பேச்சு:மின்னணு இசை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மின்னணு இசை என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

இது மின்கருவி இசை என்று இருந்தால் நன்றாக இருக்கும். ஆங்கிலத்தில் electronic என்பதைத் தமிழில் மின் என்றே சொல்லலாம். Electronic and electrical என்னும் வேறுபாடு ஆங்கிலத்தில் இருக்கலாம், ஆனால் அதில் அடிப்படை ஏதும் இல்லை. மரபுதான் கரணியம். சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி) Light current, heavy current என்னும் சொல்லாட்சி இர்ருந்தது (இன்னும் உள்ளதா என்று அறியேன்). அது சரியான பாகுபாடு. நாம் இரண்டுக்குமே மின் என்னும் முன்னொட்டோடு கூறினால் போதும். மின்னணுக் கருவி, ஏதிமின்னிக் கருவி, எலக்ரானிக் கருவி, இலத்திரனியல் கருவி என்றெல்லாம் கூறத்தேவையே இல்லை. மின்கருவி போதும். மின்கணினி, மின் இசைக்கருவி, மின்கருவி இசை, மின் நுண்ணோக்கி, மின் மிகைப்பி என்றெல்லாம் சொல்லலாம்.--செல்வா 15:44, 19 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

மின்கருவி இசை நன்று. --Natkeeran 16:24, 19 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கிக் கட்டுரையில் In general a distinction can be made between sound produced using electromechanical means and that produced using electronic technology. எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே? இதைத் தமிழிலும் வேறுபடுத்திக் காட்ட வேண்டாமா? மயூரநாதன் 16:27, 19 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மின்னணு_இசை&oldid=2431694" இலிருந்து மீள்விக்கப்பட்டது