பேச்சு:மறைசாட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தியாகி என்ற தலைப்பு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், அறிமுக பந்தி சமய நோக்கில் எழுதப்பட்டுள்ளது. இது பொதுவாக எழுதப்பட வேண்டும். காண்க: (ஆ.வி) A martyr is somebody who suffers persecution and death for advocating, renouncing, refusing to renounce, and/or refusing to advocate a belief or cause, usually a religious one. Most martyrs are considered holy or are respected by their followers, becoming a symbol of good leadership and heroism. --AntonTalk 04:59, 8 சூலை 2014 (UTC)[பதிலளி]

தியாகி என்ற சொல் ஒரு தனிநபருக்காக தியாகம் செய்தவரை குறிக்கும். தியாகம் என்ற சொல் உயிரை தியாகம் செய்யபவர்களை மட்டும் குறிக்காது. பொருளை தியாகம் செய்பவர்களும் தியாகிதான். மேலும் ஒரு மறைக்காக(மதம்) உயிர்நீந்தவர்களை மறையின் சாட்சி(மறைசாட்சி) என்று சொல்வதே சிறந்தது.--நிர்மல் (பேச்சு) 18:52, 15 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

கருத்து தெரிவித்த போது இருந்த விக்கித்தரவு வேறு இப்போது இருப்பது வேறு. Christian martyrs அல்லது Martyr என்பதில் எதற்கு இக்கட்டுரை பொருந்துகிறது? Christian martyrs என்றால் கிறித்தவ தியாகி அல்லது கிறித்தவ மறைசாட்சி என்று இருக்க வேண்டும். --AntanO 19:09, 15 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
விக்சனரி Martyr என்பதற்கு தியாகி என்று சொல்கிறது. //தியாகி என்ற சொல் ஒரு தனிநபருக்காக தியாகம் செய்தவரை குறிக்கும்.// எந்த அகராதி இப்படிச் சொல்கிறது? தக்க சான்றுகளுடன் உரையாடுவது ஆரோக்கியமாக இருக்கும். --AntanO 19:19, 15 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
தியாகி என்பது சமற்கிருத மூலச் சொல். இதன் பொருள் பிறர் பொருட்டுத் தன்னலந் துறப்போன் என்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி கூறுகின்றது. பொதுவழக்கிலும் அவ்வாறே பயன்படுத்தப்படுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 01:49, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
Martyr என்பது சமயத்திற்காக உயிர்நீத்தவரையே குறிப்பதாக ஒட்சுபோடு அகரமுதலி கூறுகின்றது. திருவிவிலியத்தின் தமிழ்ப் பதிப்பில் இதற்கீடான சொல் பயன்படுத்தப்பட்டிருப்பின், அச்சொல்லை அறியத் தர முடியுமா? --மதனாகரன் (பேச்சு) 01:53, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மறைசாட்சி&oldid=1897439" இலிருந்து மீள்விக்கப்பட்டது