பேச்சு:மாணிக்கவாசகர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாணிக்கவாசகர் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மாணிக்கவாசகர் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு[தொகு]

தலைப்பை மாணிக்கவாசகர் என மாற்ற வேண்டும். இவர் 63 நாயன்மார்களுள் ஒருவரல்லர். --செல்வா 18:14, 15 மார்ச் 2007 (UTC)

மாணிக்கவாசகர் என்றே இவர் அழைக்கப்படுகிறார். அப்படியே மாற்றிவிடலாம்.--Kanags 20:18, 15 மார்ச் 2007 (UTC)

"மாணிக்கவாசகர்" என்னும் தலைப்பில் என் கட்டுரை இட்டுள்ளேன். முன்னர் இருந்த கட்டுரையில் அரசன் வரகுண பாண்டியன் என்றுள்ளது. ஆனால் அரசனோ, "அரிமர்த்தன பாண்டியன்." இரு கட்டுரைகளில் எது நன்றாக உள்ளதோ அதையே வைத்துக்கொள்ளலாம்.--ஞானவெட்டியான் 06:40, 19 மார்ச் 2007 (UTC)

இரு கட்டுரைகளுமே தவறான கருத்துக்கள் மலிந்து காணப்படுகின்றது!! சிவஞானபோதம் எழுதிய மெய்கண்டார் வாழ்ந்தது கி.பி 1100-1200. மாணிக்கவாசகர் காலம் இதற்கு பல நூற்றாண்டுகள் முன். (மாணிக்கவாசகர் காலம் பற்றி மறைமலை அடிகள் ஒரு நூலே எழுதியுள்ளார்). கையில் சிவஞானபோதம் வைத்திருந்தார் என்றெல்லாம் முற்றும் கற்பனை/புனைவாக எழுதுவது மிகவும் வருந்தத் தக்கது. ஒரு கலைக்களஞ்சியத்தில் வலுவான உண்மைகள், அல்லது வலுவான மேற்கோள்களில் அடிப்படையில் எழுதவேண்டும். மாணிக்கவாசகருடைய கதையைச் சுருக்கி, அவர் நூல்களில் உள்ள கருத்துக்கள் வழி அவர் என்ன ஆக்கங்கள் செய்தார் எனக் கூறுவது பொருந்தும். அவருடைய கதையைச் சொல்லவேண்டும் எனில் எங்கிருந்து கருத்துக்கள் எடுத்தாள்கிறார்கள் என்னும் மேற்கோள்கள் துல்லியமாய்த் தருதல் வேண்டும். --செல்வா 12:28, 19 மார்ச் 2007 (UTC)

//கையில் சிவஞானபோதம் வைத்திருந்தார் என்றெல்லாம் முற்றும் கற்பனை/புனைவாக எழுதுவது மிகவும் வருந்தத் தக்கது. //

போதம் என்றால் அறிவு, உபதேசம்
சிவஞான போதம் என்பது சிவனைப் பற்றிய உண்மை உணர்த்தும் உபதேச நூல் இதை மெய்கண்டாரின் "சிவஞான போதம்" நூலுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். அடிப்படையில் மெய்யியல் தெரியதவர்களுக்கு எழுதுகிறோம் என்னும் விழிப்புணர்வுக் குறைவால் அங்கே விளக்கவில்லை.எக்கருத்தாயினும் ஆற அமர விசாரித்துப் பின் கற்பனயெனில் கற்பனை எனலாமல்லவா? கட்டுரையின் அடிக்குறிப்பில் ஆதரம் தந்துள்ளேன்.
ஆதாரம் - அபிதான சிந்தாமணி - பக் 851 --ஞானவெட்டியான் 13:37, 19 மார்ச் 2007 (UTC)

அபிதான சிந்தாமணியில் போதுமான ஆதாரம் ஏதும் தரப்படவில்லை. கடைசியாக தலபுராணம் கூறுகின்றது என்று பொதுவாக கூறியுள்ளதேயன்றி எப்பொழுது யாரால் இத்தலபுராணம் எழுதப்பட்டது முதலிய செய்திகள் ஏதும் இல்லை. த வி கட்டுரையில் நாம் எழுதும் பொழுது, "மாணிக்கவாசகரைப் பற்றி வேறு வழிகளில் உறுதி செய்ய வியலா சில கருத்துக்கள் அபிதான சிந்தாமணியில் திருவாதவூர் (?) தலபுராணத்தில் உள்ளனவாக தரப்பட்டுள்ளது" என்று தொடங்கி சுருக்கமாக அவருடைய "வரலாற்றைத்" தரலாம். அல்லது அபிதான சிந்தாமணியில் உள்ள கதையை பிற வலைப்பதிவுகள் ஏதும் குறித்திருந்தால் அதற்கு சுட்டி தந்து சுருக்கமாகச் சொல்லலாம். திருவாசகம் ஒப்பற்ற நூல்களில் ஒன்று, அதில் உள்ளவற்றை கட்டுரைக்குள் தலைப்புக்கேற்றவாறு ஒரு சில சொல்லி நிறைவு செய்வது பொருந்தும்.--செல்வா 15:09, 19 மார்ச் 2007 (UTC) நான் மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தேன். இது அண்மைக்கால மரபுவழி வரும் கதை ஆகையால், நான் குறிப்பிட்டவாறு ஒரு வரி முன்னுரை கொடுத்து இக்கதையைக் கொடுத்தால் சரியாக அமையும் என நினைக்கிறேன். மாணிக்கவாசகர் தன்னை புலையன் என்றுதான் கூறியுள்ளார். நரியை பரியாக்கியதெல்லாம் மெய்யியல் கருத்துக்கள் (உண்மை நிகழ்வுகளல்ல). திருநாவுக்கரசரும் நரி-பரி எனப்படும் குறிப்பைத் தந்துள்ளார். இதெல்லாம் பரிமொழி எனப்படும். --செல்வா 15:28, 19 மார்ச் 2007 (UTC)


//அபிதான சிந்தாமணியில் உள்ள கதையை பிற வலைப்பதிவுகள் ஏதும் குறித்திருந்தால் அதற்கு சுட்டி தந்து சுருக்கமாகச் சொல்லலாம். //

என்னுடைய "திருவாசகம்" வலைப்பதிவிலேயே முன்னுரையாக இட்டுள்ளேன். காண்க:http://thiruvaasakam.blogspot.com/

//திருவாசகம் ஒப்பற்ற நூல்களில் ஒன்று, அதில் உள்ளவற்றை கட்டுரைக்குள் தலைப்புக்கேற்றவாறு ஒரு சில சொல்லி நிறைவு செய்வது பொருந்தும்.// நாளை இக்கருத்துக்களை இடுகிறேன். தற்போதைக்கு விக்கிநடை கைவராததால் யாரேனும் அதை முறையாகத் தொகுத்துத் தந்தால் நலம் பயக்கும்.--ஞானவெட்டியான் 17:30, 19 மார்ச் 2007 (UTC)

இருந்தையூர்க் கொற்றன் புலவன் கட்டுரை இதனை இணைத்துக்கொண்டுள்ளது. அந்த இணைப்பை இங்கும் இடுவது பொருத்தம். விக்கி நிர்வாகிகள் செய்யுமாறு வேண்டுகிறேன்.--Sengai Podhuvan 05:35, 1 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

”இவற்றையும் பார்க்க” பகுதியில் இணைத்து விட்டேன். இதை நீங்களே செய்யலாம். நிர்வாகிகள் செய்ய வேண்டுமென்றில்லை - கட்டுரைகளை நீக்குவது போன்ற சில விஷயங்கள் மட்டுமே நிர்வாகிகளின் தனிப்பட்ட கட்டுப்பாட்டில் உள்ளன. மற்றவற்றை செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.--சோடாபாட்டில் 06:39, 1 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

மாணிக்கவாசகர் குறித்த கட்டுரையில் அவரது காலம் குறித்த குழப்பங்கள்:[தொகு]

அவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டு எனில் அப்பருக்கு முந்தையவர் என்பது தவறாகும்.அப்பரின் பாடலில் நரியைப் பரியாக்கிய அற்புதம் மேற்கோள் காட்டப்பட்டிருத்தலால்,அப்பருக்கு முந்தையோர் எனில் கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் ஆவார் திருவாசக ஆசிரியர். இக்காலக் குழப்பத்தை தீர்க்க இன்னும் பேசுவோமே.நன்றி.-அன்பன் கோமதிசங்கர், திருநெல்வேலி. 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் சேக்கிழாரின் பெரியபுராணத்தில் மாணிக்கவாசகர் பற்றிக் குறிப்பிடவில்லை.சேக்கிழாரின் காலம் பன்னிரெண்டாம் நூற்றாண்டு என்பர். எனில் திருவாசகத்தின் ஆசிரியர் சேக்கிழாருக்கு பிந்தியவரா? இது சரியெனில் அப்பர் நரியை பரியாக்கிய நிகழ்ச்சியை அறிந்ததெவ்விதம்? மேலும் பேசுவோமா. நன்றி,அன்பன் கோமதிசங்கர், திருநெல்வேலி.

கோமதிசங்கர், மாணிக்கவாசகர் காலம் குறித்த பிரச்சினை நீண்டகாலமாக நிலவி வருகிறது. தொடர்ந்து இத்துறை சார்ந்த அறிஞர்கள் ஆய்வு செய்வதின் மூலமே இதற்குத் தீர்வு கிடைக்க வழியுண்டு. சில வேளைகளில் இது சர்ச்சைக்குரியதாகவே இருந்துவிடக்கூடிய சாத்தியங்களும் உண்டு. விக்கிப்பீடியாவில் பேசி இதற்குத் தீர்வு காண்பது சாத்தியம் இல்லை. தற்போதுள்ள நிலையில் இங்குள்ள மாணிக்கவாசகர் பற்றிய கட்டுரையின் நடை சில இடங்களில் விக்கிப்பீடியாவுக்கு உகந்ததாக இல்லை. பெருமளவில் திருத்தங்கள் செய்யவேண்டியுள்ளதுடன், மேலதிக தகவல்களையும் சேர்க்க வேண்டும். மாணிக்கவாசகர் காலம் குறித்த கருத்து வேறுபாடுகள் நிலவுவதைக் குறிப்பிட்டு, இரு பகுதியாருடைய வாதங்களையும் சுருக்கமாகக் குறிப்பிட முடியும். --- மயூரநாதன் 15:29, 21 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

நன்றி,திரு.மயூரநாதன்,மாணிக்கவாசகர் குறித்த சம்பவங்கள் திருவிளையாடல் புராணத்தில்,நரியை பரியாக்கிய படலம்,பரியை நரியாக்கிய படலம் மற்றும் பிட்டுக்கு மண் சுமந்த படலம் ஆகியவற்றில் விளக்கப் பட்டிருக்கின்றன.புராணம் மிகப் பழமையாதலின்,திருவாசகமும் சங்கம் மருவிய காலத்தில் சேர்ந்ததாய் இருக்க வாய்ப்புண்டா? அன்பன் கோமதிசங்கர் திருநெல்வேலி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மாணிக்கவாசகர்&oldid=3746886" இலிருந்து மீள்விக்கப்பட்டது