பேச்சு:மட்டக்களப்பு வானூர்தி நிலையம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அண்டன், நான் இக்கட்டுரைத் தலைப்பை மட்டக்களப்பு வானூர்தி நிலையம் என்று மாற்றியிருந்தேன். தாங்கள் உள்ளூர் வழக்கு என்று மீண்டும் ”மட்டக்களப்பு விமான நிலையம்” எனும் தலைப்புக்கு மாற்றிவிட்டீர்கள். இங்கு தமிழ்நாட்டிலும் உள்ளூர் வழக்கில் யாரும் வானூர்தி நிலையம் என அழைப்பதில்லை. விமான நிலையம் என்றுதான் அழைக்கிறார்கள். இருப்பினும் தூய தமிழ் பயன்பாட்டிற்காக வானூர்தி நிலையம் எனும் பொதுவான பெயருக்கு மாற்றி இருந்தேன். அனைத்து வானூர்தி நிலையங்களையும் போல் மட்டக்களப்பு வானூர்தி நிலையம் எனும் தலைப்புக்கு மீண்டும் மாற்றுகிறேன். மட்டக்களப்பு விமான நிலையம் என்பது வழிமாற்றாக இருக்கும். எனவே உள்ளூர் வழக்குக்கு எவ்வித இடையூறுமில்லை. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 06:04, 16 செப்டம்பர் 2013 (UTC)

ஆட்சேபனையில்லை. தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள். --Anton (பேச்சு) 04:43, 18 செப்டம்பர் 2013 (UTC)
தேனியார் கூறுவது சரியே. விமான நிலையங்கள அனைத்தையும் விக்கியில் பொதுவான வானூர்தி நிலையம் எனவே தலைப்பிடலாம். அது போலவே, புகையிரத நிலையத்தையும் தொடருந்து நிலையம் என்றே பொதுத் தலைப்புகளிடலாம்.--Kanags \உரையாடுக 11:33, 18 செப்டம்பர் 2013 (UTC)