பேச்சு:மின்கடத்தி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஸ்பரமாக என்றால்?--ரவி 13:57, 5 ஜனவரி 2006 (UTC)

பஸ்பரமாக என்றால்? Reciprocal. From a Tamil Dictionary. --Natkeeran 19:59, 5 ஜனவரி 2006 (UTC)

பஸ்பரமாக நான் கேள்விப்படாத சொல்லாக இருக்கிறது. தமிழாகவும் தெரியவில்லை. உங்களுக்கு உடன்பாடென்றால் தலைகீழாக என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்--ரவி 21:00, 5 ஜனவரி 2006 (UTC)

Reciprocal என்பதற்கு மறுதலை என்ற சொல்லைத்தான் இலங்கைப் பாடப் புத்தகங்களில் பயன்படுத்துவது வழக்கம். பஸ்பரமாக என்ற சொல்லை நானும் கேள்விப்பட்டதில்லை. தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் கலைச்சொல் அகராதியில் பல சொற்கள் காணப்பட்டாலும், தலைகீழ் என்பதே அதிகமாகக் காணப்படுகிறது. Mayooranathan 07:29, 6 ஜனவரி 2006 (UTC)
பரஸ்பரம் என்ற mutual என்ற பொருள் கொண்ட (வடமொழி மூலம் கொண்ட) சொல்லைக் கேட்டிருக்கிறேன். -- Sundar \பேச்சு 08:12, 6 ஜனவரி 2006 (UTC)

சுந்தர் உங்களின் பொருள் விளக்கம் சரியே. பரஸ்பர உதவி என்ற ரீதியில் இச்சொல் உபயோகிக்கப்படுவதுண்டு. எனது உபயோகம் இங்கு பொருந்தவில்லை என்றே நினைக்கின்றேன். ரவியும், மயூரநாதனும் சுட்டியபடி தலைகீழாக என்ற சொல்லை பயன்படுத்தி கொள்கின்றேன். அவதானமாக கவனித்து பரிந்துரைகள் தந்ததுக்கு அனைவருக்கும் நன்றிகள். --Natkeeran 17:04, 6 ஜனவரி 2006 (UTC)

mass = நிறை என்றே த.பா.க. ( தமிழ்நாடு பாடநூல் கழகம்.) நூல்கள் வழங்குகின்றன. அவ்வாறே இருந்தால் நன்றாக இருக்கும்.
த.பா.க. நூல்களில் directly proportional = நேர்மாறாக, inversely proportional = எதிர்மாறாக. --Suresh jeevanandam 14:36, 6 ஏப்ரல் 2006 (UTC)
directly proprotional = நேர் சார்பாக, inversely proportional = எதிர் சார்பாக. தா.பா.க சொற்கள் முற்றிலும் தவறானது!! நேர் விகிதமாக, எதிர் விகிதமாக என்றும் சொல்லலாம்.

பேச்சு:மின்கடத்து திறன் பக்க உள்ளடக்கம்[தொகு]

Electrical Conductivity என்பதற்கு இணையான கட்டுரை உருவாக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் ஆங்கிலத்திலேயே உள்ளடக்கம் இருந்தமையால் கட்டுரை நீக்கப்பட்டுள்ளது. அதன் பேச்சுப் பக்க உள்ளடக்கம் இங்கே நகர்த்தப்படுகிறது. கீழே...

இது மின் கடத்துமை என இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கலைச் சொற்கள் தரப்படுத்தப்பட வேண்டும். பிறைக்குறிகளுக்குள் கலைச் சொற்களின் வேறுபாடுகளைக் குறிக்கலாம்).

மின் தடை = Electrical Resistor?
மின் தடையம்= Electrical Resistance?
மின் தடைவி = Electrical REsistor?
மின் தடைமை = Electrical Resitivity
மின் கடத்தி = Elelectrical conductor
மின் கடத்துமை= Electrical conductivity
மின் கடத்தம்= Electrical conductance


மின் மறிமம் = Electrical impedance (measure)
மின் மறிவி = Electical impedance (physical body offering impedance).
மின் தூண்டி = inductor
மின் தூண்டியம் = inductance
கொண்மம் = Capacitance ?
கொண்மி= capacitor ?

Density என வருமிடங்களில் செறிவு என்னும் சொல்லால் குறிப்பது நலம். மின்னழுத்தச் செறிவு, மின் புலச் செறிவு, மின்னோட்டச் செறிவு, காந்தப்புலச் செறிவு. --C.R.Selvakumar 15:33, 10 ஜூன் 2006 (UTC)செல்வா

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மின்கடத்தி&oldid=2637556" இலிருந்து மீள்விக்கப்பட்டது