், ஓரளவு எளிதான வேலை என்பதாலும், விரிவான அறிவினைப் பெறஇயலும் என்பதாலும்... அடுத்த சில மாதங்களுக்கு 'உங்களுக்குத் தெரியுமா?' பகுதியினை இற்றைப்படுத்தலாமென முடிவு செய்துள்ளேன். நான் செய்ய இருக்கும் பணியில் ஏதேனும் மாற்றுக்கருத்துக்கள் தோன்றினால்... உடனடியாக எனது பேச்சுப் பக்கத்தில் தெரிவியுங்கள். இடப்படும் துணுக்குகளில் முன்னேற்றங்கள் ஏதும் தேவைப்படின்... தயங்காது மாற்றங்கள் செய்து உதவவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:18, 27 ஆகத்து 2013 (UTC)

👍 விருப்பம் - உங்களுக்குத் தெரியுமா? பகுதியைத் தாங்கள் இற்றைப்படுத்துவதற்கு முன் வந்தமைக்கு என் இதயங்கனிந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனியாவது, உங்களுக்குத் தெரியுமா? பகுதியில் இடம் பெறும் தகவல்கள் இந்திய அரசுப் பணிகள், தமிழ்நாடு அரசுப் பணிகள், ஆசிரியர் தகுதித் தேர்வுகள் போன்ற போட்டித் தேர்வுகளுக்கும், பொது அறிவுத் தகவல்களைப் பலரும் அறிந்து கொள்வதற்கும் உதவும் விதமாகப் பயனுடையதாக அமையட்டும். நன்றி.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:45, 27 ஆகத்து 2013 (UTC)

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 21:12, 27 ஆகத்து 2013 (UTC)
👍 விருப்பம்--அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 05:08, 28 ஆகத்து 2013 (UTC)
👍 விருப்பம் இந்த பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டது மிக்க மகிழ்ச்சி. இதற்கு முன்னர் காட்சிப்படுத்தப்பட்ட தகவல்கள் அனைத்தும் தமிழர்களை தமிழ்நாடு, இந்தியா என்ற குறுகிய வட்டத்திற்குள் அடக்கி ஒடுக்காமல் தமிழர்கள் உலகம் முழுதும் பரவியுள்ளனர் என்பதற்கு ஏற்ப காட்சிப்படுத்தப்பட்டன. உலகப்பொது அறிவை பலரும் அறியும் வண்ணமும் மிக மிக பயனுடையதாகவுமே அமைந்தும் இருந்தன. நீங்கள் ஏற்கனவே உங்களுக்குத் தெரியுமா தகவல்களை இற்றைப்படுத்தி அனுபவம் பெற்றவர்கள் துணையுடன் இனியும் இப்பணியை நன்றாக செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:25, 28 ஆகத்து 2013 (UTC)
டிசம்பர் 25, 2013 உங்களுக்குத் தெரியுமா தானியக்கமாக முதற்பக்கம் இற்றைப்படுத்தப்படவில்லை. யாராவது சரிப்படுத்தவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:28, 25 திசம்பர் 2013 (UTC)
தானியங்கியைத் தயாரித்தவர்கள் யாராவது உள்ளனரா? பயனர்:Shanmugamp7 கவனிக்க.--Kanags \உரையாடுக 23:51, 25 திசம்பர் 2013 (UTC)
டிசம்பர் தலைப்பு திசம்பராக இருக்க வேண்டும். (டிசம்பருக்கு வழிமாற்றும் வேண்டும்). இப்பிரச்சினை சனவரியிலும் வரக்கூடும்.--Kanags \உரையாடுக 00:01, 26 திசம்பர் 2013 (UTC)

பத்தாண்டுகள் நிறைவுக் கொண்டாட்டத்துக்கு வாருங்கள் தள அறிவிப்பு[தொகு]

செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கொண்டாட்டத்துக்கு வாருங்கள் | தங்குமிடத்துக்கும் பயணச் செலவுக்கும் உதவுவோம்.

புகு பதியாத நிலையில் தள அறிவிப்பு தோற்றம் நிறுத்தப்படலாமே!--ஸ்ரீதர் (பேச்சு) 04:21, 2 அக்டோபர் 2013 (UTC)
Yes check.svgY ஆயிற்று நீக்கியிருக்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 04:43, 2 அக்டோபர் 2013 (UTC)

விக்கிப்பீடியா நண்பர்கள் திட்டம்[தொகு]

இத்திட்டம் செயல்படும் போது முதற்பக்கத்தில் இடம் தேவைப்படும் என்பதால், கருத்து தேவை: விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் விக்கிப்பீடியா நண்பர்கள்--இரவி (பேச்சு) 05:11, 30 திசம்பர் 2013 (UTC)

வலைவாசல் அறிமுகத்தைத் தற்காலிகமாக எடுத்து விடலாம்.--Kanags \உரையாடுக 05:30, 30 திசம்பர் 2013 (UTC)

முதற் பக்க கட்டுரைகள்[தொகு]

கடந்த ஒரு மாத காலமாக முதற் பக்க கட்டுரைகள் இற்றைப்படுத்தப்படாமல் உள்ளதே? என்ன பிரச்சணை?--அராபத் (பேச்சு) 04:26, 3 பெப்ரவரி 2014 (UTC)

பங்களிப்பாளர்களுக்கு உள்ள நேரப்பற்றாக்குறையும் பரிந்துரைகள் குறைவாவதும் தான் காரணம். நீங்களும் முதற்பக்க இற்றைப்படுத்தலில் இணைந்தால் கொஞ்சம் முதற்பக்க இற்றைப்படுத்தல்களை வழுப்படுத்தலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:01, 3 பெப்ரவரி 2014 (UTC)

"http://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முதற்_பக்கம்&oldid=1618006" இருந்து மீள்விக்கப்பட்டது