பேச்சு:மரபுத்தொடர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரைவிலக்கணம் மரபுத்தொடருக்கு மட்டுமன்றி குழு உக்குறி, இடக்கரடக்கல் முதலானவற்றுக்கும் பொருந்துமாப்போல் இருக்கிறது.--சஞ்சீவி சிவகுமார் 23:54, 2 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

இருக்கலாம். எனக்கும் சரியாகத் தெரியவில்லை. இந்தக் கட்டுரை நக்கீரனின் ஆக்கம். நான் சில மேலதிக சொற்களை இணைத்துள்ளேன். ஒருவேளை நான் செய்த சின்ன திருத்தம் தவறா தெரியவில்லை. தெரிந்தால் மாற்றிவிடுங்கள்.--கலை 00:12, 3 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
சிறு திருத்தம் செய்துள்ளேன்.--சஞ்சீவி சிவகுமார் 00:30, 4 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
மாற்றங்களுக்கு நன்றி சஞ்சீவி சிவகுமார். ஆனால் அந்த 'சொலவடை' என்ற சொல்லை ஒரு இந்தியத் தமிழர் குறிப்பிட்டார். அதனால் தமிழ்நாட்டில் அது பயன்படுத்தப்படுகின்றது என நினைக்கிறேன். எனவே அந்தச் சொல்லை நீக்காமல் இருப்பது நல்லது. வெவ்வேறு இடங்களில் பயன்பாட்டில் உள்ள சொற்கள் எவையாக இருந்தாலும், அவற்றை அழிக்காது விடுவதால், அவர்கள் தேடும்போது கிடைக்க உதவியாக இருக்கும்.--கலை 00:58, 4 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி கலை. சொலவடை என்ற தலைப்பில் மற்றுமொரு பக்கம் விக்கியில் உள்ளது. அது மரபுத்தொடரினின்றும் சற்று வேறுபட்டிருந்தது. மற்றவர்களின் அபிப்பிராயம் கேட்காமல் அவசரப்பட்டிருந்தால் மன்னிக்கவும். ஆயினும் ஒரே பொருளில் இரண்டு பக்கங்கள் தேவையில்லை அல்லவா?--சஞ்சீவி சிவகுமார் 04:58, 4 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

எனக்கும் இந்த விடயத்தில் தெளிவில்லை. சொலவடை என்பது உண்மையில் எதனைக் குறிக்கின்றது என்று யாராவது சொன்னா நல்லது. Idioms க்கு தமிழ்ச் சொல் கேட்டபோது கிடைத்த பதில் சொலவடை என்றதால்தான் இங்கே பொட்டேன். வேறு யாராவது சரியாகத் தெரிந்தவர்கள் கருத்துச் சொன்னால்தான் தெரியும். --கலை 00:05, 5 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மரபுத்தொடர்&oldid=642562" இலிருந்து மீள்விக்கப்பட்டது