பேச்சு:மனித எலும்புக்கூடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனித எலும்புக்கூடு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கசியிழையங்களுடன் (அல்லது குருத்தெலும்புகளுடன்) இணைந்தே எலும்புகள் இயங்குவதாலும், இந்தக் கட்டுரை Human skeleton என்ற ஆங்கிலக் கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளதாலும், இந்தக் கட்டுரைக்கு மனித வன்கூடு என்ற தலைப்பு மேலும் பொருத்தமாக இருக்குமென நினைக்கின்றேன். மனித எலும்புக்கூடு என்பதற்கு ஒரு வழிமாற்றியை விட்டு, மனித வன்கூடு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பரிந்துரைக்கின்றேன்.--கலை (பேச்சு) 09:44, 22 நவம்பர் 2013 (UTC) 👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 21:28, 22 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

கலை, கலைச்சொல்லாக்கம் என்ற புள்ளியில் உங்களுடன் உடன்பட்டாலும் skeleton என்பதற்கு பரவலான புரிதலாக எலும்புக்கூடு என்பதே உள்ளதாக உணர்கிறேன். எலும்புக் கூடு எனத் தனியான கட்டுரை எழுதுவதாக இருந்தால் தவிர, இதற்கு தலைப்பை மாற்றுவதைவிட, முதற்பத்தியில் துறைநுட்ப விளக்கவுரை வழங்குவது பொருத்தமானது எனக் கருதுகிறேன்.--மணியன் (பேச்சு) 20:57, 23 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
எனக்கும் இதில் கொஞ்சம் குழப்பம் இருக்கவே செய்தது. இதனை மாற்றாமல் விடலாம் என்றே நானும் இப்போது நினைக்கின்றேன். ஆனால் எலும்புக்கூடு என்ற கட்டுரைக்குத் தலைப்பு மாற்றப்பட வேண்டும் என்றே எண்ணுகின்றேன். அதன் உள்ளடக்கத்தையும் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை இங்கே சொல்லுங்கள் மணியன். நன்றி.--கலை (பேச்சு) 19:37, 3 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]