பேச்சு:மடிக்கணினி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்ரன், இக்கட்டுரையோ அல்லது கட்டுரைப் பகுதியோ கூகுள் ஆல்ஃபா கொண்டு தானியங்கியாக எழுதப்பட்டதாக எவ்வாறு கண்டுபிடித்தீர்கள்? அல்லது கூகுள் பாவிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக விக்கியில் எங்காவது விதிமுறை உள்ளதா? அல்லது இக்கட்டுரையோ அல்லது பகுதியோ மனித உழைப்பு இல்லாமல் இயந்திர மொழிபெயர்ப்பாகக் கருத உங்களிடம் ஆதாரம் உண்டா?--Kanags \உரையாடுக 07:26, 14 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

ஸ்பீக்கர், வெப்கேமரா, மைக், கிராபிக் டிரைவர், ஏசி அடாப்டர், லேப்டாப், AlianWare, டைனாபுக், க்லாம் ஷெல், சப்நோட்புக், நெட்புக், டெஸ்க்டாப், நோட்புக் போன்ற சொற்களின் பாவனை எதற்கு? இவை தமிழ்படுத்தப்பட வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும். //கூகுள் பாவிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக விக்கியில் எங்காவது விதிமுறை உள்ளதா?// பாவிக்கலாமா? பாவிக்க விதிமுறை எங்குள்ளது? இயந்திர மொழிபெயர்ப்பாகக் கருதாமலிருக்க ஆதாரம் உண்டா? --AntonTalk 08:22, 14 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
ஸ்பீக்கர், வெப்கேமரா, மைக், கிராபிக் டிரைவர், ஏசி அடாப்டர், லேப்டாப், AlianWare, டைனாபுக், க்லாம் ஷெல், சப்நோட்புக், நெட்புக், டெஸ்க்டாப், நோட்புக் இந்த 14 சொற்களை சேர்த்ததற்காக முழுக்கட்டுரைப் பகுதியையும் நீக்கியிருக்கிறீர்களோ?. இது தான் உங்கள் நிருவாகத் திறமையா? கூகுள் பாவிப்பது தடை செய்யப்படவில்லை. ஆனால், முழுக்க முழுக்க மனித உழைப்பற்ற வெறும் இயந்திர மொழிபெயர்ப்பே தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நானும் இடைக்கிடை கூகுளைப் பாவித்து மொழிபெயர்த்திருக்கிறேன். இரவி கவனிக்க. --Kanags \உரையாடுக 08:31, 14 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
இந்தப் 14 சொற்களையும் விக்சனரியில் போட்டால் தமிழ் தரும். இதற்காக 100 வீத மனித உழைப்பை நீக்கியது நிருவாக அத்துமீறல்.--Kanags \உரையாடுக 08:33, 14 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
நிருவாகத் திறமைய பற்றி பேச உமக்கும் அருகதை வேண்டும். நிருவாக அத்துமீறல் என்றால் நீர் முறையீடு செய்யலாம். --AntonTalk 08:36, 14 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

இக்கட்டுரையில் Prathushiyan என்ற புதுப்பயனர் செய்த தொகுப்புகளும், அவரைத் தொடர்ந்து 112.134.135.156 என்ற முகவரியில் இருந்து வந்த தொகுப்புகளும் (இதுவும் அதே புதுப்பயனராக கூட இருக்கலாம்) தமிழ் விக்கிப்பீடியாவின் கலைக்களஞ்சிய நடையைப் புரிந்து கொண்டு எழுதப்படவில்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் எப்படி எழுதுவது என்று தக்க எடுத்துக்காட்டுகளுடன் அவருக்கு எடுத்துக் கூறலாம். அவர் எழுதிய வரிகளையே தகுந்த முறையில் திருத்திக் காட்டுவதும் தகும். இவ்வாறான செயற்பாடு மூலம் புதுப்பயனர்களை அரவணைத்து உள்வாங்கலாம். அதே வேளை, மற்ற பயனர்கள் "துணிவுடன் செயற்படும்" விக்கிப்பீடியா கொள்கைக்கு ஏற்ப தொகுப்புகளை முன்னிலைப்படுத்தவும் செய்யலாம். இதற்கும் நிருவாகச் செயற்பாடுகளுக்கும் தொடர்பில்லை. இதனை யார் வேண்டுமானாலும் செய்யலாம். மாற்றுக் கருத்து எழுந்தால் பேச்சுப் பக்கத்தில் உரையாடி முடிவுக்கு வரலாம். இத்தொகுப்புகள் வழமையான இணைய ஊடகங்களில் வரும் நடையில் உள்ளதாகவே தோன்றுகிறது. ஆங்கிலம் கலந்திருந்தாலும் கூட கூகுள் கருவி இத்தரத்தில் மொழிபெயர்ப்பதில்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி மொழிபெயர்ப்பு பற்றிய கொள்கையை இங்கு காணலாம்.

விக்கிப்பீடியாவின் விதிகள் பல ஒவ்வொருவரின் மதிப்பீட்டுக்கும் ஏற்பவே புரிந்து கொள்ளப்படக்கூடியவை. ஒரே விதியை இரு வேறு வகையில் மதிப்பிட முடியும். இதில் ஒன்று தான் சரியாக இருக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. மாற்றுக் கருத்துகளை பேச்சுப் பக்கத்தில் உரையாடி இணக்க முடிவு நோக்கி நகர்வதையே விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள் வலியுறுத்துகின்றன. நிருவாகிகள் முற்று முழுதாக 100% எல்லா வேளையிலும் துல்லியமாகச் சரியான செயற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில்லை. மாற்றுக் கருத்துகளை உள்வாங்கி இணக்க முடிவை நகரும் தன்மையும் தவறுகள் முறையாகவும் கனிவாகவும் சுட்டிக் காட்டப்படும் போது அதனை உள்வாங்கி முன்னேறும் பாங்கு இருப்பதும் மட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.

கவனிக்க: Anton, Kanags --இரவி (பேச்சு) 20:14, 17 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

இரவி, //மற்ற பயனர்கள் "துணிவுடன் செயற்படும்" விக்கிப்பீடியா கொள்கைக்கு ஏற்ப தொகுப்புகளை முன்னிலைப்படுத்தவும் செய்யலாம். இதற்கும் நிருவாகச் செயற்பாடுகளுக்கும் தொடர்பில்லை. இதனை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.// எதற்காக நீக்குகிறோம் என்பதற்கான காரணம் எதுவும் கூறாமல் பல தொகுப்புகளை ஒரே முறையில் முன்னிலைப்படுத்துவதற்கு நிருவாக அணுக்கம் உள்ளவராலேயே முடியும். அனைவருக்கும் அந்த அணுக்கம் இல்லை. இதனாலேயே நிருவாக அத்துமீறல் என்றேன். எது எப்படியானாலும், இக்கட்டுரைத் தொகுப்பில் அந்தப் பதினான்கு சொற்களைத் தவிர ஏனையவை விக்கி நடையிலேயே எழுதப்பட்டுள்ளதாகவே நான் நம்புகிறேன். (சில எழுத்துப்பிழைகள் உள்ளன. மேற்கோள்கள் இல்லை தவிர) அன்ரன் தவறுதலாகவே கட்டுரையை (இரண்டு முறையும்) அழித்திருக்கலாம் என நீங்கள் நம்பினாலும், பின்னர் தவறு சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து (அவரது தொகுப்பை முன்னிலைப்படுத்திய பின்னரும்) அவர் தான் செய்தது சரி என்றே வாதாடி கட்டுரையை நீக்க வேண்டும் என வார்ப்புருவும் இட்டார். அவ்வார்ப்புரு நீக்கப்படவும் இல்லை. இக்கட்டுரை நீங்கள் விரும்பியவாறு விக்கி நடையில் பயனரோ அல்லது வேறு எவரோ திருத்தாவிட்டால் கட்டுரையை நீக்கலாம் எனவே நீங்களும் கருதுவதாகத் தெரிகிறது. நன்றி.--Kanags \உரையாடுக 10:48, 18 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
கட்டுரையை நீக்கத் தேவையில்லை. உரிய பகுதிகளைத் திருத்த வேண்டும். நன்றி.--இரவி (பேச்சு) 11:35, 18 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
A conflict finally comes here. For further step, you can appeal here. (Sorry, I'm using system that does not have Unicode features.) --AntonTalk 17:18, 18 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
அப்போ, இக்கட்டுரை நீக்கத்தை (நிருவாகி ஒருவரின் அத்துமீறலை) பயனர் ஒருவர் (எவராக இருந்தாலும்) கவனியாமலே இருந்திருக்க வேண்டும் எனக் கூறுகிறீர்களா அன்ரன்? எதற்கும் எதற்கும் முடிச்சுப் போடுகிறீர்கள்? மேலும், குறித்த பயனர் செய்த முறைப்பாடு ஒன்றின் பேரிலேயே இக்கட்டுரையைக் கவனித்தேன். அது தவறா? மேலும் ஒன்று: உங்கள் தொகுப்புகள் அனைத்தும் இனிமேல் என்னால் கவனிக்கப்படும்.--Kanags \உரையாடுக 19:53, 18 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
அத்துமீறல் என்றால் முறையிடலாம். அத்துமீறல் எனப் புலம்புவதால் பயன் இல்லை. // உங்கள் தொகுப்புகள் அனைத்தும் இனிமேல் என்னால் கவனிக்கப்படும் // நல்லது. அதன் மூலம் நீர் கற்றுக் கொள்ளலாம். எனக்கு உதவியாளர் கிடைத்தாயிற்று. --AntonTalk 10:46, 19 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மடிக்கணினி&oldid=1756032" இலிருந்து மீள்விக்கப்பட்டது