பேச்சு:மீன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீன் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

மீனும் நீரும் திராவிட மொழிச்சொற்கள் என்பது ஐயம் திரிபற நிறுவப்பட்டுள்ளது. எப்படியெனில் இவ்விரண்டு சொற்களுக்கும் மலைவாழ் பழங்குடியினர் பேசும் திராவிட மொழிகள் உட்பட அனைத்திலும் உள்ளன. தவிர இவற்றின் எண்ணற்ற கிளைச்சொற்களும் இம்மொழிகளில் உள்ளன. மேலும் இவை சுட்டும் பொருட்களுக்கு இவைதான் இம்மொழிகளில் முதன்மைச் சொற்கள். இந்த அடிப்படையிலும் வேறு சான்றுகளையும் கொண்டு இவ்வுண்மை நிறுவப்பட்டுள்ளது. அண்மையில் கூட ஆசுக்கோ பருப்போலோ இதை நினைவுகூர்ந்தார். பரோவின் திராவிட வேர்ச்சொல்லகராதியில் பாருங்கள். (மின்னுவதால் மீன்.) டர்னரின் வடமொழி வேர்ச்சொல்லகராதியிலும் இவ்வுண்மையைக் குறிப்பிட்டுள்ளார். -- சுந்தர் \பேச்சு 16:40, 30 ஜூன் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மீன்&oldid=2318838" இலிருந்து மீள்விக்கப்பட்டது